PDA

View Full Version : ஆப்பிரிக்கா அனுபவம்-4



சிவா.ஜி
07-10-2007, 03:36 PM
ஆப்பிரிக்கா காட்டுபுலி ஆள்தின்னும் வேட்டைப்புலி.....குத்தாட்டம் போட்டுக்கொண்டேதான் ஆப்பிரிக்காவுக்கு வந்தோம்.காடும் காட்டுமனுஷங்களும் இருப்பார்களென்ற எதிர்பார்ப்பில் வந்தால்....நாகரிக உடையில் பூனை நடை போடும் அமீகா(ஸ்பானிஷ்-ல் பெண்கள்) க்களையும்,சூட் அணிந்த அமீகோ(ஆண்கள்)க்களையும் கண்டதில் ஆச்சரியம்.பெட்ரோலியத்துறையிலிருப்பதால் இப்படி
காட்டுக்கும்,பாலைவனத்துக்கும் வந்து இருக்க வேண்டியிருந்தாலும்.. இப்படிப்பட்ட இடங்களைப் காசுகொடுத்தாலும்பார்க்கமுடியாது.

இது ஈக்வடோரியல் கினியா(EQUATORIAL GUINEA) மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று....கால்பந்து புகழ் காமரூனுக்கு
அடுத்துள்ள நாடு. அதன் தலைநகரமான மலாபோ-வில்தான் எங்கள் ப்ரோஜெக்ட் இருந்தது.மலாபோ என்பது ஒரு தீவு.ஒரு நாட்டின் 90 சதவீத நிலப்பகுதி தனியாகவும்,10 சதவீதம் கடலுக்கு நடுவில் தனித்தீவாகவும் இருப்பதை பல இடங்களில் பார்த்திருந்தாலும்...அந்த தீவே தலைநகரமாக இருப்பதைப் பார்த்ததில் ஆச்சர்யமாக இருந்தது.தீவின் நடுநாயகமாக ஒரு இறந்த எரிமலை....என்கவுண்டரில் இறந்தபிரபல ரௌடியைப்போல கைகள் விரித்து தீவின் இரு விளிம்புகளையும் தொட்டுக்கொண்டிருந்தது.அதிலிருந்து ஒரு காலத்தில்வெளியான லாவாவினால் பூமியே செழித்து அடர்ந்த காடாக மாறியிருந்தது.இயற்கை வளத்துக்கு குறைவில்லாத ஊர்.எங்கெங்குகாணினும் பச்சையடா எனப் பரந்து விரிந்த காடுகளைக் கொண்டிருந்தது.அந்த காடுகளின் முடிவில்,தீவின் சுண்டுவிரல் போன்ற முனைப்பகுதியில்தான் நாங்கள் பணிசெய்து கொண்டிருந்த ப்ரொஜெக்ட் இருந்தது..அதையொட்டி வசிப்பிடம்.

சென்று சேர்ந்ததுமே....வயிறைக்கலக்கும் ஒரு விஷயத்தை காம்ப் பாஸ் சொன்னார். இந்த நாடு மலேரியா அதிகமாக இருக்கும்
நாடுகளில் ஒன்று,ஆனால் இந்த ஊரின் மலேரியாவை சாதாரனமாக நினைக்கவேண்டாம்,இது செரிப்ரல் மலேரியா எனப்படும் மிக
மோசமான விளைவுகளை உண்டாக்கும் நோய்,அதனால் இங்கிருக்கும் காலம் வரை Anti malarial Tablets எடுத்துக்கொள்ள
வேண்டும்,அப்போதுதான் அதன் தாக்கத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றார்.என்னடா இது வம்பாப்போச்சேஎன்று நினைத்துக்கொண்டாலும் அதன் சீரியஸ்னெஸ் அப்போது தெரியவில்லை.தினம் ஒன்றாக உட்க்கொள்ளக்கூடிய ஒருமாத்திரையும்,மாற்றாக வாரம் ஒருமுறை உட்க்கொள்ளும் வேறு ஒரு மாத்திரையும் எங்களிடம் காண்பிக்கப்பட்டு எதை
எடுத்துக்கொள்ள பிரியப்படுகிறீர்கள் என்று, என்னவோ ராடோ கடிகாரம் ஒரு கையிலும், சீக்கோ கடிகாரம் ஒரு கையிலும்
வைத்துக்கொண்டு எங்களின் விருப்பம் கேட்பதுபோல கேட்டார்கள்.தினமும் இந்த இழவை யார் சாப்பிடுவது என்று வார மாத்திரையை பிரசாதம் போல வாங்கிக்கொண்டோம்.

அந்த வாரம் ஒருமுறை சாப்பிடவேண்டிய மாத்திரை இருக்கிறதே(LARIAM)....மகாக் கொடுமையான வஸ்து.முதல் முறை சாப்பிட்டுவிட்டு தூங்கப்போனேன்.தூக்கத்தில்..நம்ம ஊர்ல சொல்லுவாங்களே அமுக்குப்பிசான்னு..அந்த மாதிரி பிசாசுங்க மார்மேல ஒரு குரூப்பா ஏறி \'அப்படிப் போடு..போடு..அசத்திப் போடு\"ன்னு ஆட்டம் போட்டா எப்படி இருக்குமோ அந்த ஃபீலிங்.மூச்சு விட முடியாம..காத்துக்கு..மீன் மாதிரி வாயை பொளந்து பொளந்து முயற்சி பண்றேன்..ம்ஹீம்...கொஞ்ச நேரத்துல சித்திரகுப்தனெல்லாம் புத்தகத்தை தூக்கிட்டு...என் அக்கவுண்டைப் பாக்க பக்கத்துல வந்துட்டான்.அந்த ராத்திரிதான் இந்த அவஸ்தையில போச்சுன்னா...அடுத்தநாள் நான் என்ன பேசறேன்னு எனக்கே தெரியல.யாராவது சாப்ப்டயான்னு கேட்டா....நேத்துதான் ஊர்லர்ந்து வந்தேன்னு உளர்றேன்.அந்த ஒரு மாத்திரையோட அந்த சனியனுக்குத் தலைமுழுகி விட்டு..சூப்பரான வேற மருந்தை தினமும் சாப்பிடத் தொடங்கியப் பிறகு....என்னைக் கடிச்ச மலேரியா கொசுவெல்லம் மயக்கம் போட்டு விழ ஆரம்பிச்சிடுச்சி...எந்த மருந்தா...அது.. நம்ம ராமரே அருந்தியதா கலைஞர் சொன்ன சோமபானம்தான்.

ஆப்பிரிக்கா அனுபவங்கள் இன்னும் தொடரும்....நிறைய சுவாரசியமான நிகழ்ச்சிகள் இனிமேத்தான்....

ஜெயாஸ்தா
07-10-2007, 03:43 PM
சொல்லுங்க சிவா... சொல்லுங்க...! இப்படி ஊர்சுற்றின கதை கேட்பதென்றாலே நமக்கு அலாதிப் பிரியம்தான்...!

சிவா.ஜி
07-10-2007, 03:46 PM
நன்றி ஜே.எம். இன்னும் சொல்கிறேன்.

தங்கவேல்
10-10-2007, 04:40 AM
ஆப்பிரிக்கா போகனும் என்றால் ஆன்டி பயாடிக் ஊசி போட்ட பின்னர் தானே விசாவே கிடைக்கும் ? உங்களுக்கு எப்படி கிடைத்தது ?

mukilan
10-10-2007, 04:52 AM
என்கவுண்ட்டரில் சுடப்பட்ட ரௌடியைப் போல கைகளை விரித்து..... மீன் மாதிரு வாயைத் திறந்தது....... பிசாசுகள் கும்மாங்குத்து ஆடியது.... என எல்லா உவமைகளையும் ரசித்தேன். கற்குழம்புகளில் வளமும் இருக்குமா? ஆச்சரியமான தகவல். உங்களின் பயண அனுபவத்திற்கான முன்னோட்டமே அழகாய் இருக்கிறது. முழுவதையும் எப்பொழுது பதியப் போகிறீர்கள்.
ஆர்வத்துடன்,
முகிலன்.

சிவா.ஜி
10-10-2007, 05:05 AM
ஆப்பிரிக்கா போகனும் என்றால் ஆன்டி பயாடிக் ஊசி போட்ட பின்னர் தானே விசாவே கிடைக்கும் ? உங்களுக்கு எப்படி கிடைத்தது ?

ஆமாம் தங்கவேல் அந்த வைபவமும் நடந்தேறியது.மத்திய அரசாங்கத்தின் சுகாதாரத்துறையின் சான்றிதழ் இருந்தால்தான் விசாவே கிடைக்கும் அதனால் மும்பையில் உள்ள அந்த நிறுவனைதிற்குப்போய் ஊசி போட்டுக்கொண்டு சான்றிதழ் பெற்ற பிறகுதான் ஆப்பிரிக்கா போனோம்.

சிவா.ஜி
10-10-2007, 05:06 AM
நன்றி முகிலன்.வெகுவிரைவில் அடுத்த பாகம் பதிக்கிறேன்.

சிவா.ஜி
10-10-2007, 08:54 AM
அனுபவம்-2

இதுக்கு முன்னால இருந்த இடம்தான் ஏடாகூடமான நாடென்றால்(ஏடாகூடமென்றால்...6 மாதம் -40 டிகிரி குளிர்,எப்போதும் சூழ்ந்திருக்கும் அணுக்கதிரியக்க கதிர்கள்,பெயர் தெரியா பூச்சிகள் மில்லியன் கணக்கில்...எல்லாம் இருக்கும் கஜகஸ்தான்)இந்த நாட்டிலும் வேறுமாதிரியான ஏடாகூடங்கள்.முதலாவது ஏற்கனவே சொன்ன மாதிரி மலேரியா...இன்னொன்று 8 மாதங்கள் தொடர்மழைக்காலம். போய் சேர்ந்ததும் ஒரு ரெயின்கோட்டைக் கொடுத்துவிட்டார்கள். எதற்கு என்று அப்போது தெரியவில்லை...பிறகுதான் தெரிந்தது எல்லா வேலைகளும் மழையினூடேதான் நடக்குமென்று.அந்த மழையும் ஒரு காரணம் இந்த நாட்டின் செழிப்புக்கு.

