PDA

View Full Version : தீபாவளி



சிவா.ஜி
07-10-2007, 07:46 AM
தீபாவளி.....
ஊரெங்கும் தீப ஒளி
ஏழையின் குடிசையில்
தீபம் எரிய
எண்ணைக்கு
என்ன வழி?

பட்டுடுத்தி பட்டாசு
வெடிப்போரெல்லாம்
ஒரு சொட்டு எண்ணையும்
ஒரு செட்டு துணியும்
ஒரு கட்டு மத்தாப்பும்
ஏழைக்கு ஒதுக்கினால்
அந்த வீட்டிலும்
தீபம் ஒளிருமே....!

பூமகள்
07-10-2007, 08:37 AM
தீபாவளி நெருங்கும் சமயம் அழகான கருத்து கொண்டு வந்த கவி அருமை சிவா அண்ணா.
பட்டாசுக்கு பதில் புத்தாடை கொடுத்து ஏழைச் சிறுவர்களுக்கு சுவை மிக்க உணவு கொடுத்தால் காற்று மாசுபாட்டைத் தடுப்பதோடு அல்லாமல் ஏழைகளையும் மகிழ்வித்த இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்குமே!!!
காசைக் கரியாக்கி, காற்றை மாசாக்கி, வெடிகுண்டு சத்தத்தை ஒலிமாசு ஆக்கி, ஓசோனை பொத்தலாக்குவதை விட, ஏழைக்கு அப்பணத்தை அற்பணிக்கலாமே???

ஏழைகளின் வீட்டில் தீப ஒளி இந்த தீபாவளியில் நம்மால் ஒளிரட்டும்..!!
பாராட்டுகள் சிவா அண்ணா.

சிவா.ஜி
07-10-2007, 08:49 AM
அப்பா எத்தனை ஆக்கி.....அபாரமான சிந்தனை...இன்றைய இளைய சமுதாயத்திடம் நான் பார்த்து வியக்கும் குணங்கள் இவை.நான் வெடியென்று சொன்னதன் காரணம்...எல்லோரும் வெடித்து மகிழும்போது மௌனராகம் பாடும் மக்களாய் இருப்பவர்கள்,குறைந்தபட்சம் ஒற்றை வெடியேனும் வெடித்து..இது தீபாவளி என்று சந்தோஷிக்கத்தான்.மற்றபடி பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் பாதகங்களை நாம் எத்தனை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை...வெடிக்கத்தான் போகிறார்கள்...எனவேதான் வெடியென்று குறிப்பிட்டேன்.

பூமகள்
07-10-2007, 09:09 AM
சரி தான் அண்ணா.
வெடியிலும் ரகங்கள் உள்ளதுவே...!!
குறிப்பாக சொல்லனும்னா... ஒளியை உருவாக்கி... சத்தமின்றி வெடிக்கும் பட்டாசுரகங்களை கொளுத்தலாம்.
அப்புறம், ஆட்டோ பாம் போல மிக அதிக சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்களாமே குறைந்த பட்சம்??
ஏனெனில் இதய நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகமாகும் இன்னிலையில், இத்தகைய அதிக டெசிபலில் வரும் ஒலி மாரடைப்பை ஏற்படுத்தி இதயம் பலவீனமானவர்களை இறக்க வைக்கும் துன்பமான நிகழ்வுகளும் ஒவ்வொரு முறை தீபாவளியின் போதும் செய்திகளில் பார்த்து வருந்திய ஒன்று.
தாங்கள் சொன்னதை இப்படியும் நிறைவேற்றலாமே??

சிவா.ஜி
07-10-2007, 09:13 AM
அதுக்குத்தாம்மா நான் மத்தாப்பு சிரிக்கும் என்று எழுதியிருந்தேன்...நீ வெடியே வேண்டாமென்றதால் மத்தாப்பையும் மறைத்துவிட்டேன்.இப்ப வெடியையும் மறைத்துவிட்டு மத்தாப்பாக்கிவிடுகிறேன்.சரியா தங்கையே...

பூமகள்
07-10-2007, 09:18 AM
ம்...அப்பாடா... சிவா அண்ணா என் அன்பை ஏற்று மாற்றியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..!!
நன்றிகள் கோடி அண்ணா.

சிவா.ஜி
07-10-2007, 09:23 AM
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று சொல்வார்கள்...இங்கே தங்கையுடையான் சபைக்கஞ்சான்னு மாத்திக்க வேண்டியதுதான்...

rajaji
07-10-2007, 09:32 AM
உங்கள் இருவர் கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை....

அர்த்தம் பொதிந்த கவிதை....

நீங்கள் இருவரும் சொன்ன இந்தக் கருத்துக்களை என்று அனைவரும் பின்பற்றுகின்றார்களோ அன்றே ஏழை மக்களுக்கு விடிவு பிறந்து விடும்...

நம் மன்ற நல்லுள்ளங்கள் இவர்கள் கருத்தை வரவேற்று பின்பற்றுவார்களென நினைக்கிறேன்....

