PDA

View Full Version : கவி பாடிய கணங்களாவேன்...!

வசீகரன்
03-10-2007, 11:06 AM
உன் நந்தவனம் நனைத்திருந்தேன் தூறல்களாக
சோலைவனம் திளைத்திருந்தேன் மழைச்சாரல்களாக...

நீ வலம் வரும் பாதையில் பார்த்திருந்தேன்
தென்றாளாய் மேவிட காத்திருந்தேன்...

உன் பாதைதோறும் படர்ந்திருந்தேன் பசுமைபாக்களாக
பார்வைதோறும் அடர்ந்திருந்தேன் புன்னகைபூக்களாக...

சாலைதோறும் வீற்றிருந்தேன் நிழல்களாக
வீதிதோறும் வீசியிருந்தேன் சாமரங்களாக...

கலைத்தமர்ந்தாள் காத்திருந்தேன் கைத்தாங்களாக
கண்ணயர்ந்தாள் காத்திடுவேன்...கவிபாடியகணங்களாக...!

என்றும்
வசீகரன்

அன்புரசிகன்
03-10-2007, 11:22 AM
கலைத்தமர்ந்தாள் காத்திருந்தேன் கைத்தாங்கலாக
கண்ணயர்ந்தாள் காத்திடுவேன்...கவிபாடியகணங்களாக...!

இந்த வரிகளுக்காகவே அவள் உங்களை காதலித்திருந்தாக வேண்டும். (அப்படியா,???)

என்னை மிக கொள்ளை கொண்ட வரிகள். பாராட்டுக்கள்.

ஜெயாஸ்தா
03-10-2007, 11:25 AM
காதலியின் அனைத்து உணர்வுகளோடு கலக்கத்துடிக்கும் ஒரு காதலனின் உணர்வைப் படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள் வசீகரன். உங்கள் கவிதையைப் படித்தபோது எனக்கு மற்ற கவிதைகளிலிருந்து உங்கள் கவிதை சற்று வித்யாசமாக இருப்பதாக பட்டது. வழக்கமாக கவிஞர்கள் ஆண்பாலை புலி, சிங்கம், தேக்கு என்று வன்மையாத்தான் சித்தரிப்பார்கள். ஆனால் நீங்களோ சாரல், துறல், தென்றல், பாக்கள், பூக்கள், நிழல்கள், சாமரங்கள், என்று மென்மையாக சித்தரித்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் காதலி தூங்க கவி பாடுவதாய் அமைத்துள்ளீர்கள். மிக அருமையான சிந்தனைவோட்டம். தொடர்ந்து உங்கள் வசீகரமான வரிகளால் எங்கள் வசீகரியுங்கள் நண்பரே....!

அக்னி
03-10-2007, 12:42 PM
அனைத்துமாகி வருகின்றேன்...
நீ வரும் முன்னரே, காத்திருக்கின்றேன்...
உன் தேவைகளாய் வருகின்றேன்...
மொத்தத்தில்,
என்னை விரட்டாமல் இருக்க,
உனக்காய், மாறுகின்றேன்...

அப்படியா வசீகரன்...;)
சொற்கள் சிறப்பாக சந்தமிசைக்கின்றன. பாராட்டுக்கள்...
ஆழக்கண்ணால் அழகான விமர்சனம் செய்த ஜே.எம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

வசீகரன்
03-10-2007, 01:04 PM
இந்த வரிகளுக்காகவே அவள் உங்களை காதலித்திருந்தாக வேண்டும். (அப்படியா,???)

என்னை மிக கொள்ளை கொண்ட வரிகள். பாராட்டுக்கள்.
உன்மைதான்.... ரசிகரரே... இப்படிதான் எதோ ஒன்று சொல்லி அவள்
காதலை வாங்கினேன்...! மிக்க நன்றிகள் நண்பரே பாராட்டியமைக்கு...

வசீகரன்

வசீகரன்
03-10-2007, 01:21 PM
[QUOTE=அக்னி;280023] பாராட்டுகளுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன் அக்னியாரே....

வசீகரன்

வசீகரன்
03-10-2007, 01:22 PM
காதலியின் அனைத்து உணர்வுகளோடு கலக்கத்துடிக்கும் ஒரு காதலனின் உணர்வைப் படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள் வசீகரன். உங்கள் கவிதையைப் படித்தபோது எனக்கு மற்ற கவிதைகளிலிருந்து உங்கள் கவிதை சற்று வித்யாசமாக இருப்பதாக பட்டது. வழக்கமாக கவிஞர்கள் ஆண்பாலை புலி, சிங்கம், தேக்கு என்று வன்மையாத்தான் சித்தரிப்பார்கள். ஆனால் நீங்களோ சாரல், துறல், தென்றல், பாக்கள், பூக்கள், நிழல்கள், சாமரங்கள், என்று மென்மையாக சித்தரித்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் காதலி தூங்க கவி பாடுவதாய் அமைத்துள்ளீர்கள். மிக அருமையான சிந்தனைவோட்டம். தொடர்ந்து உங்கள் வசீகரமான வரிகளால் எங்கள் வசீகரியுங்கள் நண்பரே....!
ஆம் நண்பரே... நமக்குள்ளும்... மென்மை இருக்கிறது.......! அழகானவைகளை
பார்க்கும் போதும்...! ரசனையானவைகளை நோக்கும்போதும்... நமக்குள் இருக்கும்
அவை விழித்துக்குக்கொள்கிறது....! நான் இந்த கவிதையை எழுத உட்கார்ந்த போது
என்னென்னவோ... மனதில் வந்தது.... வார்த்தைகள்தான் வரமாட்டேன் என்று
அடம் பிடித்தது...! எனக்கு உங்களை போன்று... இலக்கணமாக எழுத ஆசைதான்...
மன்றத்தில் இணைந்த பிறகுதான்.... மீண்டும் அந்த ஆர்வம்... எழுந்துள்ளது...
ஜே. எம் உங்களது. பின்னூட்டம்.... ரொம்பவே.... மகிழ்ந்து போனேன்...நான்
நன்றி மிக்க நன்றி நண்பா....

பூமகள்
03-10-2007, 01:35 PM
தூறல், மழைச் சாரல், தென்றல், பசுமை அடர்ந்த மரங்கள், புன்னகைச் சிந்தும் பூக்கள், நிழல், சாமரம், இறுதியாக கவிபாடிய கணங்கள்...
அருமை அருமை.. வசீ...!!
இவ்வர்ணனைகள் அனைத்தும் பெண்களை மென்மையாளர்களாகச் சித்தரிக்க ஆண்கள் கூறும் மென் பாடு பொருட்கள்..!!
நீங்கள் வித்தியாசமாக சிந்தித்து அழகாய் வடித்துள்ளீர்கள் கவிதை..!!
உண்மையில் அருமை..!!

ஒரு ரகசியம் சொல்கிறேன் வாருங்கள்..!! பெண்கள் விருப்பமும் இப்படியான ஆண்கள் மேல் தான் அதிகம் இருக்கும்.

வாழ்த்துகள்..!!

ஜெயாஸ்தா
03-10-2007, 01:38 PM
எனக்கு உங்களை போன்று... இலக்கணமாக எழுத ஆசைதான்...
மன்றத்தில் இணைந்த பிறகுதான்.... மீண்டும் அந்த ஆர்வம்... எழுந்துள்ளது...

நன்றி நண்பா...! உங்களுக்கு என்னை போன்று எழுத ஆசை என்று சொன்னீர்கள். எனக்கோ அமரனைப்போன்று, இளசுவைப்போல் எழுத ஆசை. ஆனால் நிச்சயமாக இந்த ஆசை நம்மை வளரவைக்கும் ஆசைகள்தான். இதில் நாம் பேராசையே படலாம் தப்பில்லை.

வசீகரன்
03-10-2007, 01:54 PM
தூறல், மழைச் சாரல், தென்றல், பசுமை அடர்ந்த மரங்கள், புன்னகைச் சிந்தும் பூக்கள், நிழல், சாமரம், இறுதியாக கவிபாடிய கணங்கள்...
அருமை அருமை.. வசீ...!!
இவ்வர்ணனைகள் அனைத்தும் பெண்களை மென்மையாளர்களாகச் சித்தரிக்க ஆண்கள் கூறும் மென் பாடு பொருட்கள்..!!
நீங்கள் வித்தியாசமாக சிந்தித்து அழகாய் வடித்துள்ளீர்கள் கவிதை..!!
உண்மையில் அருமை..!!