கடலினுள்ளிருந்து எரிவாயுவும்,எரி எண்ணையும் எடுக்கப்பட்டு அதனை சுத்திகரிக்கும் ஆலைகள் கரையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.வழக்கம்போல இங்கேயும் அமெரிக்கர்கள்தான் பணம் போட்டு பணம் அள்ளுகிறார்கள்.நாங்கள் பணிபுரிந்ததும் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்காகத்தான்.நாங்கள் போனசமயத்தில் ஒரு பக்கம் புதிய ப்ரோஜெக்ட்க்கான கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தது,மறுபக்கம் அதன் விரிவாக்கத்துக்காக தரை சமப்படுத்தும் பணி நடந்துகொண்டிருந்தது.
அந்த பகுதியிலிருந்து ஒரு நாள் ஒரு பாம்பை பிடித்து(அடித்து)க் கொண்டுவந்து எங்கள் அலுவலகம் முன்னால் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அப்படி ஒரு சைஸை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை..குறைந்தது 30 அடி நீளமும் அரையடி சுற்றளவும் கொண்ட மெகா சைஸ் பாம்பு.உள்ளூர் மண்ணின் மந்தனிடம் கேட்டதில்..அது நாகப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்றும் படமெடுத்தால் ஒரு ஆள் உயரத்துக்கும் கூடுதலாக இருக்குமென்றும், அது கடிக்காது என்றும் சொன்னான்.ஆச்சர்யமாக இருந்தது..இம்மாம் பெரிய பாம்பு கடிக்காதா...ரொம்ப 'நல்லபாம்பா' இருக்கேன்னு நெனைக்கறதுக்குள்ள தொடர்ந்து சொன்னது பீதியைக் கிளப்பியது.படமெடுத்த நிலையில் விஷத்தை துப்பிவிடுமாம்.அது கண்களில் பட்டாலோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் பட்டாலோ அன்னைக்கே பால்தானாம்.அந்த பக்கத்தில்தான் எனக்கும் பணி இருந்தது...அங்கு போகும்போதெல்லாம்..யாராவது பின்னாலிருந்து தோளைத் தொட்டாலே துள்ளிக்குதித்து..குப்புற விழுவேன்.ஒரு மாதிரியாக எத்தனைவிதமான பாம்புகள் இருக்கிறது..அவைகளின் குனாதிசியங்களையெல்லாம் தெரிந்துகொண்டு...எங்களைக் காப்பாற்றிக்கொண்டோம்.இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்...வெளி நாட்டிலிருந்து வந்த எங்களில் யாரும் பாம்புக்கடியால் பாதிக்கப்படவில்லை..அதே சமயம் உள்ளுர் ஆட்களில் சிலர் இறந்துவிட்டார்கள்.புரியாமல் விசாரித்துப்பார்த்ததில் இவர்களாகவே அதைப் பிடிக்கும் முயற்சியில் அதன் பாசமான முத்தம் கிடைத்து பரலோகம் போனார்களென்று தெரிந்தது.ஏன் அதைப் போய் பிடிக்கனும் என்று கேட்டால்...மத்தியான சாப்பாட்டுக்கு சில்லி ஸ்னேக் செய்யறதுக்காகவாம்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/malabo.jpg
முதன் முதலில் எங்கள் பணியிடத்தை சுற்றிச் சூழ்ந்திருந்த அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைத்தபோது...ரொம்ப பெருமிதமாய் இருந்தது.சின்ன வயதில் பூகோள பாட நோட்டில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு நீலக்கலர் பென்சிலால் வண்ணம் அடித்தது நினைவுக்கு வந்தது.அதே பெருங்கடலில் இன்று கால் நனைக்கும் யோகம் கிடைத்ததை நினைத்து, உடம்பெல்லாம் நமீதா தொட்டமாதிரி புல்லரிச்சிப்போயிடிச்சி.பின்னர் வார இறுதிநாட்களில் அதே கடலுக்குள் போய் மீன் பிடித்து கரையில் சுள்ளிகளை எரித்து சுட்டுச் சாப்பிட்டது இப்பவும் நாக்குல நிக்குது.அந்தக்கரையிலிருந்துகொண்டிருந்தபோது ஒரு அமெரிக்கர் சொன்னார்..இப்படியே கோடு போட்டாப்போல நீச்சல் அடிச்சுக்கிட்டுப் போனால் சரியாக டெக்ஸாஸில் போய்க் கரையேறலாம் என்று.அடடா..நாட்டுல நம்ம மக்கள் ராத்திரிபூரா க்யூவுல நின்னு அமெரிக்கா விசாவுக்கு தேவுடு காத்துக்கிட்டிருக்கறதுக்கு பதிலா..நல்லா நீச்சல் கத்துகிட்டு இப்படியே நீந்தி போயிடலாமேன்னு தோணுச்சி...சொன்னா அடிக்க வருவாங்க.
http://i194.photobucket.com/albums/z250/sivag/malabo2.jpg

http://i194.photobucket.com/albums/z250/sivag/malabo3.jpg
எங்கள் குடியிருப்பைச் சுற்றிலும் அடர்ந்த காடு. பெரிய பெரிய மரங்கள்.அதில ஒரு மரம் ரொம்ப செழிப்பா..குண்டா..அழகா இருக்கும்.அதுக்கு ஜெயலலிதான்னு பேர் வெச்சோம்.தினமும் பணிக்குப் போகும்போதும் வரும்போதும் அதைப் பார்க்காமல் இருக்கமாட்டோம்.வாழைமரங்களை அத்தனை உயரமாக எங்கும் பார்க்கமுடியாது.உரமோ,எருவோ எதுவுமே போடாமல்,எந்த பராமரிப்புமில்லாமல்...தன்போக்கில் காட்டில வளரும் அந்த மரங்களின் பழங்கள் ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடையில் இருக்கும்.நம்ம ஊர்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பப்போவோருக்கு வெற்றிலையும் பழமும் கொடுப்பார்களே...அங்கே இந்த பழத்தை உபயோகித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கிறுக்கு எண்ணம் தோன்றியது.

அடுத்து சனியிரவு நாங்கள் விஜயம் செய்த இரவுவிடுதி நிகழ்வை தொடர்கிறேன்.........

lolluvathiyar
11-10-2007, 08:10 AM
ஆப்பிரிக்க அனுபவம் மிக அருமையாக இருந்தது. சிவா ஜி
ஆப்பிரிக்காவை நான் டிவி யில் மட்டுமே பாத்திருகிறேன்.
பாம்பு வாழை எல்லாமே பெரிசா இருக்கா. ஆனா மனுசங்க மட்டும் சிரிசா இருப்பாங்க போல. நல்லா இருக்கர நாட்ட நாகரீகமாக்கி கெடுத்துருவாங்க நினைகிறேன்

ஜெயாஸ்தா
11-10-2007, 12:37 PM
ஆப்பரிக்காவிலும் உங்களை நமீதா விடவில்லையா சிவா? நல்ல சுவாரசியமான பயண அனுவங்கள்...!
'சில்லிசினேக்' சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? சுவையாக இருந்ததா?

அமரன்
11-10-2007, 01:06 PM
சுவையோ சுவை...சிவாவின் ஆபிரிக்க அனுபவமும் பரிமாறும் பாங்கும்.. இப்படியே உசுப்பெத்தி உசுப்பேத்தி என்னையும் உலகம் சுற்றவைக்கும் சிவாவின் எண்ணம் ஈடேறுமா? ஏறும் என நம்புகின்றேன்..பாம்புக்கறி சூப்பராக இருக்கும்.. நீங்கள் சாப்பிட்டீங்களா..தொடருங்கள் சிவா கட்டுரையை..

ஆவலுடன்,

மதி
11-10-2007, 01:07 PM
அட...அற்புதமான அனுபவங்களா இருக்கே... இம்மாதிரி அனுபவங்கள் அனைவருக்கும் கிடைத்து விடாது.. கொடுத்து வைத்தவரைய்யா நீங்கள்..

அப்புறம்..அங்கிருக்கும் போது என்னென்ன பிராணிகளெல்லாம் சாப்பிட்டீர்கள்..?

சிவா.ஜி
11-10-2007, 01:25 PM
எல்லாம் இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்

சிவா.ஜி
11-10-2007, 01:54 PM
எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி பாம்புக் கறி சாப்பிடதைப்பற்றியே கேட்டிருக்கிறீர்கள்.முயற்சி செய்தேன் அந்த கதைஇ பெரிய கதை...விளக்கமாக சொல்கிறேன்.

சுகந்தப்ரீதன்
11-10-2007, 02:14 PM
அண்ணா.. நல்லா சுத்தியிருக்கீங்க... கொடுத்து வச்ச ஆளுன்னா நீங்க.. சுத்துங்க சுத்துங்க... காதுல மட்டும் பூ சுத்தாம இருந்தா போதும்... தொடருங்கள் சிவா அண்ணா வாழ்த்துக்கள்!

lolluvathiyar
13-10-2007, 03:25 PM
சுத்துங்க சுத்துங்க... காதுல மட்டும் பூ சுத்தாம இருந்தா போதும்...

சேச்ச இப்பெல்லாம் சிவா ஜி காதுல பூவெல்லா சுத்தரதில்லை பாம்ப தான் சுத்தராராம்

தங்கவேல்
14-10-2007, 06:34 AM
சிவா, அன்மையில் கானா சென்று வந்த என் நண்பர் ஒருவர் அந்த சமாச்சாரம் எல்லாம் சொன்னார். படிப்பறிவும் உலக அறிவும் இன்றி நோய்களில் விழும் மனிதர்களை நினைக்கும் போது மனதுக்குள் வலிதான் ஏற்படுகின்றது. விதியின் வழியில்..செல்லும் அவர்களை இறைவன் தான் காக்க வேண்டும்...

ஆதவா
14-10-2007, 01:47 PM
சிவாண்ணே! நல்ல அனுபவம்... முல்லை நிலக் கட்டுரையா? சூப்பர்.

முகிலன் அவர்கள் ரசித்தமாதிரியே உவமைகள் அனைத்தும் அருமையாகவே இருந்தது. இறுதியில் நீங்கள் வைத்த விஐபி பெயர் முதல்கொண்டு....

நல்ல அனுபவம். மேலும் தொடருங்கள்.. அந்த காட்டுக்குள்ளே நாங்களும் வருகிறோம்...

ஆதவா
14-10-2007, 01:53 PM
கடலினுள்ளிருந்து எரிவாயுவும்,எரி எண்ணையும் எடுக்கப்பட்டு அதனை சுத்திகரிக்கும் ஆலைகள் கரையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.வழக்கம்போல இங்கேயும் அமெரிக்கர்கள்தான் பணம் போட்டு பணம் அள்ளுகிறார்கள்.நாங்கள் பணிபுரிந்ததும் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்காகத்தான்.நாங்கள் போனசமயத்தில் ஒரு பக்கம் புதிய ப்ரோஜெக்ட்க்கான கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தது,மறுபக்கம் அதன் விரிவாக்கத்துக்காக தரை சமப்படுத்தும் பணி நடந்துகொண்டிருந்தது.


கற்புடை பெண்டிர் மனதுள் புகமுடியா காமுகன் போல என்று வைரமுத்து எழுதினார்... ஆனால் அங்கேயும் புகக்கூடியவர்கள் அமெரிக்கர்களோ? சொல்லமுடியாது. நம்ம அரசியல் செல்லும் பாதையைப் பார்த்தால் வருங்காலத்தில் இந்தியாவில் நல்லா (ஆப்பு) ஆழ ஊனக்கூடியவர்கள் அமெரிக்கர்களாகவும் இருக்கலாம்.. :icon_p:

யவனிகா
14-10-2007, 03:06 PM
ஆப்பிரிக்காவிற்குப் போகமுடியாத குறையைப் போக்கிவிட்டது. அதிலும் எழுத்து நடை,சலிப்பு தெரியாமல் கதை சொல்லும் போக்கு நேரே பார்ப்பது போல இருக்கிறது...நீங்க ஆப்பிரிக்கா மட்டும் தான் போயிருக்கீங்களா?உங்க பிளாண்டு மேலிடத்துக்கு,எல்லா நாடுகளுக்கும் உங்களையே அனுப்ப சொல்லி சிபாரிசு பண்ணவா?ஓசியிலயே நாங்களும் எல்லா நாடுகளையும் பாத்திரலாம்.கண்டிப்பாகத் தொடரவும்..பாராட்டுகளுடன்
யவனிகா.

சிவா.ஜி
14-10-2007, 03:50 PM
நன்றி தங்கவேல்,ஆதவா,சுகந்தன் மற்றும் தங்கை யவனிகா.
அடடா அன்பு தங்கையின் சிபாரிசில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்...எழுதிக்கிட்டே இருக்கலாம்.

ஜெயாஸ்தா
15-10-2007, 03:40 PM
அடுத்த பகுதியை எழுதுங்கள் சிவா.... ஆவலோடு காத்திருக்கிறோம்.

சிவா.ஜி
15-10-2007, 03:42 PM
நிச்சயமாக ஜே.எம்.தற்சமயம் கொஞ்சம் இணையப் பிரச்சனை...தீர்ந்ததும் இணைகிறேன்.

அமரன்
15-10-2007, 03:53 PM
பாம்புக் கறிக்கு மன்ற மக்கள் ஆளாய் பறக்கிறாங்கப்பா... (ஹி...ஹி...நானும்தான்) சீக்கிரம் பரிமாறுங்க சிவா.

சிவா.ஜி
15-10-2007, 03:58 PM
அது எப்படி சாப்பிடாமலேயே ரொம்ப ருசியா இருக்குன்னு சொன்னீங்க...?நீங்க சாப்பிட்ட பாம்புக்கறி எப்படி இருந்தது அமரன். நான் சாப்பிட்டது சிக்கன் சுவையில் இருந்தது...? ஹி...ஹி....

அமரன்
15-10-2007, 04:04 PM
ஓடும் பாம்பை வாலைப்பிடித்து தூக்கு ஒரு சுழட்டு. துருவிய தேங்காயின் பாதி (சிரட்டை) ஓட்டில் ஓட்டை போட்டு வாலை நுழைத்து ஒரே இழுவை. தோலும் செதிலும்(!) போக தசை மட்டும் கண்சிமிட்டும். மோகத்துடன் கொத்தமல்லி இலை, கடுகு, சீர்கம், என மசாலா ஐட்டங்கள் சேர்த்து சூட்டில் ஆக்கி சுவைத்தால் அமிர்தம் என்பது அதுதானா என்னும் எண்ணம் தோன்றியது. இதைத்தட்டச்சும்போது நாவில் எச்சில் ஊறியது. ஆனாலும் சொட்டுப்போடவில்லை.

சாராகுமார்
16-10-2007, 07:15 AM
அருமை சிவா அவர்களே.காட்டு பயணம் அருமையோ அருமை.காட்டை கலக்கி எங்களையும் கலக்கிறீக.

சிவா.ஜி
16-10-2007, 03:51 PM
ஆப்பிரிக்கா அனுபவம்−3

இரவு விடுதிக்குப் போகுமுன் கொஞ்சம் உள்ளூர் பாஷையைப் பார்க்கலாம்.மலாபோ வந்ததும் நாங்கல் கேட்ட முதல் வார்த்தை"கமூஷ்தாஷ்" 'எப்படி இருக்கிறீர்கள்."பியான்(BIYAN)" நலம்.'அமீகா'தோழி...அமீகோ'நன்பன்'நாதா...பிராணநாதா அல்ல...'ஒன்றுமில்லை' என்ற பொருள்.சரி...இந்த வார்த்தைகளை வைத்தே கொஞ்சநாள் ஜல்லியடிக்கலாமென்று தெம்பு வந்தது.உடன் பணிபுரியும் உள்ளூர் ஆசாமிகள் எங்களை'மாஸ்ட்ரோ' என்று அழைத்தார்கள்.நான் சிம்பொனியெல்லாம் ஒண்ணும் கம்போஸ் பண்ணலீங்கோ...சார் என்பதின் ஸ்பானிஷ் வார்த்தை அது.அந்த உள்ளூர் அமீகோக்களில் ஒருவன் அந்த சனியன்று எங்களை நகரத்திலிருக்கும் ஒரு இரவு விடுதிக்கு அழைத்திருந்தான்.எனக்கு நடனத்தின் மீதிருந்த மோகத்தால் டிஸ்கோ ஆடலாம் என்ற ஆசையில்..என்னுடனிருந்த நாயர் என்பவரையும் அழைத்துக்கொண்டு இரவு 10 மணிக்குமேல் கிளம்பினோம்.

நகரத்தின் பிரபலமான விடுதி அது.இரவு 11 மணிக்குத் தொடங்கி விடியும்வரை ஆட்டம் பாட்டம்தான்.உள்ளே நுழைந்தால் முதலில் ஒன்றுமே தெரியவில்லை. இருட்டாக இருந்தது.அப்போதுதான் ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பிக்குமுன் விளக்கை அணைத்திருந்தார்கள்.அடுத்தப்பாடல் ஆரம்பித்தது...விளக்கும் எரிந்தது...ஆனாலும் நிழலுருவங்களாகத்தான் எல்லோருமே தெரிந்தார்கள்...அடடா....உள்ளூர் உத்திரவாத கலருடன் ஆடும் லோக்கல் அமீகா மற்றும் அமீகோக்கள் பின் எப்படித் தெரிவார்கள்...?
இன்னும் வெளிநாட்டு ஆட்கள்(நாங்கதானுங்கோ...அங்க நாங்கதானே ஃபாரினர்ஸ்...ஹி...ஹி..)இன்னும் களத்தில் இறங்கவில்லை.நம்ம ஆளுங்களுக்குத்தான் கூடவே பொறந்த அந்த தயக்கம் இருக்குமே.யாராவது ஒருத்தர் ஆரம்பிச்சாத்தான் எல்லோரும் தொடருவாங்க.அதேமாதிரிதான் இங்கேயும் தொடக்கத்துக்காக காத்துக்கிட்டிருந்த கும்பல்ல...அட இது யாரு... எங்க மேனேஜர் இல்ல...அட ங்கொக்காமக்கா....60 வயசு பெருசு...கையக்கோத்துக்கிட்டு பக்கத்துல(கக்கத்துலயும்தான்)ஒரு கறுப்பழகி...ரெடி ஜூட் சொல்ல வேண்டியதுதான் பாக்கி டான்ஸ் ஃப்ளோர்க்குள்ளப் பாயத் தயாரா இருந்தாரு.

அவரை இப்பப் பாத்து மூட் அவுட் பண்ண வேண்டான்னு நெனைச்சிக்கிட்டு...நம்மளை வரச் சொன்ன அந்த அமீகோ எங்கேன்னு தேட ஆரம்பிச்சோம்.பார்-க்கு பக்கத்துலருந்து எங்களைப் பாத்துட்டு சிரிச்சான்..நல்லவேளை அதனாலத்தான் அவன் முகத்தை பாக்க முடிஞ்சது.கிட்டப் போனோம்.கூப்புட்டு ரொம்ப்பப் பாசமா ரெண்டு பேரோடக் கையையும் பிடிச்சி குலுக்கிட்டு பக்கத்துல காலியா இருந்த நாற்காலியியக் காட்டினான். எனக்காவது பரவாயில்ல கொஞ்சூண்டு காலை மட்டும் எம்பி உட்கார முடிஞ்சுது.ஆனா பாவம் நாயர்தான்...அந்த வயசுலயும் துள்ளிக் குதிச்சி உட்கார வேண்டியதாப்போச்சி.ஆளுக்கொரு பீர் சொல்லலான்னு திரும்பறதுக்குள்ள...நம்ம நன்பர்..7 பீரை வாங்கி மேசை மேல அணிவகுப்பு மாதிரி நிறுத்தி வெச்சிருந்தாரு.நானும் நாயரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்து..அவரு பாண்டியராஜன் மாதிரி முழிக்கிறாரு..நான் பாக்கியராஜ் மாதிரி முழிக்கிறேன்.எதுக்குப்பா இத்தனைன்னு கேட்டா...அவனுக்கு பின்னாலருந்து நாலு மலாபோ பேரழகிகள் பளிச்சுன்னு வந்து நிக்கறாங்க.ஹி..ஹி..(அவங்க கூட நம்மள மாதிரிதான் வழியறாங்க)ன்னு சிரிச்சிக்கிட்டே..'இவங்களையெல்லாம் உங்களுக்கு கம்பெனி குடுக்க கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்...டான்ஸ்க்கு பார்ட்னர் வேணுமில்ல அதுக்குத்தான்"ங்கறான். அடக் கஸ்மாலம்...நமக்கு அதெல்லாம் ஆகாதேப்பா...சோலோவா ஆடித்தான பழக்கம்ன்னு மனசுக்குள்ள* நெனைச்சுக்கிட்டு...சரி போனாப்போகுது..வந்ததுக்கு இந்த பீர மட்டும் குடிச்சிட்டு வீட்டுக்குப் போகச்சொல்லு இந்த அமீகாக்களைன்னு சொன்ன உடனே..ப்யூஸ் போன பல்ப் மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு...அவங்ககிட்ட ஸ்பானிஷ்-ல என்னவோ சொன்னான்.அதுக்கு அந்த புள்ளைங்கல்லாம் சொன்னதை புரிஞ்சிக்க முடியல்லன்னாலும்...செமக் காச்சு காச்சுறாங்கன்னு மட்டும் தெரிஞ்சிது.

அப்புறம் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிட்டு...மேனஜரைப் பாத்து ஒரு ஹலோ சொல்லி அந்த விளக்கெண்னை குடிச்ச முக தரிசனத்தைப் பாத்துட்டு திரும்பி வந்தோம்.அட்வான்ஸா கம்பெனியிலக்குடுத்த பணத்துல பாதி காலி.அந்த நாட்டு பணத்தோட பேர் ஸிஃபா(CFA).FRANKS அப்படீங்கறதைத்தான் சுருக்கமா இப்படி சொல்றாங்க.நம்ம ஊரு ஒரு ரூபாய்க்கு 12 ஸிஃபா.அதுல ஒரு சந்தோஷம் எங்களுக்கெல்லாம்.ஒரு லட்ச ரூபா சம்பளம் வாங்கறவங்க 1.2 மில்லியன் சம்பளம்ன்னு சொல்லிக்கறதுல ஒரு இது.

அந்த நாட்டு மக்களின் வறுமையை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்களென்று நினைத்தால்..மனம் வேதனைப்படுகிறது.குடிக்கும் தண்ணீரை விட விஸ்கி விலை குறைவு.நம் நாட்டில் சாதாரண வகை விஸ்கியே ஒரு முழு பாட்டில் 250 ரூபாய் ஆகும்.ஆனால் இங்கே ஸ்காட்ச் விஸ்கியின் விலையே நம் ஊர் பணத்துக்கு 150 ரூபாய்தான்.நாட்டில் நடக்கும் எந்த அநியாயங்களையும் கண்டுகொள்ளாமல் எந்நேரமும் அவர்களை போதையில் வைத்திருக்க அந்த நாட்டு அரசாங்கமும் அமெரிக்காவும் சேர்ந்து செய்யும் அக்கிரமம் இது.எல்லா பொருள்களின் விலையும் மிக அதிகம்.சரியான சாலை வசதி இல்லை,குடிநீர் வசதி இல்லை,மின்சார வசதி இல்லை...ஆனால்...குடிமக்களை நிஜமாகவே "பெருங்குடிமக்களாக" ஆக்கி வைத்திருக்கிறது அந்த அரசு.அங்கிருந்து தொலைபேசியில் இந்தியாவுக்குப் பேசவேண்டுமானால் ஒரு நிமிடத்திற்கு 300 இந்திய ரூபாய் ஆகிறது.எனவே யாரும் அங்கிருந்து பேச மாட்டார்கள். incoming ஃப்ரீ என்பதால் அவரவர் வீட்டிலிருந்துதான் பேசச் சொல்லியிருப்பார்கள்.

