PDA

View Full Version : கவிதையாய் ஒரு கதை.அமரன்
02-10-2007, 05:16 PM
தாரை தப்பட்டையின்
எட்டடி தாளம்.
தப்பாத ஆட்டத்தில்
தப்பாட்ட மைந்தர்கள்.

உறுதுணையாக
உருவேற்றும் உறுமியுடன்
ஊர் காவலர்கள்.

தேடுவாரற்று
தவிலும் நாதசுரமும்
வாட்டத்துடன்
கரக கிளிகள்..

திருவிழா சாரலில்
துளிர்த்த காதலை
அழிப்பதற்கு
ஊரகூட்டி ஒருவிழா.

என்ன அதிசயம்?
காதல் பிறக்க
மனம் காரணம்
காதலை பிரிக்க
மானமே காரணம்
கிராமங்களில்...

உள்ளங்களின்உறுதி
ஜெயித்தது.
ஆட்டத்தின் உச்சம்
தணிந்தது

கொட்டியது மேளம்
கூடவே நாதசுரமும்..

கனிந்த கனிகளும்.
சுண்டிய பாலும்
அலங்கரித்த தட்டு..

இரவுகளைதுடைத்த
முதல் இரவின்
களிப்பில் கிளிகள்...

காதலை இணைத்த
குதூகலத்தில்
கடிகார முட்கள்
அவைகளுக்காக.......

சுகந்தப்ரீதன்
03-10-2007, 03:24 AM
அண்ணா ... எங்கயோ போயிட்டீங்க... முதல்ல புரியல என்ன சொல்லுறீங்கன்னு... திரும்ப பொறுமையா படிச்சதும் புரிஞ்சது... எல்லா காதலும் இப்படி நிறைவேறுனாக்க கடிகாரமுள்ளு கண்டிப்பா கவலையில்லாம சுத்தும்... வாழ்த்துக்கள்..!

சிவா.ஜி
03-10-2007, 04:28 AM
அழகான ஒரு கிராமத்துக்காதல்...அழிக்க நினைக்கும் மான அவமான பிரச்சனை.இறுதியில் தப்பட்டைகள் மௌனமாகி,மங்கல இசை முழங்க மனங்கள் இணைந்தன.ஜெயித்தது காதல் மட்டுமல்ல....இந்த க(வி)தையும்தான். வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
03-10-2007, 07:22 AM
ரொம்ப நன்றி சுகந்தப்பிரீதன்,சிவா..
எழுதணும்னு தோணுச்சு.. எதுன்னு தோணல.. எழுதினேன். இது கிடைச்சிச்சு..
உங்களுக்கு பிடிச்சதுல மகிழ்ச்சி.

அன்புடன்,

Narathar
03-10-2007, 07:36 AM
அட! சும்மா பாரதிராஜா படம் பார்த்ததுபோல் இருந்தது.

வாழ்துக்கள்

அன்புரசிகன்
03-10-2007, 07:49 AM
என்ன அதிசயம்?
காதல் பிறக்க
மனம் காரணம்
காதலை பிரிக்க
மானமே காரணம்
கிராமங்களில்...


இதிலென்ன அதிசயம்.
நம்மூரில் காதல் பிறக்க ஹீரோ ஹொண்டாவும் :sprachlos020: காதலை பிரிக்க வெளிநாட்டு மாப்பிள்ளையும் (:D :lachen001:) என்றுதான் வரும்...

கடிகாரமுள் என்றும் குதூகலிக்கட்டும்.

சூப்பருங்கோ...

பூமகள்
03-10-2007, 08:09 AM
அழகான கிராம காதலின் மண்வாசனையை நுகர்ந்த உணர்வு உங்களின் கவி படிக்கையில் ஏற்பட்டது. கவிக் களத்திற்கே இழுத்துச் சென்றது உங்களின் வரிகளின் ஜாலம்.
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்..!!
கடிகார முள்கள் எப்போதும் குதூகளித்து உறவாடட்டும்..!!
(மண் வாசனைக் கவிதைக்காய்... 1000 இ பண அன்பளிப்பு..!!:D)

ஜெயாஸ்தா
03-10-2007, 08:28 AM
நல்ல கவிதை அமரன். நன்றி.

க.கமலக்கண்ணன்
03-10-2007, 08:32 AM
களித்திருந்த காதல்

களம் இறங்கி

கதைத்திருக்கிறது உங்களின்

கவிதை... அருமை அருமை...

அமரன்
03-10-2007, 08:13 PM
கருத்தளித்த அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி.


இதிலென்ன அதிசயம்.
நம்மூரில் காதல் பிறக்க ஹீரோ ஹொண்டாவும் :sprachlos020: காதலை பிரிக்க வெளிநாட்டு மாப்பிள்ளையும் (:D :lachen001:) என்றுதான் வரும்...
கடிகாரமுள் என்றும் குதூகலிக்கட்டும்.
சூப்பருங்கோ...
நீங்களும் என்.ஆர்.ஐ(வெளிநாட்டு) மாப்பிளைதானேங்கோ..உங்க அனுபவம் பேசுதோ. இன்று அவதார் மாற்றிய நண்பனின் அனுபவம் பேசுதோ... எப்படியோ அசல் கிராமத்துக்கு இந்த நோய் இன்னும் பரவ இல்லை என்று நம்பலாம்..

அன்புரசிகன்
03-10-2007, 08:21 PM
நம்ம ஊரில் லண்டன் கனடா பிரான்ஸ் ஜேர்மனி சுவிஸ் அவுஸ்திரேலியா போன்ற மாப்பிள்ளைகளுக்குத்தான் கிராக்கி. நம்மளப்போன்றவர்களுக்ககில்லையப்பா.... (ஆகவே உங்களுக்கு நல்ல கிராக்கி :D)