PDA

View Full Version : காதல் குளிர் - 2



gragavan
01-10-2007, 05:35 PM
காதல் குளிர் - 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12435)

பெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.

"எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்!!!!" எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.

"தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)" பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.

ரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா? விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.

நெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு. "என்ன நேரத்துல கெளம்புனோமோ! ச்சே! கெளம்புறப்போ ப்ரகாஷாவுக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு...."

மொபைல் ஃபோனில் அவனை அழைத்தாள். "ஹலோ ப்ரகாஷா...நான் கெளம்புறேன். ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்."

"இருக்கட்டும் ரம்யா. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா?"

"ஆட்டோதான...கெடைச்சது..கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க?"

"நானா? திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்."

ஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.

"நீ எங்கடா இங்க?" கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ப்ரகாஷாவோடு சேர்ந்து கொண்டாள்.

நறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள். "எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவேயில்லையேடா? நீ எங்க இங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மெதுவா மெதுவா...என்னோட தலையில ஒன்னோட கன்னம் மாதிரி குழி விழுந்திருந்திரப் போகுது. சரி..சரி..முறைக்காத. நீ டெல்லிக்குப் போற.....கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால...சரி..சரி..முறைக்காத...உண்மையச் சொல்லீர்ரேன். நீ டெல்லிக்குப் போற. சப்யாவையும் சித்ராவையும் பாக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா?" பெருமையாகக் கேட்டான்.

பொய்க் கோவத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள். "ஓ! சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா? நாங்கூட ஏதோ நான் தனியாப் போறேனோன்னு தொணைக்கு நீ வர்ரதா தப்பா நெனைக்க இருந்தேன்."

உள்ளபடி சொன்னால்....டெல்லிக்குப் போவதை ப்ரகாஷாவிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவனும் வந்தது ரம்யாவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் சப்யாவையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இவள் இப்படியென்றால் ப்ரகாஷா வேறுமாதிரி. அவள் வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்ந்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ப்ரகாஷாவிற்கு டெல்லி பயணம் எளிதானது.

அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா? சூப்பரப்பு. ரம்யா...ப்ரகாஷா...டெல்லி....குளிர்...காதல்..இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.

சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.

"ஏண்டா...நீ வரப்போறன்னு சொல்லீருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து...சிக்னல்ல எறங்கி....பெரிய கூத்தாப் போச்சு..." ஆட்டோ கதையைச் சொன்னாள்.

"ஹா ஹா ஹா....ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சப்யாவுக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லீட்டேன்."

"சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்...இந்த ரெண்டையும்....எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் சப்யா. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்."

"அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. சப்யா குடுத்தான்." பேசிக்கொண்டேயிருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான்.

ரம்யாவுக்கு ஆத்திரம். அட....செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா? அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட...எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ப்ரகாஷா, சப்யா, ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்...இப்படித்தான்...யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாம மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். சப்யா சித்ரா போன பிறகு ப்ரகாஷா ரம்யா...

"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.

"ஸ்டாப் ஸ்டாப்..எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா."

"என்னடா நிதானா....நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்."

"மரமா? என்ன மரம்?"

"ஆகா...தமிழக் கேவலப் படுத்துறியா...ஒன்ன........அது மரம் இல்ல. மறம்...சொல்லு பாப்போம்."

"மர்ரம். என்ன மர்ரமோ.எனக்கு ஷமா குடுத்துரு." தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான். பெருந்தன்மையாக ரம்யாவும் மன்னித்து விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.

"அம்மா தாயீ....உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்."

"பின்னே...நாங்க யாரு...மர்ர்ர்ர்ர்ர்ர்ர...சரி... விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்...ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

தொடரும்...
காதல் குளிர் - 3 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12695)

அன்புரசிகன்
01-10-2007, 06:38 PM
வாசிக்கும் போதே சுவையாகத்தான் இருக்கிறது. நமக்கு இப்படி ஏதுமில்லையே என்ற ஏக்கத்துடன் :D அடுத்த பாகத்திற்றாக காத்திருக்கிறேன்.

மலர்
08-10-2007, 08:29 PM
ராகவன் அண்ணா,,,
உங்கள் காதல் குளிர் கதையை படித்து எங்களுக்கு குளிர் வராமல் இருந்தால் சரி..
பாருங்கள் அன்பு எல்லாம் குளிரில் ஆடிப்போய் இருக்கார்....