சரி சரி ரொம்ப சீரியஸாப் போயிடிச்சி. அடுத்த பதிவுல...இன்னொரு மண்ணின் மைந்தனின் அழைப்பை ஏற்று அவருடைய வீட்டுக்கு விருந்துக்குப் போய் நொந்து நூடுல்ஸான கதையை சொல்கிறேன்.

யவனிகா
16-10-2007, 07:34 PM
..'இவங்களையெல்லாம் உங்களுக்கு கம்பெனி குடுக்க கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்...டான்ஸ்க்கு பார்ட்னர் வேணுமில்ல அதுக்குத்தான்"ங்கறான். அடக் கஸ்மாலம்...நமக்கு அதெல்லாம் ஆகாதேப்பா...சோலோவா ஆடித்தான பழக்கம்ன்னு மனசுக்குள்ள* நெனைச்சுக்கிட்டு...சரி போனாப்போகுது...

இதை எங்களை நம்பச் சொல்லறீங்களா? அண்ணிக்கு பயந்திட்டு தான பொய் சொல்லறீங்க. நீங்க ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடுத்த நாள், நான் ஆப்ரிக்கா போன போது, அதே அமீகா க்களைப் பார்த்தேன்."ஆடத்தெரியாட்டியும் பரவாயில்லை.உங்க கைய பிடிச்சிட்டு நிக்கவாவது செய்யரேன் சொல்லி ஒரே வழிசல். அந்த ஆளு"..அப்படின்னு சொன்னாங்க...அங்க போயி மானத்த வாங்கிட்டு, இங்க வந்து பந்தாவா சோலோவா ஆடனம்னு சொன்னா நம்பிடுவமா?

அக்னி
17-10-2007, 12:33 AM
ஆபிரிக்கா என்றாலே வறுமை என்பதும், வரட்சியும்தான் கண்முன்னே நிழலிடும்.
ஆனால், அங்கும் பசுமையா..?
ஆச்சரியம்... வியப்பு... (இரண்டும் ஒண்ணுதான்னு யார் குரல் கொடுக்கிறது...???)
அடுத்து,
சிவா.ஜி அவர்களின் வர்ணனை, இறந்த ரௌடியான இறந்த எரிமலை தந்த பசுமையும், நமிதாவின் தொட்டுணர்வும், பாம்பின் படவிரிப்பும் என்று அழகாக விரிகின்றது...
அதற்குள், அமெரிக்காவிற்கு விசா எடுக்காமல் செல்ல அறிவுரைச்சலிப்பு வேறு...
இரவுவிடுதிக்குள் நுழைந்து, கருங்காலி மரச் சிற்ப அழகிகளுடன் நாமும் ஆட்டம் போடுவோம் என்றால், கலைத்துவிட்டாரே சிவா.ஜி... (சந்தேகமாகத்தான் இருக்கு... எதுக்கும் நாயரிடம் உளவுப்பிரிவை அனுப்பவேண்டியதுதான்.)

எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்குலகின் சுகபோக வாழ்வுக்காக, போதைக்குள் மக்களை மூழ்கடிக்கும் வேதனையான சலுகைச்சதிகள் மனதை நெருடுகின்றன...
வாழ்வாதாரங்களை பறித்துவிட்டு, போதையூட்டி, கண்ணைக்குற்றும் கயமை...
ம்ம்ம்...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

தொடருங்கள்...
அமீகா வீட்டுக்கு வர நான் ரெடி...

சிவா.ஜி
17-10-2007, 05:56 AM
அன்பு தங்கை யவனிகா...குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடாதேம்மா...அப்புறம் உடம்பெல்லாம் கட்டு போட்டுக்கிட்டு பெட்டுல படுக்கவேண்டியதாப் போயிடும்.
உண்மையிலேயே சோலோவாத்தான் ஆடினேன். ஆனா அதுக்குக் காரணம் அந்த அமீகாக்களின் மேலிருந்து வீசும் "நறுமணம்"(முனிசிபாலிட்டி குப்பை லாரி கடந்து போனா அடிக்குமே ஒரு வீச்சம்...அதையெல்லாம் தாண்டிய ஒரு அற்புத வீச்சம் அது..)மற்றபடி..மன்றத்தில் பதிக்கும் எந்த பதிவிலும் பொய் கலப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.நம்புமா....!

சிவா.ஜி
17-10-2007, 06:01 AM
மிக்க நன்றி அக்னி.நீங்களும் யவனிகாவோட கூட்டு சேர்ந்து விட்டீர்களா...இன்னும் ஒரு படி மேலே போய் உளவுப் பிரிவெல்லாம் வைக்கப்போகிறீர்களா...ஏனப்பா உங்களுக்கு இந்த விபரீத எண்ணம்.
அப்புறம் நான் போனது அமீகா வீட்டுக்கல்ல...அமீகோ வீட்டுக்கு.....கா..மற்றும் கோ...வில் பெரிய வில்லங்கமே இருக்குங்கோ...

ஜெயாஸ்தா
17-10-2007, 07:32 AM
நல்ல 'கிளு கிளு'ப்பா கதை போய்க்கிட்டிருந்தது. சிவா ஆப்பரிக்க அழகிகளுடன் இணைந்து நடனமாடியதை மனதினுள் கற்பனை செய்து பார்த்தேன். அப்பப்ப சூப்பர்....! (எப்படியிருந்ததுன்னு கேட்காதீங்க யவனிகா?). ஏன் சிவா நீங்க அவங்க கூட சேர்ந்து ஆடலைன்னு சொன்னாலும் நாங்க விட்டுருவோமா?

ஜெயாஸ்தா
17-10-2007, 07:35 AM
அப்புறம் நான் போனது அமீகா வீட்டுக்கல்ல...அமீகோ வீட்டுக்கு.....கா..மற்றும் கோ...வில் பெரிய வில்லங்கமே இருக்குங்கோ...

அமீகா-தோழி.... அமீகோ-தோழன்....! :lachen001::lachen001: :lachen001:

சிவா.ஜி
17-10-2007, 07:47 AM
அதே அதே...ஜே.எம்.இது தெரியாம அக்னி மீண்டும் என்னை வில்லங்கத்தில் மாட்டிவிடப் பார்க்கிறார்.நான் சேர்ந்து ஆடாதது ஏனென்று யவனிகாவுக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்.மெய்யாலுமே இல்லிங்கோ...

அக்னி
17-10-2007, 12:16 PM
அமீகா-தோழி.... அமீகோ-தோழன்....! :lachen001::lachen001: :lachen001:
அப்போ சிக்காகோ... தோழனா? தோழியா?


அதே அதே...ஜே.எம்.இது தெரியாம அக்னி மீண்டும் என்னை வில்லங்கத்தில் மாட்டிவிடப் பார்க்கிறார்.நான் சேர்ந்து ஆடாதது ஏனென்று யவனிகாவுக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்.மெய்யாலுமே இல்லிங்கோ...
நம்பமுடியலியே...
உளரராப்போல இருக்கே... :icon_hmm:

சிவா.ஜி:whistling: :music-smiley-016:அமீகா
இப்பிடி இருந்ததாத்தானே எனக்குப் படுது...

நாயர்கிட்ட போன உளவுப்பிரிவு தகவல் அனுப்பட்டும் அதன்பின் பாத்துக்குவம்...

சிவா.ஜி
17-10-2007, 12:22 PM
அடுப்புல கிடக்கிற அக்னிய எடுத்து தலையில போட்டுக்கிட்ட கதையாவுல்ல ஆகிப்போச்சு....இவரு நம்மளை ஒருவழியாக்காம விடமாட்டார் போலருக்குதே...

lolluvathiyar
18-10-2007, 08:58 AM
அனுபவம் மிக அருமையாக இருகிறது சிவா, அதுவும் பாலிடிக்ஸை ச்ர்ர்ந்து கவனித்திருகீறீர்கள்
பாராட்டுகள்


ஆப்பிரிக்கா அனுபவம்−3
குடிக்கும் தண்ணீரை விட விஸ்கி விலை குறைவு.
அவர்களை போதையில் வைத்திருக்க அந்த நாட்டு அரசாங்கமும் அமெரிக்காவும் சேர்ந்து செய்யும் அக்கிரமம் இது.

பிரிட்டிஸ் அதன் வமசாவளியினரும் அனைத்து இடங்களிலும் செய்யு அக்கிரமம் இது. விரைவில் நம் நாட்டிலும் இந்த நிலமை வந்து கொண்டு இருகிறது. இன்று பாலை விட தன்னீர் விலை அதிகம்


ஆபிரிக்கா என்றாலே வறுமை என்பதும், வரட்சியும்தான் கண்முன்னே நிழலிடும்.


அங்கு வரட்சி இருக்கும் என்பது உன்மைதான் ஆனால் வறுமை இல்லாம இருந்தது. வாழகை முரைய மாற்றினார்கள் வறுமையை தேடி கொண்டார்கள்

அக்னி
18-10-2007, 09:05 AM
அடுப்புல கிடக்கிற அக்னிய எடுத்து தலையில போட்டுக்கிட்ட கதையாவுல்ல ஆகிப்போச்சு....இவரு நம்மளை ஒருவழியாக்காம விடமாட்டார் போலருக்குதே...
இதத்தான் சொல்லுறதோ தலையில் தூக்கி வச்சிட்டு ஆடுறதுன்னு...:smilie_abcfra:
அக்னிய தலையில தூக்கி வச்சா, ஆட்டம் தன்னால வந்துடுமே...:lachen001:


அங்கு வரட்சி இருக்கும் என்பது உன்மைதான் ஆனால் வறுமை இல்லாம இருந்தது. வாழகை முரைய மாற்றினார்கள் வறுமையை தேடி கொண்டார்கள்
உண்மைதான் வாத்தியாரே...
ஆனால், மேலைத்தேசங்கள் தங்கள் நாடுகளின் அபிவிருத்திக்காக, சுயநல தூரநோக்கில், படிப்படியாக இப்படி ஆக்கி விட்டுள்ளார்கள் என்பது தெரிந்தும் மீளமுடியாமல், வாழும் அவதி...

சிவா.ஜி
18-10-2007, 09:10 AM
நன்றி வாத்தியார்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.பிரிட்டிஷ்காரர்களின் வியாபாரத் தந்திரம்தான் சரித்திர பிரசித்தியாயிற்றே.

சிவா.ஜி
18-10-2007, 09:12 AM
ஆஹா....ஒரு கொள்ளிக்கட்டைக் கூத்தாடுதே....எதை ஊற்றி இதை அணைப்பது....ஒரே வழி...சரணாகதி...அய்யா அக்னியாரே...எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்...சரியா...

அமரன்
18-10-2007, 09:21 AM
அமீகோ'நன்பன்'நாதா...பிராணந ாதா அல்ல...'ஒன்றுமில்லை' என்ற பொருள்

சரியாத்தான் சொல்லி இருக்காங்க. பல இடங்கல்ல நாதா ஒன்றுமில்லை. எல்லாமே அம்மணிதானுங்களேன்...

