PDA

View Full Version : ஏனடி இப்படி???!!!பூமகள்
04-10-2007, 06:33 PM
(ஒரு ஆணின் பார்வையில் எழுதியது.)

http://img34.picoodle.com/img/img34/9/10/4/poomagal/f_lovesymbolm_15dcfea.jpg

நான் ஏதோ எழுத முற்பட
எதையோ கிறுக்குகிறது
நீ கொடுத்துச் சென்ற
உன் பேனா
உன் இதழ்ரசம் பட்டதால்
தள்ளாடுகிறதா?

காத்துநின்றே வலியெடுக்கும்
என் கால்கள்
கெண்டை மீனாய்
துள்ளுகிறதே..உன்
வரவு கண்டதாலா?

எப்போதையும் விட
இப்போதெல்லாம்
என் முகத்தை
அழகாய் காட்டுகிறதே
என் வீட்டு கண்ணாடி
உன் பிம்பம்
விழுந்த கண்ணாடியை
வாங்கியதாலா?

எதையோ சொல்ல
வாய் திறந்து
வாஞ்சிக் கோட்டைபோல்
நிலையாகி போகிறேனே
உன் கண்களெனும்
உளி செதுக்க நான்
சிக்கியதாலா??

இத்தனை கேட்டும்
விழியோர குறும்புப்
பார்வையை மட்டும்
பதிலாக்கி போகிறாயே
உன் இதயத்தில்
நானிருப்பதாலா??!!!

சாம்பவி
04-10-2007, 06:46 PM
ஆண்களின் இந்த வசனங்களுக்கெல்லாம்
அசல் அர்த்தங்கள் வேறு..!

நெஞ்சில் உரமின்றி
நேர்மை திறமின்றி
வஞ்சனை செய்வாரடி... கிளியே
வாய் சொல்லில் வீரரடி.. !

சும்மாவா சொன்னான் பாரதி.. !

ஒரு பெண்ணின் பார்வையில் மட்டுமே
அவளின் சொல்லில் மட்டுமே .. இவை யாவும் உண்மை. பூமகள்.

மெல்லிய காதல் கவிதைக்கு நன்றி.


.

ஓவியன்
04-10-2007, 06:47 PM
காதல் வயப்பட்டவனிற்கு
காதலியைத் தொட்ட
பேனாவைத் தீண்டுகையிலும்
காதலியைத் தீண்டும் சுகம்.....

காதலில் காத்திருப்பதும்
சுகம் தான் காத்திருப்பது
காதலிக்காக எனும் போது...

காதலி குளித்த நீரே
தீர்த்தமாகையில் அவள்
பிம்பம் பட்ட கண்ணாடி
அழகாக காட்டாதிருந்தாலே
அது அதிசயம் காதலிலே...

வேல்களை சாமாளித்திடும்
வல்லமை படைத்தவனென
இறுமாந்திருந்தேன்
உன் வாள் விழி பார்த்து
காதலிக்கும் வரை.....

இவை எல்லாவற்றுக்கும்
தொடக்கமும்,
தொடர வைப்பதும்
உன் விழியோர காதல்
குறும் பார்வைதானோ?


அழகான கவிதை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்....

பென்ஸ்
04-10-2007, 06:52 PM
பூமகள் நல்ல முயற்சி...
இருப்பினும் வேறும் சம்பவங்களை வார்த்தைகளால் அடுக்கிய ஒரு உணர்வே வந்தது....
இந்த கவிதையில் உங்கள் பழைய கவிதைகளின் பஞ்ச் இல்லை என்பதே உண்மை.

மேலும்... வழக்கம் போல இந்த முறை கவிதையை "ஆய்" போட்டு முடிக்காமல் "லா" போட்டு முடித்திருக்கிறீர்கள்...(சும்மா லுலுவாயிக்கு).

ஓவியன்... பதில் கவிதை அருமை....

பூமகள்
04-10-2007, 06:55 PM
ஆண்களின் இந்த வசனங்களுக்கெல்லாம்
அசல் அர்த்தங்கள் வேறு..!

நெஞ்சில் உரமின்றி
நேர்மை திறமின்றி
வஞ்சனை செய்வாரடி... கிளியே
வாய் சொல்லில் வீரரடி.. !

சும்மாவா சொன்னான் பாரதி.. !

