PDA

View Full Version : மழை வேண்டி!-இன்றைய படம்-மழை வந்தாச்சே!:)பூமகள்
06-10-2007, 08:02 AM
மழை வேண்டி..!!


http://img39.picoodle.com/img/img39/9/10/6/f_raingreenfim_c6810ee.jpg

மாலை வனப்பில்
கீழ்வானம் பார்த்து
மனமும் கொஞ்சம்
மயங்கும் வேளை..!!

பறவைக் கூட்டமும்
கூடு நோக்கி
துயில்கொள்ள விரையும்
அந்திசாயும் சமயம்...!!

காற்றில் ஏதோ
முனகும் சத்தம்....
காற்றைக் கொண்டே
காது தீட்டி
குரல் வந்த திசை
நோக்கி
கூர்மையாக்கினேன்..

பச்சிளம்பயிர்
பரவசமின்றி
எதிர்புறம்..!!

இமைகலங்க
அசைவற்றிருந்தது
இயற்கை மழலை..!!

பதறித் துடித்து
ஏனென
வினவியது என்
வாஞ்சையுள்ளம்...!!

விக்கும் குரலில்
வலி சொல்லியது
மெல்லிய செடி..!!

தாகத்திற்கு
நீரின்றி
தன்னுடல் கருகும்
தன்னிலைவிளக்கிற்று...

உற்றுனோக்கியது என்
உள்ளக் கண்கள்..
ஆம்....
பச்சையுடல்
பாழ்பட்டுக் கொண்டிருந்தது..
அழகிழந்து
காயும் சருகாகி
காட்சி கொடுத்தது...

வான்மழையே
தாய்பாலென
வேதம் சொல்லி
தவித்து புலம்பியது
பச்சிளம்பயிர்...

வருந்தும் பயிரின்
விம்மல் நிறுத்தி
வள்ளலாரைப் போல்
வெடித்துக் கதறினேன்
சத்தமின்றி...

பயிர்மழலை
பசிபோக்க
மழை வேண்டி
மன்றாடியது என்
மென்னுள்ளம்..!!

மழையே வா..!!
வானமுதே வா..!!
பச்சைப்பட்டாடை
தரித்து பூமி
மகிழ்ந்திட
மடைதிறந்து வா..!!

வேண்டிமுடித்து
வெகுநேரம்
வான் பார்த்திருந்தேன்..!!

காரிருள் சூழ்ந்தது...
மின்னல் சொல்லெடுத்து
கார்மேகங்கள் கலந்துரையாடி - அதன்
கல்மனம் கரைந்தது..

மழைத்துளிகள்
பயிர்தொட்டு
முத்தமிட்டு
பசிபோக்கி
மகிழ்ந்தது..!!

அடுத்த நாளின்
அந்திவரும் வேளை
அதே திசைநோக்கி
அனிச்சையாய் என்
அழகுவிழிகள்..!!

தேடும் முன்னே
திகைப்பும்
நகைப்புமாய்
நனைந்து நின்றது
பயிரிளம்பிஞ்சு..!!

நன்றி நவிழ்ந்து
நல்லாசி கூறி
தன் கையசத்து
சாமரம் வீசி
தென்றலனுப்பியது..!!

சிலிர்த்து நடுங்கி
பூரித்த நெஞ்சில்
கனத்த மழை
மகிழ்ந்து
முகிழ்ந்தது..!!

நிஜ படங்கள்:
படம் : 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=282909&postcount=20)
படம் : 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=282910&postcount=21)

(இக்கவிதையை நிஜமாகவே என் வீட்டின் அருகில் மழையின்றி வாடிக் கொண்டிருக்கும் பயிர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..!! அதன் தாக்கத்தில் மனம் கனக்க எழுதியதே இக்கவி.)

சிவா.ஜி
06-10-2007, 08:10 AM
பிரமாதம்...தங்கையே.....வார்த்தைகளின் வசீகரிப்பின் தாக்கம் இன்னும் குறையாத பிரமிப்பில் நான்....பயிர் வாட உயிர் உருகும் மென்னுள்ளத்தை என்னென்று பாராட்டுவேன்.கருமேகம் உருவாகி வான்மழை பொழிந்ததில்,பயிரோடு நானும் பரவசமானேன்.மனமார்ந்த பாராட்டுக்கள் பூமகள்.

rajaji
06-10-2007, 08:10 AM
ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக இருக்கிறது.....

படமும் கவிதையும் ஒருங்கே இணைந்து படிக்கும் போது கவிதையோடு ஒன்றிட வைக்கின்றது.....

பாராட்டுக்கள் பூமகள்....

(கவிதையில் வரும் மழை போலவே நிஜமாகவே மழை வந்து உங்கள் வாடும் பயிர்களுக்கு உயிர் தரட்டும்)

பூமகள்
06-10-2007, 08:35 AM
பிரமாதம்...தங்கையே.....வார்த்தைகளின் வசீகரிப்பின் தாக்கம் இன்னும் குறையாத பிரமிப்பில் நான்....பயிர் வாட உயிர் உருகும் மென்னுள்ளத்தை என்னென்று பாராட்டுவேன்.கருமேகம் உருவாகி வான்மழை பொழிந்ததில்,பயிரோடு நானும் பரவசமானேன்.மனமார்ந்த பாராட்டுக்கள் பூமகள்.
நன்றிகள் சிவா அண்ணா. உங்களின் வாழ்த்து கண்டு மனம் சந்தோசத்தில் கூத்தாடுகிறது.
அப்படியே மழை வராமல் வாடும் பயிர் உயிர் பிழைக்கவும் பிராத்திப்போம்..!!

பூமகள்
06-10-2007, 08:46 AM
ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக இருக்கிறது.....
படமும் கவிதையும் ஒருங்கே இணைந்து படிக்கும் போது கவிதையோடு ஒன்றிட வைக்கின்றது.....
பாராட்டுக்கள் பூமகள்....
(கவிதையில் வரும் மழை போலவே நிஜமாகவே மழை வந்து உங்கள் வாடும் பயிர்களுக்கு உயிர் தரட்டும்)
நன்றிகள் சகோதரர் ராஜாஜி...
உங்களின் வேண்டுதலும் ஆசியும் உண்மையாய் பலித்து மழை விரைந்து வந்து பயிர் செழிக்கட்டும்..!!
தினம் தினம் சன்னலின் வழி பார்த்து மனம் வாடும் என் நிலை மாறட்டும்.

