PDA

View Full Version : வெளியூரில் நீ!!!



lenram80
03-10-2007, 05:53 PM
ஆண்டுக்கொரு முறை வசந்த காலம் - மரங்களுக்கு!
சில ஆண்டுகளுக்கொரு முறை கும்பாபிஷேகம் - கோயில்களுக்கு!
பல ஆண்டுகளுக்கொரு முறை வெள்ளம் - காவிரிக்கு!

ஆனால் உன்னை பார்க்கும் போதெல்லாம்,
சிரிப்பால் பூத்துக் குலுங்கும் என் முகத்தில் எப்போதும் வசந்த காலம்!
சந்தோஷத்தால் கரை புரண்டோடும் என் இதயத்தில் எப்போதும் ஆனந்த வெள்ளம்!
புது உயிர் கொண்டது போல என் ஒட்டு மொத்த உடம்புக்கும் ஒரு கும்பாபிஷேகம்!

உன்னை பிரியும் போதெல்லாம்,
மூளை கூட வேலை செய்ய அலுப்புப்பட்டு
தலைகீழாகவே தெரிகின்றன அனைத்து பிம்பங்களும்! *
அனிச்சை செயல்கள் இப்போது இம்சை செயல்களாய்! @
நொடி முள் பார்த்து மூச்சு விட்டு
நிமிட முள் பார்த்து கண் சிமிட்டி...
அப்பப்பா..
என் மேனியை நானே கணக்குப் பார்த்து
பேணிக் காப்பது பெரிய வேளையடா சாமி!

அதனால் தான் உனக்காக நான்
கவிதை வடிவத்தில் நம் காதலையோ
கடிதம் வடிவத்தில் என் சாதலையோ
தெரிவிக்க இயலவில்லை!

இதயம் மட்டும் தான் எப்போதும் போல் வேலை செய்கிறது!
நல்லவேளை! அது என்னதில்லை!
ஏற்கனவே நாம் இருவரும் அதை இடம் மாற்றி விட்டதால்!

'அவளே இங்கு இல்லை. அப்பறம் எதுக்கு?' - என்று
நகப்பசை போட்டால் கூட சிவக்காத நகங்கள்!
எப்போதும் இருக்கும் எச்சரிக்கை இல்லாமல்
உன் பெயதை (பெயரை) மத்தும்(மட்டும்)
பல்லில் கடிபட்டு மாத்தி தொல்லும்(மாற்றிச் சொல்லும்) நாக்கு!
நொடி முள் நிற்க, மணி முள் ஓட தாறுமாறாய் சுற்றும் கடிகாரம்!
அழைப்பு வரும் போது அமைதியாய் இருந்துவிட்டு
உன் நினைப்பு வரும் போது மட்டும் சினுங்கும் கைதொலைபேசி!

இப்படி
என் உடம்பு முழுதும் வேலை நிறுத்தம்!
அனைத்து செல்களும் உண்ணாவிரதம்!
உன்னை பார்க்காமல் காய்ந்த அறிவியல்!
அதனால் ஓய்ந்த கருவிகள்!

என்னவளே!
உடனே வந்து என் முன்னே துள்ளிக் குதி!
அலுப்பு மருந்தை அள்ளித் தெளி!
உடம்பு முழுவதும் உற்சாகம் பரவட்டும்!
ஆனந்த வெள்ளம் என்னில் கரை புரலட்டும்!
மகிழ்ச்சித் தீயில் என் உடல் எரியட்டும்!
நாம் கொண்ட காதலால்
பரவசம் நம் பாரெங்கும் பரவட்டும்!

* நம் விழித் திரையில் அனைத்து பிம்பங்களும் தலைகீழாகத் தான் விழும். நம் மூளைதான் அதை நேர்படுத்தி பார்க்கும்.

@அனிச்சை செயல்கள் - மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் நடப்பவை - (உ.ம்) மூச்சு விடுதல், கண் சிமிட்டுதல்.

பென்ஸ்
03-10-2007, 06:11 PM
வாங்க லெனின்...
நலமா (!!!??)... என்ன வெளியூர் பயணமா...???
அடிக்கடி போங்க அப்பதானே எங்களுக்கு கவிதை கிடைக்கும்...??

நல்ல கவிதை லெனின்...
சாதா+ரண வேதனைதான்...
ஆனால் இங்கு புதுமையாய்...

* மற்றும் @ கொடுத்து விளக்கம் கொடுத்து இருக்க வேண்டாமோ???

யாழ்_அகத்தியன்
03-10-2007, 06:21 PM
நல்ல கவிதை லெனின்...

www.yaalakththiyan.wordpress.com

ஓவியன்
03-10-2007, 06:33 PM
நல்ல கவிதை லெனின்...

www.yaalakththiyan.wordpress.com

யாழ் அகத்தியன் உங்களை நான் மன்றத்துக்கு வரவேற்கின்றேன்....

நண்பரே உங்களை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இந்த பகுதியில் http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38
தந்து தொடர்ந்து மன்றத்துடன் இணைந்திருங்கள்.

lenram80
03-10-2007, 10:56 PM
நன்றி பென்ஸ், யாழ்_அகத்தியன், ஓவியன்

பென்ஸ்,
வெளியூருக்கு நான் சென்றதால் தான் கவிதை தர இயலாமல் போனது.
ஆனால், என் கனவு காதலி வெளியூர் சென்றதாக நினைத்து, இந்த கவிதை. :-)

ஜெயாஸ்தா
04-10-2007, 02:22 AM
மூளை கூட வேலை செய்ய அலுப்புப்பட்டு
தலைகீழாகவே தெரிகின்றன அனைத்து பிம்பங்களும்! *

அறிவியல் உண்மை பொதிந்த கவிதை வரிகள். முதலில் படிக்கும் போது புரியவில்லை. பின் உங்களின் அடிக்குறிப்பு அடையாளத்தை பார்த்து படித்தபின்தான் புரிந்தது. வழக்கமான காதலை வித்யாசமான முறையில் சொல்யிருக்கிறீர்கள்.

சுகந்தப்ரீதன்
04-10-2007, 01:36 PM
லெனின் உங்களுக்கு ஆனாலும் பேராசைதான்...உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசைபடும் உங்கள் கனவு நினைவேற எனது வாழ்த்துக்கள்..! தேடலும் ஆர்வமும்தானே வாழ்க்கை..!

lenram80
04-10-2007, 08:46 PM
நன்றி ஜே.எம் & சுகந்தப்ரீதன்,

சிவா.ஜி
05-10-2007, 06:33 AM
காதலி அருகில் இல்லை....காதலனுக்கு எல்லாமே தொல்லை...அவயங்களே அவன் பேச்சைக்கேட்க மறுக்கின்றன.
குறிப்பிட்டு இந்த வரி அருமை என்று சொல்லமுடியாதவாறு..எல்லா வரிகளிலும் சின்னச்சின்னதாய் நகாசு வேலை செய்து நயமாக்கியிருக்கிறீர்கள் கவிதையை.பாராட்டுக்கள் லெனின்.

lenram80
06-10-2007, 12:43 PM
மிக்க நன்றி சிவா.ஜி

சூரியன்
06-10-2007, 12:48 PM
கவிதை கருத்துள்ளதாய் உள்ளது.
வாழ்த்துக்கள் லெனின் அண்ணா.

lenram80
08-10-2007, 12:36 PM
மிக்க நன்றி சூரியன்