ஒரு பெண்ணின் பார்வையில் மட்டுமே
அவளின் சொல்லில் மட்டுமே .. இவை யாவும் உண்மை. பூமகள்.
மிகச் சரிதான் சாம்பவி. ஆனால் எல்லா ஆண்களையும் ஒட்டுமொத்தமாய்
குறைசொல்லவதை நான் ஏற்கவில்லைடா.
நல்லவர்களும் இருக்கிறார்களே.
உங்களின் உடன் ஊக்கத்திற்கு நன்றிகள் சாம்.

பூமகள்
04-10-2007, 06:57 PM
பூமகள் நல்ல முயற்சி...
இருப்பினும் வேறும் சம்பவங்களை வார்த்தைகளால் அடுக்கிய ஒரு உணர்வே வந்தது....
இந்த கவிதையில் உங்கள் பழைய கவிதைகளின் பஞ்ச் இல்லை என்பதே உண்மை.

மேலும்... வழக்கம் போல இந்த முறை கவிதையை "ஆய்" போட்டு முடிக்காமல் "லா" போட்டு முடித்திருக்கிறீர்கள்...(சும்மா லுலுவாயிக்கு).
ஓவியன்... பதில் கவிதை அருமை....
சற்று முன் கண நேரத்தில் தோன்றிய கவி.. கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் போல் தோன்றுகிறது. சும்மா தான் எழுதினேன்... பஞ்ச் மிஸ்ஸிங்கா?? அடுத்தகவியில் ஜமாய்க்கிரேன் பென்ஸ் அண்ணா.:icon_b:
கவலையை விடுங்க...:icon_rollout:
அதென்ன "ஆய்" கவிதைன்னு சொல்லிட்டீங்க...?? ம்.....:traurig001:

பூமகள்
04-10-2007, 07:00 PM
காதல்
வேல்களை சாமாளித்திடும்
வல்லமை படைத்தவனென
இறுமாந்திருந்தேன்
உன் வாள் விழி பார்த்து
காதலிக்கும் வரை.....

இவை எல்லாவற்றுக்கும்
தொடக்கமும்,
தொடர வைப்பதும்
உன் விழியோர காதல்
குறும் பார்வைதானோ?

அழகான கவிதை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்....
இவ்வரிகளை மிகவும் ரசித்தேன். அசத்தல் கவிதை ஓவியன் அண்ணா. கலக்கிட்டீங்க.. வாழ்த்துகள்..!!:icon_rollout:
அக்னியின் க்ளோன் ஆகிட்டீங்களா? பின்னூட்டக் கவியில் பின்னுறீங்க?:icon_b:

பென்ஸ்
04-10-2007, 07:01 PM
ஆண்களின் இந்த வசனங்களுக்கெல்லாம்
அசல் அர்த்தங்கள் வேறு..!

நெஞ்சில் உரமின்றி
நேர்மை திறமின்றி
வஞ்சனை செய்வாரடி... கிளியே
வாய் சொல்லில் வீரரடி.. !

சும்மாவா சொன்னான் பாரதி.. !

ஒரு பெண்ணின் பார்வையில் மட்டுமே
அவளின் சொல்லில் மட்டுமே .. இவை யாவும் உண்மை. பூமகள்.

மெல்லிய காதல் கவிதைக்கு நன்றி.


.

ஜேனரலைஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன தோழி...
ஆண்கள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் உலகில் காதலே இருக்காது...

அம்மா, அப்பா, நாய்குட்டி என்று வசனங்கள் ஆண்கள் பேசுவதில்லை, நெஞ்சில் உரமில்லாமல்.
காதலிக்க பொய் சொல்லுவான், காதலை பொய்யாக்க மாட்டான் நேர்மையின்றி...
வஞ்சியை அரவனைப்பானேயன்றி, வஞ்சிக்கமாட்டான்...
வாயல் வஞ்சனை செய்வது யாரோ.. சொல்லு தோழி...:icon_b:

பூமகள்
04-10-2007, 07:06 PM
ஆண்கள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் உலகில் காதலே இருக்காது...