ஓவியன்
06-10-2007, 09:01 AM
நான் வேலை நிமித்தம் தங்கி இருப்பதோ ஒன்று மாறி ஒன்றாக மத்திய கிழக்கின் பாலை வன நாடுகள், இங்கே வ்ர முன்னர் நான் நினைத்ததுண்டு பாலையிலே புல் வளராதென்று....!
ஆனால் வந்த பின்னரே தெரிந்தது பாலையையும் சோலையாக்கலாம் பி.வி.சி பைப்பின் துணையுடன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9326) என்று...
இங்கெல்லாம் வருடத்தில் மழை பெய்யும் நாட்களை கைவிரல்களைக் கொண்டு எண்ணி விடலாம்...
எண்ணையைக் கொடுத்த கடவுள் தண்ணீரைப் பறித்ததன் விளைவு இது. ஆனால் இங்கேம் சோலைகள், பூங்காக்கள், தென்றல் வீச வைக்கும் மரங்கள் என மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் எத்தனை எத்தனையோ...

இதுவெல்லாம் எப்படி சாத்தியமென எண்ணுவோமேயெனின் கிடைக்கும் ஒரே விடை,
முயற்சி...!!!
ஆம் முயற்சி இருந்தால் பாலையிலும் சோலை மலரும்...!!! :)

வானமிடிந்து ஒரு துளி வராதாவென ஏங்கி நின்ற ஒரு செடிக்கு மழை கொடுத்த பூமகளின் கவிதை...
வித்தியாசமான சிந்தனை...
செயற்கையால் அச்செடியை நீரால் குளிப்பாட்ட எத்தனை வழி இருந்தும் மழையை அழைத்து அச்செடியைக் குளிர செய்தமை பூமகளின் நல்லிதயத்தைக் காட்டுகிறது.
அதனால் தானே அந்த ஒரு செடியின் பொருட்டு எல்லோருக்கும் மழை கிடைத்தது. (நல்லோர் ஒருவர் உள்ளரெனின் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை..! :)).
நீளமானது என்பதை விட கவிதையில் குறைகளில்லை, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!. :)

அமரன்
06-10-2007, 10:35 AM
நீலப்பார்வையின் வீச்சில்
பச்சைபார்வை அகப்பட்டு
நாணப்பட்டு சிவக்காமல்
சபலப்பட்டு சங்கமித்து
மஞ்சளாகி,
மஞ்சளாக்கும் காலங்கள்
கறுப்புக்குள் புகுந்துவிட்டன..
இல்லை... இல்லை...
கட்டாயமாக புகுத்தபட்டன..

இப்போதெல்லாம்
சூரியக் கதிர்கள் மட்டும்
கதவுகளைத் தட்ட
பழம் பார்க்காமலே பழுத்து
மஞ்சள், செம்மஞ்சளென
மாற்றங்களைக் கண்டு
நிறங்களை தொலைத்துவிட்டோம்...

ஆனாலும்
மாறவில்லை மனிதன்..

மாற்றம் மட்டுமே மாறாது என்பதை
தவறுகளுக்கு மட்டும்
சரியாக அர்த்தபடுத்திக்கொண்டான் போலும்..

என்னை பார்த்ததும்
முனகும் செடிகள்
சமிக்கையால் சலப்படுத்துகிறன..

எனக்காக
வானதேவதையிடம் வேண்டாதே.
உனக்காக
உனது கண்ணீருடன்
பல துளிகளை கலந்து
என்னை குளிப்பாட்டு

அதைக்கேட்க
காதுகளை தீட்டிய நான்
என்னையே
கூர்மை ஆக்கிக்கொள்வேன்..

பலரை அழுவிக்க
திடசங்கற்பம் பூணுவேன்..

என்னுடன் இக்கவியும்
இணைந்து
பலரை இணைத்தால் மட்டுமே
வெற்றி கிட்டும்
எல்லாவற்றுக்கும்...

ஆதவா
06-10-2007, 10:46 AM
நீங்கள் படம் பார்த்து கவிதத எழுதுகிறீர்களா? இல்லை கவிதை முடித்து படம் தேடுகிறீர்களா?

கவிதை தொடங்கி முடிகிறது. ஆரம்பம் முதலே விளக்கப்படுகிறது. அதனால் நீளமும் அதிகமாய்த் தென்படுகிறது.

கீழ்வானத்தின் மயக்கம், மாலை வேளை. மனக்கிறக்கமும் அதே நேரத்திலே! இரவா பகலா என்றறியாத தருணம் தான் சாயுங்கால வேளை. கீழ்வானத்தை ரசிப்பவர்களுல் நானுமொருவன். கீழ்வானத்தின் போது வெள்ளி" கிரகம் தெரிவதாக சொல்லுவார்கள். அந்த காட்சிக்கு பல நாட்கள் கீழ்வானத்தை மென்றிருக்கிறேன்.அந்திப் பொழுது, ஆதவனின் ஆக்கிரமிப்பை அகற்றும் நேரம். கிறங்கிக் கிடக்கும் பறவைக்கூட்டம் உறங்கச் செல்லும் வேளை. மாலையின் வனப்புக்கு இவ்விரு பாராக்கள் போதாது. ஆனால் இவ்விரு பேராக்களில் அடக்கியிருக்கலாம்....

அடுத்து, இடி முழக்கம். மேகங்களின் உச்சமுத்தம். காற்றைக் கிழிக்கும் காம சத்தம். கவிஞனின் மூளைக்குள் உடுக்கை அடிக்கும் இயற்கையின் கூத்து. உணரமுடியும் மேக சத்தமானது, மழையரசியின் வருகைக்குக் கொட்டும் முரசு.பயிறை உயிறாய் எழுதியமைக்கு பாராட்டுக்கள். பயிற் என்று சுருக்குவதைக் காட்டிலும் உயிர்பொருள் யாவுமே என்று விரிக்கலாம். விண்ணவன் கண்ணெதிரே காணாவிடில் கலங்காமல் போகாதல்லவா உயிர்களுக்கு.

விக்கும் குரலில்
வலி சொல்லியது
மெல்லிய செடி..!!

வலி எப்படி சொல்லும்? காய்ந்து போன தேகத்தாலா? பேசமுடியாத அல்லது பாஷையில்லாத பசுமையின் வலிகளை உணர்ந்துகொண்டீர்களா? (வீட்டுக்கு வெளியே உள்ள பயிற்களைப் பார்த்து) தாகம் ஒன்றுதான் அவைகளின் தேகப்பசிக்குத் தீர்வாகும். வந்திட்டானா வானவன்?