ஆபிரிக்கா நாடுகளில் பசுமை இருக்கும். ஆனால் மக்களிடத்தில் அதைக்காண்பது அரிது. புரிந்துகொள்ளமுடியாத ஒரு முரண் இது. ஏன்னா அவர்களுக்கு கல்வி அறிவு கடைநிலையிலும் கீழே உள்ளது. அருமையாக நகைச்சுவை, கிளுகிளு என நளினத்துடன் நகர்கிறது கதை. கிளுகிளுக்களை நெளிய வைக்கும் வகையில் தராத சிவாவுக்கு பாராட்டுகள். (யாரது பலமாக திட்டுவது).

ஆனாலும் அந்த நான்கும் கறுப்பு வைரங்கள் பேசாமல் போனது சிவா அன் கோவின் அதிஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆபிரிக்க நாடுகளில் பொதுவாக பெண்கள் சொல்வதற்கு காவல் படைகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதைப்பயன்படுத்தி அந்த நான்கும் பொய்யாக வத்தி வைக்காது விட்டதுக்கு நன்றி சொல்ல வேண்டும். தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
18-10-2007, 09:24 AM
மிகச் சரியாக சொன்னீர்கள் அமரன்...பெண்களின் பேச்சைத்தான் காவலர்கள் கேட்கிறார்கள்.அந்த நாலுபேருக்கும் வேற ஆளு கிடைச்சதால நாங்க தப்பிச்சோம்.

lolluvathiyar
18-10-2007, 09:31 AM
ஆபிரிக்கா நாடுகளில் பசுமை இருக்கும். ஆனால் மக்களிடத்தில் அதைக்காண்பது அரிது. புரிந்துகொள்ளமுடியாத ஒரு முரண் இது. ஏன்னா அவர்களுக்கு கல்வி அறிவு கடைநிலையிலும் கீழே உள்ளது.

நீங்கள் கூறுவது தவறு, ஆப்பிரிக்க கண்டத்தில் நாம் நினைக்கும் அடிமை கல்வி அறிவு செல்லாமல் இருந்த காலத்தில் அவர்கள் இயற்க்கையோடு ஒன்றி வாழ தெரிந்தவர்கள். அப்படி இருக்கும் வரை தான் அன்த இடத்துக்கு நல்லது.
ஆனால் அதில் கல்வி அறிவு புகுத்தி இயற்கைக்கு விரோத மாக வாழ வகை செய்ய மூயற்சிக்கும் போது வறுமை வளரும்.

பூமகள்
18-10-2007, 07:10 PM
அன்பு சிவா அண்ணா,
ஆப்பிரிக்கா அனுபவம்... பல தெரியாத விசயங்களை எங்களுக்கு சொல்லியது.
அண்டார்டிக் கடலில் கால் நனைத்த சிந்தனை அழகு அண்ணா. உடம்பு புல்லரிச்சிருச்சி..!!
இரண்டு பாகம் படிச்சிட்டேன்.
மூன்றாவது படிப்பதற்குள் மின்சாரத்தடை..!!
அழகா சொல்றீங்க... நாங்களும் அங்கு இருக்கிற உணர்வு..!
பாராட்டுகள் சிவா அண்ணா.

அக்னி
18-10-2007, 07:25 PM
முதன் முதலில் எங்கள் பணியிடத்தை சுற்றிச் சூழ்ந்திருந்த அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைத்தபோது...ரொம்ப பெருமிதமாய் இருந்தது.சின்ன வயதில் பூகோள பாட நோட்டில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு நீலக்கலர் பென்சிலால் வண்ணம் அடித்தது நினைவுக்கு வந்தது.அதே பெருங்கடலில் இன்று கால் நனைக்கும் யோகம் கிடைத்ததை நினைத்து, உடம்பெல்லாம் நமீதா தொட்டமாதிரி புல்லரிச்சிப்போயிடிச்சி.
நமீதா... ஆம்பளைங்களத்தான் புல்லரிக்க வைக்கிறான்னா..,

அண்டார்டிக் கடலில் கால் நனைத்த சிந்தனை அழகு அண்ணா. உடம்பு புல்லரிச்சிருச்சி..!!

பொண்ணுங்களக் கூடவா...?

சிவா.ஜி
19-10-2007, 06:28 AM
அது ஒன்றுமில்லை அக்னி..அண்ணனின் புல்லரிப்பை தங்கை எதிரொலிக்கிறார். என்ன இருந்தாலும் பாசமல்லவா...?

பூமகள்
19-10-2007, 06:42 AM
நமீதா... ஆம்பளைங்களத்தான் புல்லரிக்க வைக்கிறான்னா..,
பொண்ணுங்களக் கூடவா...?
:icon_nono::icon_nono::icon_nono::icon_nono: :icon_nono: :icon_nono::icon_nono:
:icon_tongue::icon_tongue::icon_tongue: :icon_tongue::icon_tongue::icon_tongue: :icon_tongue: :icon_tongue:
:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_ush:
இனி பேச்சு கிடையாது................... :sport-smiley-005::waffen093::waffen093::waffen093:
:D:D:D:D

சிவா.ஜி
20-10-2007, 10:11 AM
அதுக்கெல்லாம் கவலைப் படாதேம்மா பூமகளே...அக்னி அப்பிடித்தான்..துள்ளும்....பாசமழை கொஞ்சம் பெஞ்சா போதும் புஸ்ஸுன்னு அனைஞ்சிடும். ரொம்ப நல்லவர்.

பூமகள்
20-10-2007, 11:24 AM
சிவா அண்ணா...
நீங்க சொல்வதால் அக்னியை அப்படியே விட்டுடறேன்...!!
அக்னி அண்ணா.. இல்லாட்டி... சட்னி...!! ஹி ஹி..!! :D:D:D:D

மலர்
20-10-2007, 02:42 PM
சிவா அண்ணா...
நீங்க சொல்வதால் அக்னியை அப்படியே விட்டுடறேன்...!!
அக்னி அண்ணா.. இல்லாட்டி... சட்னி...!! ஹி ஹி..!! :D:D:D:D

பூமகள் அக்கா எனக்கு ஒரு சின்ன டவுட்....
தேங்காய் சட்னியா இல்லை வெங்காய சட்னியா இல்லை தக்காளிசட்னியா இல்லை ஏதாவது புது டிஷ்ஷா.....

சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்

பூமகள்
20-10-2007, 02:47 PM
ரொம்ப நல்ல கேள்வி மலர்...!
உன் சட்னி ஆர்வத்தை மெச்சுகிறேன்...!!
அக்னியை சட்னியாக்கினால் கிடைப்பது 'தனல்சட்னி' (தக்காளிச்சட்னி மாதிரி...தான் இதுவும்...!!)தானே???
உனக்கு தோசைக்கு செய்து தரவா???? ஹி ஹி ஹி...!! :D:D:D:D

சிவா.ஜி
16-11-2007, 08:26 AM
விடுமுறை குறுக்கிட்டதால் அதிக இடைவெளி விழுந்து விட்டது.இனி கதைக்குப் போகலாம்.

ஒரு சனிக்கிழமை..பணிக்கு நடுவில் நாயர் வந்து அவரிடம் பணிபுரியும் ஒரு உள்ளூர் மைந்தன் எங்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்திருப்பதாகச் சொன்னார்.அடடா..ஒரு புது அனுபவமாக இருக்குமே என்று உடனே பலமாகத் தலையாட்டினேன்.(ஏண்டா ஒத்துக்கிட்டொம்ன்னு அப்புறம் என்னை நானே வடிவேலுவைப் போல விரலை முகத்துக்கு எதிரே நீட்டி உனக்கு இது தேவையா என்று நொந்துகொண்டது வேற விஷயம்)மாலை எப்போது வரும் என்று பரபரப்பாக இருந்தது.ஒரு வழியாய் மாலை பணி முடிந்து கேம்ப்புக்கு சென்று குளியல் முடிந்து ஜகஜோதியாய் கிளம்பிவிட்டோம்.அந்த அமீகோவே தன் காரை எடுத்துக்கொண்டு வந்து விட்டதால் வசதியாகப் போய்விட்டது(அவருடையது என்றால் சொந்தக் காரல்ல எங்கள் நிறுவனத்தில் ஓட்டுநராக இருப்பதால் கார் அவரிடமே இருக்கும்).நாங்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து பார்த்தால் தீவின் நடுநாயகமாக அந்த பெரிய மலை தெரியும் அந்த மலையின் மடிப்புகளில் எங்கோ இருந்தது இந்த அமீகோவின் கிராமம்.அதனாலேயே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
மலையின் அடிவாரம் போனதும் மெள்ள ஏறத்தொடங்கினோம்.மெதுவாகவே போகும்படி நன்பரிடம் சொல்லிவிட்டொம்.போகும் வழியில் இயற்கையின் அற்புதங்களை ரசிப்பதற்காக.எதிர்பார்த்த மாதிரியே அழகு கொட்டிக் கிடந்தது.எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் இடமாக இருப்பதால் ஆங்காங்கே வெளிக் கொடிகளாய் வெள்ளையருவிகள் தங்களுக்குள் சலசலப்பாய் பேசிக்கொண்டு எங்கோ விரைந்து கொண்டிருந்தன.பாதை போகப்போக மிகக் குறுகலாகிக் கொண்டே வந்தது.கிராமத்துத் தாயின் சிறுவாட்டைப் போல நிறைய கிராமங்கள் ஆங்காங்கே ஒளிந்து கொண்டிருந்தது.

அழகை ரசித்துக்கொண்டே அமீகோவின் கிராமத்தை அடைந்தோம்.வீட்டுக்கு அருகில் காரைக் கொண்டு போக முடியவில்லை.சிறிது உயரத்திலிருந்ததால் நடந்து போனோம்.வீடு என்றால் கல்லால் கட்டப்பட்டதல்ல.மரத்தாலானது.பத்து பனிரெண்டு வீடுகள் வரிசையாக இருந்தன.ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் கயிறில் தொங்கிக்கொண்டிருந்தவைகளைப் பார்த்து மெர்ஸலாகிவிட்டோம்(அதிர்ந்து)அப்படி என்ன என்று கேட்கிறீர்களா....இறந்த குரங்கு,பூனை,எலி மற்றும் சில காட்டு விலங்குகள் வயிறு பிளக்கப்பட்டு உள்ளிருக்கும் சமாச்சாரங்கள் வெளியெடுக்கப்பட்டு காய்வதற்காக தொங்கவிடப்பட்டிருந்தன.விளக்கம் கேட்டதற்கு அமீகோ சொன்னார்..\\\"கொன்ற உடனே சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்காது மூன்று நான்கு நாட்கள் கடந்தால் அவை டி-கம்போஸ் ஆகி ஒரு வாடை வரும்...அப்போதுதான் சுவை அதிகரிக்கும்\\\" என்று.அவர் சொன்னதைக் கேட்டதும் நாயருக்கு முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே...?வயிறு புரட்டி சுனாமியாய் வாய் வழியே வந்துவிடும் போல இருந்தது.அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது என்ன சொல்ல நினைக்கிறாரென்பது.விருந்தில் என்ன சாப்பாடு போடப்போகிறார்களோ என்ற பயம் வந்து விட்டது தெரிந்தது.பாத்துடலாம்டா....என்னதான் நடக்குதுன்னு தைரியமாய் போனோம்.

