PDA

View Full Version : பிரச்சனைகள் புரியும்!!!



aren
06-10-2007, 04:36 PM
வீட்டை கட்டிப்பார்
பிரச்சனைகள் புரியும்
என்றார்கள்
கிளம்பினேன்
காண்டிராக்டரைப் பார்த்து
வேலை கேட்க!!!

ஆதவா
06-10-2007, 04:56 PM
ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் முடிவு சிரிப்பை வரவைக்கிறது... கவிதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவரைக்கும் சரியே! :)

aren
06-10-2007, 04:58 PM
கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கட்டுமே என்ற அர்த்தத்தில் எழுதியதுதான் இது. ஆனால் பல சமயங்களில் அது நம் மக்களுக்கு சரியாக போய் சேரமாட்டேன் என்கிறது. எழுதியது சரியில்லை என்றே தோன்றுகிறது.

அமரன்
06-10-2007, 06:19 PM
சிரிப்பு தானாக வருகிறது. இந்தக்கவிதையுடன் அப்பாவி வடிவேலுவை பொருத்திப்பார்த்தால் வெடித்துக் கிளம்புது சிரிப்பு. முதல் மூன்று அடிகளை கட்டிடத் தொழிலாளி ஒருவனின் பார்வையில் பார்த்தால் லேசாக கனமாகிறது மனது..

பாராட்டுதலுடன்,

aren
06-10-2007, 06:23 PM
நன்றி அமரன். இப்பொழுதாவது நான் எழுதும் நகைச்சுவைகள் புரிகிறதே. நன்றி வணக்கம்
ஆரென்