PDA

View Full Version : கடைசி ஆசை



யாழ்_அகத்தியன்
03-10-2007, 06:34 PM
அன்பே:
ஏன் பிரிந்தாய்?

நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.

எப்படி பிரிந்தாய்?

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.

சொல் கண்ணே
சொல்

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

எங்கே நீ சொல்
அன்பே சொல்..

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது

என் கண்ணீர் எனும்
மழையாலும்

உன் நினைவெனும்
புயலாலும்.

வா அன்பே வா...

நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்

வாழ விடாமல்
வைத்துவிடு

அது போதும்

உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்

என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்.

வா அன்பே வா


-யாழ்_அகத்தியன்

www.yaalakththiyan.wordpress.com

அறிஞர்
03-10-2007, 06:39 PM
வாருங்கள் அகத்தியனே....

வந்ததும் கவிமழை பொழிகிறீர்கள்.. தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் அறிமுகம் கொடுங்களேன்.

யாழ்_அகத்தியன்
04-10-2007, 01:42 PM
உங்கள் வரவேற்புக்கு நன்றி

அமரன்
04-10-2007, 02:12 PM
காதல் வாழ்வதற்கே..
சாவதற்கு அல்ல

மழை
வேணுமா வேண்டாமா
தெரியவில்லை
ஆனால்
நனையப் பிடிக்கும்

தொடருங்கள் தோழரே..

பிரியமுடன்

ஆதவா
05-10-2007, 03:34 AM
வாருங்கள் யாழ் அகத்தியன். உங்களை வரவேற்கிறேன். இது நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை.

தமிழ்மன்றம் சிறந்த கவிஞர்களின் நாடு. சிறந்த விமர்சகர்களின் வீடு. இங்கே உலாவும் காற்றை நுகர்ந்து செல்பவர்களும் உண்டு. காற்றாலைகள் வைத்திருப்பவர்களும் உண்டு. கவிதையைப் பொருத்தவரையிலும் விமர்சனக் குறைவிருக்காது. அதேசமயம் எனது விமர்சனத்தில் குறையில்லா விமர்சனம் இருக்காது. (அப்படியிருந்தால் எனக்கு கவிதை படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தம் :D)

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது

முளைக்கு தளிர்கள் காதல், இறக்கும் முதிர்கள் அதன் சோகம். மரமாவது எது? பிரிவுகளை சுமந்து நிற்கும் கவிஞனா? காதலனா?

பெரும்பான்மை வரிகள் புதியன அல்ல எனினும் புதியவருக்கு புதியதே

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

சற்றே வித்தியாச (முரண்?) இருக்கும் போது கல்லறையாய் பிரிவின் இறுதிகட்டத்திற்கு, இல்லாதபோது பிணமாய் வேண்டியதில்லை. பிரிவுகளின் உளறல்கள் முரண்களின் முன்னேற்றம்.
ஒட்டுமொத்த கருவினில் நீங்கள் சொல்லவருவது, வாழ்ந்து இறந்து போவது அவளால் என்ற வாக்குமூலம் பெறுவது. சற்றே வித்தியாசம்/

மேலும் தொடருங்கள்..

வசீகரன்
05-10-2007, 05:56 AM
அகத்தியரே அருமையான கவி....! மன்றத்தில்
இது உங்களுக்கு முதல் பதிப்பா...? இதயம் பிழிந்து உதித்த
உங்கள் உரைநடை கவிக்கு பாராட்டுக்கள்...!

:'முதல் கவிதையை உற்சாகமாக படைத்து அசத்தி இருக்கலாமே நண்பரே...!

வசீகரன்

சிவா.ஜி
05-10-2007, 06:04 AM
காதலில் தோல்வி..மரணத்துக்கு முன் வாசல் என்பது தேவையற்ற ஒன்று.அதனால் கருவுடன் ஒத்துப்போகவில்லையாயினும்,கவிதை வரிகள் அழகு.மென்மேலும் படைக்கப் பதிக்க வாழ்த்துக்கள் யாழ்-அகத்தியன்.

யாழ்_அகத்தியன்
05-10-2007, 09:55 AM
உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள்