PDA

View Full Version : யாரறிவு ஆறறிவு????அமரன்
02-10-2007, 09:40 AM
பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமா(க்கு)வது
ஓரறிவு ஜீவன்களாம்..!

சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.

யாரறிவு ஆறறிவு????

ஜெயாஸ்தா
02-10-2007, 10:20 AM
அருமையான கேள்வி அமரன்..! பழுத்த இலைகளை ஆக்கும் சக்தியாய் உபயோகிக்கிறது ஒரறிவு ஜீவன். அதையே அழிக்கும் சக்தியாக உபயோகிக்கிறான் ஆறறிவு மனிதன். இந்த சந்தேகம் அடிக்கடி எனக்கும வரத்தான் செய்கிறது. ஆறறிவை விட குறைந்த அறிவைக் கொண்டுள்ள எந்த இனமும் இயற்கையை நாசப்படுத்தவில்லை. ஓசோனில் ஓட்டை போடவில்லை. உணவை வேதிப்பொருள் கொண்டு நஞ்சாக மாற்றிவில்லை. ஒரு வேளை அதீத அறிவும் அழிவிற்குத்தானோ..?

அமரன்
02-10-2007, 01:02 PM
ஆறறிவு.--ஆறு அறிவுடையவர்கள்----ஆறு போன்ற அறிவுடையவர்கள்...
ஆறை நாம் பயன்படுத்தும் விதத்தில் விளைவை பெற்றுக்கொள்ளலாம்.
இலைகளை சருகாக நினைத்து எஇத்தால் அது மாசு..அதையே புதைத்தார்களானால் பசளை.
புரிவார்களா என ஏக்கம் கவிதையாக..நன்றி ஜே.எம்

சிவா.ஜி
02-10-2007, 01:07 PM
இயற்கை எருவுக்காக ஒரு இயக்கமே போராடும் இந்த வேளையில் சிந்தனையை ஓங்கித் தட்டி எழுப்பும் சிறந்த கவிதை.ஆறறிவு பல சமயங்களில் ஓரறிவாகிறது...ஓரறிவு சில நேரங்களில் ஆறறிவைவிட மேலானதாகிறது.பாராட்டுக்கள் அமரன்.
விருட்சமாவது என்ற இடத்தில் விருட்சமாக்குவது என வந்தால் நன்றாக இருக்குமா..?

அமரன்
02-10-2007, 01:13 PM
விருட்சமாவது என்ற இடத்தில் விருட்சமாக்குவது என வந்தால் நன்றாக இருக்குமா..?
மனிதன் கண்ணில் பட்டுவிட்டால் அது சருகாகிறது. படாத போது எரு ஆக்கப்படுகிறது. சுயமாக உரமாக்கும் என்பதை சுட்டவே அப்படி இட்டேன். நீங்கள் சொன்ன மாற்றமும் சிறப்பானது. ஆனால் நான் நினைத்ததை வெளிக்கொணரும் வீரியம் சற்று குறைவானதாக உணர்கின்றேன். நன்றி சிவா..அந்த மாற்றம் உங்களுக்கு தோன்றிய காரணத்தை சொல்ல முடியுமா?

அன்புரசிகன்
02-10-2007, 01:17 PM
என்னமா யோசிக்கிறாய்ங்க பசங்க...

பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமாவது
ஓரறிவு ஜீவன்களாம்..!

சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.

உண்மையை நாம் எப்போது ஏற்றுக்கொண்டுள்ளோம் அமரா... நான் தான் பெரியவன் என்பதற்காக போராடியே நம் வாழ்க்கை கழிகிறது.

பாராட்டுக்கள் அமரா..

சிவா.ஜி
02-10-2007, 01:21 PM
நான் ஓரறிவு ஜீவன்களாக இங்கு கண்டது மண்புழுக்களை.அவைதான் விழுந்த இலைகளை மக்கச்செய்து மரத்துக்கு உரமாக்கி அவற்றை கம்பீரமான விருட்சமாக்குகிறது என்பதால் அப்படி தோன்றியது அமரன்.
விருட்சமாவது என்பது தானே உருவாவது...விருட்சமாக்குவது உருவாக்கப்படுவது....

அமரன்
02-10-2007, 01:21 PM
என்னமா யோசிக்கிறாய்ங்க பசங்க...
உண்மையை நாம் எப்போது ஏற்றுக்கொண்டுள்ளோம் அமரா... நான் தான் பெரியவன் என்பதற்காக போராடியே நம் வாழ்க்கை கழிகிறது.
பாராட்டுக்கள் அமரா..
வாங்க சார். கொஞ்சம் கொஞ்சமாக செவ்வந்த்தி மன்றம் உங்களை கவர்கிறதே.
நான் பெரியவன் என்னும் மமதைத்தான் அழிவுகள் பலவற்றை கைதட்டிக் கூப்பிட்டு நட்பு பாராட்டுகிறது. அதற்கான தண்டனைகளை இயறகை அரசன்பாணியிலும், ஆண்டவன் பாணியிலும் வழங்கிக்கொண்டே இருக்கிறது. இருந்தும் பயனில்லை. தொற்று தீவிரமாகிறது.

அமரன்
02-10-2007, 01:23 PM
நான் ஓரறிவு ஜீவன்களாக இங்கு கண்டது மண்புழுக்களை.அவைதான் விழுந்த இலைகளை மக்கச்செய்து மரத்துக்கு உரமாக்கி அவற்றை கம்பீரமான விருட்சமாக்குகிறது என்பதால் அப்படி தோன்றியது அமரன்.
விருட்சமாவது என்பது தானே உருவாவது...விருட்சமாக்குவது உருவாக்கப்படுவது....
அட இது இன்னும் நல்லா இருக்கே.. அப்படிப்பார்த்தால் மண்நுண்ணுயிரிகளுக்கு உணவிடுவது மரங்கள்தான். அப்படியென்றால் நான் சொன்னதும் சரி..மிக்க நன்றி சிவா.

அன்புரசிகன்
02-10-2007, 01:25 PM
நான் உள்ளே வரலாமா அமரா????!!!! :D


அட இது இன்னும் நல்லா இருக்கே.. அப்படிப்பார்த்தால் மண்நுண்ணுயிரிகளுக்கு உணவிடுவது மரங்கள்தான். அப்படியென்றால் நான் சொன்னதும் சரி..மிக்க நன்றி சிவா.

சிவா சொன்னபடியும் சரிதான். மண்புழுவால் தாவரங்களுக்கு நன்மைதான்.....

அமரன்
02-10-2007, 01:26 PM
நான் உள்ளே வரலாமா அமரா????!!!! :D
சிவா சொன்னபடியும் சரிதான். மண்புழுவால் தாவரங்களுக்கு நன்மைதான்.....
வந்துட்டு என்ன கேள்வி...
ஒட்டு மொத்தத்தில "சுயபுத்தி" ஓரறிவுக்கு அதிகம்.
சிவாவினுடைய சிந்தனையையும் கோர்த்துட்டோம்ல.

சிவா.ஜி
02-10-2007, 01:27 PM
ஆஹா..ஒன்றுக்குள் ஒன்றென ஒரு கவிதைக்குள் பல பார்வை...வெற்றிபெற்ற கவிதையின் இலக்கணம் இதுதான் அமரன்.மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
03-10-2007, 03:20 AM
அதானே யாரரிவு ஆறறிவு..? இதுமாதிரி நிறைய குழப்பங்கள் இருக்கு நம்ப வாழ்க்கையில... வாழ்த்துக்கள் அமர் அண்ணா..! அருமையாக உள்ளது..!

அமரன்
04-10-2007, 11:10 AM
ஆமாம் சுகந்தப்ரீதன்..குழப்பங்களை புரிந்துகொண்டாலே வாழ்க்கையில் பாதி வெற்றி பெற்று விடலாம்..
ஊட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.

பிரியமுடன்,

பூமகள்
30-03-2008, 05:10 PM
ஆறறிவு கொண்ட
மனிதர்க்கு சடுதிகளில்
சருகானது மனம்..!!

சருகான இலைகளோ
விருட்சங்களாக..!!

சருகான மனித மனம்..
சலனங்களோடு..
நடைபோடும் சடலங்களாக..!!

ஓரறிவு ஆறறிவாக..
ஆறறிவு சூன்யமானது..!!

------------------------
சிந்திக்க வைத்த கவிதை..!!
எல்லாருடைய கண்ணோட்டமும் வியக்க வைக்கிறது..!!
நல்லதொரு கவி கொடுத்த அமரத்துவ கவிஞருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்..! :)