அம்மா, அப்பா, நாய்குட்டி என்று வசனங்கள் ஆண்கள் பேசுவதில்லை, நெஞ்சில் உரமில்லாமல்.காதலிக்க பொய் சொல்லுவான், காதலை பொய்யாக்க மாட்டான் நேர்மையின்றி...
வஞ்சியை அரவனைப்பானேயன்றி, வஞ்சிக்கமாட்டான்...
வாயல் வஞ்சனை செய்வது யாரோ.. சொல்லு தோழி...:icon_b:
நீங்களும் ஒட்டுமொத்தமாய் பார்க்கத் தவறிவிட்டீர்களோ பென்ஸ் அண்ணா? இருபாலரிடத்தும் குற்றம் உள்ளது தான். அதை ஏற்க மறுப்பது ஏன்?
ஆணால் வஞ்சிக்கப்பட்ட பெண்களும் ஏராளம். பெண் விட்டுச் சென்ற ஆண்களும் ஏராளம். இருபுறமும் தவறு நடந்த வண்ணம் தான் உள்ளது.
பொதுப்படையாக பெண்களை மட்டுமோ அல்லது ஆண்களை மட்டுமோ குறை கூறுவது இவ்வகையில் சரியான தீர்வல்ல என நான் நினைக்கிறேன்.

அறிஞர்
04-10-2007, 07:06 PM
இத்தனை கேட்டும்
விழியோர குறும்புப்
பார்வையை மட்டும்
பதிலாக்கி போகிறாயே
உன் இதயத்தில்
நானிருப்பதாலா??!!!

அருமை பூமகள்....
இதயத்தில் கனவுகாதலன்
இருந்தால்...
குறும்பு பார்வைக்கும்
புன்னகைக்கும்...
பஞ்சமிருக்காது....

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பென்ஸ்
04-10-2007, 07:13 PM
[COLOR="Sienna"]நீங்களும் ஒட்டுமொத்தமாய் பார்க்கத் தவறிவிட்டீர்களோ பென்ஸ் அண்ணா? இருபாலரிடத்தும் குற்றம் உள்ளது தான். அதை ஏற்க மறுப்பது ஏன்?


ஆண்களிடம் உள்ல நல்ல குணம் இதுதான்...
பெண்களை குறை சொல்லமாட்டார்கள்... நானும் அதை செய்யலையே.....

ஆண்கள் பேசிக்கலாகவே நல்லவர்கள் என்கிறேன்...

பூமகள்
04-10-2007, 07:13 PM
மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா.
கனவுக் காதலனா?? அப்படின்னா என்ன அண்ணா??:icon_ush::D

பூமகள்
04-10-2007, 07:19 PM
ஆண்கள் பேசிக்கலாகவே நல்லவர்கள் என்கிறேன்...
அநியாயத்திற்கு ஜோக்கடிக்கிறீர்களே பென்ஸ் அண்ணா??!!:lachen001:
நம்பும் படியாய் ஏதும் இருந்தால் சொல்லுங்கள். ஒட்டுமொத்தமாய் மறுபடியும் சொல்வதை ஏற்க முடியவே முடியாது.:icon_nono:

சாம்பவி
04-10-2007, 07:22 PM
வாயல் வஞ்சனை செய்வது யாரோ.. சொல்லு தோழி...:icon_b:

இது பற்றி எட்டய புரத்தானைத் தான் கேட்க வேண்டும் நண்பரே... :aetsch013:


ஆண்களின் பார்வையில் இந்த கவிதையை நோக்குவதை விட, பெண்களின் பார்வையிலேயே இக்கவிதையின் நளினம் மேலும் மெருகேறும் என்பதே என் தாழ்மையான கருத்து. :)

.

பென்ஸ்
04-10-2007, 07:22 PM
அநியாயத்திற்கு ஜோக்கடிக்கிறீர்களே பென்ஸ் அண்ணா??!!:lachen001:
நம்பும் படியாய் ஏதும் இருந்தால் சொல்லுங்கள். ஒட்டுமொத்தமாய் மறுபடியும் சொல்வதை ஏற்க முடியவே முடியாது.:icon_nono:

சரி... இதை இதோடு நிறுத்திகிறேன்....:rolleyes:

பென்ஸ்
04-10-2007, 07:24 PM
இது பற்றி எட்டய புரத்தானைத் தான் கேட்க வேண்டும் நண்பரே... :aetsch013:
.

ஏவாளிடம் கேட்டேன்....

சாம்பவி
04-10-2007, 07:32 PM
ஏவாளிடம் கேட்டேன்....

மன்னிக்கவும் தவறான முகவரி... ;)


.

மனோஜ்
04-10-2007, 07:40 PM
கவிதை அருமை பூமகள்
(ஒரு வேலை அவனுக்கு(அவளுக்கு) எற்கனவே கல்யாணம் ஆயிருக்கும் பாத்து-சும்மா)

பூமகள்
04-10-2007, 07:47 PM
மிக்க நன்றிகள் மனோஜ் அண்ணா.
இப்பவெல்லாம் காதல் என்றாலே காத தூரம் ஓடும் பெண்கள் தான் அதிகம் அண்ணா. கவலையை விடுங்க...!! ஹீ ஹீ..!!