ரமணிச்சந்திரன் நாவல்கள் படிக்கும் போது இருக்கும் விறுவிறுப்பு காதல் குளிர் படிக்கும் போதும் இருக்கு...
கதையோடு ஒன்றி போக வைத்து விட்டீர்கள்.அண்ணா...
இந்த தங்கையின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

அன்புரசிகன்
08-10-2007, 08:31 PM
ராகவன் அண்ணா,,,
உங்கள் காதல் குளிர் கதையை படித்து எங்களுக்கு குளிர் வராமல் இருந்தால் சரி..
பாருங்கள் அன்பு எல்லாம் குளிரில் ஆடிப்போய் இருக்கார்....


நெசமாவா???:lachen001:

மலர்
08-10-2007, 08:34 PM
நெசமாவா???:lachen001:

அட ஆமாங்க

நாங்க எல்லாம் பொய்யே சொல்லமாட்டோம்....:D:D

(அட நம்புங்க)
(பின்ன அந்த பொம்மை ஏன் இப்படி சிரிக்குது...
குளிரில் தான)

அன்புரசிகன்
08-10-2007, 08:36 PM
அட ஆமாங்க
நாங்க எல்லாம் பொய்யே சொல்லமாட்டோம்....:D:D
(அட நம்புங்க)
(பின்ன அந்த பொம்மை ஏன் இப்படி சிரிக்குது...
குளிரில் தான)

நான் நம்பீட்டன்...

அது சிரிக்கிறது குளிரால் தான். ஆனால் ராகவன் அண்ணாவின் காதல் குளிரால் என்று எவ்வாறு கூறினீர்கள்?? அனுபவமோ???:p

மலர்
08-10-2007, 08:41 PM
நான் நம்பீட்டன்...

அது சிரிக்கிறது குளிரால் தான். ஆனால் ராகவன் அண்ணாவின் காதல் குளிரால் என்று எவ்வாறு கூறினீர்கள்?? அனுபவமோ???:p

இதாவே வேண்டாம் எங்கிறது...?
அன்பு இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை
சைக்கிள் கேப்பில ரிக்ஷா ஓட்டுறீயளே....:traurig001::traurig001:
ஒரு பச்ச புள்ளைய பாத்து கேக்குற கேள்வியா இது..?:icon_rollout::icon_rollout:

அன்புரசிகன்
08-10-2007, 08:53 PM
ஒரு பச்ச புள்ளைய பாத்து கேக்குற கேள்வியா இது..?:icon_rollout::icon_rollout:
:sprachlos020::sprachlos020::sprachlos020:
நானாவது பரவாயில்லை. நீங்கள் சைக்கிள் கப்பில ஏரோப்பிளேன் அல்லவா ஓட்டுகிறீர்கள்.

மலர்
08-10-2007, 08:56 PM
:sprachlos020::sprachlos020::sprachlos020:
நானாவது பரவாயில்லை. நீங்கள் சைக்கிள் கப்பில ஏரோப்பிளேன் அல்லவா ஓட்டுகிறீர்கள்.

எங்க... அதைத்தான் ஓட்டவிடாமல்
கரெக்டாக பிடித்து விட்டீர்களே...:confused:

ஒரு உண்மையை சொன்னால் கூட நம்ப மாட்டேன் என்கிறீர்களே:D:D

lolluvathiyar
09-10-2007, 05:37 AM
ஒரு காதல் கதையின் முடிவு சொல்லீட்டு அப்புரம் கதை ஆரம்பிச்சு தொடர்ந்து கொண்டு போகும் விதம் வித்தியாசமாக இருக்கு
குறிப்பாகா எங்களுக்கு சிக்கனில் குலோப்ஜாமுன் கலந்து தந்து அடுத்த ஐட்டத்துக்கு ஏங்க வைத்து இருக்கிறீகள்

அக்னி
16-10-2007, 03:37 PM
கதையை ஊகித்து விட்டீர்கள்தானே என்று கதையில் நீங்கள் கேட்பது,
ஊகிக்க முடியாத திசையில் கதை நகரப்போகின்றது என்ற ஐயத்தை தருகின்றது... ஆனாலும் சுவைக்காக ஏங்க வைக்கின்றது...

எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.

