PDA

View Full Version : ராஜகுமாரன்!!!



aren
06-10-2007, 04:39 PM
பல இரவுகள் கண் விழித்து
பல பேப்பர்களை செலவழித்து
ஒரு காதல் கவிதை எழுதினேன்
என் கண்மனியிடம் கொடுப்பதற்கு!!!

கொடுத்தேன் கண்மனியிடம்
வாங்கியவள் வெறுத்துவிட்டாள்!!!

கனவுகண்டாளாம்
ஒரு ராஜகுமாரன்
வந்து கொடுப்பான் என்று!!!

சூரியன்
06-10-2007, 04:49 PM
அந்த ராஜகுமாரன் தாங்கள் என்று ஏன் அவள் புரிந்து கொள்ளவில்லை,

ந*ல்ல* க*விதை பாராட்டுக்க*ள் ஆரென் அண்ணா..

ஜெயாஸ்தா
06-10-2007, 04:51 PM
ஹி...ஹி...ஹி... இதுக்குதான் நான் அன்னிக்கே எங்க அப்பாவிடம் சொன்னேன் 'யப்பா... உன் பேரை ராஜான்னு மாத்திக்கோன்னு'.

aren
06-10-2007, 04:53 PM
அந்த ராஜகுமாரன் தாங்கள் என்று ஏன் அவள் புரிந்து கொள்ளவில்லை,

ந*ல்ல* க*விதை பாராட்டுக்க*ள் ஆரென் அண்ணா..

நன்றி சூரியன்.

இனிமேல்தானே புரியவைக்கவேண்டும்.

காதலின் முதல்படியில்
விழுந்தது பலத்த அடி
அடுத்த அடி
அடியெடுத்து வைக்க
அவகாசம் வேண்டுமே!!!

நன்றி வணக்கம்
ஆரென்

aren
06-10-2007, 04:54 PM
ஹி...ஹி...ஹி... இதுக்குதான் நான் அன்னிக்கே எங்க அப்பாவிடம் சொன்னேன் 'யப்பா... உன் பேரை ராஜான்னு மாத்திக்கோன்னு'.

அப்படி செய்திருந்தால் கனவு உண்மையாகியிருக்குமோ?

ஒரு சட்டமே கொண்டுவரலாமா, அனைத்து ஆண்களின் பெயரும் ராஜா என்று முடியவேண்டும், அவர்கள் புதலவர்கள் அனைவரும் ராஜகுமாரர்களாகிவிடுவார்கள்.

அமரன்
06-10-2007, 05:10 PM
கவியும் ஜேமின் டைமிங்கும் கலக்கல்...
அப்படியா உனக்கு மாமன்னர்தான் கிடைப்பாருன்னு சொல்லிவிட்டு அடுத்ததை பார்க்க வேண்டியதுதான்...

வாழ்த்தும்,

aren
06-10-2007, 05:17 PM
கவியும் ஜேமின் டைமிங்கும் கலக்கல்...
அப்படியா உனக்கு மாமன்னர்தான் கிடைப்பாருன்னு சொல்லிவிட்டு அடுத்ததை பார்க்க வேண்டியதுதான்...

வாழ்த்தும்,

அடுத்ததும் இப்படியே சொன்னா என்ன செய்வது. ஜே சொன்னதுமாதிரி செய்துவிடுவதுதான் சரி.

ஓவியன்
07-10-2007, 02:12 PM
ஆகா ஆரென் அண்ணா இன்னும் ஒரு தடவை ராஜாவைப் போல வேடமிட்டு அந்த காதல் கடிதத்தை ஏன் இன்னொரு தடவை முயற்சிக்க கூடாது.....???? :D

ஜெயாஸ்தா
07-10-2007, 02:16 PM
ஆகா ஆரென் அண்ணா இன்னும் ஒரு தடவை ராஜாவைப் போல வேடமிட்டு அந்த காதல் கடிதத்தை ஏன் இன்னொரு தடவை முயற்சிக்க கூடாது.....???? :D
சிவனேன்னு சும்மா கவிதையை எழுதிகிட்டு இருக்கிறவர தூண்டி விடுறீங்களே ஓவியன்....!:080402gudl_prv: ஆரெண்...!

rajaji
07-10-2007, 02:21 PM
நடைமுறையில் நடக்கும் நிஜத்தை கவிதையாக வடித்து விட்டீர்கள்.....

நம்ம ஓவியரு சொன்னது போல ராஜா வேடம் போட்டு கடிதத்தைக் கொடுக்கலாமே.....:D

(அட்வான்ஸ் வாழ்த்துக்கள்)

தளபதி
07-10-2007, 02:26 PM
ஹா ஹா ஹா!!! ஆரண். உண்மை, சில பெண்கள் கனவிலேயே வாழ்ந்து நிஜத்தில் தோற்றுவிடுகிறார்கள்.

பத்திரமாக அந்த கவிதையை சேமித்து வையுங்கள். உங்களவள் இதற்காக ஏங்கிக்கொண்டிருக்க கூடும். வருவாள். சந்தோசமாக வாழ்வாங்கு வாழ்வீர்கள்.

சிவா.ஜி
08-10-2007, 02:48 PM
அப்படி சொன்ன அந்த பெண்ணுக்கு நீங்கள் இப்படி சொல்லியிருக்கவேண்டும்.
"அப்படீன்னா உனக்கு அந்த பாக்கியம் இல்லை...நாளை என் மகன் வந்து உன்மகளுக்கு கடிதம் கொடுப்பான்...அவளுக்குத்தான் அந்த யோகம்"-என்று
வாழ்த்துக்கள் ஆரென். நன்பர்கள் சொல்றாங்கன்னு ராஜாவேஷமெல்லாம் போடாதீங்க...ஏற்கனவே ஒரு பாட்டு பாடி ஒற்றைகண்ணராகிவிட்டீர்....

ஜெயாஸ்தா
08-10-2007, 03:24 PM
ஏற்கனவே ஒரு பாட்டு பாடி ஒற்றைகண்ணராகிவிட்டீர்....
அதென்ன கதை சிவா?

யவனிகா
08-10-2007, 03:36 PM
அப்படி செய்திருந்தால் கனவு உண்மையாகியிருக்குமோ?
அனைத்து ஆண்களின் பெயரும் ராஜா என்று முடியவேண்டும், அவர்கள் புதலவர்கள் அனைவரும் ராஜகுமாரர்களாகிவிடுவார்கள்.

பேரை மாத்தினதுக்கப்புறம் ராஜ குமாரன் குதிரையில தான் வரணும்னா என்ன செய்வீங்க?குதிரை கத்துக்க போவீங்களா? பேரை மாத்திரது கிடக்கட்டும் ஆளை மாத்துங்க முதல்ல.

ஜெயாஸ்தா
08-10-2007, 03:39 PM
பேரை மாத்தினதுக்கப்புறம் ராஜ குமாரன் குதிரையில தான் வரணும்னா என்ன செய்வீங்க?குதிரை கத்துக்க போவீங்களா?
டோண்ட்வொர்ரி...! குதிரை வேண்டுமனால் நம்ம சிவாஜியிடம் பிடுங்கிக் கொள்ளலாம். என்ன சவாரி செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கனும். வழக்கமா குதிரையிலிருந்து கீழே விழுந்தாதான் அடிபடும். ஆனா சிவாஜி குதிரையில் சவாரி செய்தாலே அடிபடும்......!