யவனிகா
04-10-2007, 08:03 PM
நல்ல கவிதை பூமகள். உன் கவிதைப் பேனாவில் காதலெனும் மையை ஊற்றி எழுதுகையில் வெற்றுத்தாள்கள் கூட மணம்வீசும் மலர்களாய்த் தான் மலர்கின்றன உன்னைப் போலவே...,ஆனாலும் காதலைத் தவிர ,சமுதாயப் பிரச்சனையை பாடுபொருளாய் கொண்டு நீ அளித்த கவிதைகள் இன்னும் சிறப்பாக இருக்கின்றன.

இணைய நண்பன்
04-10-2007, 08:16 PM
அழகிய கவிதை.வாழ்த்துக்கள்

பூமகள்
05-10-2007, 04:31 AM
காதலைத் தவிர ,சமுதாயப் பிரச்சனையை பாடுபொருளாய் கொண்டு நீ அளித்த கவிதைகள் இன்னும் சிறப்பாக இருக்கின்றன.
உண்மை தான் யவனி அக்கா... சமுதாயப் பிரச்சனை எப்போதுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். அப்போது பிறக்கும் கவி சிறப்பாய் அமைவதில் ஆச்சர்யம் இல்லை.
இக்கவியை இன்னும் மெருகேற்றியிருக்கலாம் போல் தோன்றுகிறது.
உங்களின் விமர்சனத்திற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றிகள் யவனி அக்கா.

பூமகள்
05-10-2007, 04:31 AM
அழகிய கவிதை.வாழ்த்துக்கள்
மிகுந்த நன்றிகள் இக்ராம்.

வசீகரன்
05-10-2007, 05:36 AM
இத்தனை கேட்டும்
இத்தனை கேட்டும்
விழியோர குறும்புப்
பார்வையை மட்டும்
பதிலாக்கி போகிறாயே
உன் இதயத்தில்
நானிருப்பதாலா??!!!

பார்வை மொழிகளில் பரிணமிதது கொண்ட
காதலர்களின்...சங்கமம்
நயமான கவிதை.... பூமகளே...

சாம்பவி அவர்களுக்கு ஆண்கள் மேல அப்படியென்ன கோபம்....?

பூமகள்
05-10-2007, 05:47 AM
நன்றிகள் வசீகரன்.
தொடர்ந்து விமர்சியுங்கள்..!!

சிவா.ஜி
05-10-2007, 06:28 AM
ஆணின் பார்வையை படம் பிடித்த ஒரு பெண்ணின் பேனா....காதல் கவிதைகளுக்கே உரித்தான பில்ட்-அப்கள் நிறைந்திருக்கிறது(காதலன் காதலியிடம் காட்டும் பில்டப்புகளை மிகச் சரியாக எழுதியிருக்கிறாய்)
கடைசி வரிகளில், ஒரு குறும்புப் புன்னகையில் இத்தனை வசனம் பேசிய காதலனை க்ளீன்போல்ட் செய்துவிட்டாய். அழகான கவிதை.பாராட்டுக்கள் பூமகள்.

பூமகள்
05-10-2007, 06:50 AM
ஆம் அண்ணா. இப்படி எழுதித் தானே பெண்களைக் கவர நினைப்பார்கள். அவர்களைப் போல் யோசித்தேன். ஹீ ஹீ..!!
மிகுந்த நன்றிகள் சிவா அண்ணா.
உங்களின் ஊக்கம் எப்போதும் எனக்கு ஒரு டானிக்.. தொடர்ந்து ஊக்குவியுங்கள் அண்ணா.

Narathar
05-10-2007, 07:00 AM
ஓஹோ நீங்கள் இப்படியும் எழுதுவீங்களோ...

பலே பலே....... இந்தக்கால பூக்களே வண்டுகளுக்கு பாடம் நடத்துகிறது...

நாராயணா!!!!!!

பூமகள்
05-10-2007, 07:07 AM
(கலிகாலம் ஆச்சிட்டுது நாராயணா..!! என்று நாரதர் முனுமுனுப்பது தெரிகிறது...!!):D:D :lachen001:
சும்மா சும்மா தான் நாராயணா... !!
மிகுந்த நன்றிகள் நாரதரே..!!

