PDA

View Full Version : ஒன்றுமில்லை

ஆதவா
05-10-2007, 03:45 AM
மிரட்டும் வரட்சியில்
என் குதிகால் வெடிப்பாய்
வெடித்துப் போய்விட்ட
செழுமையை
இரவுகள் மட்டும் காண்பிக்கிறது

நான் பெற்ற வளத்தை
காலத்தால் விற்றபோது
நாளங்கள் சுண்டியது
உறிஞ்ச ஒன்றுமில்லை
உடலில்.
இருந்தால் காசாக்கலாம்.

கடமைகள்
நுரையடித்த அலைகள்
காசு
நிமிடநேரத்து வானவில்.

ஓருதவி செய்யுங்கள்.
எங்காவது
பிள்ளைகள் பொருளானால்
சொல்லியனுப்புங்கள்
மதிப்பளிக்கிறேன்.

சிவா.ஜி
05-10-2007, 06:13 AM
அப்பா....எத்தனை வலி....இந்த வரிகளில்.வறண்ட நிலத்தாலும் பயனில்லை,வறண்டுவிட்ட தேகத்தாலும் பயனில்லை...வாழ வழியில்லை...கடைசி முடிவாய் பிள்ளைவிற்க தயாரான தந்தை.
உறிஞ்ச ஒன்றுமில்லை
உடலில்.
இருந்தால் காசாக்கலாம்.
நடைமுறையில் பல இடங்களில் பார்க்கும் உதிர வியாபாரம்.ஆனால் அதையும் செய்ய இவனிடம் ஒன்றுமேயில்லை.
காசு
நிமிடநேரத்து வானவில்.
அவ்வப்போது கிடைக்கும் சொற்ப காசு நிமிடத்தில் மறைந்து விடும் வானவில்லாய் உருவகப்படுத்தப்பட்டது அசத்தல் கற்பனை.
வானவில் ரசிக்கும் சுகம்...இது சோகம்.
பாராட்டுக்கள் ஆதவா.

Narathar
05-10-2007, 06:50 AM
இன்னும்சில வருடங்களில் வல்லரசாகப்போகின்றோம் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இப்படியும் சிசு வியாபர்த்தில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றார்கள் என்ற அவலத்தை உணர்த்தி நிற்கிறது உங்கள் வார்த்தைகள்

அமரன்
05-10-2007, 07:08 AM
பொதுவாக எனது அனுபவத்தில் உணர்ந்தது. பணச்செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் மழலைசெல்வம், அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மட்டுப்படுதப்பட்ட அளவில் இருக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழே ஒரு குடும்பம் (இங்கே உழவன் என நினைக்கின்றேன்) செல்ல செல்ல வீடு இல்லாவிட்டாலும் பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் பஞ்சமிருக்காது.

கேட்டால் சொல்வாங்க ஆண்டவன் கொடுத்ததை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது.. உண்மைக் காரணம் என்ன.
அவர்களின் கல்வி அறிவா? அல்லது ஆதவா சொன்னது போல குதிக்கால் வெடிப்பின் வலிக்கு எடுத்த கொடுத்த நிவாரணத்தின் பக்க விளைவா? இரண்டும் தான் என்பது எனது நிலை..

சரி இவங்க புழப்பு எப்படி போகுது? வேலை இருந்தால் தெம்பு இருக்காது. தெம்பு இருந்தால் வேலை இருக்காது. அதனால் இரத்தம் விற்று, கிட்னி தானம் செய்து........ உயிர்வாழக்கூடிய வகையில் உடலில் உள்ள உறுப்புகளை "தானம்" செய்து வாழ்க்கை சக்கரத்தை சுழற்றுவார்கள். அதுகூட இல்லை என்றால் தீர்வு ஆதவா சொல்லிவிட்டார்.. அது தப்பானது என்றாலும் பலர் வாழ ஒருவனை நல்ல முறையில் பிரிவது ஏற்றுக்கொள்ளலாம்..

சொல்லவந்ததை எளிமையாக ஓரளவு மறை பொருளாக சொல்லி தைத்த கவிதை..