முதல் ஆளாக நான் பின்பற்றுகிறேன்....

(பூமகள்.... பெயருக்கேற்றால் போல் பூ போன்ற மனது உங்களுக்கு)

சிவா.ஜி
07-10-2007, 09:35 AM
மீண்டும் நம் இளைய சமுதாயத்தின் கிரீடத்துக்கு இன்னொரு இறகாக உங்களைப் பார்க்கிறேன் ராஜாஜி.மிக்க நன்றி

சுகந்தப்ரீதன்
07-10-2007, 09:40 AM
சிவா அண்ணா.. அருமையான கவிதை வாழ்த்துக்கள்... அப்புறம் சவுதில தீபாவளி கொண்டாடுவாங்களா என்ன..? இல்ல தமிழ்நாட்டுல இருக்குறவங்க கூட இத பத்தி எழுதல நீங்க எழுதிருக்கீங்களேன்னு கேட்டேன்... ஆனாலும் அருமையான கருத்துள்ள கவி சிவா..! வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
07-10-2007, 09:47 AM
நன்றி சுகந்தப்ரியன்.சவுதியில எப்படிப்பா கொண்டாடமுடியும்.எல்லாம் மனசுக்குள்லயே கொண்டாடிக்க வேண்டியதுதான். நானும் கடந்த வருடம் வரை தீபாவளிக்கு ஊருக்கு விடுமுறையில் போய்க்கொண்டிருந்தேன்.அப்போது என் பிள்ளைகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடும்போது...கிழிந்த உடையுடன் சில சிறுவர்களும்,சிறுமிகளும் ஓரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் கண்ணிலே தெரிந்த ஏக்கம் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.அவர்களைக் கூப்பிட்டு கை கொள்ளுமளவுக்கு பட்டாசைக் கொடுத்ததும் அவர்கள் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அப்பப்பா...எவ்வளவு மனநிறைவு...அதுதான் இந்த முறை தீபாவளி நெருங்குகிறது என்றவுடன் இதை எழுத தோன்றியது

அமரன்
07-10-2007, 06:40 PM
எங்கள் தேசத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. ஆனால் ஆடு வெட்டி தடல் புடலான விருந்து நடக்கும். எங்கள் வீட்டில் அதுகூட இல்லை. அனேகமாக அன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்கும். அப்புறம் எங்கே ஆட்டுக்கறி. அதற்காக ஊரில் பட்டாசு கொளுத்துவதில்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். தைப்பொங்கலன்றும், ஆங்கிலப்புத்தாண்டன்றும் பெட்டி பெட்டியாக வெடிப்பார்கள். மறுநாள் காலையில் தெருவெல்லாம் கந்தக நெடியும், கடதாசி சிதறலும் பரிசாகக் கிடைக்கும். இப்படித்தான் காசைக் கரியாக்குவதோ என நினைத்துக்கொள்வேன்.. சின்ன வயசில் நானும் அந்தகூட்டணிதான். விபரம் தெரிந்ததும் தேவாலய பூஜை, மறுநாள் ஏதாவது ஒரு ஆசிரமத்தில் கூட்டாக...சாப்பாடு, விளையாட்டு என அன்றைய பொழுது பயனுள்ளதாக அமையும். விவரம் தெரிய வைச்சது யாருன்னு மட்டும் கேட்காதீங்க. படிக்கும் மக்கள் சிலருக்கு தெரிய வைச்சது நான் என இருக்க வழி செய்யுங்கள்..
பாராட்டுகள் சிவா..

சிவா.ஜி
08-10-2007, 08:03 AM
விவரம் வந்துவிட்ட அமரன் மனதைக் கவருகிறார்.இந்த மனப்பாங்கு அனைவரிடத்தும் பரவினால் ஆனந்தமே.நன்றி அமரன்.

பூமகள்
08-10-2007, 05:19 PM
உங்கள் இருவர் கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை....
முதல் ஆளாக நான் பின்பற்றுகிறேன்....
(பூமகள்.... பெயருக்கேற்றால் போல் பூ போன்ற மனது உங்களுக்கு)
மிகுந்த நன்றிகள் ராஜாஜி.
இப்படியான ஒத்த சிந்தனைகள் வலுப்பெற்றால் பலன் கூடிய விரைவில் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

நேசம்
08-10-2007, 05:28 PM
தீபாவளி என்று இல்லை. எந்த பண்டிக்கைக்கும் நாம் அருகில் இருக்கும் ஒரு வசதியற்ற குடும்பத்தின் தேவையை நிறைவேற்றினால் பூமகள் சொல்வது போல் சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும்

சிவா.ஜி
09-10-2007, 04:17 AM
கண்டிப்பாக அந்த ஆரோக்கியமான சமுதாயமாற்றம் இன்றையை இளைஞர்களால் கொண்டு வரப்படுமென்று உறுதியாக நம்புகிறேன் நேசம் அவர்களே.

சுகந்தப்ரீதன்
10-10-2007, 01:12 PM
சிவா அண்ணா..மன்னிக்கவும்... சின்ன வயசுன்னு சிவான்னே இதுவரைக்கும் கூப்பிட்டு விட்டேன்... இனி எப்பவும் அண்ணா கண்டிப்பா ஒட்டிக்கும்.... வாழ்த்துக்கள் அண்ணா..!

நேசம்
12-10-2007, 06:55 AM
கண்டிப்பாக அந்த ஆரோக்கியமான சமுதாயமாற்றம் இன்றையை இளைஞர்களால் கொண்டு வரப்படுமென்று உறுதியாக நம்புகிறேன் நேசம் அவர்களே.


அந்த* முத*ல் ப*டியை நாம் வைப்போம் சிவா பிர*த*ர்

Narathar
12-10-2007, 07:05 AM
தீபாவளியை நினைவூட்டிய சிவாவுக்கும்
அதனால் விளைவால் வரும் வலியை நினைவூட்டிய பூ மகளுக்கும் வாழ்த்துக்கள்

ஓவியன்
13-10-2007, 07:31 AM
எரிகின்றன
தீபங்களல்ல பசியால்
வாடி வதங்கும்
வயிறுகள்......

ஓவியன்
13-10-2007, 07:34 AM
பக்கத்து பணக்கார வீட்டு
மத்தாப்பு வெளிச்சத்தில்
ஒரு நாள்
விளக்கின்றி
வெளிச்சத்திலிருந்தது
ஏழை வீடு....

ஓவியன்
13-10-2007, 07:36 AM
நமக்கு நம் நாட்டில்
ஒவ்வொரு நாளும்
தீபாவளி தான்
தொடரும்
வெடியோசைகளால்....

ஓவியன்
13-10-2007, 07:37 AM
ஒரு நாள்
தீபத்தால்
ஒவ்வொரு நாளும்
எரிகிறது
பட்டாசு தொழிலாளி
வீட்டு அடுப்பு....

aren
13-10-2007, 09:40 AM
அருமையான சிந்தனை சிவா. இதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

சிவா.ஜி
14-10-2007, 02:48 PM
ஓவியன் தீபாவளி பட்டாசைவிட சூடாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள். வாழ்தயத்துகள்.
மிக்க நன்றி ஆரென்.

leomohan
14-10-2007, 02:59 PM
அருமையான கருத்து சிவா. கவலை வேண்டாம் தீபாவளியின் போது பல சிறு வியாபாரங்கள் பெருகி பல நடுத்தர மற்றும் ஏழை வியாபாரிகளின் வீடுகள் நிறைகின்றன. நல்ல புத்துணர்வுடன் தீபாவளி கொண்டாடினாலே போதும்.

சிவா.ஜி
15-10-2007, 02:28 PM
அருமையான கருத்து சிவா. கவலை வேண்டாம் தீபாவளியின் போது பல சிறு வியாபாரங்கள் பெருகி பல நடுத்தர மற்றும் ஏழை வியாபாரிகளின் வீடுகள் நிறைகின்றன. நல்ல புத்துணர்வுடன் தீபாவளி கொண்டாடினாலே போதும்.

ஆம் மோகன்.இதுவும் சிந்திக்கக்கூடியதே.ஏழை வீட்டிலும் தீபமெரிய...அனைவரும் கொண்டாடுவோம்...தீபஒளியோடு...காதுவலியில்லாமல்.நன்றி மோகன்.

நேசம்
15-10-2007, 07:12 PM
அருமையான கவிதை ஒவியன்

இளசு
04-11-2007, 04:58 PM
பாராட்டுகள் சிவா!

சில முகங்களில் புன்னகை
வரவழைத்தால்,
நம் கொளுத்தும் மத்தாப்புகள்
கூடுதல் ஒளி சிந்தும்!


ஒரு நாள் கட்சி மாநாட்டுக்கு
சில கோடி செலவால் பந்தல் போடுவதைவிட,
சில நூறு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டலாமே நம் கட்சிகள்?

சிறிய அளவிலும் பெரிய அளவிலும்
மாற்றங்கள் காணும் நாள்
வந்துகொண்டே இருக்கிறது !

தென்னவன்
04-11-2007, 06:39 PM
பட்டுடுத்தி பட்டாசு
வெடிப்போரெல்லாம்
ஒரு சொட்டு எண்ணையும்
ஒரு செட்டு துணியும்
ஒரு கட்டு மத்தாப்பும்
ஏழைக்கு ஒதுக்கினால்
அந்த வீட்டிலும்
தீபம் ஒளிருமே....!

அருமை சிவா...
தீபம் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கையே ஒளிரும்.!!:icon_b::icon_b:

ஷீ-நிசி
05-11-2007, 03:53 AM
மிக அருமையான தீபாவளி கவிதை சிவா... வாழ்த்துக்கள்!