அமரன்
05-10-2007, 07:26 AM
கவிதை படிக்கும்போது ஏற்பட்ட எண்ணவோட்டங்களை தொடரும் பின்னூட்டங்கள் வெளிக்காட்டி விட்டன.. எசப்பட்டு பாடிய ஓவியனும் கலக்கி விட்டார். பாராட்டுகள் அனைவருக்கும்...

சரி வந்ததுக்கு ஏதாச்சும் சொல்லனும் அல்லவா?

பொண்ணுங்க் எழுதும்போது தவிர்த்து மற்ற நேரங்களில் பேனாவை வாயால் கடிப்பதை கண்டிருக்கிறேன். பூமகளும் அப்படித்தான் என்பதற்கு முதல் பத்தி கட்டியம் கூறுகின்றது..

மூன்றாவது பத்தியில் வைரமுத்துவை துணைக்கு அழைக்கின்றேன். "காதலித்து பார் உன் விம்பம்பட்டு கண்ணாடி நொருங்கும்" என்றார். நொருங்கிய கண்ணாடியில்தான் ஆண்கள் அழகு :eek: என்று சொன்ன பூமகளுக்கு எனது அன்பான கண்டனம்.

பூமகள்
05-10-2007, 07:38 AM
பொண்ணுங்க் எழுதும்போது தவிர்த்து மற்ற நேரங்களில் பேனாவை வாயால் கடிப்பதை கண்டிருக்கிறேன். பூமகளும் அப்படித்தான் என்பதற்கு முதல் பத்தி கட்டியம் கூறுகின்றது..

நான் அப்படியில்லை...:icon_rollout: நான் பல பெண்களை அப்படி கண்டதால் எழுதினேன். கவியோடு கவி படைத்தவரை பொருத்திப் பார்ப்பதை நான் இங்கு மென்மையாக கண்டிக்கிறேன் அமர் அண்ணா..:D(ஹீ ஹீ..!!:lachen001:)


மூன்றாவது பத்தியில் வைரமுத்துவை துணைக்கு அழைக்கின்றேன். "காதலித்து பார் உன் விம்பம்பட்டு கண்ணாடி நொருங்கும்" என்றார். நொருங்கிய கண்ணாடியில்தான் ஆண்கள் அழகு :eek: என்று சொன்ன பூமகளுக்கு எனது அன்பான கண்டனம்.

"காதலித்துப் பார்
உன்னைச் சுற்றி ஒளிவட்டம்
தோன்றும்..
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்..
...
உன் பிம்பம் பட்டே
கண்ணாடி உடையும்"
அழகான கவியரசர் வைரமுத்துவின் வைர வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றிகள் அமர் அண்ணா.
அவரது கவியோடு என் கவியை ஒப்புமை செய்ததற்கு மிகுந்த நன்றிகள்..(இது கொஞ்சம் ஓவர் தான்.. மன்னிக்கவும்..!! :lachen001:ஹீ ஹீ..:p)

அமரன்
05-10-2007, 07:40 AM
நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டும் ச்சும்மா ஜாலிக்கு.. கவிக்கான விமர்சன் அல்ல.

பூமகள்
05-10-2007, 07:48 AM
அமர் அண்ணா இப்படிச் சொல்லி பூவிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறார் போலும்.. அது நடக்காது.. ஹீ ஹீ..!! :D:D

அக்னி
10-10-2007, 12:59 PM
இதயத்தின்
விரைவான மேளச்சத்தம்...

விழிகளின்
அதிகரித்த பார்வைவீச்சம்...

மொழிகளில்
இசைந்திடும் கவிதைச்சந்தம்...

மூச்சினில்
மோதிடும் மயக்கும்சுகந்தம்...

பெண்ணின்
ஒரேயொரு ஓர விழியசைவில்,
எத்துணை மாற்றங்கள்
ஆணுக்குள்..???


பாராட்டுக்கள் பூமக(ன்)ள்...

பூமகள்
10-10-2007, 01:15 PM
பின்னூட்டகவி அசத்தல் அக்னி அண்ணா.
எப்படி என் குண்டு வரிகளை ஸ்லிம் ஸ்ரேயாவாக்கி அற்புதம் நிகழ்த்தினீர்??!!
நன்றிகள் அக்னி அண்ணா.

அக்னி
10-10-2007, 01:17 PM
பின்னூட்டகவி அசத்தல அக்னி அண்ணா.
எப்படி என் குண்டு வரிகளை ஸ்லிம் ஸ்ரேயாவாக்கி அற்புதம் நிகழ்த்தினீர்??!!
நன்றிகள் அக்னி அண்ணா.
வேணாம் சீண்டல்கள்...
அப்புறம் பழிவாங்க அலையவும் வேண்டாம்...
அக்னி... உன்ன உசுப்பேத்திவிட்டே காலத்த ஓட்டிடுறாங்கப்பா...