வான்மழையே
தாய்பாலென
வேதம் சொல்லி
தவித்து புலம்பியது
பச்சிளம்பயிர்...

வான்மழை- தாய்ப்பால். நல்ல உவமை. நெஞ்சில் புடைத்துச் சொன்ன உண்மை. அளவுக்கு மிஞ்சினால் தாய்ப்பாலும் நஞ்சு. மழைநீர் விஞ்சினால் பயிறின் உயிரும் பறிபோகும்.

"வாடும் பயிறைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" (விவசாயிகளுக்காக அவர் சொன்னது) வருத்தம் அவருக்கு விவசாயின் மேலே இங்கே கவிதை வருத்தத்தை பயிற்மீது கவிதைப் பாலாய்த் தெளிக்கிறதே! பாசத்தின் உச்சமிது. அனைவரின் மன்றாட்டம் வானத்திடம் செல்வதில்லை. வாவென்று கூவியபோதும்.........

பச்சைப்பட்டாடை
தரித்து பூமி
மகிழ்ந்திட
மடைதிறந்து வா..!!

மடை திறந்து வேண்டாம். பச்சை உடை தரித்து வேண்டாம்.... கவிஞரே!

மடைதிறந்து வெள்ளம் பெருகுமன்றோ! பச்சைப்பட்டாடை வானுக்கெப்படி முடியும்? இங்கே இடித்தாலும் சற்றேனும் வரியமைப்பை மாற்றியிருக்கலாம். பச்சை தரித்த பூமியின் இச்சையை தீர்க்க வாவென்று கதறியிருக்கலாம்.

ஆதவனை மறைக்கும் திறம் கார்மேகத்துக்குண்டு. ஒருவேளை பூமிக்கு கொடுக்கும் தானம் தன்மேல் பிளந்து நிற்கும் வானுக்குத் தெரியக்கூடாதென்ற உயர்வா? மழையின் முத்தம் எத்தனை வயிற்றின் சத்தத்தை நீக்கியிருக்கிறது!!

அடுத்த நாளின்
அந்திவரும் வேளை
அதே திசைநோக்கி
அனிச்சையாய் என்
அழகுவிழிகள்..!!

அழகு மோனைகள் ஆசைப்படுவது அதிகமென நினைக்கிறேன். நிதமும் கொடுத்து கொடுத்து வாங்கியவன் கையை முறித்துவிடப்போகிறான் குறைவில்லா இயற்கைக் கர்ணன்!. வானுக்கு நன்றி நாவால் சொல்லத்தகா.

சாமரம் வீசி
தென்றலனுப்பியது..!!

தென்றல் என்பது இன்பக்காற்றல்ல.. மென் காற்றுமல்ல. தவறாக நாம் புரிந்துகொள்ளப்படுகிறோம். மாற்றிக் கொள்ளுங்கள். இத்தனை எழுதினீர்களே! மின்னலை மறந்துவிட்டீர்களே! அவள் மேக தம்பதியின் மகளல்லவா! மழை வேண்டுமுன் எத்தனை பேர் பசுமை காக்கிறார்கள் என்பதும் முக்கியம். மழை மனிதர்களின் வாழ்வில் ஓர் அங்கம், கவிஞர்களுக்குத் தாலாட்டு. உழவர்களுக்கு வாழ்க்கை. வேண்டாமென சொல்பவருமில்லை. அதிகம் வேண்டும் என்று சொல்பவருமில்லை.

பயிறின் வாழ்வு.... அதனை கவிஞையாகிய நீங்கள் கவலைப்பட்ட விதம்..... கவலை வேண்டாம். மழை வரும்... சும்மா அல்ல. மழைக்கு மர'த்தீனி இடுங்கள். வளர்ந்து பொழியும்.

வாழ்த்துக்கள்.

தென்னவன்
06-10-2007, 10:51 AM
அச்த்தி விட்டீர் பூமகளே!!!
உமது கவிக்கு செவி மடுத்து தான் இயற்கை அன்னையே மழையாக பொழிந்திருக்கிறாள் அருமை!!!:wuerg019::wuerg019:

ஆதவா
06-10-2007, 10:58 AM
நீலப்பார்வையின் வீச்சில்
பச்சைபார்வை அகப்பட்டு
நாணப்பட்டு சிவக்காமல்
சபலப்பட்டு சங்கமித்து
மஞ்சளாகி,
மஞ்சளாக்கும் காலங்கள்
கறுப்புக்குள் புகுந்துவிட்டன..
இல்லை... இல்லை...
கட்டாயமாக புகுத்தபட்டன..

இப்போதெல்லாம்
சூரியக் கதிர்கள் மட்டும்
கதவுகளைத் தட்ட
பழம் பார்க்காமலே பழுத்து
மஞ்சள், செம்மஞ்சளென
மாற்றங்களைக் கண்டு
நிறங்களை தொலைத்துவிட்டோம்.
..............

மாற்றம் மட்டுமே மாறாது என்பதை
தவறுகளுக்கு மட்டும்
சரியாக அர்த்தபடுத்திக்கொண்டான் போலும்..
**************************************************************
என்னை பார்த்ததும்
எனக்காக
வானதேவதையிடம் வேண்டாதே.
உனக்காக
உனது கண்ணீருடன்
பல துளிகளை கலந்து
என்னை குளிப்பாட்டு

..

வர்ணகலப்பைப் வடிவமும் வரிகளும் சொல்லுகின்றன அமரன். வர்ணங்களை இழைத்த இடைவெளி சற்றேனும் அதிகப்படுத்தியிருந்தால் தொடர்பற்ற நிலையை சரிசெய்திருக்கலாம் என்பது எனது எண்ணம். மாற்றம் மாறாததுதான்... மாற்றமும் மாறினால் அது மனிதனே அன்றி வேறென்ன?

பயிரின் பார்வைக்கவி பலமாகவே இருக்கிறது. விண்ணீரைத் தவர்க்கக் காரணமென்ன புற்களே! கண்ணீரில் உப்பதிகம் என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ளவில்லையா?

மேற்படி, கவிதை படிக்க சற்றேனும் சிரமம் தெரிகிறது. வர்ணம் தெளிவில்லை. கொஞ்சம் கருமை கலந்த வர்ணங்களை உபயோகப்படுத்துங்களேன்.

