PDA

View Full Version : இதுதான் காதலா?அமரன்
03-10-2007, 10:46 AM
கண்ணில் பட்ட
ஒளிக்கற்றையாவும்
மூளையை தொட்டபோது

உன்னில்பட்ட
ஒளிக்கீற்று மட்டும்
இதயத்தை தட்டுதே

இதுதான் காதலா?

Narathar
03-10-2007, 10:49 AM
இதுதான் காதல்
இதைத்தான் ரசாயண மாற்றம் என்பார்கள்...........

அது சரி திடீரென்று என்ன நடந்தது????

சிவா.ஜி
03-10-2007, 10:52 AM
அதுதான் அமரன் இந்த மான்புமிகு காதலோட சிறப்பம்சம்,சரியா போய் மெயின் ச்விட்சை தட்டும். பைபாஸ் வழியெல்லாம் போனால் சீக்கிரம் வேலையாகாதென்று தட்ட வேண்டிய இடத்தில் சரியாகத்தட்டும்.
நீங்களும் கொஞ்ச நாளைக்கு இதயத்தை தயாரா வெச்சிருங்க..எப்ப எந்த ஒளிக்கீற்று ஸ்விட்சை தட்டுமென்று தெரியாது.வாழ்த்துக்கள்(எல்லாத்துக்கும்)

அன்புரசிகன்
03-10-2007, 10:55 AM
கண்ணில் பட்ட
ஒளிக்கற்றையாவும்
மூளையை தொட்டபோது

உன்னில்பட்ட
ஒளிக்கீற்று மட்டும்
இதயத்தை தட்டுதே

இதுதான் காதலா?

இத நம்ம ஸ்டைலில் சொன்னால் இன்ரேனல் டெக்னிக்கல் டிபெக்ட். :D
எல்லாம் தலைகீழாக இருக்கும். (பூமகளின் கணிணி task bar போல்)

கோவிச்சுக்காதீங்க அமரா... இதை வாசித்தவுடன் சிரித்துவிட்டேன்.... பாராட்டுக்கள் அமரா.....

அமரன்
03-10-2007, 11:07 AM
இதுதான் காதல்
இதைத்தான் ரசாயண மாற்றம் என்பார்கள்...........
அது சரி திடீரென்று என்ன நடந்தது????

இதுதானா அது:icon_rollout:.. திடீரென வருவதுதானே கவிதை:D..

அமரன்
03-10-2007, 11:09 AM
ஆஹா..பதுகாப்போடதான் இருக்கணும்..அதிக செறிவான மின்சாரம் போலும்...எல்லாத்துக்கும் நன்றி சிவா.


இத நம்ம ஸ்டைலில் சொன்னால் இன்ரேனல் டெக்னிக்கல் டிபெக்ட். :D
எல்லாம் தலைகீழாக இருக்கும். (பூமகளின் கணிணி task bar போல்)

கோவிச்சுக்காதீங்க அமரா... இதை வாசித்தவுடன் சிரித்துவிட்டேன்.... பாராட்டுக்கள் அமரா.....

ஹா....ஹா.....கோவிக்கிறதுக்க என்ன இருக்கு..பூமகளின் கணினி மக்கர் பண்ணினது எதனாலன்னு சொன்னதுக்கு நன்றி சொல்லனும்யா....

அன்புரசிகன்
03-10-2007, 11:12 AM
ஹா....ஹா.....கோவிக்கிறதுக்க என்ன இருக்கு..பூமகளின் கணினி மக்கர் பண்னினது எதனாலன்னு சொன்னதுக்கு நன்றி சொல்லனும்யா....

தேவையில்லாத எடுகோள்கள் எடுத்து என்னை வம்பில் மாட்டிவிடாதீங்கப்பா... நான் சும்மா ஒரு உவமானத்துக்கு :sprachlos020: எடுத்துவிட்டேன். அவ்வளவு தான். :D

அமரன்
03-10-2007, 04:33 PM
சந்தித்த கணத்தின் பின்
சந்திக்கவில்லை என்றாலும்
சந்நியாசம் பூணாமல்
என்னுடன் நீ...

இதுதான் காதலோ?

சூரியன்
03-10-2007, 04:45 PM
இது போன்ற சிறு சிறு நிகழ்வுகள்தான் காதல் தோன்றுகிறது.
வாழ்த்துக்கள் அமரன்.

இனியவள்
03-10-2007, 05:48 PM
சந்தித்த கணத்தின் பின்
சந்திக்கவில்லை என்றாலும்
சந்நியாசம் பூணாமல்
என்னுடன் நீ...

இதுதான் காதலோ?

ஹீ ஹீ அமர் என்ன கேள்வி இது

உன்னைச் சந்தித்த
என் கண்கள் உன்
கண்களில் இருந்து
இன்னும் மீட்சி பெற வில்லையே
இதற்கு பெயர் தான் காதலோ :icon_rollout:

பூமகள்
03-10-2007, 06:14 PM
எப்போதும் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போய் இயற்கையாய் பிறக்கும் காதல் என்பதைப் பொய்யாக்கி, விஞ்ஞானத்திற்கு முரணாய் முளைக்கும் காதல் என்று புதுமொழி பேசிய கவி அருமை அமர் அண்ணா.
இதயத்தில் ஏதுமில்லை.. உணர்வுகளின் பதிவுகள் காதல் கூட மூளை தான் பிறப்பிப்பதாய் நானறிந்த விஞ்ஞானம் சொல்கிறது. காதலுக்கு இதயத்தைக் குறியீடாகக் கூறியதால் இக்கவியைப் படைத்தீரோ அமர் அண்ணா??
பாராட்டுகள்..!!
ஏதோ தட்டினால் சரி தான்...!! :cool:

இதுதான் காதல்
இதைத்தான் ரசாயண மாற்றம் என்பார்கள்...........
அது சரி திடீரென்று என்ன நடந்தது????

அமரரின் கையெழுத்தைப் பாருங்க நாராயணா....!! நாராயணா...!!
இதோ உங்களுக்காய்...(மனிதர் மாற்றினாலும் மாற்றிடுவார்...! கோட்ஸ்சில் போடறேன்..!!)

காதல் என்னைக் கடந்து சென்ற நாள் முதல்
பெண்களின் கண்களில் தேடுகின்றேன் காதல்.

பூமகள்
03-10-2007, 06:22 PM
ஹா....ஹா.....கோவிக்கிறதுக்க என்ன இருக்கு..பூமகளின் கணினி மக்கர் பண்ணினது எதனாலன்னு சொன்னதுக்கு நன்றி சொல்லனும்யா....
ஆஹா.... என் கணினி பற்றிய திரியை பொறுப்பாகப் பார்க்காமல் பொறுப்பில்லாமல் வதந்திகிளப்பும் அன்பு மற்றும் அமர் அவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.:sauer028:

அது என் நண்பரின் கணினி என்று தான் சொன்னேன். என் கணினி நன்றாகவே உள்ளது...!!
(பூ மனதிற்குள் அன்புக்கு இருக்கு...ஆப்பு...!!)

அமரன்
03-10-2007, 06:51 PM
.
இதயத்தில் ஏதுமில்லை.. உணர்வுகளின் பதிவுகள் காதல் கூட மூளை தான் பிறப்பிப்பதாய் நானறிந்த விஞ்ஞானம் சொல்கிறது.
நீங்கள் சொல்றதுபோலவும் இருக்கலாம். மனம்திறப்பதை எப்படி சொல்கின்றோம்.. அதை மையப்படுத்தி எழுதினேன்..

அமரன்
03-10-2007, 06:53 PM
காதோரம் கிசுகிசுக்கும்
தென்றலின் ஸ்பரிசத்தில்
சில்லிடும் என்மேனி
மரத்தும் போனதோ
நீ வந்த நாள் முதல்...!