PDA

View Full Version : காதலிக்கும் தேவதை!!!



யாழ்_அகத்தியன்
05-10-2007, 08:27 PM
உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்

உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

*

நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே
உன் நிழலாக


*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

*

நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

*

நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை

என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது

பொறுக்கியை
எப்பிடி தேவதை
காதலிக்கும்..?

-யாழ்_அகத்தியன்

அமரன்
11-10-2007, 08:27 AM
பழக்கப்பட்ட வாசனைகள்
நிறைந்துள்ள கவிதைகள்..
தொடருங்கள் தோழரே!

சுகந்தப்ரீதன்
11-10-2007, 08:44 AM
*

நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே
உன் நிழலாக




உங்களின் யாதார்த்தம் மிக அருமை அகத்தியரே...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...!

சாம்பவி
11-10-2007, 08:52 AM
[COLOR="SeaGreen"]
என் நிறமாவது
வருகிறதே
உன் நிழலாக


வாவ்.... !!
கருப்பு தான்
அவளுக்கு பிடிச்ச கலரு.. !

.

யாழ்_அகத்தியன்
11-10-2007, 10:38 AM
உங்க வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்