ஒரு ரகசியம் சொல்கிறேன் வாருங்கள்..!! பெண்கள் விருப்பமும் இப்படியான ஆண்கள் மேல் தான் அதிகம் இருக்கும்.
தூறல், மழைச் சாரல், தென்றல், பசுமை அடர்ந்த மரங்கள், புன்னகைச் சிந்தும் பூக்கள், நிழல், சாமரம், இறுதியாக கவிபாடிய கணங்கள்...
அருமை அருமை.. வசீ...!!
இவ்வர்ணனைகள் அனைத்தும் பெண்களை மென்மையாளர்களாகச் சித்தரிக்க ஆண்கள் கூறும் மென் பாடு பொருட்கள்..!!
நீங்கள் வித்தியாசமாக சிந்தித்து அழகாய் வடித்துள்ளீர்கள் கவிதை..!!
உண்மையில் அருமை..!!

ஒரு ரகசியம் சொல்கிறேன் வாருங்கள்..!! பெண்கள் விருப்பமும் இப்படியான ஆண்கள் மேல் தான் அதிகம் இருக்கும்.

நன்றி மலர்மகளே.... உங்கள் பாராட்டுகளை வணங்கி
எற்க்கிறேன்.... நீங்கள் சொன்ன ரகசியம்..... அப்படியா.... ரொம்ப நல்லதா போச்சு
அவளும் இப்படித்தான் என்னை விரும்பி இருப்பாளோ......!
நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திர்க்கு.... மலர்மகளே...

வசீகரன்

இனியவள்
03-10-2007, 01:58 PM
காதலின் மென்மையை
மென்மையாய் படம் பிடித்துக்
காட்டுகிறது உங்கள் கவி வாழ்த்துக்கள்

வசீ

வசீகரன்
03-10-2007, 02:00 PM
நன்றி நண்பா...! உங்களுக்கு என்னை போன்று எழுத ஆசை என்று சொன்னீர்கள். எனக்கோ அமரனைப்போன்று, இளசுவைப்போல் எழுத ஆசை. ஆனால் நிச்சயமாக இந்த ஆசை நம்மை வளரவைக்கும் ஆசைகள்தான். இதில் நாம் பேராசையே படலாம் தப்பில்லை.
நிஜம்தான்... நண்பா... என் ரோல் மாடல்.. அவர்கள்தான்...
உங்கள் கவிகளையும்... பூமகளின் கவிகளையும் படித்திருக்கிறேன்
வியப்படைந்திருக்கிறேன்... !

வசீகரன்
03-10-2007, 02:01 PM
காதலின் மென்மையை
மென்மையாய் படம் பிடித்துக்
காட்டுகிறது உங்கள் கவி வாழ்த்துக்கள்

வசீ
நன்றி இனியா...!

சிவா.ஜி
03-10-2007, 02:02 PM
வசீகரமான வரிகளில்...வசீகரனிடமிருந்து இன்னொரு அழகுக் கவிதை.ஆண்மையை மென்மையாக்கிக் காட்டியதற்கு பாராட்டுக்கள்.
வரிகளில் நளினம்,வார்த்தைகளில் அழகு...வாழ்த்துக்கள் வசீகரன்.

வசீகரன்
03-10-2007, 02:11 PM
மிக்க நன்றிகள்..... ஜி... காதல் என்று வந்து விட்டாள்
நாம் சலைத்தவர்கலா என்ன...!
உங்கள் பின்னூட்டம் அருமை.... நன்றி

ஷீ-நிசி
06-10-2007, 01:27 AM
நல்ல கவிதை வசீகரன்..

இரண்டாவது பகுதி வரிகள் மட்டும் முழு கவிதையோடு ஒட்டாமல் நிற்கிறது.

நீ வலம் வரும் பாதையில் பார்த்திருந்தேன்
தென்றாளாய் மேவிட காத்திருந்தேன்...

மற்றவைகள் எல்லாம் 'களாக' என்று முடிந்திருக்க இது மட்டும் ஏன் அப்படி இல்லாமல் தனித்திருக்கிறது.

மற்றபடி கவிதை அருமை. வாழ்த்துக்கள்!