PDA

View Full Version : போட்டியில் குதிக்கிறது ஏர் இந்தியா



சூரியன்
03-10-2007, 04:20 PM
சர்வதேச அளவில், தன் வர்த்தகத்தை பெருக்கவும், பயணிகளுக்கு வசதிகளை அதிகரிக்கவும், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது ஏர் இந்தியா.
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Air.india.b747-400.onground.arp.jpg/300px-Air.india.b747-400.onground.arp.jpg
விமான போக்குவரத்து, டிக்கெட் வினியோகம், விமான பராமரிப்பு, வசதிகள் அதிகரிப்பு போன்ற சேவைகளை சர்வதேச அளவில் செய்து தர, மூன்று விமான `நெட்வொர்க்' கூட் டமைப்புகள் உள்ளன. இதில், `ஸ்டார் அலையன்ஸ்' கூட்டமைப்பில் சேர, ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் சேர்வதால், சர்வதேச அளவில், விமானப்போக்குவரத்தை பலப்படுத் தவும், பராமரிப்பை எளிதாக்கவும் முடியும். இந்த அமைப்பில் உறுப் பினராக, டிசம்பர் மாதம் சேர திட்டமிட்டுள்ளது ஏர் இந்தியா. ஏற் கனவே, இந்த அமைப்பில், சீனா, அமெரிக்கா உட்பட சில நாடுகளின் சில ஏர் லைன்ஸ்கள் உள்ளன.

`ஸ்டார் அலையன்ஸ்' தவிர, `ஸ்கை டீம்' மற்றும் `ஒன்வேர்ல்டு' ஆகிய இரு சர்வதேச `நெட்வொர்க்' அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளில், இந்தியாவில் உள்ள கிங்பிஷர் போன்ற சில தனியார் விமான நிறுவனங்கள் சேர உள்ளன.

`ஸ்டார் அலையன்ஸ்' அமைப் பில், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், லூப் தான்சா, ஏர் நிப்பான் ஆகிய விமான நிறுவனங்கள், உறுப்பினராக உள்ளன. `ஒன் வேர்ல்டு' அமைப்பில், பிரிட்டிஷ் ஏர்வேஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கேதே பசிபிக், ஜப்பான் ஏர்லைன்ஸ் குவான்டாஸ் ஆகியவை உறுப்பினராக உள்ளன. `ஸ்கைடீம்' அமைப்பில், ஏர் பிரான்ஸ், கான்டினென்டல், டெல்டா, நார்த்வெஸ்ட் மற்றும் கே.எல்.எம்., ஆகியவை உறுப்பினராக உள்ளன.

சர்வதேச அளவில், `ஸ்டார்' அமைப்பு 155 நாடுகள், `ஸ்கை டீம்' 151 நாடுகள், `ஒன்வேர்ல்டு' அமைப்பு 142 நாடுகளில் உள்ள விமான நிறுவனங்களுடன் ஒப்பந் தம் போட்டு, அவற்றின் விமானங் களை பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, வசதி சேவை போன்றவற்றை செய்து தருகின்றன. இப்படி சர்வதேச அமைப்பில் உறுப்பினராக இருந்தால், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக் கும். டிக்கெட் வினியோகத்திலும் குறைபாடு இருக்காது. டிக்கெட் கட்டணங்களும் குறையும். சர்வதேச அளவில் விமான போக்குவரத்து போட்டியில் குதிக்க ஏர் இந்தியாவுக்கு இது வாய்ப்பாக அமையும்.

நன்றி:தினமலர்.

மன்மதன்
03-10-2007, 08:20 PM
போட்டோ மாறிவிட்டதா?
ஏர் இந்தியாவிற்கு பதிலாக ஏர்டெல் போட்டோ இருக்கு..

ஜெயாஸ்தா
04-10-2007, 03:09 AM
அதான் என்னன்னு நானும் புரியாமல் பார்த்தேன். பொருத்தமான புகைப்படத்தை பதியுங்கள் நண்பரே.

சூரியன்
04-10-2007, 03:38 PM
நான் பதியும் போது சரியாக இருந்தது.இப்போது மாறிவிட்டது..

Narathar
04-10-2007, 03:41 PM
வரவேற்கத்தக்க மாற்றம்.........
ஆரம்ப காலங்களில் ஏர் இந்தியாவில் பறந்திருக்கின்றேன்... பின்னர் சில கசப்பனுபவங்களால் ஏர் இந்தியாவை தவிர்த்து வந்தேன்.....

மாற்றங்கள் வரட்டும் ஒரு முறை பறந்து பார்க்கலாம்