PDA

View Full Version : எழுத்துக்கள் தெரிவதில்லை



நேசம்
02-10-2007, 08:39 PM
இவனுக்கு வேற வேலையெ இல்லையா என்று நினைக்க வேண்டாம்.
"user cp" சென்றால் கட்டத்தில் எழுத்துக்கள் தெரிவதில்லை.ஏண்

அன்புரசிகன்
02-10-2007, 08:46 PM
கேள்வி தவறில்லை அன்பரே. தயங்காது உங்கள் சந்தேகங்களை கேட்க்கலாம். அதற்கு தடையேதுமில்லை. எல்லோரும் எல்லாம் தெரிந்து வருவதில்லை.

ஆனாலும் உங்கள் கேள்விகள் புரியவில்லை. User CP ற்கு சென்றால் அங்கு இடப்பக்கத்தில் பல options காணப்படும். உங்கள் User CP ற்கு சென்று screenshot ஒன்று எடுத்து தரமுடியுமா? முடிந்தால் உதவுகிறேன்.

நேசம்
02-10-2007, 08:57 PM
கேள்வி தவறில்லை அன்பரே. தயங்காது உங்கள் சந்தேகங்களை கேட்க்கலாம். அதற்கு தடையேதுமில்லை. எல்லோரும் எல்லாம் தெரிந்து வருவதில்லை..



ஆனாலும் உங்கள் கேள்விகள் புரியவில்லை. User CP ற்கு சென்றால் அங்கு இடப்பக்கத்தில் பல options காணப்படும். உங்கள் User CP ற்கு சென்று screenshot ஒன்று எடுத்து தரமுடியுமா? முடிந்தால் உதவுகிறேன்.


அந்த* அள*வுக்கு ந*ம*க்கு விவ*ர*ம் ப*த்தாது.உதரான*மாக* நிங்க*ள் "user cp" க்கு சென்று "setting & option" ல் " miscellaneous option" சென்று " message editor interface" க*ட்ட*த்தை பார்த்தால் எழுத்துக்க*ள் தெரிவ*தில்லை. உங்க*ள் உத*விக்கு ந*ன்றி

அன்புரசிகன்
02-10-2007, 09:06 PM
உங்கள் கேள்வி எனக்கு சரியாக புரியாததால் என்னால் விளக்கம் தரமுடியவில்லை. ஆனால் எனக்கு சரியாக தோன்றுகிறது.

இதை நான் மற்றய பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கிறேன்.அவர்கள் நிச்சயம் உதவுவர்.

சாம்பவி
02-10-2007, 09:12 PM
தமிழில் நேரிடையாக பதிவு செய்ய உதவும் "basic editor " தெரிவு செய்யவதற்காக என்றால்... அந்த வெற்று கட்டத்தின் முடிவில் down arrow mark தெரிகிறதா... ? தெரிகிறதென்றால்.. அதை சொடுக்கி, "basic editor" option வருகிறதா என்று பார்க்கவும்.

நேசம்
02-10-2007, 09:20 PM
உங்கள் கேள்வி எனக்கு சரியாக புரியாததால் என்னால் விளக்கம் தரமுடியவில்லை. ஆனால் எனக்கு சரியாக தோன்றுகிறது.

இதை நான் மற்றய பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கிறேன்.அவர்கள் நிச்சயம் உதவுவர்.

ரொம்ப் கஷ்டம் கொடுக்கிறேன் பொலிருக்கு. மன்னிக்கவும். இந்த http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptionsசுட்டிக்கு செல்லுங்கள்.அதில் "Thread Display Option" பகுதியில் பார்த்தால் 3 ஆப்ஷன் கட்டங்கள் தெரியும். ஆனால் எனது கணிப்பொறியில் எழ்த்துக்கள் தெரியாமல் சின்ன கட்டங்களாக தெரிகிறது.
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions

அன்புரசிகன்
02-10-2007, 09:22 PM
நண்பர்களே... எல்லோருக்கும் இதே பிரச்சனை வந்தால் சொல்லுங்கள். நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

praveen
03-10-2007, 04:13 AM
ரொம்ப் கஷ்டம் கொடுக்கிறேன் பொலிருக்கு. மன்னிக்கவும். இந்த http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions சுட்டிக்கு செல்லுங்கள்.அதில் "Thread Display Option" பகுதியில் பார்த்தால் 3 ஆப்ஷன் கட்டங்கள் தெரியும். ஆனால் எனது கணிப்பொறியில் எழ்த்துக்கள் தெரியாமல் சின்ன கட்டங்களாக தெரிகிறது.
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions

அய்யா, அங்கே தமிழ் இல்லையே, ஆங்கிலம் தானே இருக்கிறது. அது எப்படி பொடி கட்டங்களாக தெரிகிறது என்கிறீர்களே? :confused:.

கீழே கண்டதற்கு பதில் தாருங்கள் உடனே நான் சரியான பதில் தருகிறேன்.

1) உங்கள் கம்ப்யூட்டரில் என்ன OS (விண்டோஸ்) + சர்விஸ் பேக் நிறுவியுள்ளீர்கள். (அது முழுமையான பதிப்பா அல்லது ஸ்லிப்ஸ்டீரீம் எனப்படும் இடத்தை மிச்சமாக lite version-ஆ)

2) நீங்கள் தமிழ் மன்றம் பார்க்க பயன்படுத்துவது என்ன பிரவுசர் அதன் பதிப்பு எண் என்ன?

4) நீங்கள் தமிழில் உள்ளீடு செய்ய எந்த முறையை பயன்படுத்துகிறீர்கள், நேரடியாக தமிழ்மன்றத்தில் Romanised உள்ளீடா இல்லை வேறு மென்பொருள் உதவி கொண்டா?

5) உங்களுக்கு தளத்தில் மற்றவை எல்லாம் உங்கள் பிரவுசரில் நன்றாக தெரிகிறதா?, குறிப்பாக பிரவுசரின் மேலே தலலப்பில் தமிழில் எழுத்துக்கள் தோன்றுகிறதா இல்லை அங்கும் கட்டம் தானா?

6) உங்கள் கம்புயூட்டர் UPS இல்லாமல் அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சில பைல்கள் பூட் ஆகும் போது chkdsk மூலம் FIX செய்யப்பட்டு இருந்த்ததா?

7) சமீபத்தில் தேவையில்லாத பாண்ட் என்று கருதி ஏதாவது பாண்ட்டை நீங்களே முயற்சித்து துனிந்து அழித்தீர்களா?.


பிர்ச்சினையை பிறர் பார்க்க, ஸ்கீரின் கேப்சர் செய்வதற்கு உங்கள் கீபோர்டில் உள்ள print screen என்ற பட்டனை அழுத்தி பின் MSPAINT-ல் (இது program > Accessories ல் paint என்று இருக்கும்.) சென்று எடிட் என்பதில் உள்ள பேஸ்ட்டை அழுத்தினால் வந்து விடுகிறது. அதை ஏதாவது இலவச படம் ஏற்றும் தளாத்தில் ஏற்றி அதன் சுட்டியை கொடுத்தால் முடிந்தது.

நேசம்
03-10-2007, 09:31 AM
அய்யா, அங்கே தமிழ் இல்லையே, ஆங்கிலம் தானே இருக்கிறது. அது எப்படி பொடி கட்டங்களாக தெரிகிறது என்கிறீர்களே? :confused:.





1) உங்கள் கம்ப்யூட்டரில் என்ன OS (விண்டோஸ்) + சர்விஸ் பேக் நிறுவியுள்ளீர்கள். (அது முழுமையான பதிப்பா அல்லது ஸ்லிப்ஸ்டீரீம் எனப்படும் இடத்தை மிச்சமாக lite version-ஆ)

2) நீங்கள் தமிழ் மன்றம் பார்க்க பயன்படுத்துவது என்ன பிரவுசர் அதன் பதிப்பு எண் என்ன?



வின்டொஸ் லேட்டஸ்ட் வெர்சன் மற்றும் பிரவுசர் எல்லாம் லேட்டஸ் வெர்சன்.


நேரடியாக தான் ஊள்ளிடு செய்கிறென். இ−கலப்பை கூட டவுன்லொட் செய்துள்ளென்.


5) உங்களுக்கு தளத்தில் மற்றவை எல்லாம் உங்கள் பிரவுசரில் நன்றாக தெரிகிறதா?, குறிப்பாக பிரவுசரின் மேலே தலலப்பில் தமிழில் எழுத்துக்கள் தோன்றுகிறதா இல்லை அங்கும் கட்டம் தானா?

6) உங்கள் கம்புயூட்டர் UPS இல்லாமல் அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சில பைல்கள் பூட் ஆகும் போது chkdsk மூலம் FIX செய்யப்பட்டு இருந்த்ததா?

7) சமீபத்தில் தேவையில்லாத பாண்ட் என்று கருதி ஏதாவது பாண்ட்டை நீங்களே முயற்சித்து துனிந்து அழித்தீர்களா?.

ம*ற்றவை எல்லாம் தெரிகிற*து.. இங்கு மின் த*ட*ங்க*லுக்கு வேலை இல்லை.

பாண்ட் ம*ற்ற எந்த* பைலையும் அழிக்க*வில்லை.வேற* யாராவ*து செய்தார்க*ளா என்று தெரிய*வில்லை.

உங்க*ள் த*க*வ*லுக்கு ம*ன*புர்வ*மான* ந*ன்றி

அன்புரசிகன்
03-10-2007, 10:06 AM
உங்கள் கணிணியின் விசைப்பலகையில் Print screen key ஐ அழுத்துவதன் மூலம் உங்கள் கணிணித்திரையை அப்படியே ஒரு படமாக சேமிக்கலாம். பின்னர் அதை Microsoft Office Picture Manager இல் அல்லது Photoshop அல்லது Paint ல் paste செய்து உங்கள் கணிணிதிரையை பட கோப்பாக சேமிக்கலாம்.

அவ்வாறு செய்ததை இணையத்தில் ஏற்றி மன்றத்தில் படமாக தரலாம். அதற்கு தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) யை பின்பற்றுங்கள்....

இதன் படி நீங்கள் USER CP இனுள் சென்று பின்னர் மேற்கூறியவாறு செய்து இங்கு அதை (screen shot) ஐ தாருங்கள். பார்த்து உதவலாம்...

Narathar
05-10-2007, 10:49 AM
http://www.tamilmantram.com/photogal/images/24/medium/1_Tamilmantram.jpg

நேசத்துக்கு மட்டுமல்ல எனக்கும் அப்படித்தான் தெரிகிறது......
இதோ படம் போட்டு விட்டேன்.....
சும்மா அழக பெட்டி பெட்டியா தெரியுதா???

படம் அப்லோட் பன்ன போனால் என்ன கடகரி என்று தெரியாமல் ஒரு அனுமானத்தில்தான் பெட்டி பெட்டியாகௌள்ள ஏதோ ஒரு கடகரி கொடுக்க வேண்டியுள்ளது.

தனிமடல்களை அழிப்போம் என்று பார்த்தால் அங்கும் இதே பிரச்சனை

அமரன்
05-10-2007, 11:05 AM
நண்பர்களே..
எனது கணினியை புதிதாக போமேர்ட் செய்துவிட்டு மன்றம் நுழையும்போது இதே பிரச்சினை எனக்கும் இருப்பது வழக்கம். அதற்கு தீர்வாக நான் செய்வது தேனியுனி எழுத்துருவை கணினியில் நிறுவிக்கொள்வதே...நீங்களும் முயன்று பாருங்களேன்..

Narathar
05-10-2007, 11:13 AM
முயற்சி செய்து பார்க்கின்றேன்
நன்றி உங்கள் தகவலுக்கு

praveen
05-10-2007, 02:45 PM
சரி தான் அமரன், அந்த பக்கத்திற்கான கோடிங்-ல் TheneeUni என்ற பாண்ட் முதலில் இருப்பதால், அந்த பாண்ட் பதிந்திராத கணிப்பொறியில் அந்த மாதிரி கட்டம் கட்டம் வருகிறது.

நமது மன்ற கோடிங் உங்கள் பார்வைக்கு

small font என்பதே அந்த பாண்ட் இடத்தில் வரும் class ஆகும்.


<td class="alt2" nowrap="nowrap"><a class="smallfont"

href="profile.php?do=editsignature">Edit Signature</



அந்த smallfont ன் class ல் முதலில் உள்ளது TheneeUni


smallfont
{
font: 11px TheneeUni, Latha, aAvarangal, TSCu_InaiMathi, TSC_Avarangal;



அந்த தேனி யுனி பாண்ட் இங்கே கிளிக் செய்து பதிவிறக்கி பின் அதை விரித்து, ஒரு இடத்தில் இட்டு,


http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip


உங்கள் கன்ட்ரோல் பேனல் சென்று பாண்ட்ஸ் என்பதை கிளிக் செய்து, பின் வருவதில் மெனுவில் உள்ள இன்ஸ்டால் பாண்ட்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து இந்த பாண்ட் extract செய்து வைத்திருப்பதை காண்பித்து உள்ளே இறக்கினால் பிரச்சினை தீர்ந்தது.

அறிஞர்
05-10-2007, 02:59 PM
இந்த பிரச்சனை புதிதாக உள்ளது.. விரைவில் சரி செய்ய முயலுகிறோம்.

நேசம்
05-10-2007, 03:51 PM
நன்றி நாரதரே எனது வேலையை எளிதாக்கி விட்டிர்கள். படத்தையை எப்படி அப்லொட் செய்வது என்று தெரியவில்லை.அதனால் அதற்கு மேல் ஒன்றும் சொல்லமால் இருந்து விட்டேன்

இராசகுமாரன்
07-10-2007, 05:49 AM
இந்த பிரச்சனை எனக்கும் ஒரு முறை வந்தது.

ஒரு புதிய கணிணி மூலம் நமது தளம் நுழைந்த போது அப்படி வந்தது. கீழ் கண்டவாறு எனது விண்டோஸ் xp-யில் செய்தவுடன் பிரச்சனை சரியாகி விட்டது.

உங்களுக்கு பலன் கொடுக்கிறதா என நீங்களும் முயற்சித்துப் பார்த்து கூறுங்கள். (விண்டோஸ் XP CD அல்லது, எந்த Operating System உங்கள் கணிணியில் உள்ளதோ அதன் CD தேவைப் படும்.)

Control Panel --> Regional and Language Options -->
Language [Tick both options there]
Advanced --> Code Page conversion tables [make sure Indic and all indian and asian languages are ticked]

OK செய்தபின்,
நமது தளத்தில் ஒரு முறை Log out செய்து கொள்ளுங்கள்.
கணிணியை மீண்டும் முடுக்கி விட்டு பிறகு சோதித்து பாருங்கள்.
பிறகு உள்நுழைந்து பாருங்கள்.

அமரன்
14-10-2007, 06:37 PM
நேசம்..
உங்கள் இந்தப்பிரச்சினை தீர்ந்ததா என்பதை சொல்லவே இல்லையே

நேசம்
14-10-2007, 06:43 PM
நேசம்..
உங்கள் இந்தப்பிரச்சினை தீர்ந்ததா என்பதை சொல்லவே இல்லையே


நினைவு வைத்து கேட்ட*த்துக்கு ரொம்ப* ந*ன்றி அமர*ன் ஜி. அத*ற்கு தீர்வும்

சிலர் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த அளவுக்கு நமக்கு விவரம் பத்தாது. அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இல்லை என்பதால் நான் கேட்கவில்லை.

ஆர்.ஈஸ்வரன்
09-12-2007, 09:43 AM
யுனிகோடு பாண்ட் சாப்ட்வேர் இலவசமாக
டவுன் லோடு செய்ய எந்த இணைய தளத்தை நாட வேண்டும்

அன்புரசிகன்
09-12-2007, 09:52 AM
யுனிகோடு பாண்ட் சாப்ட்வேர் இலவசமாக
டவுன் லோடு செய்ய எந்த இணைய தளத்தை நாட வேண்டும்

இங்கே (http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3) சென்று உங்களுக்கு தேவையான இ-கலப்பை மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.