இணைய நண்பன்
06-10-2007, 12:26 PM
பருவ காலங்களில் மழை பொழியும் அன்று.இன்று அது தலைகீழாக மாறிவிட்டது.இயற்கை மாறிவிட்ட போதிலும் ஓவியன் சொன்னது போல மனிதன் முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை.பூமகள்! நீங்கள் அழகாக கவி வடித்திருக்கிறீர்கள்.இயற்கையை ஒரு செடியின் வேதனையாய் பிரமாதமாக கவி பாடி இருந்தீங்க.வாழ்த்துக்களுடன் 300 இ பணம் அன்பளிப்பு

யவனிகா
06-10-2007, 12:45 PM
[QUOTE=ஓவியன்;281683இங்கெல்லாம் வருடத்தில் மழை பெய்யும் நாட்களை கைவிரல்களைக் கொண்டு எண்ணி விடலாம்...
எண்ணையைக் கொடுத்த கடவுள் தண்ணீரைப் பறித்ததன் விளைவு இது. ஆனால் இங்கேம் சோலைகள், பூங்காக்கள், தென்றல் வீச வைக்கும் மரங்கள் என மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் எத்தனை எத்தனையோ...[/QUOTE]

நீங்கள் சொன்னது உண்மைதான் மனம் வைத்தால் பாலையிலே கூட வண்ண வண்ண மலர்களைப் பூக்கவைக்கலாம் தான்.ஆனால் அந்த வண்ணமலர்க*ளுக்கு வாசத்தை எப்படித் தருவது?உலகத்திலே இருக்கும் அத்துனை நிறங்களிலும் இங்கே ரோஜாக்கள் உண்டு...அனால் நம் ஊரிலே பூக்கும் ஒற்றை மல்லிகை முன்னே அவை அத்தனையும் தோற்றுத்தான் போக வேண்டும்.

எங்கெங்கு காணிணும் பச்சையடா இங்கே!ஆனால் அவையெல்லாம் நம்மூரின் வேப்பமர குளிர்காற்றையும்,தண்ணிழலையும் தருமா?ஒரு போதும் மன*தோடு ஒட்டுவதில்லை இந்த மரங்கள்,செயற்கைத் தண்ணீர்,செயற்கை மண் இவற்றோடு ஊருக்கேற்ப மாறுவது போல செயற்கை மனமும் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

பூமகள்
07-10-2007, 05:59 AM
இதுவெல்லாம் எப்படி சாத்தியமென எண்ணுவோமேயெனின் கிடைக்கும் ஒரே விடை,
முயற்சி...!!!
ஆம் முயற்சி இருந்தால் பாலையிலும் சோலை மலரும்...!!! :)

வானமிடிந்து ஒரு துளி வராதாவென ஏங்கி நின்ற ஒரு செடிக்கு மழை கொடுத்த பூமகளின் கவிதை...
வித்தியாசமான சிந்தனை...
செயற்கையால் அச்செடியை நீரால் குளிப்பாட்ட எத்தனை வழி இருந்தும் மழையை அழைத்து அச்செடியைக் குளிர செய்தமை பூமகளின் நல்லிதயத்தைக் காட்டுகிறது.
நீளமானது என்பதை விட கவிதையில் குறைகளில்லை, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!. :)
மிகுந்த நன்றிகள் ஓவியன் அண்ணா. செயற்கை முறையில் கிணற்று நீரை பயிர்களுக்கு இறைக்காமல் விட்டு விட்டதால் தான்.. இதோ என் மனக் குமுறலை கவிபாடியாவது மழை வரவழைக்க இயலாதா என்று ஏங்கி நிற்கிறேன்.
உங்களது ஊரின் பாலையை சோலையாக்கிய புண்ணியம் பிவிசி பைப்களுக்குத் தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

நீலப்பார்வையின் வீச்சில்
பச்சைபார்வை அகப்பட்டு
நாணப்பட்டு சிவக்காமல்
சபலப்பட்டு சங்கமித்து
மஞ்சளாகி,
மஞ்சளாக்கும் காலங்கள்
கறுப்புக்குள் புகுந்துவிட்டன..
இல்லை... இல்லை...
கட்டாயமாக புகுத்தபட்டன..

இப்போதெல்லாம்
சூரியக் கதிர்கள் மட்டும்
கதவுகளைத் தட்ட
பழம் பார்க்காமலே பழுத்து
மஞ்சள், செம்மஞ்சளென
மாற்றங்களைக் கண்டு
நிறங்களை தொலைத்துவிட்டோம்...

ஆனாலும்
மாறவில்லை மனிதன்..

மாற்றம் மட்டுமே மாறாது என்பதை
தவறுகளுக்கு மட்டும்
சரியாக அர்த்தபடுத்திக்கொண்டான் போலும்..

என்னை பார்த்ததும்
முனகும் செடிகள்
சமிக்கையால் சலப்படுத்துகிறன..

எனக்காக
வானதேவதையிடம் வேண்டாதே.
உனக்காக
உனது கண்ணீருடன்
பல துளிகளை கலந்து
என்னை குளிப்பாட்டு

அதைக்கேட்க
காதுகளை தீட்டிய நான்
என்னையே
கூர்மை ஆக்கிக்கொள்வேன்..

பலரை அழுவிக்க
திடசங்கற்பம் பூணுவேன்..

என்னுடன் இக்கவியும்
இணைந்து
பலரை இணைத்தால் மட்டுமே
வெற்றி கிட்டும்
எல்லாவற்றுக்கும்...
அசத்தலான கவி.. இயற்கையாய் பழுக்க வைக்காமல் செயற்கையில் பழுக்க வைக்கும் பழங்களை உண்பதால் தானோ... மனிதனும் செயற்கைத்தனமாய் மாறிப்போய்க்கொண்டிருக்கிறான்??
பலர் மனங்களை நம் கவி மூலம் கனக்க வைத்து அழவைத்தால் நிச்சயம் இனி பயிர்களை அழவிடாமல் செய்ய முடியும்.
உங்களின் பின்னூட்டக் கவியோடு கூடிய ஊக்கத்திற்கு மிகுந்த நன்றிகள் அமர் அண்ணா.

பூமகள்
07-10-2007, 06:15 AM
நீங்கள் படம் பார்த்து கவிதத எழுதுகிறீர்களா? இல்லை கவிதை முடித்து படம் தேடுகிறீர்களா?

கவிதை எழுதிய பிறகே படத்தை தேர்வுசெய்வேன். உங்களின் சந்தேகம், படம் மிகவும் பொருத்தமாக கவிக்கு அமைந்துவிடுவதைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.
மிக நீண்ட ஆழமான விமர்சனத்திற்கு மிகுந்த நன்றிகள் ஆதவா.


கவிதை தொடங்கி முடிகிறது. ஆரம்பம் முதலே விளக்கப்படுகிறது. அதனால் நீளமும் அதிகமாய்த் தென்படுகிறது.

உண்மை தான். கொஞ்சம் வித்தியாசமாக எழுத நினைத்து சொல்ல வேண்டிய விசயம் கூடி விட்டதால் நீளமாகிவிட்டது.


பச்சைப்பட்டாடை
தரித்து பூமி
மகிழ்ந்திட
மடைதிறந்து வா..!!

மடை திறந்து வேண்டாம். பச்சை உடை தரித்து வேண்டாம்.... கவிஞரே!

மடைதிறந்து வெள்ளம் பெருகுமன்றோ! பச்சைப்பட்டாடை வானுக்கெப்படி முடியும்? இங்கே இடித்தாலும் சற்றேனும் வரியமைப்பை மாற்றியிருக்கலாம். பச்சை தரித்த பூமியின் இச்சையை தீர்க்க வாவென்று கதறியிருக்கலாம்.

பச்சை உடையாகிய செழிப்பு மிக்க செடிகளையும் மரங்களையும் உடுத்தி பூமிப்பெண்ணாள் மகிழ்ந்திட மழை என்ற ஒன்று பொழிந்தால் தானே சாத்தியம். அதற்காக வா மழையே என்று அழைக்கிறேன் ஆதவா.
"பச்சை தரிக்க
விரும்பும் பூமியின்
இச்சை தீர்க்க
வா வான்மழையே!"
இப்படியும் பாடியிருக்கலாம் தாங்கள் சொன்னது போல்.
நன்றிகள் ஆதவா.

சாமரம் வீசி
தென்றலனுப்பியது..!!

தென்றல் என்பது இன்பக்காற்றல்ல.. மென் காற்றுமல்ல. தவறாக நாம் புரிந்துகொள்ளப்படுகிறோம். மாற்றிக் கொள்ளுங்கள். இத்தனை எழுதினீர்களே! மின்னலை மறந்துவிட்டீர்களே! அவள் மேக தம்பதியின் மகளல்லவா!
உண்மை தான். கவிதையின் நீளம் கருதி... மின்னலை மறைத்துவிட்டேன் பாடாமல்.


பயிறின் வாழ்வு.... அதனை கவிஞையாகிய நீங்கள் கவலைப்பட்ட விதம்..... கவலை வேண்டாம். மழை வரும்... சும்மா அல்ல. மழைக்கு மர'த்தீனி இடுங்கள். வளர்ந்து பொழியும்.
வாழ்த்துக்கள்.
வானில் மழை விருட்சம் விளைய, மர விதை போடுவோம் பூமியில்...!!:icon_b:

பூமகள்
07-10-2007, 06:31 AM
அச்த்தி விட்டீர் பூமகளே!!!
உமது கவிக்கு செவி மடுத்து தான் இயற்கை அன்னையே மழையாக பொழிந்திருக்கிறாள் அருமை!!!:wuerg019::wuerg019:
மிகுந்த நன்றிகள் தென்னவன்.
கவிதையில் தான் மழை பொழிந்தது. நிஜத்தில் வானமகள் இன்னும் மௌனத்தையே கடைபிடிக்கிறாள். விரைவில் அவள் மௌனம் கலைத்து மழை வார்த்தை பேசுவாள் என்று நம்பிக்கையில் நான்.[/COLOR]

பருவ காலங்களில் மழை பொழியும் அன்று.இன்று அது தலைகீழாக மாறிவிட்டது.இயற்கை மாறிவிட்ட போதிலும் ஓவியன் சொன்னது போல மனிதன் முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை.பூமகள்! நீங்கள் அழகாக கவி வடித்திருக்கிறீர்கள்.இயற்கையை ஒரு செடியின் வேதனையாய் பிரமாதமாக கவி பாடி இருந்தீங்க.வாழ்த்துக்களுடன் 300 இ பணம் அன்பளிப்பு
மிகுந்த நன்றிகள் இக்ராம். உங்களின் கூற்று மிகச் சரி. பருவ காலங்கள் மாறிவிட்டன. ஆடிக்காற்று எங்க ஊரில் புரட்டாசியில் அம்மியைத்தூக்குகிறது. இதை என்னவென்று சொல்ல??
மழையாவது விரைவில் வந்தால் சரியே..!!
உங்களின் வாழ்த்துக்கும் இ பண அன்பளிப்பிற்கும் மிகுந்த நன்றிகள்.

ஜெயாஸ்தா
07-10-2007, 04:52 PM
மழைவேண்டி கவியாகம்.... அருமை பூமகள். வானத்தாயிடமிருந்து பாசியாறக் காத்திருக்கு குழந்தைகளை எங்களுக்கு காட்டியுள்ளீர்கள். வழக்கமாக கவிஞர்கள் பூமியை தாயாக 'பூமித்தாய்' என்று சித்தரிப்பார்கள். நீங்கள் சற்று வித்யாசமாக சிந்தித்துள்ளீர்கள். இந்த கவியாகத்தால் வருணபகவான் நிச்சயம் மனமிரங்குவான்.

பூமகள்
07-10-2007, 05:04 PM
மழைவேண்டி கவியாகம்.... அருமை பூமகள். இந்த கவியாகத்தால் வருணபகவான் நிச்சயம் மனமிரங்குவான்.
மிகுந்த நன்றிகள் சகோதரரே..!!:icon_rollout:
கவியாகம் நல்லபடியாய் நிறைவேறிவிட்டது. மழைக்காக காத்திருக்கிறேன்..
பயிரோடு சேர்ந்து நானும்...!:mad:
மழைத்துளிகளின் வரவை எதிர்நோக்கி ஒவ்வொரு நாளும்... பயிர் படும் துயரைப் பார்க்க இயலவில்லை...:traurig001::traurig001:

ஜெயாஸ்தா
07-10-2007, 05:11 PM
எல்லாம் சரி.... நீங்கள் பதித்துள்ள படமும் கவித்துவமாய் உள்ளதே....! மனதை கொள்ளை கொள்ளும் படம். (நானும் இணையத்தில் தேடித்தான் பார்க்கிறேன். இதுமாதிரி படம் கிடைக்க மாட்டேன்கிறது. எங்கேயிருந்து சுட்டது?)

பூமகள்
07-10-2007, 05:26 PM
எல்லாம் இணையத்தில் இருந்து தான் சகோதரரே...!!
தேடுங்கள் நிச்சயம் கிடைக்கும்.
எனக்கும் மிகவும் கடினமே... பொருத்தமான படத்தைத் தேட...
பல சமயம் கிட்டாமலே போகும் கவித்துவமான படங்கள்..
சில சமயம்... எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்து கவிக்காக படமா?? இல்லை படத்துக்காக கவியா? என்று என்னை கேட்கவைக்கும்..
அத்தகைய படங்கள் ஜெயித்திருக்கும் எல்லார் மனத்தையும்.
உங்களின் உற்சாகமே... என்னை சலிக்காமல் தேட வைத்து அழகிய படங்களைக் கொடுக்க வைக்கிறது.
மிகுந்த நன்றிகள் ஜே.எம்.

பூமகள்
08-10-2007, 04:50 PM
நிஜத்தில் பயிரின் நிலை.....!!
இன்று பயிர் எனக்கு தன் சோக முகத்தைக் காட்டியது இப்படித்தான்....!!


http://img01.picoodle.com/img/img01/9/10/8/poomagal/f_DSC00106m_b844b82.jpg

பூமகள்
08-10-2007, 04:54 PM
பயிர் மழலையின் கண்ணீர் கோலம்....!!

http://img03.picoodle.com/img/img03/9/10/8/poomagal/f_DSC00107m_0652581.jpg

அமரன்
08-10-2007, 06:18 PM
பச்சைப்புள்ளை அழுதுச்சான்னா பாட்டுப் பாடலாம்னு சொன்னதை உண்மை ஆக்கிட்டீங்களே பூ.

ஓவியன்
08-10-2007, 06:26 PM
தேடல்கள் தான் ஒரு கவிஞனை உருவாக்கிறது என்று நம் மன்றத்தின் சொல்வேந்தர் ஒரு தடவை கூறியிருந்தார், அதாவது சிலர் தனக்குள்ளே தேடுகிறார்கள், சிலர் தனக்கு வெளியே தேடுகிறார்கள் தேடிய தேடல்களுக்கு வரிகளையும் தேடிப் போட கவிதையாகின்றது என....

இங்கே சகோதரி, தன் வீட்டின் வெளியே தேடிய கவிதை இங்கே வரிகளாக....

பாராட்டுக்கள் பூமகள்...!!

மரம் வளர்த்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பார்களே, இங்கே மட்டும் அது பொய்த்துப் போனது ஏனோ....??

மனோஜ்
08-10-2007, 06:33 PM
பயிரின் மனமறிந்து கவிதை கொடுத்தது அருமை பூமா
உண்மையில் அதற்கு காண்ணிருந்தால் அனந்த கண்ணீர் வந்திருக்கம் அருமை அருமை

பூமகள்
08-10-2007, 06:47 PM
பச்சைப்புள்ளை அழுதுச்சான்னா பாட்டுப் பாடலாம்னு சொன்னதை உண்மை ஆக்கிட்டீங்களே பூ.
பாட்டு பாடியும் மழையைக் காணோமே அமர் அண்ணா..... :traurig001:
அங்கு மழை வந்தால் இங்கு அனுப்பிவையுங்கள்....!!


தேடல்கள் தான் ஒரு கவிஞனை உருவாக்கிறது என்று நம் மன்றத்தின் சொல்வேந்தர் ஒரு தடவை கூறியிருந்தார், இங்கே சகோதரி, தன் வீட்டின் வெளியே தேடிய கவிதை இங்கே வரிகளாக....

பாராட்டுக்கள் பூமகள்...!!

மரம் வளர்த்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பார்களே, இங்கே மட்டும் அது பொய்த்துப் போனது ஏனோ....??
தேடலிலிருந்து தான் கவிதை வரும்.... வாழ்வும் தேடலில் தான் உள்ளது.
உங்களின் ஆதரவான வாக்கு கேட்டு மகிழ்ச்சி. ஆனால் இன்னும் வருண பகவானின் ஆதரவு கிட்டவில்லையே....!! காய்ந்த இலைகளோடு காணும் காட்சி... நெஞ்சு பொறுக்குதில்லையே ஓவியன் அண்ணா..!!

பயிரின் மனமறிந்து கவிதை கொடுத்தது அருமை பூமா
உண்மையில் அதற்கு காண்ணிருந்தால் அனந்த கண்ணீர் வந்திருக்கம் அருமை அருமை
நன்றிகள் மனோஜ் அண்ணா. வானத்துக்கு கண்ணீர் வந்திருந்தால் மழையேனும் கிடைக்குமே.... இன்னும் காணோமே?? :frown: :traurig001:

மன்மதன்
08-10-2007, 06:49 PM
இது மாதிரி அருமையான புகைப்படம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ.. கவிதையும் படமும் அழகு...

பூமகள்
08-10-2007, 06:52 PM
நிஜப்படத்தை பார்த்தீங்களா மன்மதன் அண்ணா?
நிழலை விட நிஜமும் மிகவும் பொருந்தியிருக்கும்... அதைப் பார்த்து மனம் அழுத அழுகை தான் கவிதையாய் உங்கள் முன்...!!
மிகுந்த நன்றிகள் மன்மதன் ஜி.

மன்மதன்
08-10-2007, 08:00 PM
நிஜப்படத்தை பார்த்தேன். அதில் இருந்த தேதியை வைத்து 'சுடச்சுட' நீங்கள் அதை டிஜிட்டல் கேமிராவில் எடுத்து எங்களுக்காக கொடுத்திருக்கீங்க என்றும் தெரிந்து கொண்டேன். நீங்கள் அழ வேண்டாம்.. வானம் அழுட்டுமே..!!

பூமகள்
09-10-2007, 07:11 AM
எப்படியோ வானம் மனமிறங்கி வந்து மழை பொழிந்தால் நலமே..!!
என் கவிக்காகவாவது மழை வந்தால் அளவில்லா ஆனந்தம் அடைவேன். காத்திருக்கிறேன்... மழையை எதிர்நோக்கி....!!

ஷீ-நிசி
09-10-2007, 02:51 PM
வான்மழையே
தாய்பாலென
வேதம் சொல்லி
தவித்து புலம்பியது
பச்சிளம்பயிர்...

இந்த வரிகள் உயிரோட்டமாய் இருக்கிறது பூமகள்... வாழ்த்துக்கள்! படங்களும் அருமை.

பூமகள்
09-10-2007, 03:00 PM
மிகுந்த நன்றிகள் ஷீ-நிசி.
உங்களின் பிராத்தனைகளால் மழை வந்தால் மிகுந்த மகிழ்ச்சி.

சாராகுமார்
09-10-2007, 03:18 PM
பூமகள் அருமையோ அருமை. உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.உங்கள் கவிதையை கேட்டு அந்த வான் தேவதை மழையாக பொழியட்டும்.கவியும் அருமை,படமும் அருமை,நிஜ படமும் அருமை மனதை சுடுகிறது.

அறிஞர்
09-10-2007, 03:36 PM
உயிருக்கு வாடும் பயிர்களுக்காக
உயிருள்ள வரிகள்....

அருமை தோழியே..

பூமகள்
09-10-2007, 03:37 PM
மிகுந்த நன்றிகள் சகோதரர் சாரா.
உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இணைந்து மழை வேண்டி பிராத்தித்தால் மழை நிச்சயம் வரும்.

பிச்சி
11-10-2007, 09:45 AM
நிஜப்படத்தை பார்த்தேன். அதில் இருந்த தேதியை வைத்து 'சுடச்சுட' நீங்கள் அதை டிஜிட்டல் கேமிராவில் எடுத்து எங்களுக்காக கொடுத்திருக்கீங்க என்றும் தெரிந்து கொண்டேன். நீங்கள் அழ வேண்டாம்.. வானம் அழுட்டுமே..!!

ஹி ஹி அண்ணா இது என்ன வடையா ? சுடச் சுட ரெடி பண்ண?

அக்கா கவிதையில் நீங்கள் காட்டியிருக்கும் அக்கறை வெகு நேர்த்தி. இரண்டம் புகைப்படம் உங்கள் வீட்டு புகைப்படமா? நீங்கள் கிராமத்தில் இருந்து வருகிறீர்களா?

பூமகள்
11-10-2007, 09:53 AM
சந்தோசமான செய்தி.

என் கவியாகத்திற்கு செவிசாய்த்து வான மகள் அமுதமாய் தமது பொற்கரங்களால் மழையை பொழிந்த வண்ணம் இருக்கிறாள் இப்போது. பலமாய் மழை வந்து பயிர் தழைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

மழையில் நனைந்து வானத்திற்கு நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.
மழை வேண்டி என்னுடன் பிராத்தனை செய்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி நவிழ்கிறேன்.

பூமகள்
11-10-2007, 10:08 AM
அக்கா கவிதையில் நீங்கள் காட்டியிருக்கும் அக்கறை வெகு நேர்த்தி. இரண்டம் புகைப்படம் உங்கள் வீட்டு புகைப்படமா? நீங்கள் கிராமத்தில் இருந்து வருகிறீர்களா?
நன்றி பிச்சி.
பச்சை வயலைப் பார்த்ததும் அப்படித் தோன்றி விட்டதா? இல்லை நான் நகரத்தில் தான் வசிக்கிறேன். கொஞ்சம் நகரத்தை விடுத்து தனியே...!!
என் வீட்டின் அருகில் உள்ள காட்சி தான் அது.
இன்னும் முழுதுமாக கட்டடங்கள் ஆட்கொள்ளப்படாமல் தப்பித்த நிலம் தான் அது.

அமரன்
11-10-2007, 10:10 AM
வானிரங்கி இறங்கிவிட்டது..
வானரத்தின் பரிணாமம் எப்போது?

Narathar
11-10-2007, 10:34 AM
பூ மகள் உங்களின் இந்த பாசக்கவிதையை
இன்றுதான் வாசித்தேன், பாசமுள்ள பூ மகள் நீங்கள்
கவிவரிகள் பிரமாதம்
அதன் உள்லர்த்தமும் பிரமாதம்
மழைவேண்டிப்பிராத்தித்த உங்களுக்கு
மழலை செடி நன்றி சொன்னவித்ததை அழகாக எழுதியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
11-10-2007, 10:54 AM
சந்தோசமான செய்தி.

என் கவியாகத்திற்கு செவிசாய்த்து வான மகள் அமுதமாய் தமது பொற்கரங்களால் மழையை பொழிந்த வண்ணம் இருக்கிறாள்

ம்க்கும்... நாங்க வருண பகவானிடம் (கவிச்சமரில்) சிபாரிசு செய்த பிறகும் மழையை பெய்விக்க மறுத்திடுவாரா என்ன..? நாங்களலெல்லாம் திருநெல்வேலிகாரங்க..... அல்வாவும் கொடுப்போம்... அருவாவும் எடுப்போம்...!

ஓவியன்
12-10-2007, 05:17 AM
ம்க்கும்... நாங்க வருண பகவானிடம் (கவிச்சமரில்) சிபாரிசு செய்த பிறகும் மழையை பெய்விக்க மறுத்திடுவாரா என்ன..? நாங்களலெல்லாம் திருநெல்வேலிகாரங்க..... அல்வாவும் கொடுப்போம்... அருவாவும் எடுப்போம்...!

ஆனா எப்போ என்ன கொடுப்பது என்று தெரியாது இல்லையா ஜே.எம்...?
அதான் அருவாக்கு அல்வா கொடுக்கிறது....
அல்வாக்கு அருவா காட்டுறது.......

அப்படித்தானே ஜே.எம்........??? :D:D:D

அக்னி
12-10-2007, 11:40 AM
வானம் பொய்த்துப் போனால்,
வையம் காய்ந்து போகும்...
பசுமைகள் மஞ்சளாவது,
இயற்கையில் மங்களமல்ல...
மரணத்தின் அறிகுறி...

காத்திட,
வேண்டும் வானத்தில் பொத்தல்...
மேகம் தடுத்து தாகம் தணிக்கும்,
மரத் தாய்கள்...
வீழ்ந்தன, மனிதன் மரத்ததால்...
இன்று துளிநீரின்றி பயிர்களின் வாட்டம்...
தொடர்ந்தால்,
நாளை தணிக்க முடியாது உயிர்களும் வாடும்...

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்..."

கவியால் நனைத்து, வானின் உக்கிரம் தணித்த பூமகளுக்கு பாராட்டுக்கள்...
உண்மையான பரிதவிப்புக்கள், பொய்த்துப்போகா...

