PDA

View Full Version : உற்ற உலகம் உனதானது..!



வசீகரன்
06-10-2007, 06:00 AM
தொலைநோக்கு பார்வைகள் வேண்டும்...
தொய்வாத மனப்போக்கு வேண்டும்....

உழன்றிடும் உலகத்தை விரிவாக்கிட வேண்டும்..
உள்ளுறும் கருத்துக்களை உறக்க உரைத்தல் வேண்டும்..

பார்வைகள் பால்நோக்கில் வேண்டும்...
பகுதாய்ந்து பார்க்கும் திறன் வேண்டும்..

எண்ணங்கள் விரிந்திருத்தல் வேண்டும்...
சிந்தனைகள் சிறப்பானாதாக வேண்டும்..

இயந்திர வாழ்க்கையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம்...
இடையிடையில் சில இசைவுகளும் கொள்வோம்...

பரபரப்புக்கு பஞ்சமில்லாத வாழ்க்கைதான் கொண்டிருக்கிறோம்..
பல்சுவைகளையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்...

ஆரவாரங்கலான இந்த உலகம்தான் அதிகாலை பொழுதுகளையும்
அழகாக உதிக்கிறது...

கடிகார முட்களில் இயங்கும் இந்த உலகில்தான்
கவிதைகளும் கடலென விரிந்திருக்கிறது...

எரிமலைகளை கொண்ட இந்த உலகம் தான்..
பனிப்பொழிவுகளையும்... பசும்பொழில்களையும்....
போர்த்திருக்கிறது...!

இன்ப துன்பங்கள் இரண்டர கலந்த உலகில் உதித்தோம்....
உணர்வுகளில் உயர்ந்தவைகளை உரித்தாக்குவோம்...!
உற்றவரை உயர்ந்த வாழ்வினை கொள்வோம்...!

rajaji
06-10-2007, 06:06 AM
அறிவுரை கூறும் பாங்கில் அமைந்திருக்கும் இக் கவிதை நன்றாக இருக்கிறது.....

வாழ்த்துக்கள் நண்பரே....

ஜெயாஸ்தா
06-10-2007, 06:12 AM
இன்பம் துன்பம் கலந்த கலவைதான் வாழ்க்கை, வாழ்வதற்குத்தான் வாழ்க்கை என்பதை தெளிவாக காட்டியிருக்கிறீர்கள். வரும் இன்னல்களை துணிவோடு எதிர்த்து நலமாய் வாழ உங்கள் கவிதை பாடம் சொல்லித்தருகிறது. தொடருங்கள் வசீகரன்.

சிவா.ஜி
06-10-2007, 07:59 AM
நல்ல தமிழில் நயம்பட கொடுக்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கையூட்டும் சொற்கள்.வாழ்த்துக்கள் வசீகரன்.