வித்தியாசமான விவரிப்பு... கவர்கின்றது முழுமையாக...
அடுத்த பாகத்திற்கு அவசரமாக பிளைட் பிடித்துப் போகின்றேன்...

அக்னி
16-10-2007, 03:38 PM
வாசிக்கும் போதே சுவையாகத்தான் இருக்கிறது. நமக்கு இப்படி ஏதுமில்லையே என்ற ஏக்கத்துடன் :D அடுத்த பாகத்திற்றாக காத்திருக்கிறேன்.
குலாப்ஜாமூனைத்தானே சொல்கின்றீர்கள்...:)
அப்பச்சரி...

சூரியன்
16-10-2007, 03:43 PM
அண்ணா கதையை கலக்கலா கொண்டு போறீங்க..

பூமகள்
01-11-2007, 02:56 PM
ரம்யா பிரகாஷா காதல் ஜோடியின் கூடவே நாங்களும் பின்னர் செல்வது போல் நல்ல காட்சி விவரிப்பு..!!
டெல்லிக்கு பிளைட் டிக்கெட் இல்லாமலேயே நாங்க செல்ல தயாராகிவிட்டோம்..!!
அடுத்த பாகத்தைப் படிக்க பாகம் 3 க்கு போகிறேன்.

ஒரு சின்ன வேண்டுகோள்.
ஒவ்வொரு பாகத்திலும், முந்திய பாகத்தின் சுட்டியையும் அடுத்த பாகத்தின் சுட்டியையும் தந்தால் நன்றாக இருக்குமே??

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ராகவன் அன்பரே..!!

அமரன்
01-11-2007, 08:11 PM
தாயகத்தில் அன்றாடம் கண்ட நிகழ்வு. செயற்கை வீதிச்சமிக்கை செயல்படும்போது சீராக இருக்கும் போக்குவரத்து, இயற்'கை' சமிக்கையின் போது ஸ்தம்பித்து நிற்கும். அதை காதாபாத்திரத்திற்குப் பொருத்தமான உரைநடையில் சொன்னது கதையில் யதார்த்தம் புகுத்துகின்றது. தொடரும் காட்சிகளின் விபரிப்பு கண்முன் காட்சிகளை விரிக்கின்றது.

பிரகாஷா தன்னுடன் டெல்லிக்கு வருவதாகச் சொன்னபோது சந்தோஷிப்பது, அங்கிருக்கும் நண்பர்களுடன் களிக்கவே வருகின்றேன் என குறும்பும்போது மறுகுவது, பெண்கள் உளவியலை (பலபேர் சொல்லக்கேள்வி, அனுபவம் இல்லை)பிரதிபலிக்கும் விதத்தில் கதையில் பதிந்துள்ளது.

காதலன் செய்யும் செல்லப் பித்தலாட்டமான ரம்யாவுக்குத் தெரியாத பிரகாசாவின் டெல்லிப் பயண ஏற்பாடு எமக்கும் திடுக். தொடரும் சில்மிஷங்கள் பிராகாசாவை மனதில் இருத்திப் பார்க்கும்போது காதல் சில்மிஷங்களாகவும், ரம்யாவாக மாறும்போது நட்புக் கலாட்டாக்களாகவும் தெரிவது பிரமாதம்.

கதைக்களம் மாறுவதை நேரடியான வரிகளில் வெளிக்காட்டாது, சம்பவங்களை சரளமாக விபரித்து வாசகனுக்கு உணர்த்துவது கதைகள் எழுத நினைப்பவர்களுக்கு நல்ல பாடம். அத்துடன் கதை எழுதுவதில் பரந்த தேடலால் பெற்ற "அனுபவம்" இருந்தால் மிளிரலாம் என்பதும் புரிகிறது.

இளசு
18-11-2007, 09:01 PM
பக்கத்து சீட்டில் படிப்பவர் அனைவரையும் உட்காரவைத்த அதிசயம்..

வாழ்த்துகள் ராகவன்..

கட்டபொம்மி வசனம் ஓஹோ!
பிரியாணியில் ஜீரா - உவ்வே!

தொடர்வேன்!

மன்மதன்
20-11-2007, 04:56 PM
இரண்டாம் பாகம் விமானப்பயணம்
மாதிரி ஜிவ்வென்று பறக்கிறது..

உன் எழுத்துநடையில், இந்த காதல் குளிர்
மின்னுகிறது.. அடுத்த பாகத்துக்கு
நானும் பறக்கபோகிறேன்..