சிவா.ஜி
10-10-2007, 01:19 PM
அதானே மறுபடியும் ஸ்லிம் ஸ்ரேயாவா...பிறகு அக்னிக்கு வேலை வந்து விடும்....(வேற புகைப்படம் இருக்கா அக்னி...?)

பூமகள்
10-10-2007, 01:22 PM
அஹா.. கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா..
ஒரு குரூர்ப்பா தா அலைவாங்களோ??

சிவா.ஜி
10-10-2007, 01:24 PM
அஹா.. கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா..
ஒரு குரூர்ப்பா தா அலைவாங்களோ??

அப்ப நீ எங்க குரூப் இல்லையா.....அக்னி....சீக்கிரம் ஓடியாங்கோ ஒரு பட்சி மாட்டிக்கிச்சி...

அக்னி
10-10-2007, 01:46 PM
சிவா.ஜி....
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணேலயே...

பூமகள்
10-10-2007, 01:57 PM
சிவா.ஜி....
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணேலயே...
புரிஞ்சிபோச்சா....???!!!! :aetsch013::D:D:D:D:D:D:D:D

சிவா அண்ணா ரகசியமாய் செய்யச் சொன்னால் இப்படி அவருக்கு புரிய வச்சிட்டீங்களே....??!! :rolleyes: :icon_rollout:

சிவா.ஜி
10-10-2007, 02:01 PM
சிவா.ஜி....
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணேலயே...

அய்யோ அக்னிக்கிட்ட காமெடி பண்ணமுடியுமா...மெய்யாலுமேதாங்க

ஜெயாஸ்தா
11-10-2007, 02:46 AM
இப்படித்தாங்க பொண்ணுங்க... எதையுமே சொல்லமாட்டாங்க... என்னகேட்டாலும் விழியோரப்பார்வையையே பதிலாய் தருவார்கள். கடைசியல் அல்வாவும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.


எரிமலையாய் தகிக்கும்
மனதை குளிர்விக்கிறது.
கடலலையாய் ஆர்பரிக்கும்
மனதை அடக்குகிறது...!
பாவையின் விழியோரப்பார்வை....

நல்ல கவிதை பூமகள்....!

பிச்சி
11-10-2007, 09:05 AM
அக்கா அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பத்தியும் காதல் கவிதைகள்.

கஜினி
11-10-2007, 10:59 AM
காதல் கவிதை தித்திக்கிறது.

பூமகள்
29-10-2007, 05:16 PM
இப்படித்தாங்க பொண்ணுங்க... எதையுமே சொல்லமாட்டாங்க... என்னகேட்டாலும் விழியோரப்பார்வையையே பதிலாய் தருவார்கள். கடைசியல் அல்வாவும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
எரிமலையாய் தகிக்கும்
மனதை குளிர்விக்கிறது.
கடலலையாய் ஆர்பரிக்கும்
மனதை அடக்குகிறது...!
பாவையின் விழியோரப்பார்வை....
நல்ல கவிதை பூமகள்....!
மிகுந்த நன்றிகள் ஜெயாஸ்தா.

அக்கா அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பத்தியும் காதல் கவிதைகள்.
நன்றிகள் பிச்சி..!!
காதல் கவிதை எழுதினா ஒவ்வொரு பத்தியிலும் வேறு என்னம்மா வரும்??? ;)

காதல் கவிதை தித்திக்கிறது.
கஜினி படையெடுப்பு இங்கு வரை வந்துவிட்டதா!! :sprachlos020: :D:D
சந்தோசம்..!! நன்றிகள்..!! :icon_rollout:

ஷீ-நிசி
31-10-2007, 09:08 AM
நல்ல நல்ல கேள்விகள்...

காதலில் கேள்விகள் பிறந்தால் கவிதையாகிடுமோ?!

வாழ்த்துக்கள் பூமகள்!

பூமகள்
31-10-2007, 03:26 PM
காதலில் கேள்விகள் பிறந்தால் கவிதையாகிடுமோ?!
வாழ்த்துக்கு நன்றிகள் ஷீ..!!
ஆமாம்.. இது என்ன புகழ் உரையா?? இடிப்புரையா?? :icon_ush::icon_ush:
புரியலையே..!! :confused::confused: