PDA

View Full Version : சிறிய தமிழ் உதவி கையேடு 2.0 -



மீனாகுமார்
03-10-2007, 02:56 PM
சிறிய தமிழ் உதவி கையேடு - வடிவம் 2.0
pdf வடிவில் - கீழே சொடுக்கவும்

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=186

------------------------
இதில் புதிதாக எந்த தகவலும் இல்லை. என்னுடைய நண்பர்களில் 98 சதவிகிதம் பேர் ஆங்கிலத்திற்கு மாறி இன்னும் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பவர்கள். அவர்களுக்காக இந்த தொகுப்பு கையேட்டை உருவாக்கினேன். மன்றத்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும்.. இன்னும் இந்த கையேட்டின் தகவலை வளர்க்கவும் தருகிறேன்.



தமிழ் உதவி கையேடு 1.0 -

பொருளடக்கம்

தமிழ் ஒருங்குறி (Unicode) என்றால் என்ன ?

தமிழ் ஒருங்குறியை எந்தெந்த இயக்குதளங்கள் ஆதரிக்கின்றன ?

விண்டோஸ்-XP இல் ஆங்கிலத்தோடு, தமிழையும் சேர்த்து இயக்க முடியுமா ?

விண்டோஸ்-XP யை முழுவதுமாக தமிழுக்கு மாற்ற முடியுமா ?

தமிழ் ஒருங்குறி விசைப்பலகை எப்படி அமைக்கப்பட்டுள்ளது ?

பழைய தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்ற முடியுமா ?

தமிழ் பக்கங்களை எப்படி தேடுவது ?

தமிழில் தட்டச்சு செய்வது கடினமா ?

---------------------------------------------------
தமிழ் ஒருங்குறி (Unicode) என்றால் என்ன ?

ஆங்கிலம் இணையத்தை ஆதிக்கம் செய்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. இன்னும் உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்ய தெரியவில்லையென்றால் நீங்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்கிறீர்கள் இல்லையென்றால் ஆங்கில குதிரையிலேயே இனி உங்கள் சந்ததி முழுக்க சவாரி செய்ய முடிவு கட்டி விட்டீர்கள் என்று பொருள். சரி தானே ?? சரி, விசயத்துக்கு வருவோம்.

(யூனிக்கோடு) ஒருங்குறி எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும், ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண்ணொன்றை வழங்குகிறது. கீழிருக்கும் சுட்டியில் ஒருங்குறியைப் பற்றிய முழு தகவலையும் காண்க-

http://www.unicode.org/standard/translations/tamil.html

ஆங்கிலத்தில்

http://www.unicode.org/standard/WhatIsUnicode.html

மேலும் ஒருங்குறியைப் பற்றி நான் சொல்வதைவிட மிக அழகாக இந்த பக்கத்திலேயே இருக்கிறது.

http://www.unicode.org/

இன்னொரு அழகான சுட்டி

http://www.suratha.com/tamilunicode.html

தமிழ் ஒருங்குறியை எந்தெந்த இயக்குதளங்கள் ஆதரிக்கின்றன
க்னூ/லினக்ஸ்
இலவச பி.எஸ்.டி (FreeBSD)
சன் சொலாரிஸ்
யுனிக்ஸ்
மாக் ஓ.எஸ்
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

இனிமேல் ஒருங்குறியையும் தமிழையும் ஆதரிக்காத இயக்குதளங்களும் மென்பொருட்களும் பெரும்பாலும் சந்தையிலிருந்து இறந்து விடும்.

விண்டோஸ்-XP இல் ஆங்கிலத்தோடு, தமிழையும் சேர்த்து இயக்க முடியுமா

1. விண்டோஸ்-XP இல் ஒருங்குறி சார்ந்த லதா என்ற தமிழ் எழுத்துரு முதலிலேயே நிறுவப்பட்டிருக்கும்.

2. Control Panel, in Regional/Languages Options க்கு சென்று அங்கு Indic/Asian Language option ஐ குறியிடுதல் வேண்டும். இதன் பிறகு உங்கள் இயக்குதளம் சில கோப்புகளை நிறுவும். உங்கள கணினியை ஒரு முறை reboot செய்ய வேண்டியது இருக்கலாம்.

3. மீண்டும் Control Panel, in Regional/Languages Options சென்று Details ஐ சொடுக்கி, Add ஐ சொடுக்கி Input Language ல் தமிழைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Key Settings ஐ சொடுக்கி ஆங்கிலத்திற்கும்-தமிழுக்கும் மாற்றும் பட்டன்களைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளவும்.

4. இனி, UTF-8 encoding ஐ உங்கள் உலாவியில் தேர்ந்தெடு்த்து தமிழ் பக்கங்களைப் பார்வையிடலாம். Wordpad/Word போன்ற எல்லா பயன்பாடுகளிலும் பட்டன்களை இயக்கி தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் எளிதாக மாறிடலாம்.

விண்டோஸ்-XP யை முழுவதுமாக தமிழுக்கு மாற்ற முடியுமா
பாசாஇந்தியா தரும் இடைமுகத்தை உங்கள் கணினியில் நிறுவினால், உங்கள் கணினி முழுவதுமே தமிழ் மயம்.

http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=2

மேலும் இந்த வலைதளத்தை உலாவி வாருங்கள்.

http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta

தமிழ் ஒருங்குறி விசைப்பலகை எப்படி அமைக்கப்பட்டுள்ளது

http://meenakumar.googlepages.com/UnicodeTamilKeyMap-Med.jpg/UnicodeTamilKeyMap-Med-full.jpg


பழைய தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்ற முடியுமா
இணையத்தில் பல்வேறு மாற்றும் மென்பொருட்கள் உள்ளது. உலாவி பாருங்கள்.



தமிழ் பக்கங்களை எப்படி தேடுவது
கூகுள் இணைய தளத்திலேயே தமிழில் தட்டச்சு செய்து தேடலாம். மேலும் தமிழ் ஒருங்குறி சார்ந்த இணைய தளங்கள் இன்று எண்ணற்றவை இயங்குகின்றன.

சில பொக்கிஷமான தமிழ் பக்கங்கள்

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (http://www.tamil.net/projectmadurai/)

சென்னை நூலகம் (http://www.chennailibrary.com/)

தமிழ் நேசன் (http://www.tamilnation.org/literature/index.htm)

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (http://www.tamilvu.org/)

தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org/)



தமிழில் தட்டச்சு செய்வது கடினமா
ஹா ஹா.. அல்வா சாப்பிடுவது கடினமா என்பதற்கு சமம் இந்த கேள்வி. ஆம். அல்வா சாப்பிட வேண்டுமானால், அல்வாவைப் பெற்று பிரிக்க வேண்டும். பின்னர் வாயைத் திறக்க வேண்டும். இலையில் இருக்கும் அல்வாவை கையிலோ இல்லை கரண்டியிலோ எடுத்து வாய் வரை சென்று ஊட்டி விட வேண்டும். பின்னர், கஷ்டப்பட்டு அல்வாவை வாயில் சுவைக்க வேண்டும். பின்னர் விழுங்க வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கையை கழுவ வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் விசைப்பழக்கம்.

ஜெயாஸ்தா
03-10-2007, 03:10 PM
நல்ல உபயோகமான தகவல்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். புதிய நண்பர்களுக்கு ஒரு சில தகவல்கள் பயன்படும்.

அறிஞர்
03-10-2007, 03:12 PM
வாவ் அருமையான முயற்சி மீனாக்குமார்...

இணையத்தில் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

praveen
03-10-2007, 03:33 PM
விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள யுனிகோடு விசைப்பலகை எந்தெந்த எழுத்து எங்கே என்பதை இன்று தான் உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு.

அன்புரசிகன்
03-10-2007, 07:52 PM
நன்றி மீனாகுமார். யுனிக்கோட் சம்பந்தமாக மேலும் கற்றுக்கொண்டேன்.

வெற்றி
04-10-2007, 12:24 PM
நன்றி.....
எனது வலைப்பூவில் இதை வைத்துக்கொள்ளுகிறேன்...
உங்கள் அனுமதியுடன்..

leomohan
04-10-2007, 03:53 PM
அருமையான முயற்சி மீனாகுமார் அவர்களே. வாழ்த்துக்கள்.

மயூ
04-10-2007, 03:57 PM
நல்ல முயற்சி மீனாக்குமார் தொடர்ந்து எழுதுங்கள்!!!
புதியவர்களுக்கும் புதியவர்களாகவேயிருக்கும் பழையவர்களுக்கும் பயன்படும்!!

சூரியன்
04-10-2007, 04:00 PM
இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
நன்றி நண்பரே..

அமரன்
04-10-2007, 05:33 PM
நல்ல பயனுள்ள முயற்சி. தொடருங்கள் மீனாகுமார்.

ஷீ-நிசி
05-10-2007, 12:36 AM
மிகவும் பாராட்டத்தக்க முயற்சி! வாழ்த்துக்கள்! நண்பரே!

மீனாகுமார்
05-10-2007, 03:48 PM
நன்றி.....
எனது வலைப்பூவில் இதை வைத்துக்கொள்ளுகிறேன்...
உங்கள் அனுமதியுடன்..

சர்வ தாராளமாக....

நான் இந்த தமிழ் மன்றத்திலும் வலையிலும் பரந்து கிடக்கும் தகவல்களைத் தான் தொகுக்கிறேன். சிறிய மாற்றத்துடன் 2.0 வாக pdf கோப்பு வடிவில் உருவாக்கியுள்ளேன். இது நம் மன்ற கோப்பு பகுதியில் அனுமதி கிடைத்தவுடன் யாவர்க்கும் கிடைக்கும்.

இது அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் சொந்தம்.

நன்றி.

மீனாகுமார்
05-10-2007, 04:07 PM
இதோ இங்கே இருக்கிறது -

சிறிய தமிழ் உதவி கையேடு - வடிவம் 2.0
pdf வடிவில் - கீழே சொடுக்கவும்

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=186

நன்றி மக்கா.

அமரன்
05-10-2007, 04:20 PM
நன்றி மக்கா.
ஹி...ஹி...நல்ல விடயங்களை முடிந்தவரை உடனடியாக செயல்படுத்துவது நன்றல்லவா? அதான்..நன்றி மீனாகுமார்.

rajaji
06-10-2007, 06:12 AM
சிறந்த பாராட்டத்தக்க முயற்சி நண்பரே.....

சில விடயங்களை உங்கள் இப் பதிவில் இருந்துதான் அறிந்து கொண்டேன்....

நன்றி மீனாகுமார்....