ஆதவா
12-10-2007, 01:35 PM
வானிரங்கி இறங்கிவிட்டது..
வானரத்தின் பரிணாமம் எப்போது?

ஹி ஹி அதற்கு பரிணாமமே இல்லை.. இன்னும் அப்படியேதான் இருக்கிறது.. பாவம். பூமிப் பந்து. எழுநூறு கோடிகளை எப்படித்தான் தாங்குதோ?

பூமகள்
12-10-2007, 05:11 PM
வானிரங்கி இறங்கிவிட்டது..
வானரத்தின் பரிணாமம் எப்போது?
கஞ்சமாய் தான் வானிரங்கியிருக்குறது. கொஞ்சி இன்னும் இரங்கவில்லை அமர் அண்ணா. :traurig001:
வானரத்தின் பரிணாமம் மாறிய வண்ணம் தான் உள்ளது புலப்படாத விதத்தில் நுண்ணிய அளவில்...!!

பூ மகள் உங்களின் இந்த பாசக்கவிதையை
இன்றுதான் வாசித்தேன், பாசமுள்ள பூ மகள் நீங்கள்
கவிவரிகள் பிரமாதம்
அதன் உள்லர்த்தமும் பிரமாதம்
மழைவேண்டிப்பிராத்தித்த உங்களுக்கு
மழலை செடி நன்றி சொன்னவித்ததை அழகாக எழுதியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்
நன்றிகள் அண்ணா.
உங்களின் பின்னூட்டம் கண்டு அளவில்லா மகிழ்ச்சி.

ம்க்கும்... நாங்க வருண பகவானிடம் (கவிச்சமரில்) சிபாரிசு செய்த பிறகும் மழையை பெய்விக்க மறுத்திடுவாரா என்ன..? நாங்களலெல்லாம் திருநெல்வேலிகாரங்க..... அல்வாவும் கொடுப்போம்... அருவாவும் எடுப்போம்...!
உண்மை தான் ஜே.எம். ஆனால், இன்னும் வருண பகவான் முழுதுமாக கருணை காட்டவில்லை.
கொஞ்சம் அருவா அல்லது அல்வா கொடுத்து அவரிடமிருந்து மழை வாங்கிவர முடியுமா??? :icon_rollout:

பூமகள்
12-10-2007, 05:15 PM
வானம் பொய்த்துப் போனால்,
வையம் காய்ந்து போகும்...
பசுமைகள் மஞ்சளாவது,
இயற்கையில் மங்களமல்ல...
மரணத்தின் அறிகுறி...

காத்திட,
வேண்டும் வானத்தில் பொத்தல்...
மேகம் தடுத்து தாகம் தணிக்கும்,
மரத் தாய்கள்...
வீழ்ந்தன, மனிதன் மரத்ததால்...
இன்று துளிநீரின்றி பயிர்களின் வாட்டம்...
தொடர்ந்தால்,
நாளை தணிக்க முடியாது உயிர்களும் வாடும்...

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்..."

கவியால் நனைத்து, வானின் உக்கிரம் தணித்த பூமகளுக்கு பாராட்டுக்கள்...
உண்மையான பரிதவிப்புக்கள், பொய்த்துப்போகா...
கலக்கலான பின்னூட்டக்கவி அக்னி அண்ணா.
கலக்கிட்டீங்க. அப்புறம் உங்களின் கருத்து அருமை. கண்டிப்பாக வீட்டில் செல்ல பிராணிகளை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை. மரங்களை வளர்க்க வேண்டும் கட்டாயம்...!!

இலக்கியன்
14-10-2007, 05:36 PM
உங்கள் உள்ளத்தின் மென்மை புரிந்து கொள்ள வைத்த கவிதை வாழ்த்துக்கள் பூமகள் மழை பொழிந்துதா
300 இ பணம் அன்பளிப்பு

பூமகள்
14-10-2007, 05:45 PM
உயிருக்கு வாடும் பயிர்களுக்காக
உயிருள்ள வரிகள்....

அருமை தோழியே..
நன்றிகள் அறிஞர் அண்ணா.
உங்களின் ஆதரவால் மழை பொழிகிறது. இனி பயம் இல்லை.


மிகுந்த நன்றிகள் இலக்கியரே..!!
மழை வந்தே விட்டது. இன்னும் பல நாட்கள் வந்தால் பரவாயில்லை..!!
இ-பணம் அன்பளிப்பு தந்ததற்கு நன்றிகள் கோடி..!!

பூமகள்
15-10-2007, 12:21 PM
இதோ மழையோடு சிலிர்க்கும் பயிர்களின் இன்றைய தோற்றம்...!!

http://img34.picoodle.com/img/img34/6/10/15/poomagal/f_DSC00118m_b8148fc.jpg

பூமகள்
15-10-2007, 12:22 PM
இன்று கார்மேகம் திரண்ட காட்சி...!!

http://img36.picoodle.com/img/img36/6/10/15/poomagal/f_DSC00116m_f34b36e.jpg

ஜெயாஸ்தா
15-10-2007, 12:24 PM
கோவையின் வானிலை அறிக்கையை அவ்வப்போது படத்துடன் தரும் பூமகளுக்கு நன்றி....!

அக்னி
15-10-2007, 12:29 PM
செடியின் வாடுகை
பூமகளின் கவிதை
மழையின் பொழிகை

மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, புரிகிறது...
மென்மை உள்ளங்களின்
உண்மை வாடல்கள்
கருமை அல்ல...
பசுமையின் முன்னறிவிப்பு...

பூமகள்
15-10-2007, 12:44 PM
கோவையின் வானிலை அறிக்கையை அவ்வப்போது படத்துடன் தரும் பூமகளுக்கு நன்றி....!
நன்றிகள் ஜே.எம் அண்ணா.
ஏதோ என்னால் முடிந்தது. பயிர் உயிர்பிழைத்ததை சொன்னால் பார்த்து தாங்களும் மகிழ்வீர்கள் என்று தான் போட்டேன்.

செடியின் வாடுகை
பூமகளின் கவிதை
மழையின் பொழிகை

மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, புரிகிறது...
மென்மை உள்ளங்களின்
உண்மை வாடல்கள்
கருமை அல்ல...
பசுமையின் முன்னறிவிப்பு...
அக்னி அண்ணாவின் அழகு கவி வரிகள்.
நன்றிகள் அக்னி அண்ணா.
உங்களைப் போன்றவர்களின் வேண்டுதலால் தான் மழை பொழிகிறது.