PDA

View Full Version : ஒவ்வொருக்கும் வேலை!!!



aren
06-10-2007, 03:39 PM
எனக்கு ஓட்டு போடுங்கள்
வீட்டில் ஒவ்வொருக்கும் வேலை
என்றார் அரசியல்வாதி!!!

ஓட்டுபோட்டோம்
ஜெயிக்கவைத்தோம்
வேலை கொடுத்தார்
அவர் வீட்டுச்
சொந்தங்களுக்கு!!!

சூரியன்
06-10-2007, 04:02 PM
இன்றைய அரசியலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா..

aren
06-10-2007, 04:04 PM
நன்றி சூரியன். அதுதானே இப்பொழுது நடக்கிறது.

ஆதவா
06-10-2007, 04:06 PM
எனக்கு ஓட்டு போடுங்கள்
வீட்டில் ஒவ்வொருக்கும் வேலை
என்றார் அரசியல்வாதி!!!

ஓட்டுபோட்டோம்
ஜெயிக்கவைத்தோம்
வேலை கொடுத்தார்
அவர் வீட்டுச்
சொந்தங்களுக்கு!!!

ஒவ்வொருமுறையும் நாம் அப்படித்தான் ஓட்டு போடுகிறோம். அரசியல் வாதிகளின் மறைமுகப் பேச்சுக்கள் இப்படித்தானே இருக்கும்....

அண்ணா சமீபக் கவிதைகளில் சற்றே சிரிப்பு தெரிகிறதே!!!

aren
06-10-2007, 04:07 PM
ஒவ்வொருமுறையும் நாம் அப்படித்தான் ஓட்டு போடுகிறோம். அரசியல் வாதிகளின் மறைமுகப் பேச்சுக்கள் இப்படித்தானே இருக்கும்....

அண்ணா சமீபக் கவிதைகளில் சற்றே சிரிப்பு தெரிகிறதே!!!

அதே அதே.

பல தடவை சிரிப்பாக இருக்கனும்னுதான் எழுதுகிறேன், ஆனால் அவையனைத்து சிரிப்பாய் சிரித்து இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது.

ஜெயாஸ்தா
06-10-2007, 04:18 PM
ஆரெண் தற்போது அதிகமாக காதல் பற்றியும் எழுதுகிறார். ஹாஸ்யமாகவும் எழுதுகிறார்.

இதைப் படிக்கும் போது இன்னொரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

நான் வென்றால்
வறுமை போக்குவேன்
என்றார் அரசியல்வாதி....!
வென்றதும் தன்
வீட்டின் வறுமை போக்கினார்..!


--புத்திசாலி அரசியல்வாதி. யார் வீட்டு வறுமை போக்குவார் என்று கடைசி வரை அவர் சொல்லவேயில்லையே... இதில் ஏமாந்த சோணகிரி மக்கள்தான்.

நான் மேல்நிலை வகுப்பு படிக்கும் போது ஒரு பேச்சு போட்டிக்கு சென்றிருந்தேன். தலைப்பு அரசியல்வாதியைப் பற்றியது. 'சிலரை ஆட்டி வைப்பவன் மிதவாதி.... பலரை ஆட்டி வைப்பவன் தீவிரவாதி... இவர்கள் இருவரையுமே ஆட்டிவைப்பவன் யார்தெரியுமா?' என்று கேட்டுவிட்டு சிறிது நிதானித்து 'அவன்தான் அரசியல்வாதி...!' என்றேன். கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. பின் என்ன முதல் பரிசு எனக்குத்தான்..!

பழைய ஞாபகங்களை கிளிறிவிட்டீர்கள் ஆரெண். நன்றி.

aren
06-10-2007, 04:20 PM
நன்றி ஜே.எம். தைரியமாக அனைவர் எதிரிலும் அரசியல்வாதியைப் பற்றி கமெண்ட் அடித்து அதற்கு பரிசும் வாங்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஜெயாஸ்தா
06-10-2007, 04:43 PM
நன்றி ஜே.எம். தைரியமாக அனைவர் எதிரிலும் அரசியல்வாதியைப் பற்றி கமெண்ட் அடித்து அதற்கு பரிசும் வாங்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். பரிசு கொடுத்தவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் அப்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர்அல்போன்ஸ். எனக்கு பிடித்த அரசியல்வாதிகளுள் அவரும் ஒருவர்.

aren
06-10-2007, 04:45 PM
பீட்டர் அல்போன்ஸ், திருச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தானே.

ஜெயாஸ்தா
06-10-2007, 04:49 PM
அது சரியாகத் தெரியவில்லை ஆரென். அவர் அப்போது கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிஉறுப்பினராக இருந்தார்

aren
06-10-2007, 05:01 PM
அது சரியாகத் தெரியவில்லை ஆரென். அவர் அப்போது கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிஉறுப்பினராக இருந்தார்


சரி. எனக்கு அரசியல் அவ்வளவாகத் தெரியாது.

அமரன்
06-10-2007, 05:06 PM
ஏனுங்க ஏமாந்த மக்களும் அவரை தேடுவதை வேலையாகக் கொடுத்திருகிறாரே..எப்படிப்பார்த்தாலும் சொன்னதை செய்வோம் என்னும் அரசியல்வாதிகளின் "நெறி" கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது...
ஆதவா சொன்னதிற்கு மேலாக சிரிப்பும் சிறப்பும் முகுந்து வருகிறது கவிதைகள்..
பாராட்டுதலுடன்,

aren
06-10-2007, 05:11 PM
நன்றி அமரன்.

நீங்கள் அப்படி யோசிக்கிறீர்களா. அப்படியானால் சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்குகிறார்கள் என்று சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
06-10-2007, 05:13 PM
சம்பளம் கொடுக்காமலுன்னு சொல்லலாம்..அதை விட பொருத்தமானது அட்வான்ஸ்மட்டும் கொடுத்துவிட்டு வேலை வாங்குகின்றார்கள் என்பது...

அன்புடன்,

aren
06-10-2007, 05:15 PM
சம்பளம் கொடுக்காமலுன்னு சொல்லலாம்..அதை விட பொருத்தமானது அட்வான்ஸ்மட்டும் கொடுத்துவிட்டு வேலை வாங்குகின்றார்கள் என்பது...

அன்புடன்,

ஓ!!! ஒவ்வொரு ஓட்டுக்கும் கொடுக்கும் பணம் இந்த விஷயத்திற்கு அட்வான்ஸா. அப்படியா சங்கதி.

ஆதவா
08-10-2007, 06:46 AM
ஆரெண் தற்போது அதிகமாக காதல் பற்றியும் எழுதுகிறார். ஹாஸ்யமாகவும் எழுதுகிறார்.

இதைப் படிக்கும் போது இன்னொரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

நான் வென்றால்
வறுமை போக்குவேன்
என்றார் அரசியல்வாதி....!
வென்றதும் தன்
வீட்டின் வறுமை போக்கினார்..!


.

நான் மேடைப் பேச்சுகளில் பங்கேற்றது கிடையாது. ஒரே ஒரு நாடகத்திற்கு நடுக்கத்தோடு நின்றிருக்கிறேன்.. (இவ்வளவு ஏங்க, சிலரிடம் பேசினாலே பதட்டப்படுவேன்.) அரசியல்வாதி பற்றி தைரியமாக பேசியிருக்கிறீர்கள்... விரைவில் நல்ல அரசியல்வாதியாக வாருங்கள். :D

அரசியல் வாதி பற்றி நீங்கள் எழுதிய கவிதை போலவே நான் ஒன்றை எழுதி வைத்தேன்..

தேர்தல் வாக்குறுதிகள்
என் மனதில் பதிந்திருக்கிறது என்றார்
அரசியல்வாதி.
தேர்தல் சமயத்தில் மட்டும்.

அதே போல

இலவசங்களால்
தன் வசமானது வாக்கு
தன் வசமானதும்
இலவசமானது வாக்கு

இங்கே வாக்கு இரு அர்த்தங்களில் உள்ளது...

ஜெயாஸ்தா
08-10-2007, 06:50 AM
இலவசங்களால்
தன் வசமானது வாக்கு
தன் வசமானதும்
இலவசமானது வாக்கு

சூப்பர் ஆதவா சூப்பர்....! நான்கே வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருபொருளில் அருமையான கவிதை.....!