PDA

View Full Version : குறிஞ்சியில் - பயணக்கட்டுரை



ஆதவா
05-10-2007, 03:36 AM
பெரும்பொழுதான முன்பனிகாலத்தில் குறிஞ்சியில் இருநாட்கள் சந்தோசமாக நாட்களைக் கழித்தது வாழ்வின் மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது. அதிலும் மலைமகளின் மகன் கோவிலுக்கு சென்றால் புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ நல்ல அனுபவம் கிடைக்கிறது.

புரட்டாசியானாலே மாமிசத்தை மறந்து விரதம் இருப்பது அவசியமாகிறது. அதோடு கோவிலுக்குச் செல்லுபவர்கள் அதிகம். புரட்டாசி மாதங்களில் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் விசேசங்கள் அதிகம். ஆரம்ப காலங்களில் நாங்கள் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமைகளில் திருப்பதி சென்று வந்தோம். இன்று அவ்வாறு முடிவதில்லை. அதனால் கோவைக்கு அருகே கம்புகிரிமலைக்குச் சென்று வருவோம்.

கோவை வாசிகள் பலருக்கு கம்புகிரி மலை இருப்பதே தெரியாது. அதோடு அங்கே செல்லுபவர்கள் யாருமில்லை. மருதமலைக்கு இடது பின்புறத்தில் கம்புகிரி மலை இருக்கிறது. கோவையிலிருந்து சுமார் பதினைந்து கி.மீட்டர் தொலைவில் மருதமலை அமைந்திருக்கிறது.. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை மட்டுமே அங்கே செல்வார்கள். தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். (ஒவ்வொரு சாதிக்குள்ளும் குலம் இருக்கும், இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த குலத்தைச் சேர்ந்தவர்களைக் கட்டவேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு குலத்திற்கும் தெய்வம் இருக்கும். தந்தையின் குலமே மகனுக்கும் சேரும். அந்த வகையில் நாங்கள் சென்றது எனது அன்னையின் குலமாகிய கதிரூர் வார்ளு குலக் கோவிலுக்கு... அங்கே தெய்வமாக பூசிப்பது ஸ்ரீ வெங்கடாசலபதியை. வருபவர்கள் யாவரும் கதிரூர் வார்ளு குலத்தைச் சேர்ந்தவர்களே! எங்களுக்கென்று தனி கமிட்டி செயல்படும். மூன்று நாட்கள் இரண்டு இரவுகளுக்கு உண்டான உணவு தானம் அங்கே நடைபெறும்.)