பாராட்டுதலுடன்

பூமகள்
05-10-2007, 07:43 AM
அழகு கவி.. கொஞ்சம் புரிய கடினமாய் இருந்தது. இப்போதும் உணர்ந்தது நான் இன்னும் கவித்தாய்க்கு மழலையாகவே உள்ளதை..!!
அமர் அண்ணாவின் கவிதைகளுக்கு பின் படித்து கொஞ்சம் கடினமாய் உணர்ந்த கவிதை இதுதான் எனக்கு.
மறைபொருளாய் சொல்ல வந்ததை சொல்லிய விதம் அருமை.
தேர்ந்த வரிகள்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஆதவா..

அமரன்
05-10-2007, 07:49 AM
பூமகளே..!இந்தவகை கவிதைகளை பூ அண்ணா, ஆதவா இருவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன். எனக்கு அவர்களே முன்னோடிகள். நீங்களும் அவர்கள் கவிதைகளை தேடிப்படியுங்கள். எப்படி என்று புரிந்து உங்கள் பாணியில் முயலுங்கள்.. வெற்றிக்கு இப்போதே எனது வாழ்த்துகள்.

பூமகள்
05-10-2007, 08:01 AM
உங்களின் முன் வாழ்த்துகளுக்கு மிகுந்த நன்றிகள் அமர் அண்ணா.
முயல்கிறேன். படித்து, வளர்ந்து கவி இளவரசி ஆகிய பின் நிச்சயம் முயல்வேன்.

ஆதவா
05-10-2007, 01:12 PM
அப்பா....எத்தனை வலி....இந்த வரிகளில்.வறண்ட நிலத்தாலும் பயனில்லை,வறண்டுவிட்ட தேகத்தாலும் பயனில்லை...வாழ வழியில்லை...கடைசி முடிவாய் பிள்ளைவிற்க தயாரான தந்தை.
உறிஞ்ச ஒன்றுமில்லை
உடலில்.
இருந்தால் காசாக்கலாம்.
நடைமுறையில் பல இடங்களில் பார்க்கும் உதிர வியாபாரம்.ஆனால் அதையும் செய்ய இவனிடம் ஒன்றுமேயில்லை.
காசு
நிமிடநேரத்து வானவில்.
அவ்வப்போது கிடைக்கும் சொற்ப காசு நிமிடத்தில் மறைந்து விடும் வானவில்லாய் உருவகப்படுத்தப்பட்டது அசத்தல் கற்பனை.
வானவில் ரசிக்கும் சுகம்...இது சோகம்.
பாராட்டுக்கள் ஆதவா.

மிக்க நன்றீங்க சிவாஜி அண்ணா. ரசித்து எழுதப்பட்ட விமர்சனம்.... மிக்க நன்றி.

ஆதவா
05-10-2007, 01:15 PM
இன்னும்சில வருடங்களில் வல்லரசாகப்போகின்றோம் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இப்படியும் சிசு வியாபர்த்தில் ஈடுபடுபவர்களும் இருக்கின்றார்கள் என்ற அவலத்தை உணர்த்தி நிற்கிறது உங்கள் வார்த்தைகள்

மிக்க நன்றிங்க நாரதரே! வல்லரசு கனவு எல்லாம் தள்ளிப் போகும் என்பதே எனது எண்ணம்... தள்ளிப் போகக்கூடாது என்பது எனது விருப்பம்.

ஆதவா
05-10-2007, 01:19 PM
பொதுவாக எனது அனுபவத்தில் உணர்ந்தது. பணச்செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் மழலைசெல்வம், அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மட்டுப்படுதப்பட்ட அளவில் இருக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழே ஒரு குடும்பம் (இங்கே உழவன் என நினைக்கின்றேன்) செல்ல செல்ல வீடு இல்லாவிட்டாலும் பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் பஞ்சமிருக்காது.

பாராட்டுதலுடன்

பொருளாதாரம் என்ற மண்சட்டிக்குள்ளே அடக்கமுடியாத தானியங்கள் தான் நான் மேற்ச்சொன்ன குழந்தைகள். மண்சட்டி என்று அலுமினியமாகவாவது மின்னுகிறதோ அன்றுதான் விடிவு. சமீபத்தில் ஹிந்து"வில் ஒரு செய்தி கவனித்தேன். ஒரு பெண்மணி தனது பிள்ளைகளை தத்தெடுக்க விடுப்பதாக ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. அதன் பின்புறம் என்னவாக இருக்கும்? வறுமை அன்றி வேறா?

மிக்க நன்றி அமரன்.