அமீகோவின் குடும்பத்தார் மிகவும் சந்தோஷத்தோடு வரவேற்றார்கள்.அம்மாவும் மூன்று தங்கைகளும் இருந்தார்கள்.அப்பா நிறையக் குடித்து சீக்கிரமே பரலோகம் போய் விட்டிருந்தார்.குடிக்க பெப்ஸி கொடுத்தார்கள்.அப்பாடா குரங்கு ரத்தத்தைக் கொடுக்காமல் போனார்களே என்று நிம்மதியாய் இருந்தது.வீட்டின் சூழலைப் பார்த்தபோது மனதுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது.சர்வாதிகார ஆட்சியாளர்களால் இந்த மக்கள் எவ்வளவு வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்களென்று நினைத்தபோது நம் நாடு எவ்வளவோ தேவலை என்ற எண்ணம் தோன்றியது.வீடு முழுவதும் கவிச்சி வாடை வயிறைப் புரட்டியது.இறந்த விலங்குகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் வந்த வாடை அது.சாப்பிட அமர்ந்தோம்.நாயர் முதலிலேயே சொல்லிவிட்டார்..எனக்கு வயிறு சரியில்லை அதனால் தப்பாக நினைக்கவேண்டாம்...கொஞ்சமாகத்தான் சாப்பிடுவேன் என்று.சாப்பாட்டில் சிக்கன் இருந்ததால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.ஆனால் மசாலா எதுவும் சேர்க்காமல் பார்பிக்யூ மாதிரி செய்திருந்தார்கள்.சுவையாகவே இருந்தது.அடுத்த ஐட்டம் எடுத்தபோதுதான் அதிர்ந்து விட்டோம். குரங்கின் தலையை முழுதாக சுட்டு மேலே வினீகரோ எதுவோ ஊற்றி தட்டில் வைத்திருந்தார்கள்.அது ஸ்பெஷலாம்.அடப்பாவிகளா...அனுமாரை அடுப்புல போட்டு எடுத்திட்டீங்களேடான்னு நினைத்துக்கொண்டே மறுத்துவிட்டோம்.சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிட ஒரு பாணம் தந்தார்கள்.நம்ம ஊர் கஷாயம் போல பல சுவை சேர்ந்த புது சுவையில் இருந்தது.என்ன இது என்று கேட்டதற்கு அசைவம் நிறைய சாப்பிடும்போது சரியாக செரிமானம் ஆக இது உதவும் என்றும்,எலித்தோலை பொசுக்கி அதன் பொடியைக் கலந்து கொஞ்சமாக கீரியின் ரத்தமும்,மிளகு,மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவைத்தது என்று சொன்னார்.சொல்லி முடிப்பதற்குள் நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மடக்கு ஏற்கனவே குடித்துவிட்டிருந்தோம்.சொன்னதைக் கேட்டதும் அப்படியே வைத்துவிட்டு ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டோம்.நாட்டு வைத்தியர் கொடுத்த கஷாயமாக நினைத்துக்கொள்ளலாம் வேறென்ன செய்வது என்று சமாதானமாகி சாப்பாட்டை சுருக்கமாக முடித்துக்கொண்டோம்.இதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம்தான்.அதற்கு என்ன செய்ய முடியும்?

அதற்கடுத்து அந்த அமீகோ சொன்னதைக் கேட்டதும் எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.என் தங்கைகள் உங்களுக்கு கம்பெனி குடுப்பார்கள் என்று இருவரையும் அறைக்குள் போகச் சொன்னார்கள்.விருந்தாளியாய் போகும் வீட்டிலுள்ளவர்களை நமது தங்கைகளாக நினைக்கும் நம் கலாச்சாரத்தில் வளர்ந்த எங்களுக்கு இது மிகப் பெரும் அதிர்ச்சியாகவும்,அருவெறுப்பாகவும் இருந்தது.ஆனால் இது அவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வாய் இருந்தது.மிகுந்த மன வருத்தத்துடன் விடை பெற்று திரும்பினோம்.

அடுத்த நாள் சாப்பிடவே மனசில்லாமல்,எதைப் பார்த்தாலும் அந்த குரங்குத்தலையே நினைவுக்கு வந்து பயமுறுத்தியது.இனி எந்த அமீகோ கூப்பிட்டாலும் போகக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டோம்.

lolluvathiyar
16-11-2007, 10:21 AM
ஆகா என்ன ஒரு அனுபவம், அன்னா சிவா ஜி என்ன இருந்தாலும் அந்த குரங்கு கறியை ஒரு ருசி பாத்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லி இருக்கலாம். நீங்க சொன்ன வாசம் இங்க இருக்கர எங்களையே தூக்கி விட்டது. அடுத்த முரை கோவை வரும் போது எனக்கு ஒரு பார்சல் செய்து வாருங்கள் எப்படி தான் இருக்கு ருசி பாத்துரலாம்.
(முயல் கறி சாப்பட்டதே எனக்கு ஒத்துக்கல)

சிவா.ஜி
17-11-2007, 04:16 AM
ஆஹா...அந்த கஷாயம் குடிச்சதுக்கே ஒரு வாரத்துக்கு குமட்டிக்கிட்டு வந்தது.இதுல குரங்குக் கறி வேறயா...நல்லாருக்குய்யா...இப்ப நான் இருக்கிற இடத்துலருந்து ஒட்டகக்கறிதான் கிடைக்கும்.வேணுன்னா அடுத்த முறை எடுத்துட்டு வாரேன்.

மதி
17-11-2007, 04:24 AM
அட...அற்புதமான அனுபவமா இருக்கே..
படிக்கும் போதே அந்த அனுபவம் புரிகிறது...நேரில எப்படி இருந்திருக்கும்னு தெரியுது..

சிவா.ஜி
17-11-2007, 04:31 AM
ஆம் மதி வித்தியாசமான நாடு,வித்தியாசமான மனிதர்கள்.இயற்கையை ரசிக்க மிகச் சிறந்த இடம்.

அக்னி
17-11-2007, 04:41 AM
எமது கலாச்சாரப் பண்பாடுகள்தான் எமது பாசத்தின் அடிப்படை.
அந்தவகையில், தமிழராய்ப் பிறந்ததற்காக நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
கலாச்சாரச் சீர்கேடுதான் பாசத்தைக் கூடப் போகப் பொருளாக்கிவிட்டிருக்கின்றது.
மிகவும் வருந்தத்தக்க விடயம், ஆனால் புரியும் எல்லை தாண்டிய நிலையில் பல நாடுகள், மக்கள் குழுமங்கள்...


(ஏண்டா ஒத்துக்கிட்டொம்ன்னு அப்புறம் என்னை நானே வடிவேலுவைப் போல விரலை முகத்துக்கு எதிரே நீட்டி உனக்கு இது தேவையா என்று நொந்துகொண்டது வேற விஷயம்)
சொல்லவே இல்லை...
இருக்கட்டும்... இருக்கட்டும்...

சிவா.ஜி
17-11-2007, 04:45 AM
ஆஹா நம்மை வடிவேலுவாக்கிப் பார்ப்பதில்தான் இந்த அக்னிக்கு எத்தனை சந்தோஷம்.இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு பார்த்துக்கொள்கிறேன்.

அக்னி
17-11-2007, 04:47 AM
ஆஹா நம்மை வடிவேலுவாக்கிப் பார்ப்பதில்தான் இந்த அக்னிக்கு எத்தனை சந்தோஷம்.இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு பார்த்துக்கொள்கிறேன்.
வடிவேலு இதப்பார்த்தா சந்தோஷப்படுவாருன்னு சொல்ல வந்தேனுங்க...
அட டட டா... நாம இவ்ளோ செவப்பா தெரியுறோமேன்னு...
வடிவேல் சந்தோஷப்படுவாருன்னு சொல்றேங்க...
வேறொண்ணுமில்லீங்க...

சிவா.ஜி
17-11-2007, 04:50 AM
ஆஹா காலையிலேயே மனதுக்கு இதமா சொன்ன அக்னி நீடூழி வாழ்க!

ஜெயாஸ்தா
17-11-2007, 05:53 AM
இந்தப் பாகத்தை கொஞ்சம் 'சுருக்'கமாகவே கொடுத்துவிட்டீர்கள்... இருக்கட்டும்!. ஒரு வகையில் பார்த்தால் நம்மூரில் பிறந்த குரங்குகள் பாம்புகள் எல்லாம் புண்ணியம் செய்தவை.....!

சிவா.ஜி
20-11-2007, 12:44 PM
இந்தப் பாகத்தை கொஞ்சம் \'சுருக்\'கமாகவே கொடுத்துவிட்டீர்கள்... இருக்கட்டும்!. ஒரு வகையில் பார்த்தால் நம்மூரில் பிறந்த குரங்குகள் பாம்புகள் எல்லாம் புண்ணியம் செய்தவை.....!

அதென்ன அந்த சுருக்-குக்கு ஒரு மேற்கோள்...?
நம்ம ஊர்லயும் பாம்பு சாப்பிடறவங்க இருக்காங்க ஜெயஸ்தா.

lolluvathiyar
20-11-2007, 02:14 PM
நம்ம ஊர்லயும் பாம்பு சாப்பிடறவங்க இருக்காங்க ஜெயஸ்தா.

குரங்கு சாப்பிடுபவர்களும் இருகிறார்கள் நம்ம தமிழ் நாட்டிலேயே (கோவைக்கு அருகிலேயே)

ஜெயாஸ்தா
20-11-2007, 02:16 PM
அதென்ன அந்த சுருக்-குக்கு ஒரு மேற்கோள்...?
நம்ம ஊர்லயும் பாம்பு சாப்பிடறவங்க இருக்காங்க ஜெயஸ்தா.

விருந்து சாப்பிட போன இடத்தில் தன் சகோதரிகளையே விருந்தாக்க முயன்றார்களே அந்த செய்தியை அறிந்ததால் வந்த 'சுருக்' இது. எந்தப்பக்கம் இப்படி பாம்பு சாப்பிடுகிறார்கள்? உண்மையிலேயே எனக்கு இது புதுச்செய்தி சிவா.

சிவா.ஜி
20-11-2007, 02:25 PM
எங்க ஊர் பக்கம் சில மலைவாழின மக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் சாப்பிடுகிறார்கள்.நாகாலாந்திலும் சாப்பிடுகிறார்கள்.

அக்னி
20-11-2007, 02:37 PM
எந்தப்பக்கம் இப்படி பாம்பு சாப்பிடுகிறார்கள்?
தலைப்பக்கமும் வால்பக்கமும் நஞ்சு இருக்கின்றது என்று சொல்லுவார்கள்.
அவற்றில் குறிப்பிடத்தக்க அளவை நீக்கிவிட்டு,
நடுப்பக்கத்தைத்தான் சாப்பிடுவார்களாம்...
:D

சிவா.ஜி
20-11-2007, 02:41 PM
தலைப்பக்கமும் வால்பக்கமும் நஞ்சு இருக்கின்றது என்று சொல்லுவார்கள்.
அவற்றில் குறிப்பிடத்தக்க அளவை நீக்கிவிட்டு,
நடுப்பக்கத்தைத்தான் சாப்பிடுவார்களாம்...
:D

இது ட்டூமச்....ஜெயஸ்தா கொஞ்சம் கவனிங்க....யாரைத் தீய்க்கலான்னு அக்னித்தாண்டவம் ஆடுகிறதை பாருங்க.....

