PDA

View Full Version : தொட்டால் சிணுங்கி



யாழ்_அகத்தியன்
04-10-2007, 12:02 PM
உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ

*
நான்
சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும்
சுடாத கிறுக்கல்
என் பெயர்

*
உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்

நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே

*
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்

*
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ


-யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com

சுகந்தப்ரீதன்
04-10-2007, 01:28 PM
நண்பா உங்கள் தொடாத சினுங்கிக்கு பின்னூட்டமிட்டுவிட்டு பார்த்தால் தொட்டால் சினுங்கி இருக்கிறது... எனக்கு கொஞ்சம் குழப்பமாகிவிட்டது...
மறுபடி பார்த்தால் இப்போதுதான் வந்திருக்கிறாள் தொட்டால் சினுங்கி என்று... காதலை ந்ன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்..!

Narathar
04-10-2007, 01:31 PM
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்




ரசிக்க வைத்தவரிகள்
இன்னும் கவிதை மழை கொட்டும் போல் தெரிகிறது
கொட்டட்டும் கொட்டட்டும்
நனைய நாங்கள் தயார்

யாழ்_அகத்தியன்
04-10-2007, 01:41 PM
என்னமோ போங்க ரொம்ப வெக்கம் வெக்கமா வருது
நான் காதலை அனுபவித்து எழுதுறத ஏல்லாரும்
சொல்லும் போது

உங்கள் வாழ்த்துக்களுக்கு
நன்றிகள்

அமரன்
04-10-2007, 02:17 PM
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ

விவரமாகத்தான் இருக்கீங்க யாழ்.அகத்தியன். (அகத்தியன்னு ஒருவர் ஏற்கனவே இருப்பதால் உங்களை எப்படி அழைப்பது)
காதலை எழுத ருக்கத் தேவை இல்லை. ரசிக்க தெரிந்தால் போதும்..
தொடருங்கள்.

பூமகள்
04-10-2007, 02:28 PM
வித்தியாசமான காதல் கவிதைகள்..!!

உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்
மிகவும் ரசித்தேன்..!!
உங்களின் வலைத் தளம் பார்த்தேன். அருமை. நிறைய அசத்தல் கவிகளை எதிர்பார்க்கலாம் போல் உள்ளது உங்களிடத்தில்..!!
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

பென்ஸ்
04-10-2007, 02:39 PM
மிகவும் ரசித்தேன் யாழ் அகத்தியன்...

மன்றத்தில் ப்ரியன் இது போன்ற காதல் புதுகவிதைகளை கொடுப்பார்....
அதை வாசிக்கும் போது எல்லாம் என் உதடுகள் என்னையும் அறியாமல் விரிந்து புன்னகைக்கும்... நீண்ட நாட்க்களுக்கு பிறகு அது உங்கள் கவிதை வழியாக...

ஒவ்வொன்று ரசிக்க வைத்த கவிகள்....

அழகை சேலை கட்டி மறைப்பதையும்
அழகாக சேலை கட்டும் ஒயிலையும்
சேலை கட்டிய அழகான மயிலையும்
அடடே.. அடடே...
கட்டிவிடும் போது கிடைக்குமே அதே உணர்வு போல்