PDA

View Full Version : என்னவனே வருவாயா?



யாழ்_அகத்தியன்
06-10-2007, 03:44 PM
என்னவனே....
உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?

காலை மாலையாவதும் மாலை
காலையாவதும் உந்தன் ஆசைக்குள்
மறையவேண்டும் வருவாயா?

எந்தன் கோட்டையை விட்டு நீ
போனாலும் நீ போட்டு விட்டுபோன
கோடுகள் ஆறவில்லைஅதற்காகவேனும்
வருவாயா?

கோழி கூவினாலும் கோயில் மணி
அடித்தாலும்கோலம் போட மறந்தாலும்
உந்தன் மடியில் மறக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா?

கனவில் நான் குளித்து நினைவில்
காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள
உண்ர்வோடு வருவாயா?

அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை
தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி
விட்டாய் அணையாமல் எரிகிறேன்
அதற்காகவேனும் வருவாயா?

கோடை மழையாய் நீ வந்தாலும்
காதலாஅடை மழையாய் வரவேற்பேன்
அதற்காகவேனும் வருவாயா?

இரவைக் காட்டிக்கொடுக்கும் நிலவைப் போல
எந்தன் வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க
இரவில் வருவாயா?

ஊமையான உலகத்தில்உன்னோடு
பாட வேண்டும் துடிக்காத நரம்பெல்லாம்
இசைக்க வேண்டும் அதைக்கேட்டு நீ ஆடிக்
களைக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா?

மறந்து விட்டாயா நம் தனிமை பிரிந்து
நான்கு மாதமாச்சு எங்கே ஒருதடவை
வந்து பிரிந்து விடு

நாளாக நாளாக நான் பழுக்கிறேன்
நீ சுட்ட பழம்தானேடா நான்
பரிமார வருவாயா?

இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்
நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்
என் ஏக்கத்தை களைந்து விடு
என் வெக்கத்தை பார்க்கவேண்டும்
உன்னோடு நான்அதற்காகவேனும்
வருவாயா?

வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா?


-யாழ்_அகத்தியன்

aren
06-10-2007, 03:48 PM
நிச்சயம் வருவார் உன்னை காண்பதற்கு. உன்னவனை எதிர்பார்த்து எழுதிய அழகான கவிதை வரிகள், வருவான், வாசல் அருகில் காத்திரு,

நன்றாக வந்திருக்கிறது உங்கள் கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சுகந்தப்ரீதன்
07-10-2007, 09:44 AM
ஆகா உங்க பக்கம் முடிஞ்சி இப்ப அவுங்க பக்கமா போயி ஏக்கத்த வெளிபடுத்துறீங்க... அருமையாக இருக்கிரது அகத்தியரே... காதல் கவிதை
திரியை குத்த்கைக்கு எடுத்துகொள்வீர்கள் போலிருக்கு..!

ஜெயாஸ்தா
07-10-2007, 10:28 AM
பிரிவுத் துயர் மற்றும் தலைவியின் விரகதாபம் கவிதையில் பளிச்சிடுகிறது. உண்மையைச் சொல்லுங்கள் யாழ் நீங்கள் தாடிவைத்திருக்கிறீர்கள் அல்லவா?

யாழ்_அகத்தியன்
16-10-2007, 01:34 PM
ஒரு பெண்ணாக கற்பனை செய்து எழுதிய கிறுக்கல்தான் இது.
தாடி எனக்கு இல்லை என் கவிதைகளுக்கு இருக்கிறது.
நன்றி உங்க வாழ்த்துக்களுக்கு