PDA

View Full Version : சேது சமுத்திரத் திட்டம் : விஞ்ஞானம் அரசிய

சூரியன்
06-10-2007, 05:03 PM
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத் திட்டுக்களை ராமர் பாலம் என்று பா.ஜ.க. உள்ளிட்டக் கட்சிகள் புது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், கடல் பகுதியை ஆழப்படுத்துவதால் தமிழ்நாட்டிற்கு நிலநடுக்க ஆபத்து ஏற்பட்டுள்ளதாக "நிபுணர்கள்" சிலர் கூறியிருப்பது அடிப்படையற்ற அச்சத்தை உருவாக்கும் முயற்சியாகத் தெரிகிறது!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் இப்படிப்பட்ட அச்சத்தை உருவாக்கியுள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்துவதால், அது அப்பகுதியில் ஒரு புவியியல் ரீதியிலான சமமின்மையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனால் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உருவாகும் என்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் கோபாலாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புவியியலை பாடமாகப் படித்தவர்களுக்கும், நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை விஞ்ஞானப்பூர்வமாக நன்கு அறிந்தவர்களுக்கும் இவர் கூறுவது சற்றும் உண்மையற்றது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்வார்கள்.

நமது இந்திய துணைக் கண்டத்தை தாங்கியுள்ள பெரும்பாறை போன்று உலகம் முழுவதும் உள்ள 12 பெரும் பாறைகள் பூமியின் மேற்பகுதியில் இருந்து 65 கி.மீ. தூர கனமுடையவை. இதனைத்தான் புவியின் மேற்பகுதி (எர்த் கிரஸ்ட்) என்று அழைக்கிறோம். இந்த 65 கி.மீ. கனமுடைய பாறைகள்தான் ஒன்றோடு ஒன்று மோதி உரசுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்ட விஞ்ஞானப்பூர்வ உண்மை. ஆனால், சேதுக் கடலில் ஒரு 13 மீட்டர் ஆழத்திற்கு மண்ணெடுத்து ஆழப்படுத்துவதால் இந்தப் பெரும்பாறைகளின் மீது ஒரு சமமின்மை ஏற்படும் என்று இந்த நிபுணர் கூறுவது எப்படி என்று தெரியவில்லை.

இது குறித்து நிலநடுக்க ஆய்வாளர் (2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சுமத்ரா தீவுகளையொட்டி ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை முன்கணித்துக் கூறிய) டாக்டர் என். வேங்கடநாதனை கேட்டோம்.

இப்படி கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஆரம்பித்த வேங்கடநாதன், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முன்னோடியாக உள்ள சூயஸ் கால்வாய் திட்டத்தையும், பனாமா கால்வாய் திட்டத்தையும் உதாரணம் காட்டியவர், அவ்விரு திட்டங்களுக்காக கடல் ஆழப்படுத்தப்பட்டதனால் நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார்.

இதுமட்டுமல்ல, நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் உள்ள ஜப்பானில் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு கடலிற்கு அடியில் பூமிக்குள் சுரங்கம் தோண்டி அதிவேக ரயிலை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக எந்த விவரமும் இல்லை என்று வேங்கடநாதன் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் தாக்கம் காரணமாக சென்னை நகரம் 2 செ.மீ. அளவிற்கு கிழக்காக நகர்ந்துள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள தேச புவியியல் ஆய்வுக் கழகம் (NGRI) கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய டாக்டர் வேங்கடநாதன், "அவ்வளவு பெரிய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட தாக்கம் வெறும் 2 செ.மீ.தான் என்றால், சேதுக் கடலில் 13 மீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்துவதனால் எந்த அளவிற்கு தாக்கம் இருக்கும் என்பதனை நீங்களே யோசித்துப் புரிந்துகொள்ளுங்கள்" என்றார்.

ஆக, சேது சமுத்திர திட்டத்தினால் புவியியல் ரீதியாக பெரும் தாக்கம் ஏற்பட்டுவிடும் என்று கூறுவதெல்லாம் அறியாதவர்களை ஏமாற்றும் பூதக் கதைதான்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்துவதால் அங்கு நிலவும் உயிரியல் சூழல் பாதிப்படையும் என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளார்.

