PDA

View Full Version : தொடாத சிணுங்கி



யாழ்_அகத்தியன்
04-10-2007, 12:08 PM
உன் மெளனம் கூட
ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப்
பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று

*
பூச் செடிக்கு பக்கத்தில்
வைத்து உன்னை படம்
எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை
தெரிகிறது

*
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்

*
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர

*
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்போடும்
வரைதான் அழகாக தெரிகிறது
வாசல்

-யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com

உதயசூரியன்
04-10-2007, 12:21 PM
உங்களின் கவிதை தொகுப்பு அருமை..
படிப்பேன் அனைத்தையும்...

வாழ்க தமிழ்

ஜெயாஸ்தா
04-10-2007, 12:38 PM
ஆரம்பமே அசத்துறீங்க யாழ்...! தொடருங்கள்.. தொடருங்கள்...!


வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்போடும்
வரைதான் அழகாக தெரிகிறது
வாசல்
[/url]

:icon_b: இந்த வரிகளில் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள் போங்கள்...!

Narathar
04-10-2007, 12:44 PM
அடடா!!!
ஒவ்வொரு வரியிலும் இளமை ததும்புகிறது உங்கள் கவிதையில்
புதிதாக காதலிக்கின்றீர்களோ????

யாழ்_அகத்தியன்
04-10-2007, 01:17 PM
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்
நாரதர் "காதல் "என்ற என்ன வென்றே
தெரியாத என்னிடம் புதிதாய் காதலிக்கிறேனா
என்று கேட்பது நன்னா இல்ல

Narathar
04-10-2007, 01:21 PM
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்
நாரதர் "காதல் "என்ற என்ன வென்றே
தெரியாத என்னிடம் புதிதாய் காதலிக்கிறேனா
என்று கேட்பது நன்னா இல்ல

காதல் என்பது என்னன்னே தெரியாமலா இப்படி காதல் கவிதை யாக்கின்றீர்கள்???? அதுவும் ஒரு வானொலி அறிவிப்பாளராய் இருந்து கொண்டு???? காதல் வரவில்லை என்றால் யார் நம்புவார்கள்??

காதல் சும்மா போனிலேயே வருமே???



இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்



அந்த அனுபவத்தில் தானே இப்படி எழுதினீர்கள்

நாராயணா!!!!!

சுகந்தப்ரீதன்
04-10-2007, 01:23 PM
உன் மெளனம் கூட
*
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர

-யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com

காதலின் சுழநலம் தான் நேசிப்பவள் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டுமென்று நினைப்பதுதான்... ஆரம்பமே அசத்தலாய்.. வாழ்த்துக்கள் அகத்தியன்..!

அமரன்
04-10-2007, 02:50 PM
அகத்தியன்.. அசத்துறீங்க.. காதலிக்கலைன்னு சொல்றீங்க.. ஒத்துக்கிறேன்.. ஒரு பெண்ணை நீங்கள் காதலிக்கலை.. ஆனால் காதலை காதலிக்கிறீங்க..பாராட்டுகள்.

ஷீ-நிசி
04-10-2007, 03:03 PM
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்போடும்
வரைதான் அழகாக தெரிகிறது
வாசல்

இது என்னை மிகவும் கவர்ந்தது நண்பரே! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!