PDA

View Full Version : நினைவுப் பரிசு



sadagopan
03-10-2007, 09:40 AM
எல்லா பிறந்த நாட்களிலும்
உன் நினைவுப் பரிசு
என்னிடம்.
அவற்றை விட
நீ எனக்கில்லை என்றான
நாள் மட்டும்
முதன்மையான
நினைவுப் பரிசாய்!
**********
நட்புடன்

சடகோபன்

Narathar
03-10-2007, 10:09 AM
அடடா.................
அனுபவங்கள் ஒருவனை எப்படியெல்லாம் கவிதையாகவைக்கிறது

வாழ்த்துக்கள்

நேசம்
03-10-2007, 10:28 AM
அழகான கவிதை

சிவா.ஜி
03-10-2007, 10:37 AM
அவள் இல்லையென்றான நாள்....என்றும் அரிக்கும் நினைவுப்பரிசாய். மற்றைய பரிசுகள் பார்த்து மகிழ மட்டுமே. ஆனால் இந்த பரிசு நினைந்து உருக,உருகி கலங்க,கலங்கித் தவிக்க கிட்டிய பரிசு.
பாராட்டுக்கள் சடகோபன்

அக்னி
03-10-2007, 10:58 AM
சடப் பரிசு,
காதலில் வேர்விட வைத்தது...
ஜடமாக்கிய பிரிவு,
காதலை விறகாக எரிக்கிறது...

பாராட்டுக்கள் சடகோபன்...

அமரன்
03-10-2007, 11:01 AM
சடப் பரிசு,
காதலில் வேர்விட வைத்தது...
ஜடமாக்கிய பிரிவு,
காதலை விறகாக எரிக்கிறது...

பாராட்டுக்கள் சடகோபன்...

சிறப்பு சிந்தனை..
உங்கள் அனுமதியுடன் மாற்ரி பார்க்கின்றேன்..
சடப் பரிசு,
காதலில் வேர்விட வைத்தது...
ஜடமாக்கிய பிரிவு,
காதலை விறகாக்கி (என்னை) எரிக்கிறது...

ஜெயாஸ்தா
03-10-2007, 11:03 AM
ஆமாம்... நினைக்க வைப்பதுதானே நினைவுப்பரிசு. அவள் பிரிவு அவளை எப்போதும் நினைக்கவைக்கிறது. காதலின் வலியை கூட சுகமாய் கற்பனை செய்யும் நல்ல வரிகள்.

சுகந்தப்ரீதன்
04-10-2007, 01:20 PM
அருமையான கவிதை காதலின் நினைவை விவரிக்கிறது...!
வாழ்த்துக்கள் நண்பா..!