ஆதவா
05-10-2007, 01:23 PM
அழகு கவி.. கொஞ்சம் புரிய கடினமாய் இருந்தது. இப்போதும் உணர்ந்தது நான் இன்னும் கவித்தாய்க்கு மழலையாகவே உள்ளதை..!!
அமர் அண்ணாவின் கவிதைகளுக்கு பின் படித்து கொஞ்சம் கடினமாய் உணர்ந்த கவிதை இதுதான் எனக்கு.
மறைபொருளாய் சொல்ல வந்ததை சொல்லிய விதம் அருமை.
தேர்ந்த வரிகள்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஆதவா..

அய்யோ!! இப்போதாங்க நான் பரவாயில்லைன்னு நினைக்கிறேன். முதலிலெல்லாம் நான் ரொம்ப மோசமா எழுதுவேன். அதைத்தான் பாடமாக அமரன் சொல்கிறார். உண்மையில் அப்படியல்ல. இன்று அவர் எழுதும் கவிதைக்கு நான் சொல்லவேண்டியது எதுவுமே இல்லல.
மற்றபடி கவிதையைப் படித்து நேரடியாக கருத்து சொன்னமைக்கு மிகவும் நன்றிங்க பூம்கள்.

ஷீ-நிசி
06-10-2007, 03:09 AM
நான் பெற்ற வளத்தை
காலத்தால் விற்றபோது
நாளங்கள் சுண்டியது
உறிஞ்ச ஒன்றுமில்லை
உடலில்.
இருந்தால் காசாக்கலாம்.

இந்த வரிகள் மிக அழகாக உள்ளது. இது ரத்ததானம் கொடுப்பதோடு ஒப்பிடலாம். ஒன்றுமில்லை என்று சொல்ல இதைவிட சிறப்பாய் வேறொன்று உவமையாக கூறிய இயலாது.

கடமைகள்
நுரையடித்த அலைகள்
காசு
நிமிடநேரத்து வானவில்.

இந்த ஒப்பீடுகளும் மிக அருமை. வானவில் எப்படி நிமிட நேரம் நிலைக்குமோ அப்படியாய் என் கையில் இருக்கும் காசுகள்...

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல கவிதை ஆதவா.. வாழ்த்துக்கள்!

aren
06-10-2007, 03:21 AM
கஷ்டப்படும் தாயுள்ளத்தின் வலியை அருமையாக வெளியே கொண்டுவந்திருக்கிறிர்கள். பாராட்டுக்கள்.

ஆதவா
06-10-2007, 04:34 AM
மிகுந்த நன்றி ஷீ-நிசி. இந்த இடைவெளியில் பல கவிதைகள் எழுதி அழிந்தும் போனது.(காணாமல் போனது) ஆனாலும் இன்னும் ஸ்டாக் இருக்கிறது.. :)
------------------------
மிக்க நன்றி ஆரென் அண்ணா...

ஓவியன்
09-10-2007, 02:53 AM
கடமைகள்
நுரையடித்த அலைகள்
காசு
நிமிடநேரத்து வானவில்.

இந்தக் கவிதையின் அடி நாதமே இந்த வரிகள் தானே, நிமிட நேரத்து வான வில்லில் அழகுக்காக கடமையையும் இளமையையும் தொலைத்து விட்டு ஏங்கும் ஒருத்(தி)தன் கவிதையின் நடு நாயகமாக்கப்பட்டுள்ளார்.

ஆதவா இங்கே கவிதை வரிகளில் கொஞ்சம் முரண் இருப்பது போல் தோன்றுகிறதே....

உறிஞ்ச ஒன்றுமில்லை
உடலில்.
இருந்தால் காசாக்கலாம்.

அதாவது இன்னமும் உடல் வளத்தைக் காசாக்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறது, மனதளவில் அவர் மாறவில்லை. மாறிவிட்ட, குதிகால் வெடிப்பாய் மாறிவிட்ட செழுமை தான் அவரை கட்டி வைத்துள்ளது.
இல்லையா....?, அப்படியிருக்க...

ஓருதவி செய்யுங்கள்.
எங்காவது
பிள்ளைகள் பொருளானால்
சொல்லியனுப்புங்கள்
மதிப்பளிக்கிறேன்.

என்ற முத்தாய்ப்பு வரிகள் முதல் நான் குறிப்பிட்ட வரிகளுக்கு முரணாக உள்ளதே...???

அதாவது மனதால் இன்னமும் மாற்றம் காணாத ஒருவர், பிள்ளைகளுக்கு மதிப்பளிப்பாரா...???

ஆதவா
12-10-2007, 01:27 PM
இந்தக் கவிதையின் அடி நாதமே இந்த வரிகள் தானே, நிமிட நேரத்து வான வில்லில் அழகுக்காக கடமையையும் இளமையையும் தொலைத்து விட்டு ஏங்கும் ஒருத்(தி)தன் கவிதையின் நடு நாயகமாக்கப்பட்டுள்ளார்.

ஆதவா இங்கே கவிதை வரிகளில் கொஞ்சம் முரண் இருப்பது போல் தோன்றுகிறதே....

அதாவது இன்னமும் உடல் வளத்தைக் காசாக்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறது, மனதளவில் அவர் மாறவில்லை. மாறிவிட்ட, குதிகால் வெடிப்பாய் மாறிவிட்ட செழுமை தான் அவரை கட்டி வைத்துள்ளது.
இல்லையா....?, அப்படியிருக்க...

என்ற முத்தாய்ப்பு வரிகள் முதல் நான் குறிப்பிட்ட வரிகளுக்கு முரணாக உள்ளதே...???

அதாவது மனதால் இன்னமும் மாற்றம் காணாத ஒருவர், பிள்ளைகளுக்கு மதிப்பளிப்பாரா...???

நன்றி ஓவியன்.... உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கும் சூழலில் நான் இருக்கிறேன் எனினும் நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு சற்று விளஙக்வில்லை. விவரிக்கமுடியுமா?

அமரன்
12-10-2007, 01:58 PM
பொருளாதாரம் என்ற மண்சட்டிக்குள்ளே அடக்கமுடியாத தானியங்கள் தான் நான் மேற்ச்சொன்ன குழந்தைகள். மண்சட்டி என்று அலுமினியமாகவாவது மின்னுகிறதோ அன்றுதான் விடிவு. சமீபத்தில் ஹிந்து"வில் ஒரு செய்தி கவனித்தேன். ஒரு பெண்மணி தனது பிள்ளைகளை தத்தெடுக்க விடுப்பதாக ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. அதன் பின்புறம் என்னவாக இருக்கும்? வறுமை அன்றி வேறா?

மிக்க நன்றி அமரன்.

நிச்சயமாக வறுமைதான்..வறுமைக்கோட்டுக்கு கீழே அவர்கள் இருக்கும்போது மழலைகளையும் ஒரு கோட்டுக்குகீழே கட்டுப்படுத்தி இருக்கலாம்...கட்டுப்படுத்த முடியாமைக்கும் காரணம் வறுமையாக இருக்கலாம் என்பதை நான் சொன்னேன் ஆதவா..சரி அதை விடுங்க...
இந்தக்கவிதையை மீண்டும் படிக்கும்போது இன்னொன்று தோன்றுகிறது...

நான் பெற்ற வளத்தை
காலத்தால் விற்றபோது
நாளங்கள் சுண்டியது
உறிஞ்ச ஒன்றுமில்லை
உடலில்.
இருந்தால் காசாக்கலாம்.

இத்த்கையோரின் தொழில்களில் முக்கியமானது காசுக்கு இரத்தம் கொடுத்தல். அதைக்கூட காலம் பறித்துக்கொண்டது பாருங்கள்..முதுமையிலும் இரத்தத்தில் வேகம் கேட்டேன் என்று கவிப்பேரரசு இவர்களுக்காகத்தான் பாடினாரோ...?
மீண்டும் பாராட்டுகள் ஆதாவா..

ஆதவா
12-10-2007, 02:01 PM
இத்த்கையோரின் தொழில்களில் முக்கியமானது காசுக்கு இரத்தம் கொடுத்தல். அதைக்கூட காலம் பறித்துக்கொண்டது பாருங்கள்..முதுமையிலும் இஅரத்தத்தில் வேகம் கேட்டேன் என்று கவிப்பேரரசு இவர்களுக்காகத்தான் பாடினாரோ...?
மீண்டும் பாராட்டுகள் ஆதாவா..

அமரன் மிகவும் நன்றி... இப்போது கூட சமீபத்தில் ஏழைகள் வறுமையின் காரணமாக கிட்னி விற்றிருக்கிறார்கள். காலக் கொடுமை.

நான் நினைத்து எழுதியதே வேறு அமரன். ஆனால் வரிகள் படித்தவர்கள் சொன்னதை மட்டுமே சரியாக பொருத்திக் கொண்டது...

மிகவும் நன்றி அமரன்