மருதமலை அடிவாரத்தில் இடது புறமாக ஒரு பாதை செல்லும் அங்கே ஒரு விநாயகர் கோவில் இருப்பதாக ஞாபகம். பாதையில் குளியலைறைகள் கூட இருக்கும். அப்படியே நடந்து சென்றால் சுமார் பத்து கி.மீ தொலைவில் கம்புகிரி மலை. மலையில் ஏறி இறங்கும் படி பாதை இருப்பதால் அங்கே சைக்கிளுக்குக் கூட இடமில்லை. ஒற்றையடிப்பாதையில் கல்லுமுள்ளு தாண்டி நடக்கவேண்டும். கவனம் கூடுதலாக வேண்டும். அடிவாரத்திலிருந்து செல்லும் போது மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பு இதமாக இருக்கும். முற்பாதையென்றாலும் மென்மை தெரியும். சிறிது தூரத்தில் மலையில் ஏறத் துவங்கியதும் ஓரிரு மலைவாழ் மக்களைக் காண நேரிடலாம். குறிஞ்சி நிலமான இங்கே பெரும்பாலும் மலைசார் தொழில்கள் இருப்பதும் சிறப்பு. வேடர்கள், மலைசார் உழவர்கள், மலைநாட்டுத் தேன் எடுப்பவர்கள், குறவர்கள், என தொழில் செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அடந்த மலைக்காட்டுக்குள் இவர்கள் பதுங்கி வாழ்வதாக செய்தி வருகிறது. இருப்பினும் ஓரிரு மக்களைக் காணமுடிகிறது. விதவிதமான செடிகள், மரங்கள், நாற்றம் கமழும் பூக்கள், அசந்தால் உயிரையே குடிக்கும் முற்செடிகள், உருண்டோடும் பாறைகள் என சிலிர்த்திடும் விசயங்கள் ஏராளம். நான் சென்ற கம்புகிரி மலையில் அருவியோ அல்லது சுனை ஊற்றோ கிடையாது. இருந்திருந்தால் இந்த இடத்திற்கு தினசரி வருபவர்களின் எண்ணிக்கைக் கூடலாம். அடந்த மலைக்குள் செல்லுகையில் நமக்கு மேலே செல்லுபவர்களைக் காணலாம். ஏழு மலைகள் ஏறி இறங்கி அந்த கோவிலுக்குச் செல்லப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வளவு தொலைவு இல்லை என்பது எனது அனுமானம். அங்கங்கே மலைமக்கள், மள்ளர்கள், வேடர்கள், குறத்திகள், தின்பண்டங்களை விற்கிறார்கள். வருடத்தில் அன்றைய ஒரு தினம் மட்டுமே அந்த இடத்திற்கு மக்கள் வருகை என்பதை தெரிந்து கொண்டு பொருட்களின் விலையை ஒருமடங்கு கூட்டி விற்கிறார்கள். போகும் பாதையில் பாறைகளுக்கு இடுக்கில் செடிகள் முளைத்து பாறையை வெடிக்கச் செய்திருக்கும். சில நேரங்களில் கற்கள் உருண்டோடும். கவனம் அதிகம் தேவை. மலை ஏறிய பிறகு தெரியும் காட்சி மிகுந்த இயற்கையழகு. வழியில் விதவிதமான பூக்களும் பூச்சிகளும் காணக்கிடைக்கும். எல்லாமே அழகுதான்..

குறிஞ்சி நாடாக சேர நாட்டைக் குறிப்பிடுவார்கள். அதற்கேற்ப மலைகளும் இங்கே உண்டு. மலையேறும் அனுபவமே அலாதியானது. இந்த கம்புகிரி மலைக்குச் செல்லுபவர்கள் யாவருமே எங்கள் உறவினர்கள் என்பதால் எங்களுக்கு கூடுதல் சிறப்பு. யாருடனும் யார்வேண்டுமானாலும் பேசலாம். பெரும்பாலும் சிறு குழந்தைகளும் முதியவர்களும் வருவது தவிர்க்கப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் எனில் உடன் மருந்துப் பொருட்கள் கூட இருக்காது.

சுமார் பத்து கி.மீ நடந்து சேர வேண்டிய இடத்தைச் விடலாம். அங்கே நீங்கள் நினைப்பது போல பிரம்மாண்டமாகவோ அல்லது சுமாராகவோ கூட கோவில்கள் கிடையாது. வெறும் பாறைகள் மட்டுமே உள்ளன. குறிஞ்சியில் பாறைக்குக் குறைவிருக்காதல்லவா. அதிலும் அதளபாதாள பாறைகள் நிரம்பவே உண்டு. கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் அமைந்திருக்கின்றன. அங்கே சமதளமான இடம் காணப்படும். சிறு குன்று போல தோற்றமளிக்கு ஓரிடத்தில் ஸ்ரீ வெங்டாசலபதியின் திருவுருவத்தை வைத்து வழிபடுவார்கள். அதில் பல ஆராதனைகள் உண்டு. மதியம் பன்னிரண்டு மணியளவில் எல்லாரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். அதற்கு மேலே ஓரிருவர் மட்டுமே வருபவர்கள் உண்டு. முன்பெல்லாம் அந்த வெயில் நேரத்தில் அவ்வளவு தூரம் எல்லா பொருட்களையும் எடுத்துச் சென்று அங்கே சமைத்து அன்னதானம் இடுவார்கள். அப்போது சாப்பிடுபவர்கள் குறைவாக இருந்ததால் தனிமண்டபம் கட்டி மருதமலை அடிவாரத்திலேயே அன்னதானமிடுவார்கள். (பெரும்பாலானவர்களுக்கு அன்னதான விஷயம் தெரியாது.) பெரும்பாலும் இளவயதுள்ளவர்களே இங்கு வருவதால் பொழுது இனிமையாகவே போய்விடும். (அதிலும் கதிரூர் குலம் என்பதால் எனக்கு கலியாணம் செய்யும் முறைப்பெண்களாக வருபவர்கள் மிக அதிகம்.:D) முறைப்படி பூசைகள் முடிந்ததும் பிரசாதங்கள் வழங்கப்படும். இங்கே கலந்து கொள்பவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் என கணக்கிடப்படுகிறது.

சுமார் ஒரு மணியளவில் யாவரும் கிளம்பத் தொடங்கிவிடுவார்கள். இரவு நேரத்தில் யானை, புலி, ஆகியன நடமாடுவதாக சொல்லப்படுகிறது. எனினும் சுமார் ஐந்து மணியளவில் பெரும்பாலான கூட்டங்கள் மருதமலை அடிவாரத்தை அடைந்துவிடும். இறங்கும் நேரம், ஏறும் நேரத்தைவிட குறைவே என்றாலும் கற்பாதை என்பதால் பல இடங்களில் சருக்கல் ஏற்படுத்திவிடும். ஆகவே ஏறுவதைக் காட்டிலும் இறங்குவதில் கவனம் தேவை.

ஒரே நாளில் சுமாராக இருபது கி.மீ நடந்துவிடுவதாலும் அதிலும் மலையேறுவதைப் போன்ற பாதையாலும் கால்வலி அதிகம் எடுத்துவிடும். தூக்கம் சொக்கும். தினமும் அதே மலைக்குள் தொழில் செய்யும் குறவ, மள்ள, மக்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை.

அடுத்தநாள் மருதமலைக்கு... மருதமலையானது குறிஞ்சிக்கடவுளாகிய முருகப்பெருமானின் கோவில். இங்கே செல்ல இரண்டுவிதமான பாதைகள் உண்டு. படிக்கட்டுப் பாதை மற்றும் வாகனங்கள் செல்ல தார்ச்சாலை. பெரும்பாலான மக்கள் படிக்கட்டு வழியாக செல்லுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதிலும் படிக்கட்டு ஏறி இறங்கும் சுகமே தனிதான். (திருப்பதிக்குச் சென்றாலும் கூட நாங்கள் படிக்கட்டில் செல்லுவதையே வழக்கமாக கொண்டுள்ளோம். திருப்பதியிலிருந்து திருமலைக்கு மொத்தம் பதினெட்டு கி.மீட்டர்கள். ) இந்த முறை மருதமலைப் படிக்கட்டுகளில் வேலைகள் நடந்து வருவது தெரிந்தது. ஓய்வின்றி ஏறிவிட்டால் எந்த பிரச்சனையுமில்லை. அடிக்கடி ஓய்வெடுத்துச் சென்றால் கால் வலி அதிகமாகவே இருக்கும். குறிஞ்சித் திணையாகையால் மருதமலையில் ஓரிரு இடங்களில் குரங்குகள் காணப்படுகின்றன. பெரும்பாலான மலைக் கோவில்களில் மயில்கள் இருக்கும். இங்கே நான் இதுவரை கண்டதில்லை. இருக்கலாம்.. கோவில் வெகு தொலைவல்ல. அடிவாரத்திலிருந்தே கோவிலைத் தெளிவாகக் காணலாம். கிருத்திகை நாட்கள் குறிஞ்சிக்கடவுளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால் அன்றைய தினம் மக்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் பிரம்மாண்டமான கோவில்களோ கோபுரங்களோ கிடையாது. இப்பொழுதுதான் வேலைப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இக்கோவிலைச் சுற்றிலும் மலைகள் இருப்பதால் எங்கு காணினும் பசுமை நம் கண்ணை மறைக்கிறது. கோவிலுக்கு பின்புறமாக ஒரு சித்தர் கோவிலும் உண்டு. அது பாம்பாட்டி சித்தர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் அங்கே அடக்கமாகிவிட்டார் என்றும் குறிப்பிட்ட சில நாட்கள் வந்து பிரசன்னமாவார் என்றும் அங்கே எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. சித்தர் கோவிலுக்குக் கீழாக பாறைப் பாதாளங்கள் தெரிகின்றது. சில வருடங்களுக்கு முன்பு இரு பாம்புகள் சண்டையிட்டு அங்கே கவனித்திருக்கிறேன். பாம்பாட்டி சித்தர் கோவிலில் சிலைகள் ஏதுமில்லை. பாம்பு உருவிலான பாறைகளை வைத்து கோவில் கட்டப்பட்டுள்ளது.

