PDA

View Full Version : அன்னை



இலக்கியன்
02-10-2007, 09:39 AM
அம்மா அம்மா
நீதான் எந்தன்
உ யி ர ம் மா.....
கருவை உயிராக்கி
சுமையை இதமாக்கி
வலியை சுகமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழ்ழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....

ஓவியன்
02-10-2007, 02:20 PM
எத்தனை கவிஞர்கள் எத்தனை வரிகள் எடுத்தாலும் தொடுத்தாலும் அன்னை புகழ் பாடி முடித்திடத்தான் இயலுமோ....

அவ்வழி அன்னை புகழ் பாடிய இலக்கிய வரிகளுக்கு சொந்தக் காரருக்கு வாழ்த்துக்கள் இருந்தாலும் இலக்கியன் இன்னும் முயற்சித்திருக்கலாமென்றே எனக்குப் படுகிறது.

சிவா.ஜி
02-10-2007, 02:24 PM
அம்மாவைப்பாடும் இலக்கிய வரிகள் அருமை.பாராட்டுக்கள் இலக்கியன்.

இனியவள்
02-10-2007, 04:44 PM
அம்ம என்ற ஓற்றைச் சொல்லில்
அகிலமே ஒரு குடையின் கீழ்
இணைந்து பிண்ணிப் பினைகின்றது
அன்பில்

வாழ்த்துக்கள் இலக்கி

சாம்பவி
02-10-2007, 06:06 PM
அம்மா... எத்தனை முறை சொன்னாலும் சலிக்காத வார்த்தை... அலுக்காத உறவு... அழகான கவிதை...

கொஞ்சம் வரிகளை கலைத்துப் போட்டுப் பார்க்கிறேன்... உங்கள் அனுமதியுடன்... :)

கருவை உயிராக்கி
சுமையை சுகமாக்கி
வலியை இதமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....
அம்மா அம்மா
நீதான் எந்தன்
உ யி ர ம் மா..... !!

வாவ்... அம்மாவே ஒரு கவிதை.. கவிதைக்கே ஒரு கவிதை. :)

பூமகள்
03-10-2007, 01:44 PM
அன்பு இலக்கியரே..!!
எத்தனைமுறை பாடினாலும் சலிக்காத ஒன்று அம்மா... சொல்ல சொல்ல மனம் சிலிர்க்கும் ஓர் வார்த்தை அம்மா...!
அந்த அம்மாவுக்காய் நீங்கள் பாடிய கவி அருமை..!! சாம்பவியின் அழகான வடிவமைப்பும் அருமை..!!
வாழ்த்துகள் இலக்கியரே...!!

ஆதவா
05-10-2007, 03:32 AM
எத்தனை கவிஞர்கள் எத்தனை வரிகள் எடுத்தாலும் தொடுத்தாலும் அன்னை புகழ் பாடி முடித்திடத்தான் இயலுமோ....

இயலாதுதான் ஓவியன்...

இலக்கியன். நீங்கள் மேலும் முயற்சித்திருக்கவேண்டும் என்பது எனது எண்ணம். நீங்கள் உருவாக்கியிருக்கும் வரிகள் அனைத்தையும் அன்னைக் கவிதைகளில் நான் கண்டிருக்கிறேன். இன்னும் விதமாக.... இன்னும் ஆழமாக.... அன்னை என்பவள் விழிகளல்ல காணுவதற்கு,, அவள் விழிப்படலம், உணர்வதற்கு...

வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
06-10-2007, 01:45 AM
நல்ல கவிதை...

ஆதவா சொன்ன குறைகளை நிவர்த்தி செய்திடுங்கள் அடுத்தடுத்த கவிதைகளில்.. உங்களிடம் கவித்திறன் நிறைய இருப்பது உங்களின் கவிதையில் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

இலக்கியன்
14-10-2007, 05:20 PM
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரகளே