PDA

View Full Version : மிச்சம்!



நிலா
18-06-2003, 12:40 AM
மனம் திறக்க முற்படுகின்றேன்
உயிர்கொண்டு உணர்வு விற்கும்
வீணர்களிடையில்
என் உணர்வினை உரைக்க
உணர்வுள்ள உயிர் கேட்கின்றேன்!
மனிதர்களை மனிதர்களாய் நடத்த
நானெடுக்கும் முயற்சி என்மனதினைப் புண்படுத்த....
பிரம்மன் அவசரத்தில் படைத்தான் போலும்
ஆறறிவுமின்றி ,ஐந்தறிவுமின்றி சிலமனிதர்கள்
தவறு மனித விலங்குகள் நாட்டிற்குள்!

இங்கு
வீடுகளை மட்டுமல்ல
மனங்களையும் கற்களால்.......
கற்களுக்குள் ஈரம்தேடித்தேடி
என் கன்ணின் ஈரம் காய்ந்ததுதான் மிச்சம்!

பாரதி
18-06-2003, 07:04 PM
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

நல்ல கவிதை தந்த நிலாவுக்கு பாராட்டுக்கள்.

prabha_friend
19-06-2003, 10:14 AM
மிருகத்தில் இருந்து பிறந்தவன்

karavai paranee
19-06-2003, 10:25 AM
திறந்துகொண்ட பல மனங்கள்
விரைந்து மூடிக்கொள்கின்றன
திறக்காமல் இருந்துகொண்டால்
பல புரியாமல் இருந்துவிடும்....

மனம் திறந்ததனால் நொந்தவர்கள்
பலர் உண்டு இப்புவியினிலே....

எதுவாகினும் நிலாவின் கவிதைகளிற்கு வாழ்த்துக்கள்.. நன்றி........
திறந்துதான் பாருங்கள்..........ஆனால் திகிலடைய வேண்டாம்.......

நிலா
20-06-2003, 07:09 PM
பாராட்டிய உள்ளங்களுக்கு என் நன்றிகள்!