PDA

View Full Version : நிறம் மாறிய உறவு - சிறுகதை



இனியவள்
01-10-2007, 02:54 PM
சில்லென்ற குளிர்காற்று மேனியை சிலிர்க்கச் செய்ய கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் மேகலா யாருடைய வரவையோ எதிர்பார்த்து. நேரங்கள் ஓடின இவள் மனதோட்டத்தோடு சேர்ந்து.நேரங்கள் கரைய கரைய இவளின் மனதில் இருந்த உற்சாகமும் கரைந்தோடியது.அருகில் இருந்த செடியில் மலர்ந்திருந்த பூவில் ஓன்றிரண்டாய் படர்ந்திருந்த பனித்துளிகளை எறும்புகள் நாடிச் செல்வதை விநோதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். ஹலோ மேகலா என்ற குரலைக் கேட்டு பார்வையை குரல் வந்த திசையை நோக்கி நகர்த்தினாள்.அங்கே இவளின் நண்பி திவ்யா அன்று மலர்ந்த மலர் போல் இதழோரத்தில் புன்னகை ததும்ப நின்று கொண்டிருந்தாள்..

தன் தோழியின் முகத்தில் கண்ட புன்னகை இவள் இதழ்களையும் தத்தெடுத்துக் கொண்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இரு தோழிகளும் தங்கள் அன்புகளைப் பரிமாறிக் கொண்டார்காள்.என்னடி மேகலா நாங்கள் சந்தித்து இன்றோடு ஒரு வருடம் இருக்கும் எப்படி இருக்கிறாய் உன்னை கடைசியாய் நான் சந்தித்த அந்த நாள் இன்றும் என் கண்முன் நிழாலடிய படியே இருக்கிறது. உன் கண்களின் ஓரத்தில் அன்று வடிந்த கண்ணீர்த்துளிகள் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல வந்து செல்லாமல் சென்ற உன் கண்கள் இன்றும் என் மனதில் படிந்து விட்டது.
சொல்லுடி எப்படி இருக்கிறாய்.ஹீம் என்று பெரு மூச்சு விட்டாள் மேகலா.

எனக்கு என்னடி நான் நல்லா இருக்கிறன். புது இடம் புது வாழ்க்கை வேலை என்று என் நாட்களை அழகாய் அமைத்து வாழ்கின்றேன் உன் வாழ்க்கை எப்படி இருக்கு உன் திருமணத்திற்கு கூட என்னால் வரமுடியவில்லை மன்னிச்சுக்கோடி அந்த நேரம் என்னால் லீவு கூட எடுக்க முடியேலை வேலைக்கு சேர்ந்த புதிதில் தரமுடியாது என்று சொல்லிட்டினம்.

அடிப்போடி அதைப் பற்றி என் கூடை நீ கதைக்க வேண்டாம் கலா எனக்கு என்று இருந்த ஒரு தோழி நீ தான் நீயே வரேலை என்றால் எனக்கு எப்படி இருக்கும் உன்மேல் பயங்கர கோவத்தோட வந்தன் ஆனால் உன் முகம் பார்த்ததும் கோபம் எல்லாம் போன இடம் கூடத் தெரியேலை..இப்படியே இருவரும் பழைய நினைவுகளோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ட்தனர் நேரம் போனதே தெரியாமல். மேகத்தை காற்றுக் கலைப்பது போல் இவர்களின் உரையாடலை அலறிய அலைபேசி கலைத்திட கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றால் திவ்யா அவளின் முகத்தில் கண்ட மலர்ச்சியைக் கண்டு என்னடி என்று மேகலா கேட்க என் வீட்டுக்காரர் வாறராம் என்னைக் கூட்டிட்டுப் போக நீ அவரைப் பார்த்தது இல்லை கொஞ்ச நேரத்திலை அவர் வந்திடுவார் பார்க்கலாம் என்று முகமலர்ச்சியோடு கூறிக்கொண்டிருந்தால் திவ்யா. அதைக் கேட்டதும் மேகலாவின் முகம் இருண்டது.

அய்யோ மறந்திட்டன் திவ்யா எனக்கு அவசரமாய் ஒரு வேலை இருக்கு நான் சீக்கிரம் போக வேணும் பார் உன்னோடை கதைச்சுட்டு இருந்ததால் நேரம் போனதே தெரியேலை.இன்னும் 2 நாள் இங்கை தான இருப்பன் அந்த நேரம் உன் அவரை நான் சந்திக்கிறன் இப்ப போய் வரட்டுமா என்று கூறி விடை பெற்ற தயார் ஆனால் மேகலா. ஹீம் சரி நீ போயிற்று வா என்று மனமற்று வழியனுப்பி வைத்தால் திவ்யா..

மேகலா வேகவேகமாய் நடந்து சென்று ஒரு வாடகை கார் பிடித்து அமர்ந்து கொண்டாள். வேகவேகமாய் பெருமூச்சு விட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.கார் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இவள் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

மேகலா சிறு வயதுமுதல் அன்னை அன்பின்றி பணத்தில் பாதுகாப்பில் தோழியினதும் அவளது குடும்பத்தினரினதும் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள். இவளின் தனிமையைப் போக்க ஓரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தாள்.இவளின் அமைதி,வேலையில் செலுத்தும் கவனம்,மற்றவர்களோடு பழகும் விதம் இவைகள் அனைத்தும் அவளை தங்களில் ஒருவராக நினைக்க வைத்தது அங்கு வேலை செய்பவர்கள் மத்தியில்.இவளுக்கு தெரியாமல் இவளை ஒரு நிழல் தொடர்ந்தது. மண்ணுக்குள் இருக்கும் விதை என்றாவது செடியாய் வெளிப்படுவது போல் அந்த நிழல் நிஜம் கொண்டு இவள் முன் வந்து தன் காதலை வெளிப்படுத்த அவனின் அன்பில் தன் அன்பையும் பிணைத்து இருவரும் கண்ணியத்தோடு காதலித்து வந்தார்கள்.

