PDA

View Full Version : கண்ணீரால் ஒரு கவிதை!



யாழ்_அகத்தியன்
05-10-2007, 10:36 AM
கண்ணீர் கன்னம் நனைக்க
காதல் கால் நனைக்க கனவின்றி
கண் சிவந்து கவிதையோடு தவம்
கிடக்கிறேன்

ஒரு நாள் மறையவே ஒரு ஜென்மம்
போகுதடி மறு நாள் வராமல் போகுமென்றே
மரணத்துக்காய் காத்திருக்கிறேன்

என் காதலும் என் கண்ணிரும்
என்னை நனைத்தே அழுக்காக்க
இன்னும் நீ மாறவில்லை

பழகிய நாட்களை மறக்கவே பல
வருசம் கிடக்கையில பாவை உன்
முகம் மறக்க எத்தனை ஜென்மம்
நான் எடுக்க

மறக்கத்தான் சொன்னாயா மறந்துவிட
சொன்னாயா என்ற காரணத்தை கேக்கவே
பேசாமல் போய்விட்டாய்

கிறுக்கன் நான் காதலை சொல்லி
சொல்லி கவிதையே செத்துடிச்சு

உன் பெயரை மறந்தேனென துணிவாய்
நான் சொல்ல நினைத்தாலும் என் பேனா
எனோ உன் பெயரைஎழுதி தொலைக்கிறது

விட்டுபோகாதே விட்டுபோகாதே என
உன் கால் பிடிச்சு கெஞ்சியும் உன் படம்
மட்டும் பார்த்தவன்தான் பெரிதிண்ணு
பார்க்காம போனாயடி

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு போதுமடி
ஒட்டுமொத்த பெண்களையும் உன்னில் பார்த்ததால்
உன்னால் உன்னால்த்தானடி பெண்களை வெறுத்தேன்

உனக்காய் எழுத நினைத்தால்
வார்த்தை வர மறுக்கிறது

இறுதியாய் ஒன்று

என் கவிதைகள் அழிந்தாலும் என்
காதல் பொய்யானாலும் உன்னை
நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்

உன்னால் நான் அடைந்த அனுபவங்கள்
அனைத்தும்என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்

கடைசியாய் ஒன்று

என் கவிதைகளை எங்கு கண்டாலும்
கண்ணீரை துடைத்து விடு

-யாழ்_அகத்தியன்

rajaji
05-10-2007, 03:01 PM
காதல் சோகத்தினை படமாக்கிய கவிதை வரிகள்.....

ஆனாலும் சோகத்திலும் ஒரு சுகம் உண்டு....

(நண்பரே இது கற்பனைதானே..... உண்மையில்லையே....)

யாழ்_அகத்தியன்
16-10-2007, 01:31 PM
உண்மையாய் பேசுவேன் ஆனால் எழுதுவது இல்லை (சும்மா)

உங்க வாழ்த்துக்கு நன்றி

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:51 AM
உண்மையாய் பேசுவேன் ஆனால் எழுதுவது இல்லை (சும்மா)

உங்க வாழ்த்துக்கு நன்றி
ஆனால் நீங்கள் எழுதுவது சிலருக்கு உண்மையாக நிகழ்கிறது அகத்தியரே.. நீங்கள் பொய் சொல்ல வேண்டாம் இத்தனை ஆழமாய் நீங்கள் அனுபவித்திருந்தால் மட்டுமே எழுத முடியும் என்பது என் கருத்து...!உண்மையை ஒத்து கொள்ளுங்கள்.. கவிதைக்கு வாழ்த்துக்கள்..!

யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:35 PM
ஆனால் நீங்கள் எழுதுவது சிலருக்கு உண்மையாக நிகழ்கிறது அகத்தியரே.. நீங்கள் பொய் சொல்ல வேண்டாம் இத்தனை ஆழமாய் நீங்கள் அனுபவித்திருந்தால் மட்டுமே எழுத முடியும் என்பது என் கருத்து...!உண்மையை ஒத்து கொள்ளுங்கள்.. கவிதைக்கு வாழ்த்துக்கள்..!


உண்மையாய் இருந்தால் ஒத்துக் கொள்வேன்.
நான் அனுபவித்து எழுதவில்லை
அனுபவித்ததுபோல் படிப்பவர்களுக்கு
தெரிய வேண்டும் என்பதற்காகவே
கொஞ்சம் ஆழமாய் சிந்தித்து
எழுதுகிறேன்

காதல் தோல்வியால் ஒருவன்
கவிதை எழுதுவது போல்
நினைத்து எழுதுவதில்லை
எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது
போல் உணர்ந்து அனுபவித்து
எழுதுகிறேன் அவ்வளவுதான்

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

பூமகள்
21-10-2007, 02:06 PM
எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
சோகம் தோய்ந்த கவிதை வரிகள்..!! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!
ஒரு பெண்ணால் ஒட்டுமொத்த பெண்களையும் வெறுப்பதாய் கூறியிருப்பது எப்படி சரியாகும் அன்பரே??

சூரியன்
21-10-2007, 02:13 PM
நண்பரே மிகவும் உணர்ந்து எழுதிய கவி போலும்..
ரொம்போ அனுபவசாலியா?
வாழ்த்துக்கள் தொடர்ந்து கவி படைக்க..

ஓவியன்
04-11-2007, 01:33 AM
என் கவிதைகள் அழிந்தாலும் என்
காதல் பொய்யானாலும் உன்னை
நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்
உங்கள் காதல் பொய்யாவதா...???
எப்படி அகத்தியன்
நீங்கள் உண்மையாய் இருந்தால்
ஒருபோதும் உங்கள் காதல் பொய்க்காதே...!!

வேண்டுமானால் காதல்
இணையாமல் போய்விடலாம்...!!
ஆனாலும்
திருமணத்தில் இணையாத
காதல்களே இன்று
காவியங்களாக உள்ளன.....!!

அம்பிகாவதி-அமராவதி
சலீம்-அனார்கலி என்று
அடிக்கிக் கொண்டே போகலாம்....!!

உங்கள் காதல் உண்மையாயின்
அது ஒரு போதும் பொய்க்காது
மாறாக காவியமாகும்......!!

யவனிகா
04-11-2007, 03:18 AM
நல்ல கவிதை...கடைசி வரிகள் தான் நெருடல்.கவிதைகளை எங்கு கண்டாலும் கண்ணீரைத் துடைத்து விடு...கவிதையின் கண்ணீரைத் துடைக்கவேண்டுமா? இல்லை அவளது கண்ணீரையா? காதலையே ஏற்காதவளுக்கு கவிதை அழுவது மட்டும் புரியவா போகிறது?

வசீகரன்
04-11-2007, 08:54 AM
உன்னால் நான் அடைந்த அனுபவங்கள்
அனைத்தும்என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்

ஆழமான வரிகள் அகத்தியன்...!

உணர்வுப்பூர்வமான காதல் தோல்வியில்
முடிந்ததின் வெளிப்பாடு
கவியாக வடித்திருக்கிறீர்கள்...!

வசீகரன்

gans5001
08-11-2007, 10:24 AM
கிறுக்கன் நான் காதலை சொல்லி
சொல்லி கவிதையே செத்துடிச்சு

உனக்காய் எழுத நினைத்தால்
வார்த்தை வர மறுக்கிறது



காதல் செத்து போனாலும் உங்கள் கவிதை சாகாது ந்ண்பரே