அக்னி
20-11-2007, 02:43 PM
இது ட்டூமச்....
ஆமாங்க ரொம்ப கரெக்ட்... ட்டூ சைட்டும் மச் பாய்சன்...:)

சிவா.ஜி
20-11-2007, 02:48 PM
ஆமாங்க ரொம்ப கரெக்ட்... ட்டூ சைட்டும் மச் பாய்சன்...:)

நற..நற...நற......

அக்னி
20-11-2007, 02:49 PM
நற..நற...நற......
பாம்புக்கு எலும்பு இல்லைன்னு சொல்லுவாங்களே...
தலையை வெட்டி எறிஞ்சப்புறம் பல்லும் இருக்காது...
அப்புறம் என்ன நற... நற... நற...

அமரன்
20-11-2007, 02:49 PM
ஆமாங்க ரொம்ப கரெக்ட்... ட்டூ சைட்டும் மச் பாய்சன்...:)
அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்..ட்றூ-மச்:lachen001:

சிவா.ஜி
20-11-2007, 02:51 PM
அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்..ட்றூ-மச்:lachen001:

அமறன் யூ......ட்டூ.....

அமரன்
20-11-2007, 02:57 PM
சிவா.ஆபிரிக்கதேச மக்கள் வறுமையின் பிடியில் இருப்பதால் திருட்டு போன்ற நெறிதவறிய வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தோற்றம், நடை, உடை,பாவனை எமக்குள் ஒருவிதமான அருவருப்பு/முரட்டுத்தனமானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இயல்பு. அவற்றை விலக்கிப் பார்த்தால் அவர்களுக்குள் இருக்கும் வெள்ளை மனம் தெரியும். சுவாரசியமாக பயணிக்கின்றது கட்டுரை. தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

அமரன்
20-11-2007, 02:58 PM
அமறன் யூ......ட்டூ.....
அச்சச்சோ வார்த்தை தடிக்கிறது.. அமறன் அவுட். அமரன் இன்.

பூமகள்
20-11-2007, 03:40 PM
ஆப்பிரிக்கா நாட்டின் சூழல் இதை விட விவரமாய் யாரால் சொல்ல முடியும்?? பாராட்டுகள் சிவா அண்ணா.

சிவா அண்ணா... அங்குள்ள பழக்க வழக்கம், சூழல்.. இப்படி எல்லாத்தியும் பார்த்து வேதனையுற்று வருகையில் கனவிலும் நினைக்காத அந்த தங்கை பற்றி அண்ணன் சொல்லும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
உணவுகள் தான் மாற்றம் என்றால் கலாச்சாரத்திலேயே இப்படி இருந்தால் எங்கே போய்க் கொண்டிருக்கிறது உலகம் என்று பயப்படத் தோன்றுகிறது.
அவர்கள் திருமணம் செய்வார்களா?? இல்லை.. அந்த பழக்கமே இல்லையா??

தமிழச்சியாய் பிறந்ததில் பெருமை கொண்டு கூத்தாடுகிறேன்..!
வாழ்க தமிழ் மொழி...!
வாழ்க தமிழர் பண்பாடு..!!

அமரன்
20-11-2007, 03:58 PM
தமிழச்சியாய் பிறந்ததில் பெருமை கொண்டு கூத்தாடுகிறேன்..!
வாழ்க தமிழர் பண்பாடு..!!
வாழ்க தமிழர் பண்பாடு என
வாழ்த்திக்கூத்தாடும் தமிழச்சியே..
தமிழர் பண்பாட்டுக்கு நீ பண்பாடு..!

யவனிகா
20-11-2007, 04:07 PM
லேட்டாக் குடுத்தாலும் ஹாட்டாக் குடுத்திருக்கீங்க...குரங்கு, பல்லி, பாம்புன்னு குமட்டுதே...சூப்பு குடிச்ச பின்ன எலி கனவில வந்திருக்குமே...
கதை சொல்லி நிலாச்சோறு ஊட்டுவது போல சொல்லியிருக்கிறீர்கள்...ஆனால் சாப்பிட சாப்பிட குமட்டல் வரும் சங்கதிகளையும் சொல்லியிருக்கிறீகள். ஒருவேளை குரங்குத் தலை சாப்பிட்டிருந்தால் அதன் ருசிக்கு அடிமையாகி இருப்பீர்களோ? அப்புறம் சவுதில குரங்கு தேட வேண்டியது தான்.

மன்மதன்
20-11-2007, 04:42 PM
இந்தப் பதிவை இப்பொழுதுதான் படிக்கிறேன் சிவா. உங்களை சந்திக்க முடியாமல் போனதற்கு ரொம்ப வருத்தப்படுகிறேன்..வார்த்தை ஜாலத்தில் சொக்க வைத்துவிட்டீர்கள். அனுபவகட்டுரை நாங்களே நேரில் சென்ற உணர்வை தந்தது. அருமை சிவா.ஜி...

மன்மதன்
20-11-2007, 05:07 PM
இந்த குரங்கு தலை மேட்டரை 'இண்டியானா ஜோன்ஸ் - டெம்பிள் ஆஃப் டூம்' படத்தில் வைத்திருப்பார் .. டைனிங் டேபிளில் எல்லோருக்கு முன்பும் குரங்கு தலையை சீவி அதை அப்படியே உட்கார வைத்திருப்பார்கள். குரங்கை அப்படியே எடுத்து தலையை அலேக்கா தூக்கி (இளநீர் மாதிரி) அதன் மூளையை உறிஞ்சி குடிப்பார்கள்..உவ்வே..

சிவா.ஜி
21-11-2007, 05:44 AM
சிவா.ஆபிரிக்கதேச மக்கள் வறுமையின் பிடியில் இருப்பதால் திருட்டு போன்ற நெறிதவறிய வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தோற்றம், நடை, உடை,பாவனை எமக்குள் ஒருவிதமான அருவருப்பு/முரட்டுத்தனமானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இயல்பு. அவற்றை விலக்கிப் பார்த்தால் அவர்களுக்குள் இருக்கும் வெள்ளை மனம் தெரியும். சுவாரசியமாக பயணிக்கின்றது கட்டுரை. தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
உண்மைதான் அமரன்.பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் பழகியபின் நமக்கு மட்டும் மேன்மையானவர்களாக இருக்கிறார்கள்.

சிவா.ஜி
21-11-2007, 05:46 AM
ஆமாம் பூமகள் உண்மையிலேயே இது அதிர்ச்சி தருகிறது. நீ சொல்வதைப்போல நம் பண்பாட்டுக்கு நிகர் எதுவுமில்லை.

சிவா.ஜி
21-11-2007, 05:47 AM
லேட்டாக் குடுத்தாலும் ஹாட்டாக் குடுத்திருக்கீங்க...குரங்கு, பல்லி, பாம்புன்னு குமட்டுதே...சூப்பு குடிச்ச பின்ன எலி கனவில வந்திருக்குமே...
கதை சொல்லி நிலாச்சோறு ஊட்டுவது போல சொல்லியிருக்கிறீர்கள்...ஆனால் சாப்பிட சாப்பிட குமட்டல் வரும் சங்கதிகளையும் சொல்லியிருக்கிறீகள். ஒருவேளை குரங்குத் தலை சாப்பிட்டிருந்தால் அதன் ருசிக்கு அடிமையாகி இருப்பீர்களோ? அப்புறம் சவுதில குரங்கு தேட வேண்டியது தான்.

எலியெல்லாம் நான் சாப்பிட்டிருக்கேன்(நம்ம ஊர்ல வயல்ல இருக்குமே வெள்ளை எலி அது)ஆனா குரங்குத்தலை.... சான்ஸே இல்லை.

சிவா.ஜி
21-11-2007, 05:49 AM
இந்தப் பதிவை இப்பொழுதுதான் படிக்கிறேன் சிவா. உங்களை சந்திக்க முடியாமல் போனதற்கு ரொம்ப வருத்தப்படுகிறேன்..வார்த்தை ஜாலத்தில் சொக்க வைத்துவிட்டீர்கள். அனுபவகட்டுரை நாங்களே நேரில் சென்ற உணர்வை தந்தது. அருமை சிவா.ஜி...

நன்றி மன்மதன்.சரியாக தீபாவளி சமயத்தில் வந்ததால்,உங்களையும்,மதியையும் என்னால் சந்திக்க முடியவில்லை.அடுத்தமுறை முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொண்டு சந்திப்போம்.

இதயம்
21-11-2007, 05:57 AM
ஒருவேளை குரங்குத் தலை சாப்பிட்டிருந்தால் அதன் ருசிக்கு அடிமையாகி இருப்பீர்களோ? அப்புறம் சவுதில குரங்கு தேட வேண்டியது தான்.

அதென்ன அப்பிடி சொல்லிட்டீக..! சவுதியில ஒட்டகங்களை விட (வட்டு போட்ட) குரங்குகள் தானே அதிகம். ஒரு வேள நீங்க இருக்கிற இடத்தில குரங்குத்தொல்லை இல்லையோ.?

சிவா மட்டும் ம்ம்ம்ம்-னு ஒரு வார்த்தை சொல்லட்டும்..ஆயிரம் குரங்கை நான் காட்டுறேன். அதுக்கப்புறம் அவர் பாடு, குரங்குகள் பாடு..!!! அவ்வளவு ஏன் அலுவலகத்தில கூட நான் 2 குரங்குகளை கூட வச்சிக்கிட்டு தானே தெனமும் மாரடிக்கிறேன்..!!

முடியல..!

சிவா.ஜி
21-11-2007, 06:47 AM
அவ்வளவு ஏன் அலுவலகத்தில கூட நான் 2 குரங்குகளை கூட வச்சிக்கிட்டு தானே தெனமும் மாரடிக்கிறேன்..!!

முடியல..!

இது அந்த குரங்குகளுக்குத் தெரியுமா.....?

நுரையீரல்
21-11-2007, 08:43 AM
சிவா மட்டும் ம்ம்ம்ம்-னு ஒரு வார்த்தை சொல்லட்டும்..ஆயிரம் குரங்கை நான் காட்டுறேன். அதுக்கப்புறம் அவர் பாடு, குரங்குகள் பாடு..!!! அவ்வளவு ஏன் அலுவலகத்தில கூட நான் 2 குரங்குகளை கூட வச்சிக்கிட்டு தானே தெனமும் மாரடிக்கிறேன்..!!
முடியல..!
அப்ப நீங்க குரங்காட்டியா???? (அதென்னமோ இதயத்துகிட்ட துண்ட கொடுத்து துப்பட்டி வாங்கலேனா அன்னிக்கு தூக்கமே வர்றதில்ல...)

இதயம்
21-11-2007, 11:50 AM
அதென்னமோ இதயத்துகிட்ட துண்ட கொடுத்து துப்பட்டி வாங்கலேனா அன்னிக்கு தூக்கமே வர்றதில்ல

எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ..? சொல்லு திவ்யா...சொ.... சாரி.. சொல்லு ராசா சொல்லு...!!!

அக்னி
21-11-2007, 02:43 PM
எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ..?
பயந்துட்டீங்களா..?
அது moving steps (உண்மையான பெயர் தெரியாது) ஆக இருக்கும்... அதுக்கெல்லாம் பயப்பிடக்கூடாது...

சிவா.ஜி
21-11-2007, 02:51 PM
எங்கடா ஆளைக்காணோமேன்னு பாத்துக்கிட்டிருந்தேன் வந்துட்டாரய்யா வந்துட்டாரு...எஸ்கலேட்டருக்கு பயந்தவரா இதயம்..? இருங்க அவரே வந்து பதில் சொல்லுவாரு.

அக்னி
21-11-2007, 02:59 PM
எஸ்கலேட்டருக்கு பயந்தவரா இதயம்..?
இதுவா அது..? அப்பச்சரி...

ஓவியன்
22-11-2007, 05:30 AM
ஆகா சிவா!

உங்க ஆபிரிக்க பயணத்தை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்...


ஆப்பிரிக்கா காட்டுபுலி ஆள்தின்னும் வேட்டைப்புலி.....குத்தாட்டம் போட்டுக்கொண்டேதான்
ஆமா, உங்ககூட சேர்ந்து யாரு குத்தாட்டம் போட்டாங்க....???
பொறுங்க, அண்ணி கிட்டே வத்தி வைக்கிறேன்...!! :D

அழகான உவமைகள், யதார்த்தமான உண்மைகள்..
தொடக்கமே அசத்தலாயிருக்கே..!! :)

ஓவியன்
22-11-2007, 05:39 AM
விசாரித்துப்பார்த்ததில் இவர்களாகவே அதைப் பிடிக்கும் முயற்சியில் அதன் பாசமான முத்தம் கிடைத்து பரலோகம் போனார்களென்று தெரிந்தது.

ம்,ம்,ம்,ம்!!

உணவு தேடியவர்களே உணவான கொடுமை...!!

சிவா!!

நீங்க சில்லி சினேக் சாப்பிட்டு பார்த்தீர்களா, அருமையாக இருந்திருக்குமே...!! :)

ஓவியன்
22-11-2007, 05:42 AM
அண்ணா.. நல்லா சுத்தியிருக்கீங்க... கொடுத்து வச்ச ஆளுன்னா நீங்க.. சுத்துங்க சுத்துங்க... காதுல மட்டும் பூ சுத்தாம இருந்தா போதும்...

ஹீ,ஹீ!!!

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

சிவா.ஜி
22-11-2007, 05:45 AM
ஹீ,ஹீ!!!

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

என்ன இது ஹி..ஹி...அப்ப நான் சுத்தறேனா...?அப்புறம் குத்தாட்டம் போட்டது கூடவந்த நன்பர்களோடுதான்.அண்ணிக்குத்தான் என்னைப் பத்தி நல்லாத் தெரியுமே..ஒண்ணும் பண்ண முடியாதே....ஹா..ஹா..

ஓவியன்
22-11-2007, 05:50 AM
என்னடா இது நடன விடுதிக்கு போய் சப்பென்று வந்திட்டீங்க என்று பார்த்தால் கீழுள்ள உங்கள் வரிகள் நெஞ்சை அழுத்தியது சிவா...!!


அந்த நாட்டு மக்களின் வறுமையை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்களென்று நினைத்தால்..மனம் வேதனைப்படுகிறது.குடிக்கும் தண்ணீரை விட விஸ்கி விலை குறைவு.நம் நாட்டில் சாதாரண வகை விஸ்கியே ஒரு முழு பாட்டில் 250 ரூபாய் ஆகும்.ஆனால் இங்கே ஸ்காட்ச் விஸ்கியின் விலையே நம் ஊர் பணத்துக்கு 150 ரூபாய்தான்.நாட்டில் நடக்கும் எந்த அநியாயங்களையும் கண்டுகொள்ளாமல் எந்நேரமும் அவர்களை போதையில் வைத்திருக்க அந்த நாட்டு அரசாங்கமும் அமெரிக்காவும் சேர்ந்து செய்யும் அக்கிரமம் இது

வலிய நாடுகள், வறண்ட நாடுகளை மேன் மேலும் வறண்டா நாடுகளாகவே வைத்திருந்து சுரண்டிப் பிழைக்கும் கொடுமை....

கேட்க யாருமே இல்லையா...??

ஓவியன்
22-11-2007, 06:39 AM
ஐட்டம் எடுத்தபோதுதான் அதிர்ந்து விட்டோம். குரங்கின் தலையை முழுதாக சுட்டு மேலே வினீகரோ எதுவோ ஊற்றி தட்டில் வைத்திருந்தார்கள்

இது எவ்வளவோ பரவாயில்லை சிவா!, குரங்குகளின் தலைகளோடு மனிதர்கள் விளையாடுவது இது போன்ற முன்னேறாத நாடுகளில் மட்டுமில்லை எவ்வளவோ முன்னேறி விட்டதாக நாம் கருதும் சிங்கபூரில் கூட இருக்கிறது. அங்கே இது இன்னும் கொடுரூமாக இருக்குமாம் (ஆரென் அண்ணா அறிந்திருப்பார்). அங்கே பிரபலமான உணவு விடுதிகளில் உயிருள்ள குரங்குகளின் மூளை மிக முக்கிய ஒரு உணவு. இந்த உணவு பரிமாறவென ஒரு விசேட மேசை வைத்திருப்பார்கள் அந்த மேசையின் நடுவே ஒரு துளை இருக்கும் (குரங்கின் தலை அளவிற்கு). அந்த துளையின் மேலே குரங்கின் தலையின் மேற்பகுதி மட்டும் தெரியுமளவுக்கு குரங்கை மேசையின் கீழே பொருத்தி விடுவார்கள். அந்த மேசையிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு கீழே உள்ள குரங்கு தெரியாது மேசை மேலுள்ள குரங்கின் தலையின் மேற்பகுதி மட்டுமே தெரியும். இப்போது குரங்கு உயிரோடு இருக்கையிலேயே குரங்கின் மண்டை ஓட்டை கத்தி கொண்டு வட்டமாக வெட்டி எடுப்பார்கள், குரங்கு கீழே துடியாய் துடித்துக் கொண்டிருக்கும். மேல் மண்டை ஓட்டை நீக்கியதும் அதனுள் மதுபானங்களை விட்டு குரங்கின் மூளையை முள்ளுக் கரண்டு கத்தி போன்றவற்றால் கீறி, கிளறி மேசையில் அமர்ந்து மற்றைய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவார்களாம், கீழே உள்ள குரங்கு துடித்து துடித்து அடங்கிப் போய்விடும். (இப்படி சாப்பிட்ட ஒருவர் கூறிய விடயம் இது).

மேலதிக விபரங்களுக்கு... (http://en.wikipedia.org/wiki/Monkey_brain)

கேட்கவே கொடூரமாக இருக்கிறதல்லவா...?
சிலவேளைகளில் நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோமென்பது நமக்கே தெரிவதில்லை....!!:frown:

ஓவியன்
22-11-2007, 06:42 AM
ஆனால் இது அவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வாய் இருந்தது.மிகுந்த மன வருத்தத்துடன் விடை பெற்று திரும்பினோம்.

உண்மைதான் சிவா, கூடவே பணி செய்த ஆபிரிக்க நண்பர்கள் கூறிக் கேள்விப் பட்டிருக்கிறேன்....

அதனை அவர்கள் சாதாரண நிகழ்வாகக் கருதுவதால் தான் ஆபிரிக்க நாடுகளில் எயிட்ஸ் அசாதாரணமாகப் பரவிக்கொண்டிருக்கிறது போல...!!:frown:

சிவா.ஜி
22-11-2007, 07:21 AM
ஆமாம் ஓவியன்.அந்த மக்களின் வறுமை அவர்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கிறது.பெட்ரோலிய வலம் மிக அதிகமுள்ள அந்த நாடு சரியான ஆட்சியாளர்களின் கைகளில் வருமானால் அவர்களும் மேம்படுவார்கள்.ஆனால் வழக்கம்போல அமெரிக்கர் அங்கும் நுழைந்து அவர்களின் வளத்தையெல்லாம் உறிந்து கொண்டிருக்கிறார்கள்.ஆட்சியாளர்களின் வாயை அடைக்க எலும்புத்துண்டை வீசிவிடுகிறார்கள்.
அதே போலதான் அவர்களின் கற்புநெறியும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
அந்த குரங்குத்தலை மேட்டர் நான் கொரியாவில் மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...சிங்கையிலுமா?கேட்கவே கொடுமையாக இருக்கிறது.மனிதன் எத்தனைதான் நாகரீக வளர்ச்சியடைந்தாலும் அவனுக்குள் இன்னும் அந்த கற்காலமனிதனின் மிச்சம் இருக்கிறது.

ஓவியன்
22-11-2007, 07:35 AM
அவனுக்குள் இன்னும் அந்த கற்காலமனிதனின் மிச்சம் இருக்கிறது.
கற்கால மனிதனும் ஒரு உயிரினம் உயிரோடு இருக்கையிலேயே அதனை சாப்பிட்டிருக்க மாட்டான் சிவா...!!
:frown:

சிவா.ஜி
22-11-2007, 07:41 AM
கற்கால மனிதனும் ஒரு உயிரினம் உயிரோடு இருக்கையிலேயே அதனை சாப்பிட்டிருக்க மாட்டான் சிவா...!!
:frown:

ஒருவேளை இதுதான் வளர்ச்சியடைந்த கற்கால மனிதனின் குணமோ...?

யவனிகா
22-11-2007, 07:52 AM
[QUOTE=இதயம்;300690]அதென்ன அப்பிடி சொல்லிட்டீக..! சவுதியில ஒட்டகங்களை விட (வட்டு போட்ட) குரங்குகள் தானே அதிகம். ஒரு வேள நீங்க இருக்கிற இடத்தில குரங்குத்தொல்லை இல்லையோ.? ..![/QUOTE

இருங்க...இதை அப்படியே அரபில மாத்தி உங்க ஆபீஸுக்கு அனுப்பறேன். நான் இருக்கிற இடத்திலயும் இருக்கு, ஆனா அந்தக் குரங்குகளால யவனிகாக் குரங்க தான் சாமளிக்கவே முடியாது...

ஓவியன்
22-11-2007, 07:55 AM
இருங்க...இதை அப்படியே அரபில மாத்தி உங்க ஆபீஸுக்கு அனுப்பறேன். நான் இருக்கிற இடத்திலயும் இருக்கு, ஆனா அந்தக் குரங்குகளால யவனிகாக் குரங்க தான் சாமளிக்கவே முடியாது...

அட ஆண்டவா...!!
இதயத்தாலும் சமாளிக்க முடியாது போலத்தானிருக்கு..!! :)

சிவா.ஜி
22-11-2007, 08:17 AM
[QUOTE=இதயம்;300690]அதென்ன அப்பிடி சொல்லிட்டீக..! சவுதியில ஒட்டகங்களை விட (வட்டு போட்ட) குரங்குகள் தானே அதிகம். ஒரு வேள நீங்க இருக்கிற இடத்தில குரங்குத்தொல்லை இல்லையோ.? ..![/QUOTE

இருங்க...இதை அப்படியே அரபில மாத்தி உங்க ஆபீஸுக்கு அனுப்பறேன். நான் இருக்கிற இடத்திலயும் இருக்கு, ஆனா அந்தக் குரங்குகளால யவனிகாக் குரங்க தான் சாமளிக்கவே முடியாது...

அதெப்படி இந்த குரங்கை விமானத்தில் அனுமதித்தார்கள்..(எங்கேயெல்லாமோ சம்திங்க் விளையாடுத்துப்பா)