PDA

View Full Version : உன்னுடன் நான்..!



சூரியன்
04-10-2007, 03:36 PM
கண்களாக நீ இரு
இமையாக நானிருப்பேன்!

காற்றாக நீ இரு
சுவாசிப்பாக நானிருப்பேன்!

எழுத்துகளாக நீ இரு
புத்தகமாக நானிருப்பேன்!

விளக்காக நீ இரு
மின்சாரமாக நானிருப்பேன்!

வானமாக நீ இரு
நட்சத்திரங்களாக நானிருப்பேன்!

சூரியனாக நீ இரு
நிலவாக நானிருப்பேன்..

நீ எதுவாக இருந்தாலும்
உன் அருகிலே நானிருப்பேன்..

ஜெயாஸ்தா
04-10-2007, 03:58 PM
நீ எதுவாக இருந்தாலும்
உன் அருகிலே நானிருப்பேன்..

---->அதுதாங்க காதல்...!

கண்கள்-இமை, காற்று-சுவாசம், எழுத்து-புத்தகம், வானம்-நட்சத்திரம், என்று ஒன்றொடொன்று உறவாய் இருப்பவற்றை சொல்லிவிட்டு கடைசி பத்திக்கு முந்திய பத்தியில் 'சூரியன்-நிலவு' என்று எதிரெதிராய் இருப்பவற்றை சொல்லிவிட்டீர்களே....

சார்ந்திருந்தால் மட்டுமல்ல எதிரெதிராய் இருந்தால் கூட காதல் வரும் என்கிறீர்கள். மிக அருமையான வரிகள். அதுவும் கடைசியில் 'நீ எதுவாக இருந்தாலும், உன்னருகில் நானிருப்பேன்' என்று சொல்லி காதலின் இலக்கணத்தை முழுமையாக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பா....

aren
04-10-2007, 04:44 PM
காதல் முத்திடுச்சின்னு சொல்லுங்க. அப்ப அடுத்தது கல்யாணம்தான். ஜமாய்ச்சுடுங்க.

கவிதை அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
04-10-2007, 05:46 PM
செவ்வந்தி மன்றத்தில் சூரியப் பார்வை வீச்சு அதிகரிக்கிறது
தாலாட்டும் பனிக்காற்று முரணுடன்...தொடருங்கள்..

யாழ்_அகத்தியன்
04-10-2007, 05:53 PM
கவிதை அருமை
பாராட்டுக்கள்