எந்தவொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் அதனால் சுற்றுச் சூழலில் ஓரளவிற்கு தாக்கம் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. சென்னை துறைமுகத்தை உருவாக்குவதற்காக கரையில் இருந்து அந்த வளைவுச் சுவர் கட்டப்பட்டதன் காரணமாகத்தான் மெரீனா கடற்கரை உருவானது. அதே நேரத்தில், துறைமுகத்தின் வடபகுதியில் திருவொற்றியூர், எண்ணுர் ஆகிய பகுதிகளில் கரையை அரித்துக் கொண்டு கடல் பெரும் அளவிற்கு நிலங்களை மூழ்கடித்தது. இதற்காக சென்னை துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்டதா? இல்லையே. மாறாக, எண்ணூரிலும் மற்றொரு துறைமுகம் கட்டப்பட்டது. அதனால்கூட சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்பட்டது. அதற்காக அத்திட்டம் கைவிடப்படவில்லையே.

மனிதன் மேற்கொள்ளும் தொழில் ரீதியான, பொருளாதார ரீதியான ஒவ்வொரு முயற்சியும் இயற்கையின் மீது குறிப்பிட்ட அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பொருளாதார வளத்தைக் கொண்டுவரும் திட்டங்களை கைவிட முடியாது.

இன்றைக்கு விவசாய நிலங்கள் என்று நாம் பார்ப்பதெல்லாம், ஒரு நேரத்தில் காடுகள்தானே. காடுகளை அழித்துத்தானே நிலமமைத்தோம். எனவே, சேது சமுத்திர திட்டப் பணிகளால் உயிரியல் சூழலில் குறிப்பிட்ட அளவிற்கு தாக்கம் இருக்கவே செய்யும் என்பதை அந்த திட்டப் பணிக்காக ஆய்வு நடத்திய தேச சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (நீரி) கூறியிருந்ததே. எந்த அளவிற்கு அந்த தாக்கத்தை குறைத்து செய்ய முடியுமோ அந்த அடிப்படையில்தான் அத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று அரசு பலமுறை கூறியுள்ளதே.

அதற்குப் பிறகும் நிபுணர்கள் என்று கூறிக்கொள்கின்ற இப்படிப்பட்ட அடிப்படையற்ற அல்லது மிகச் சாதாரண காரணங்களைக் கூறி ஒரு மாபெரும் திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க நினைப்பது நேர்மையான மனப்பான்மை அல்ல.

எதை வேண்டுமானாலும் பிரச்சனையாக்கி அரசியல் கட்சிகள் லாபம் தேடலாம். அதனைப் புரிந்துகொண்டு முறியடிப்பது இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மக்களின் சிந்தனையைப் பொறுத்த விஷயம். ஆனால், மக்களை சிந்திக்கத் தூண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நிபுணர்கள் எந்த விஞ்ஞானத்தால் பயன்பெற்று முன்னிலைக்கு வந்தார்களோ, அதனையே கருவியாக்கி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பலனை புதைக்க நினைப்பது வடிகட்டிய நேர்மையின்மையாகும்.

ஆன்மீகம் அரசியலாகலாம், ஆனால் விஞ்ஞானம் அரசியலானால் அந்த சமூகத்திற்கு ஆபத்தாக அமையும்.

சேது சமுத்திரத் திட்டத்தை சிறிலங்கா அரசு எதிர்க்கிறது என்றால் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், சேதுக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து துவங்கம் போது, கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் இழக்கும். அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மாறாக, தூத்துக்குடி துறைமுகம் முக்கியத்துவம் பெறும். தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கும். தென் தமிழ்நாட்டின் தொழில், வணிக மேம்பாட்டிற்கு உந்துதலாக அமையும். எனவே, தமிழர்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

aren
06-10-2007, 05:08 PM
இந்தக் காலவாயால் ஒரு ஆபத்தும் தமிழகத்திற்கு வராது. இதனால் நன்மையே அதிகம். ஏன் இதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்று தெரியவில்லை.

தென் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், மதுரையும் தூத்துக்குடியும் திருநெல்வேலியும் பெரிய நகரங்களாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் தென் தமிழக மக்கள் இந்த திட்டத்தை நிச்சயம் ஆதரிக்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும் இந்த திட்டம் தடைபடக்கூடாது என்பது என் கருத்து.

இதனால் இந்தியாவிற்கு பல நண்மைகள் கிடைக்கும், ஆகையால் இதை அரசியலாக்கவேண்டாம். ஆனால் இந்த அரசியல்வாதிகளால் சும்மா இருக்கமுடியாதே.

நன்றி வணக்கம்
ஆரென்

ஜெயாஸ்தா
06-10-2007, 05:10 PM
தடைகளை உருவாக்க இப்படித்தான் புதுபுதுசா கண்டறிந்து சொல்வார்கள். எப்படித்தான் யோசிக்கிறார்களோ....... வடிவேல் பாணியில் ஒருவேளை ரூம்போட்டு யோசிப்பார்களோ....!

சூரியன்
06-10-2007, 05:12 PM
இதனால் நமக்கு வருவாயே தவிர இழப்பு இல்லை.
இத்திட்டம் நிறைவேறினால்.நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பயனடைவர்.
அரசியல்வாதிகள் இதில் புகுந்து இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.

aren
06-10-2007, 05:12 PM
தடைகளை உருவாக்க இப்படித்தான் புதுபுதுசா கண்டறிந்து சொல்வார்கள். எப்படித்தான் யோசிக்கிறார்களோ....... வடிவேல் பாணியில் ஒருவேளை ரூம்போட்டு யோசிப்பார்களோ....!

ஒரு வேளை ரூம்போட்டு இல்லை, நாட்கணக்காக ரூம்போட்டு யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

aren
06-10-2007, 05:12 PM
இதனால் நமக்கு வருவாயே தவிர இழப்பு இல்லை.
இத்திட்டம் நிறைவேறினால்.நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பயனடைவர்.
அரசியல்வாதிகள் இதில் புகுந்து இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.

அவங்களுக்கு பணம் எதுவும் கிடைக்கலியோ என்னவோ.

சூரியன்
16-10-2007, 04:57 PM
ஜெ. சதி வெற்றி பெறாது - டி.ஆர்.பாலு
சனிக்கிழமை, அக்டோபர் 13, 2007

சென்னை:

சேது சமுத்திர திட்டம் நிறைவேறாது என்று ஜெயலலிதா கூறியிருப்பது, தான் திருடி பிறரை நம்பார் என்பார்களே, அதைப் போல் உள்ளது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேது சமுத்திரத் திட்டம் முடிந்து போன கதை. இனி தொடர்வதற்கே வாய்ப்பில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். கருணாநிதியின் மற்ற திட்டங்கள் என்ன ஆனதோ அதுபோலத்தான் சேது சமுத்திரத் திட்டமும் ஆகும் என்கிறார் ஜெயலலிதா.

கருணாநிதியின் திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தியவர் ஜெயலலிதாதான். மீண்டும் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு, ஜெயலலிதாவால் மூடுவிழா நடத்தப்பட்ட உழவர் சந்தை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினார்.

அதைப் போலவே சேது சமுத்திரத் திட்டமும் நிச்சயமாக நிறைவேறும். அது நடைபெறக் கூடாது என்று ஜெயலலிதா போன்றவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், சதி செய்தாலும் அதிலே வெற்றி கிடைக்காது.

சேது சமுத்திரத் திட்டம் லாபகரமாக இருக்குமா என்றெல்லாம் பார்க்காமல், சொந்த லாபத்தை மட்டுமே கணக்கிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

தான் திருடி பிறரை நம்பாள் என்று சொல்வார்களே, அதே போன்று தன்னைப் போலத்தான் அனைவரும் இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அப்படி சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

இந்த திட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசே முன்வந்து வாக்குறுதி அளித்திருப்பதாகவும், ஜெயலலிதா திரும்ப திரும்பச் சொல்லி வருகிறார். மத்திய அரசு இந்த திட்டத்தை அப்படியே ஒத்தி வைப்பதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. சேது திட்டத்தில் பிரச்சனைக்குரிய ஆடம்ஸ் பாலம் பகுதியிலே மட்டும் திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் எந்தளவுக்கு நிறைவேறியுள்ளது என்று சொல்லத் தயாரா என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார். திட்ட வரைவில் குறிப்பிட்டுள்ளபடி, மொத்தம் 89 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 12 மீட்டர் ஆழத்துக்கும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில், இதுவரை 54 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 9 மீட்டர் ஆழத்துக்கும் அகழ்வு பணிகள் நடந்துள்ளன. மேலும் 1.5 லட்சம் டன் கொள்ளளவு கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

உலகில் மொத்தம் 9,147 கப்பல்கள் கடலில் பயணிக்கின்றன. அவற்றில் 1.5 லட்சம் கொள்ளளவுக்கு மிகுதியான கப்பல்களின் எண்ணிக்கை 1,367 மட்டுமே. அவற்றில் இந்திய துறைமுகங்களுக்கு வந்து போகிற கப்பலகளின் எண்ணிக்கை 2.4 சதவீதம் மட்டும் ஆகும்.

1.5 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள், உலகில் உள்ள எல்லா துறைமுகங்களுக்கும் செல்வது போலவும், சேது கால்வாய் வழியாக மட்டும்தான் செல்ல முடியாது என்பது போலவும் ஜெயலலிதா பிதற்றுகிறார்.

அது போன்ற பெரிய கப்பல்கள் உலகில் உள்ள ஒரு சில துறைமுகங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். இந்தியாவிலே உள்ள மொத்த துறைமுகங்கள் 199 (12 பெரிய துறைமுகங்கள், 185 சிறிய துறைமுகங்கள்). இதில் 1.5 லட்சம் டன் கொள்ளளவு உள்ள கப்பல்கள் செல்லக்கூடிய அளவுக்கு உள்ள துறைமுகங்கள் 4 மட்டுமே.

அவை, சென்னை, விசாகப்பட்டினம், ஜாம்நகரில் உள்ள வாடினார் மற்றும் ஹஸ்தியா துறைமுகங்கள் ஆகும்.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, முடிந்திடும் நாட்கள் விரைவில் நெருங்குகிறது என்பதை அறிந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களால் ஓரங்கப்பட்ட ஜெயலலிதா, கட்டுக்கடங்காத காழ்புண்ர்ச்சியால் கோபம் கொப்பளிக்க தினந்தோறும் புதிய புலம்பல்களை கட்டவிழ்த்து விடுகிறார். மக்கள் இவரின் புலம்பல்களை நம்பத் தயாராக இல்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
நன்றி:தாட்ஸ்தமிழ்.காம்

நேசம்
16-10-2007, 06:02 PM
நல்லது நடந்தால் சரி

lolluvathiyar
17-10-2007, 09:17 AM
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும் கடற்பகுதியில் நிலநடுக்க ஆபத்து ஏற்பட்டுள்ளதாக "நிபுணர்கள்" சிலர் கூறியிருப்பது அடிப்படையற்ற அச்சத்தை உருவாக்கும் முயற்சியாகத் தெரிகிறது!

மக்கள் முட்டாள்கள் அல்ல, அவர்களை அப்படி ஏமாற்ற முடியாது. பூகம்பம் சுனாமி போன்றவைகள் மனிதனின் கட்டுபாட்டில் இல்லை, அதை உருவாக்கவும் முடியாது தடுக்கவும் முடியாது.
இது போன்ற சிறு செய்லகளினால் அப்படி எந்த பிரச்சனையும் வராது.
காரனம் அவை பூமியின் ஆழத்தில் ஏற்படுபவை.

மனிதன் மேற்கொள்ளும் தொழில் ரீதியான, பொருளாதார ரீதியான ஒவ்வொரு முயற்சியும் இயற்கையின் மீது குறிப்பிட்ட அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பொருளாதார வளத்தைக் கொண்டுவரும் திட்டங்களை கைவிட முடியாது.

பொதுவாக வளர்ச்சி என்ற பொய்யான மாயையினால் இன்று இயற்கையோடு நாம் அதிகாம விளையாடுகிறோம். தொழில்சாலைகள், போக்குவரத்து சாலைகள், பிரம்மாண்ட கட்டுமானங்கள். இன்னும் இல்லாமல் பல்லாயிரம் வருடங்களாக செழிப்புடன் வாழ்ந்து வந்தவர்கள் நாம். இத்தனையும் வந்தாலும் வறுமையை அதிகபடுத்துமே தவிர ஒழிக்காது.
ஆனால் இதே பானியில் தொழில் வளர்ச்சி என்று போனால் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து நம்மிடம் பணம் நிரைய இருக்கும் ஆனால் உன்ன உணவு இருக்காது. இறக்குமதி செய்ய வேண்டும்.

மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பலனை புதைக்க நினைப்பது வடிகட்டிய நேர்மையின்மையாகும்.

நன்பரே அரசியல்வாதிகள் கொண்டு வரும் எந்த திட்டமும் மக்களுக்கு பாதகாமனதாக இருக்குமே தவிர நல்ல திட்டங்களாக இருக்க முடியாது.பலன் கிடைக்கும் ஆனால் அது மக்களுக்கல்ல, குறைந்த சிலருக்கு தான்

ஆன்மீகம் அரசியலாகலாம், ஆனால் விஞ்ஞானம் அரசியலானால் அந்த சமூகத்திற்கு ஆபத்தாக அமையும்.

ஆம் ஆனால் அவை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே அரசியலாகி விட்டது. கேபிள் டீவி டிடிஎச் இப்படி எல்லாமே அரசியல் தான் முடிவு செய்யும்.

தூத்துக்குடி துறைமுகம் முக்கியத்துவம் பெறும். தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கும். தென் தமிழ்நாட்டின் தொழில், வணிக மேம்பாட்டிற்கு உந்துதலாக அமையும்.

கோவை யிலிருந்து 50000 கோடி க்கு மேல் ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள் இது நாள் வரை சேது கால்வாய் இல்லாமல் தான் செய்தார்கள். துரைமுகங்கள் முக்கியம் தான் மறுக்கவில்லை. ஆனால் அவை தான் ஒரு மாநிலத்தின் மக்களுக்கு வளர்ச்சி தரும் என்பதெல்லாம் சும்மா. ஒரு சில கார்பரேட்களுக்கு நன்மை தரும்.

இதை நான் பொதுபடையாக தான் சொல்கிறேன். சேது சமுத்திர திட்ட கால்வாய் எதிர்பதற்க்காக நான் இதை சொல்ல வில்லை. பொதுபடையாக மட்டுமே பாருங்கள்.
நான் சென்னைக்கு குடி நீர் கொண்டு சென்ற வீரானம் திட்டத்துக்கும் எதிர்ப்பு நிலை கொன்டவன். நர்மதாம் அனைக்கும் எதிர்ப்பு கருத்து கொண்டவன். நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்துக்கு (தங்க நாற்கர திட்டம்) எதிர்ப்பு கருத்து கொண்டவன்.

நேசம்
17-10-2007, 10:47 AM
மக்கள் .

பொதுவாக வளர்ச்சி என்ற பொய்யான மாயையினால் இன்று இயற்கையோடு நாம் அதிகாம விளையாடுகிறோம். தொழில்சாலைகள், போக்குவரத்து சாலைகள், பிரம்மாண்ட கட்டுமானங்கள். இன்னும் இல்லாமல் பல்லாயிரம் வருடங்களாக செழிப்புடன் வாழ்ந்து வந்தவர்கள் நாம். இத்தனையும் வந்தாலும் வறுமையை அதிகபடுத்துமே தவிர ஒழிக்காது.
ஆனால் இதே பானியில் தொழில் வளர்ச்சி என்று போனால் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து நம்மிடம் பணம் நிரைய இருக்கும் ஆனால் உன்ன உணவு இருக்காது. இறக்குமதி செய்ய வேண்டும்.

இயற்கையோடு ஒத்துபோய் வாழ்வதுதான் சிறப்பாக இருக்கும்.இயற்கை மீறி செயல்படும்போது அதன் விளைவுகளை ச்ந்தித்து தான் ஆக வேண்டும்.(ராமர் பாலமோ அல்லது இயற்கையான மணற் திட்டொ அது ஒரு பாதுகாப்பு அரணாக தான் நான் உணர்கிறென்