PDA

View Full Version : வெற்றி நிச்சயம்!!!



aren
06-10-2007, 03:34 PM
சந்தோஷமாக ஆரம்பித்த
வாழ்க்கை இன்று
நரகமாக ஆகியிருக்கிறது!!!

யார் காரணம்
என்ன காரணம்
சொல்லத் தெரியவில்லை!!!

பேசாததுதான் காரணமா
பேசியதுதான் காரணமா!!!

சரியாக நடக்காததுதான் காரணமா
சரியாக நடந்துகொண்டதுதான் காரணமா!!!

உண்மையை சொன்னதுதான் காரணமா
உண்மையை சொல்லாமல்விட்டதுதான் காரணமா!!!

பிரச்சனைகள் வரலாம்
பிரச்சனைகள் போகலாம்
வாழ்க்கை ஒருமுறைதான் வரும்
அதை அழித்துவிடாதே!!!

பேசித்தீர்த்துக் கொள்ளலாம்
தீர்வு என்று ஒன்று இருந்தால்!!!

முயற்சித்துப்பார்
முடிவு கிடைக்கும்
முடிவெடு
அது இரண்டு பேருக்கும்
வெற்றியாக இருக்கும்பட்சத்தில்!!!

தளராதே
கலங்காதே
கல்லும் கரையும்
ஆனால்
கண்ணீரால் கரையாதே!!!

முதலடியாக
உன் காலை எடுத்துவை
வெற்றி நிச்சயம்!!!

ஓவியன்
06-10-2007, 05:30 PM
முகாமைத்துவத்தைப் பற்றி நான் எப்பவோ படித்தவை, எதிரெதிர் தரப்பு இருசாராருக்கும் வெற்றி வரும் வகையில் தீர்வைக் கொடுக்கும் முறை (Win-Win Solution). முகாமைத்துவத்திலேயே மிக மிக வெற்றிகரமான முறை, ஆனால் அதனை அடைவது மிகச் சிரமமானது.

எப்போதும் நாம் இந்த வெற்றி-வெற்றி தீர்வு முறைக்கு முயலவேண்டும், அது உன்னால் முடியும் என்ற ஆரென் அண்ணாவின் கவிதை அருமை.

பாராட்டுக்கள் அண்ணா!.

aren
06-10-2007, 05:33 PM
நன்றி ஓவியன். இருவருக்கும் வெற்றி என்பது கொஞ்சம் கடினமான விஷயமாக இருந்தாலும் முடியாததல்ல. முயன்றால் நிச்சயம் அடையலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

mukilan
06-10-2007, 05:38 PM
கவிதையை நான் படித்தவுடனேயே எனக்குத் தோன்றியது Win-Win சூழ்நிலைதான். வியாபாரம், தொழில் மற்றுமல்ல அன்றாட வாழ்க்கைக்கும் உகந்த கருத்துக்கள். அனுபவம் நன்றாக மிளிர்கிறது அண்ணா.

aren
06-10-2007, 05:43 PM
நன்றி முகிலன். உங்களை இங்கே மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

மனோஜ்
06-10-2007, 05:57 PM
முயற்சிகள் என்றும் அழிவதில்லை
உங்கள் கருத்தில் அவை மெளிர்கிறது அண்ணா

இனியவள்
06-10-2007, 05:59 PM
இருவருக்கும் வெற்றி இருக்கும்

ஆரென் அண்ணா..

தோல்வியில் ஓர் அழகிய பாடத்தைக்
கற்பவனுக்கு அந்த தோல்வி ஒரு வெற்றி

ஆக மொத்தத்தில் இருவருக்கும் வெற்றி தானே

கவிதை அழகு அண்ணா வாழ்த்துக்கள்

அண்ணாவின் கவிதை படைக்கும் வேகம் பிரமிக்க வைக்கிறது
தொடரட்டும் இந்த வேகம் இன்னும் வேகவேகமாய்

aren
06-10-2007, 06:03 PM
முயற்சிகள் என்றும் அழிவதில்லை
உங்கள் கருத்தில் அவை மெளிர்கிறது அண்ணா

நன்றி மனோஜ். அனைவரும் முயற்சிப்போம், வெற்றி கிடைக்கட்டும்.

aren
06-10-2007, 06:04 PM
இருவருக்கும் வெற்றி இருக்கும்

ஆரென் அண்ணா..

தோல்வியில் ஓர் அழகிய பாடத்தைக்
கற்பவனுக்கு அந்த தோல்வி ஒரு வெற்றி

ஆக மொத்தத்தில் இருவருக்கும் வெற்றி தானே

கவிதை அழகு அண்ணா வாழ்த்துக்கள்

அண்ணாவின் கவிதை படைக்கும் வேகம் பிரமிக்க வைக்கிறது
தொடரட்டும் இந்த வேகம் இன்னும் வேகவேகமாய்


நன்றி இனியவள்.

நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் எழுதுகிறேன். முடிந்தால் இன்னும் எழுதுகிறேன், ஆனால் வார்த்தைகள்தான் சரியாக அமையமாட்டேன் என்கிறது எவ்வளவு முயற்சித்தும். இதுதான் பிரச்சனையே. இன்னும் முயற்சி செய்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்