PDA

View Full Version : கலெக்டர் ஆகும் சிறுவன்அறிஞர்
01-10-2007, 02:57 PM
கலெக்டர் ஆகிறான் சாவின் விளிம்பில் உள்ள சிறுவனின் கடைசி ஆசைக்கு ஆந்திரா அனுமதி


ஐதராபாத், அக். 1: இன்னும் 2 மாதத்தில் சாவை எதிர்நோக்கி இருக்கும் 6 வயது சிறுவனின் கடைசி ஆசையான, கலெக்டர் ஆகவேண்டும் என்பதை நிறைவேற்றி வைக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் (6). துள்ளி விளையாடும் இந்த வயதில், ஆகாஷின் உடலை புற்றுநோய் கட்டிகள் தின்று கொண்டிருக்கின்றன. தங்களது குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, எல்லா பெற்றோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். ஆனால், தங்கள் மகன் ஆகாஷ் விளையாடுவதை பார்க்கும்போது, இன்னும் எத்தனை நாள் இந்த சந்தோஷம் என துக்கம் பொங்க மனதில் அழுது கொண்டிருக்கின்றனர்.

ஆகாஷின் பெற்றோருக்கு அவன் ஒரே மகன். அதுவும் திருமணமாகி 7 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை. அவனுக்கு பிறக்கும்போதே, இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எப்படியோ உயிர் பிழைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த ஆகாஷின் பெற்றோர்களுக்கு சமீபத்திய மருத்துவ அறிக்கை பேரிடியாக அமைந்தது.

அது, ஆகாஷின் முதுகெலும்பில் புற்றுநோய் தாக்கி உள்ளதாகவும், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே அதிகபட்சம் அவன் உயிர் வாழ்வான் என்று டாக்டர்கள் கூறினர்.

ஒரே மகனுக்கு வந்த கொடூர நோயை நினைத்து தினம், தினம் அவனது பெற்றோர்கள் மனதுக்குள்ளே அழுகின்றனர். காரணம், வெளியே அழுதால் தங்கள் மகனின் மகிழ்ச்சி காணாமல் போய்விடுமோ என்ற பயம்தான்.

ஆகாஷ் உயிர் வாழக்கூடிய இந்த 2 மாதத்தில் அவனுடைய கடைசி ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்று அவனது பெற்றோர்கள் விரும்புகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகாஷக்கு பிடித்த நடிகர். இதனால், சிரஞ்சீவியிடம் சிறப்பு அனுமதி பெற்று ஆகாஷை அவருடன் சந்திக்க வைத்தனர். சிரஞ்சீவியுடன் மகிழ்ச்சி பொங்க பேசினான் ஆகாஷ்.

அவனது இன்னொரு பெரிய ஆசை, வளர்ந்தவுடன் மாவட்ட கலெக்டர் ஆகவேண்டும் என்பதுதான். இதுகுறித்து, ஆகாஷின் தாய் மஞ்சு, மாநில அரசுக்கு கடிதம் எழுதினார்.

உடனடியாக அவனது ஆசையை நிறைவேற்ற ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. ஓரிரு நாளில் ஆகாஷ், மாவட்டத் தலைவர் பதவியில் ஒரு நாள் மட்டும் அமர உள்ளான். சம்பிரதாயமான நிகழ்ச்சிதான் என்றாலும், உண்மையிலேயே மாவட்டத் தலைவரை போலவே ஆகாஷை நடத்த அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.

குழந்தை என்றால் தெய்வமும் இறங்கும் என்பார்கள். ஆகாஷ் விஷயத்தில் மனிதர்கள் மட்டும்தான் இறங்குகின்றனர்.

s_mohanraju
01-10-2007, 03:14 PM
மணதை உளுக்கும் செய்தி இது

பெற்றோரின் மண நிலையை புரிந்து கொண்டு உதவ வந்த ஆந்திர அரசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். (முதல்வன் படம் போல இது சாத்தியமெனில் சந்தொஷம்தான்).

அந்த பெற்றோர்களுக்கு இது ஒரு அர்ப சந்தோசம்தான், எனினும் பின்னால் வரப்போகும் ஒரு பெரிய துயரத்திர்க்கு இந்த உதவி ஒரு சிரிய வடிகாலாக அமையும்.

சிறுவனின் வாழ்நாளை இன்னும் நீண்ட நாட்கள் அதிகரிக்க கோரி ஆண்டவனை பிராத்தித்துக்கொல்வோம்.

இலக்கியன்
01-10-2007, 03:25 PM
மனதை வருடி கண்ணீத்தெளிக்கும் செய்தி அந்த சிறுவனின் நோய் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்போமாக

மீனாகுமார்
01-10-2007, 03:41 PM
பல சமயங்களில் உண்மையும் நிஜமும் கொடூரமாக இருக்கும். அதற்கு இது ஒரு சான்று. அச்சிறுவனின் பெற்றோர் படும் வேதனை சொற்களால் சொல்ல முடியாத ஒன்று.. இறைவனை விட்டால் கதி வேறு வழியேது ? இறைவனே காப்பாய் என்று பிரார்த்திப்போம்.

ஜெயாஸ்தா
01-10-2007, 05:07 PM
விதியை புராணங்களில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. என்ன செய்ய? யாரிடம் நோவது? பிறந்தாலே அனுபவித்துதான் ஆக வேண்டும். சிறுவனின் நிலை கண்டு மனது வருந்துகிறது.

தமிழ்ச்சூரியன்
01-10-2007, 11:15 PM
நெஞ்சை உருக்கும் செய்தி.

இது போலக் கொடுமையான வியாதிகளைக் குணப்படுத்த எப்போது தான் காலம் கனியுமோ? ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நல்லதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போம்.

நோயில்லா வாழ்வு அனைவருக்கும் இருப்பின், எவ்வளவு நன்றாக இருக்கும்.ம்ம்ம்ம்.

சிவா.ஜி
02-10-2007, 04:26 AM
துள்ளி விளையாடும் வயது..காலனின் அழைப்பு..விரைவில் விளையாட்டை முடித்துக்கொள்ள வைக்கிறது.அந்த பெற்றோரின் நிலையை நினைக்கும்போது..மனம் வலிக்கிறது.'கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி' என்பதைப்போல ஏன் 7 வருடம் காத்திருக்கவைத்து இந்த கொடுமையை அருள வேண்டும்..? இதற்கு இல்லாமலே இருந்திருந்தாலாவது இந்த சோகமும் சேர்ந்திருக்காது.இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறேன்.

க.கமலக்கண்ணன்
02-10-2007, 05:21 AM
காலை பேப்பரில் படிக்கும் போதே நெஞ்சம் நெகிழ்ந்தது

காவல் துறை மட்டும் அல்லாமல் அரசுக்கும் மனது இருக்கிறது.

காத்திருக்கும் அந்த சிறுவனுக்கு ஒருநாள் கலெக்டர் ஒரு நாள் முதல்வர் போல...

அக்னி
02-10-2007, 08:30 AM
வளர்ந்து நிழல் தரவேண்டிய சிறுதளிர்...
நோயின் கொடூரத்தால், சாவின் நாள்குறித்து எதிர்பார்த்திருக்கும் கொடுமை.
சிறு வயதிலேயே, மனதில் இலட்சிய உறுதி கொண்ட அந்த சிறுவனின் ஆசை, சம்பிரதாயமாக நிறைவடையலாம்.
ஆனால், அந்த உறுதியினை அரிக்கும் நோய், அந்தச் சிறுவனிடமிருந்து குறைவடையுமா?
அந்தச் சிறுவனின் உடல் நலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் பிரார்த்திப்போம்.

praveen
02-10-2007, 09:15 AM
இதற்கு முன்னர் இதே போல போலிஸ் இன்ஸ்பெக்டராக ஒரு சிறுவன் விரும்பினான் என்று அவ்வாறு ஒரு நாள் பணியமர்த்தப்பட்டது. சில மாதங்கள் முன்பு தொலைகாட்சியில் செய்தியின் போது பார்த்தேன். டி.ஜி.பி அனுமதியின் பேரில் அம்மாதிரி ஒரு நாள் மட்டும் காவல் நிலையத்தில் அந்த சிறுவனுக்காக நாடகம் நடத்தப்பட்டது.

இளசு
04-10-2007, 10:32 PM
மாற்ற இயலா ''இயற்கை'' '' விதி'' களின் மேல் கோபமும்
மாற்றி நெகிழ வல்ல மனிதம் மேல் மதிப்பும் -
ஒருங்கே வந்தன...

மாதவர்
05-10-2007, 02:49 AM
மனிதாபிமானம் இங்கே சாகவில்லை