பொதுவாக மருதமலை, அதிக தூரமின்மை மற்றும் வனப்பு குறைவு ஆகிய காரணத்தால் இன்னும் பிரபலமாகாமல் இருக்கிறது. சேரநாட்டில் வெள்ளியங்கிரி மலை அளவுக்குக் கூட இது பிரபலமில்லை. முன்பு குறிப்பிட்டமாதிரி இங்கே சுனையருவியோ அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது பார்ப்பதற்கு அழகான இயற்கையோ இல்லை. மற்ற பிரபல மலைகள் ஏறும் போதே ஒருவித கிளர்ச்சி இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். வேகமாக படியிறங்கினால் சுமார் இருபது நிமிடங்களில் இறங்கிவிடலாம். சுமாராக ஐநூறு படிக்கட்டுகள் இருக்கலாம். சின்ன மலைதான் இது.

ஒருவாறு குறிஞ்சியை நன்றாக உறுஞ்சி ரசித்து விட்ட பிறகு கோவைக்கு கிளம்பினோம். அடுத்த திணையை பார்வையிட அங்கே திட்டமிட்டோம்...

சரி ஒரு பண்பட்ட விசயம்.... குறிஞ்சிக்குரிய பொழுதாகிய சிறு பொழுதினை ஏன் ஜாமத்தை (நள்ளிரவு) நியமித்திருக்கிறார்கள்? சொல்லுங்களேன்...

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Suresh759.jpg

கம்புகிரி மலைக்கு மருதமலையிலிருந்து செல்லும் வழி இதுதான்.

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Suresh763.jpg

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Suresh764.jpg
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Suresh820.jpg

இந்த காட்டுவழியில்தான் செல்லவேண்டும்

சிவா.ஜி
05-10-2007, 06:45 AM
ம்......நாமும் தான் மருதமலை போனோம்...அடிச்சிப் பிடிச்சி கூட்டத்தோட நின்னு சாமி கும்புட்டு வரவே சரியாயிருக்கு.அதுலயும் படிகளில் போகாமல்,சாலை வழியில் வாகனத்தில் போவதால் எதையும் ரசிக்க முடிவதில்லை.ஆதவாவின் பார்வையில் அதை ரசிக்க முடிகிறது.
(அதிலும் கதிரூர் குலம் என்பதால் எனக்கு கலியாணம் செய்யும் முறைப்பெண்களாக வருபவர்கள் மிக அதிகம்.)
அங்கே சுனையோ..ஊற்றோ இல்லையென்றால் என்ன..? ஆதவாவின் ஜொள்ளூற்று நிறைந்து காணப்பட்டதாய் அவருடன் சென்றவர்களில் ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.குறிஞ்சிப் பயணம் பற்றி சுகமாக விவரித்துள்ளார்.

ஆதவா
05-10-2007, 01:11 PM
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Suresh779.jpg
இந்த படத்தில் உள்ளவர்களில் நானும் ஒருவன்.. கம்புகிரி கோவில் உள்ள இடம் இதுதான்.

ஆதவா
05-10-2007, 01:14 PM
ம்......நாமும் தான் மருதமலை போனோம்...அடிச்சிப் பிடிச்சி கூட்டத்தோட நின்னு சாமி கும்புட்டு வரவே சரியாயிருக்கு.அதுலயும் படிகளில் போகாமல்,சாலை வழியில் வாகனத்தில் போவதால் எதையும் ரசிக்க முடிவதில்லை.ஆதவாவின் பார்வையில் அதை ரசிக்க முடிகிறது.
(அதிலும் கதிரூர் குலம் என்பதால் எனக்கு கலியாணம் செய்யும் முறைப்பெண்களாக வருபவர்கள் மிக அதிகம்.)
அங்கே சுனையோ..ஊற்றோ இல்லையென்றால் என்ன..? ஆதவாவின் ஜொள்ளூற்று நிறைந்து காணப்பட்டதாய் அவருடன் சென்றவர்களில் ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.குறிஞ்சிப் பயணம் பற்றி சுகமாக விவரித்துள்ளார்.

இது யாருங்க? எனக்கே தெரியாம?

மிக்க நன்றிங்க. அடுத்தமுறை போகும் போது நிச்சயம் படிக்கட்டு வழியே செல்லுங்க... அதிலும் நம் குடும்ப உறவினர்களோடு சென்றாலே அது தனி சுகம் தான்..

rajaji
05-10-2007, 03:11 PM
ஆதவா அண்ணாச்சி... உங்கள் பயணக்கட்டுரை வாசித்த போது நாமும் மலை ஏறியது போலவே இருந்தது.....
அத்தனை தத்ரூபமான வர்ணனை....

படங்கள் பிரமாதம்...
இயற்கை வனப்பினை ரசிக்க முடிகிறது....

(ஆமா படத்தில எங்க இருக்கீங்கன்னு சொன்னா நல்லா இருக்குமே)

ஆதவா
05-10-2007, 03:26 PM
ஆதவா அண்ணாச்சி... உங்கள் பயணக்கட்டுரை வாசித்த போது நாமும் மலை ஏறியது போலவே இருந்தது.....
அத்தனை தத்ரூபமான வர்ணனை....

படங்கள் பிரமாதம்...
இயற்கை வனப்பினை ரசிக்க முடிகிறது....

(ஆமா படத்தில எங்க இருக்கீங்கன்னு சொன்னா நல்லா இருக்குமே)

மிக்க நன்றி ராசாசி அண்ணாச்சி... படங்கள் இன்னும் பல உண்டு. ஏற்றும் வசதி குறைவாக உள்ளது. நேரம் அமைந்தால் மீண்டும் தருகிறேன்.

அந்த படத்தில் நிச்சயம் முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வாலிபர்களுள் நான் ஒருவனாக இருப்பேன்... :)

rajaji
05-10-2007, 03:30 PM
மனசுக்குள்ளேயே யோசித்துள்ளேன்.....
அது நிச்சயம் நீங்களாகத்தான் இருப்பீர்கள்....

நேரம் கிடைக்கும் போது நிதானமாகவே படங்களைப் பதியுங்கள்.....
பார்க்க ஆவலாக இருக்கிறேன்....

ஆதவா
05-10-2007, 03:32 PM
மனசுக்குள்ளேயே யோசித்துள்ளேன்.....
அது நிச்சயம் நீங்களாகத்தான் இருப்பீர்கள்....

நேரம் கிடைக்கும் போது நிதானமாகவே படங்களைப் பதியுங்கள்.....
பார்க்க ஆவலாக இருக்கிறேன்....

நிச்சயம் பதிக்கிறேன்.... (அங்க அழகா இருக்கிறவங்க்ல்ல மட்டும் எடுங்க.. நான் மட்டும் வருவேன்...:D)

lolluvathiyar
05-10-2007, 03:32 PM
அற்புதமான அனுபவம், நான் பலமுரை மருதமலை போயிருகிறேன். எனக்கு நீங்கள் குறிபிட்ட கம்புகிரி மலை இருப்பதே தெரியாது போயிற்று.
நீங்கள் சொல்வதை பார்த்தால் வெள்ளியங்கிரி மலை போல இருக்கும் போல இருக்கு. நான் வெள்ளியங்கிரி மலை ரசிகன். ஏறி இறங்க கிட்டதட்ட 10 மனி நேரம் ஆகும் (வயசாயிருச்சல்ல)

எப்படியோ இப்படி பட்ட கோவில்களுக்கு போக குடுத்து வைத்தவர் நீங்கள். படத்துல இருக்கற ஜொள்ளு வழியர உங்கள நான் கண்டு பிடித்து விட்டேன். ஆனா கவலை படாதீங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்

ஆதவா
06-10-2007, 11:45 AM
அற்புதமான அனுபவம், நான் பலமுரை மருதமலை போயிருகிறேன். எனக்கு நீங்கள் குறிபிட்ட கம்புகிரி மலை இருப்பதே தெரியாது போயிற்று.
நீங்கள் சொல்வதை பார்த்தால் வெள்ளியங்கிரி மலை போல இருக்கும் போல இருக்கு. நான் வெள்ளியங்கிரி மலை ரசிகன். ஏறி இறங்க கிட்டதட்ட 10 மனி நேரம் ஆகும் (வயசாயிருச்சல்ல)

எப்படியோ இப்படி பட்ட கோவில்களுக்கு போக குடுத்து வைத்தவர் நீங்கள். படத்துல இருக்கற ஜொள்ளு வழியர உங்கள நான் கண்டு பிடித்து விட்டேன். ஆனா கவலை படாதீங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்

ஆமாம் வாத்தியாரே! பலருக்குத் தெரியாது.. ஆனால் வெள்ளியங்கிரி மலைக்கு இதற்கு வானவில்லை கவிழ்த்துப் போட்டாலும் எட்டாது. அதிலும் வெள்ளியங்கிரி மலை படிக்கட்டுகளால் ஆனதன்றோ... முதலும் கடைசியும் அங்கே வெகு சிரமம்...

படத்தில் உண்மையிலேயே நான் ஜொள்ளூ விடவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்...

நன்றி

சூரியன்
06-10-2007, 12:04 PM
நன்பரே கோவையில் எனக்கு மருதமலை மற்றும் வெள்ளியங்கிரி மலை, மட்டுமே தெரியும்,நீங்கள் சொல்லும் கம்புமலை தெரியாது.
இருந்தாலும் கம்புமலையை விட அது இன்னும் ஆபத்தானது..
அங்கு ஏழாவது மலையில் நின்றால் இயற்கையின் அற்புதங்களை ரசிக்கலாம்.

மலர்
09-10-2007, 12:18 AM
ஒவ்வொரு சாதிக்குள்ளும் குலம் இருக்கும், இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த குலத்தைச் சேர்ந்தவர்களைக் கட்டவேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு குலத்திற்கும் தெய்வம் இருக்கும். தந்தையின் குலமே மகனுக்கும் சேரும். அந்த வகையில் நாங்கள் சென்றது எனது அன்னையின் குலமாகிய கதிரூர் வார்ளு குலக் கோவிலுக்கு...
ஆதவா இதையெல்லாம் நான் இன்னைக்கு தான் கேள்வி படுறேன்....


இந்த கம்புகிரி மலைக்குச் செல்லுபவர்கள் யாவருமே எங்கள் உறவினர்கள் என்பதால் எங்களுக்கு கூடுதல் சிறப்பு

உண்மையெல்லாம் இப்பத்தான் மெது மெதுவா வெளிய வருது


பெரும்பாலும் இளவயதுள்ளவர்களே இங்கு வருவதால் பொழுது இனிமையாகவே போய்விடும். (அதிலும் கதிரூர் குலம் என்பதால் எனக்கு கலியாணம் செய்யும் முறைப்பெண்களாக வருபவர்கள் மிக அதிகம்.)

வாரே வா,, மொத்த உண்மையும் வெளிய வந்துட்டு ம்.ம்..ஆதவா இத்தனை நாளாக சொல்லவே இல்லை பாத்தியா.....


சரி ஒரு பண்பட்ட விசயம்.... குறிஞ்சிக்குரிய பொழுதாகிய சிறு பொழுதினை ஏன் ஜாமத்தை (நள்ளிரவு) நியமித்திருக்கிறார்கள்? சொல்லுங்களேன்...

தெரியலையே எதுக்கு......................?:confused::confused:


இந்த காட்டுவழியில்தான் செல்லவேண்டும்

பாத்தாலே பயமா இருக்கு


ஆதவாவின் ஜொள்ளூற்று நிறைந்து காணப்பட்டதாய் அவருடன் சென்றவர்களில் ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.

சிவா அண்ணா உங்களிடமும் சொல்லி விட்டாரா...


(அங்க அழகா இருக்கிறவங்க்ல்ல மட்டும் எடுங்க.. நான் மட்டும் வருவேன்...)
இன்று நான் மன்றத்தில் ரசித்த முதல் நகைச்சுவை....

மீனாகுமார்
11-10-2007, 02:45 PM
நல்ல வரிகள் மூலம் நம்மை கம்புகிரி மலைக்கும் மருதமலைக்குமே கூட்டிச் சென்று விட்டார் ஆதவா. வருடத்திற்கொருமுறையேனும் இது போல் பயணம் செய்ய வேணும். குல தெய்வங்கள் பற்றிய விளக்கமும் அருமை.

நானும் என் சிறு வயதில் ராசபாளையத்தைத் தாண்டி கிழவன் கோவில் என்ற ஊரையும் தாண்டி காட்டு மலைக்குள் 8 கிலோமீட்டர் தூரம் வரை சென்றால் ஓர் சிவன் கோவில் வரும். ஊர் பெயர் மறந்து விட்டது. அந்த அனுவத்தை இக்கதை ஞாபகப்படுத்தி விட்டது.

ஆதவா
12-10-2007, 01:02 PM
நன்பரே கோவையில் எனக்கு மருதமலை மற்றும் வெள்ளியங்கிரி மலை, மட்டுமே தெரியும்,நீங்கள் சொல்லும் கம்புமலை தெரியாது.
இருந்தாலும் கம்புமலையை விட அது இன்னும் ஆபத்தானது..
அங்கு ஏழாவது மலையில் நின்றால் இயற்கையின் அற்புதங்களை ரசிக்கலாம்.

நண்பரே அது கம்புகிரி மலைங்க.... நன்றிங்க படித்தமைக்கு..

ஆதவா
12-10-2007, 01:08 PM
ஆதவா இதையெல்லாம் நான் இன்னைக்கு தான் கேள்வி படுறேன்....

ஹ* ஹ*! அப்ப*டீன்னா உங்க*ளுக்கும் கொஞ்ச*ம் மூளை இருக்கே!


உண்மையெல்லாம் இப்பத்தான் மெது மெதுவா வெளிய வருது

நான் எப்ப*வுமே உண்மைதான் பேசுவேன். இது உங்க*ளுக்குத் தெரியாதா?

வாரே வா,, மொத்த உண்மையும் வெளிய வந்துட்டு ம்.ம்..ஆதவா இத்தனை நாளாக சொல்லவே இல்லை பாத்தியா.....

அட*ப்பாவி!

தெரியலையே எதுக்கு......................?:confused::confused:

இதெல்லாம் மூளை உள்ள*வ*ங்க* யோசிக்க*ணூம்.... :−(

பாத்தாலே பயமா இருக்கு

ஹி ஹி உங்க* ஆபீஸில* இருக்க*வ*ங்க* கூட* இதைத்தான் சொன்னாங்க*!


இன்று நான் மன்றத்தில் ரசித்த முதல் நகைச்சுவை


என்ன* ப*ண்ண? ந*ல்ல*துக்குக் கால*மில்லை

ஆதவா
12-10-2007, 01:08 PM
மிக்க நன்றி மீனாகுமார். உங்கள் அனுபவத்தையும் எங்களோடு பகிரலாமே?

மலர்
12-10-2007, 01:13 PM
[B]தெரியலையே எதுக்கு......................?:confused::confused:

இதெல்லாம் மூளை உள்ள*வ*ங்க* யோசிக்க*ணூம்.... :−(

அதுக்குதான் நான் யோசிச்சேன்.....

ஆதவா
12-10-2007, 01:26 PM
அதுக்குதான் நான் யோசிச்சேன்.....

அட போங்க.. அதெல்லாம் சொல்லமுடியாது....

நேசம்
12-10-2007, 10:03 PM
படத்தில் அழகாக மொட்டையடித்து இருப்பத்து நிங்கதானெ