இப்படி இவர்கள் இருவரினதும் காதல் வளர்ந்து வர திவ்யாவிடம் இருந்து வந்த அழைப்பையேற்று மேகலா திவ்யாவின் இல்லம் சென்றாள். ஹேய் கலா வா வா உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன் என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள் தனது ஆருயிர் நண்பியை. கலா எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிட்டு உனக்கு சொல்ல நான் எத்தனை தரம் டீ கோல் பண்றது வேலையிலை மூழிகிட்டியா நீ என்று சொல்லமாய் தோழியை கடிந்த படி தனது வருங்கால கணவனின் புகைப்படத்தை எடுத்து தோழியிடம் காட்டினாள். திவ்யா வெட்கத்தில் அறையை விட்டு ஓடிட அந்த புகைப்படத்தை கண்ட மேகலா கண்களில் கண்ணீர் அருவியாய் வடிந்தோடியது.யாரை உயிருக்கு உயிராய் நினைத்தாளோ யாரோடு தன் வாழ்க்கையென நினைத்தாளோ அவனே தனதுயிர் தோழியின் வருங்கால கணவர் என்பதையறிந்து உயிரோட்டமான அவளிதயம் துடிதுடித்தது வலியில்..

அம்மா நீங்கள் சொன்ன இடம் வந்திட்டு டிரைவர் பலமுறை உரைத்துக் கூறிய பின் சுய நினைவுக்கு வந்தாள் மேகலா...

முற்றும்...

(இந்தக் கதைக்கு பொருத்தமான தலையங்கம் இடத் தெரியவில்லை நண்பர்களே உதவுங்கள் )

சாராகுமார்
01-10-2007, 03:49 PM
நல்ல கதை .வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
01-10-2007, 06:29 PM
நம்மூர் பேச்சுவழக்கில் கதை நகர்ந்த விதம் அருமை. பழைய நினைவுகள் வந்து சென்றன. (கதை சம்பந்தமாக அல்ல :D)

காதலின் இன்னொரு உணர்வாடலை கதையாக உங்களது 3000 பதிவில் வார்த்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளது இனியவளே.

பூமகள்
01-10-2007, 07:17 PM
மேகத்தை காற்றுக் கலைப்பது போல் இவர்களின் உரையாடலை அலறிய அலைபேசி கலைத்திட கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றால் திவ்யா
மிகவும் ரசித்தேன் இந்த வர்ணிப்பு வசனத்தை...!! பாராட்டுகள் இனி..!!
அருமையான எதார்த்தமான வசன நடை. நன்றாகவே மெருகேறியிருக்கிறது.
தலைப்பு வைப்பதில் நானும் உமது நிலை தான். மன்றத்து வைரங்களிடம் கேட்போம்.
என் தோழியை நினைவுறுத்தியது.(கதைப் படியல்ல..:D)
வாழ்த்துகள் இனி..!! அசத்திபுட்டீங்க..!!

இளசு
01-10-2007, 08:08 PM
இழப்புகளை வெளிக்காட்டி ஆற்றாமல் விட்டால்
புரையோடிய புண்ணாய், ரணமாய், வடுவாய்.....

ஆறாத காயம் கொண்ட மனதை
ஆதரவாய் காலம் ஆற்றட்டும்.


கதைக்குப் பாராட்டுகள் இனியவள்.

சிவா.ஜி
02-10-2007, 04:36 AM
உண்மையிலேயே மிகச் சங்கடமான நிலைதான் நாயகிக்கு.ஒருபக்க்கம் உயிர்த்தோழி மறுபக்கம் தன் காதலன்.அவனை இனி ஒருபோதும் மனதில் சஞ்சலமில்லாமல் பார்க்கவே முடியாது.பரிதாபத்துக்குரியவள்தான் மேகலா என்றாலும்,இல்லையென்றாகிவிட்டதை நினைத்துக்கொண்டிராமல்...இனி தன் வாழ்க்கைப்யணத்தை இனிதே தொடரவேண்டும்.நல்லதொரு சிறுகதை இனியவள்.பாராட்டுக்கள்.
( கதைக்குத் தலைப்பு 'நிறம் மாறிய உறவு' என்றிருக்கலாமோ..)

இனியவள்
02-10-2007, 07:49 AM
நல்ல கதை .வாழ்த்துக்கள்.

நன்றி சாரா அண்ணா

இனியவள்
02-10-2007, 07:53 AM
நம்மூர் பேச்சுவழக்கில் கதை நகர்ந்த விதம் அருமை. பழைய நினைவுகள் வந்து சென்றன. (கதை சம்பந்தமாக அல்ல :D) காதலின் இன்னொரு உணர்வாடலை கதையாக உங்களது 3000 பதிவில் வார்த்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளது இனியவளே.

ஹீ ஹீ அன்பு நினைவுகள்
வந்து வந்து போறது நல்லதுக்கு தான்

நன்றி அன்பு

இனியவள்
02-10-2007, 07:56 AM
மிகவும் ரசித்தேன் இந்த வர்ணிப்பு வசனத்தை...!! பாராட்டுகள் இனி..!!
அருமையான எதார்த்தமான வசன நடை. நன்றாகவே மெருகேறியிருக்கிறது.
தலைப்பு வைப்பதில் நானும் உமது நிலை தான். மன்றத்து வைரங்களிடம் கேட்போம்.
என் தோழியை நினைவுறுத்தியது.(கதைப் படியல்ல..:D)
வாழ்த்துகள் இனி..!! அசத்திபுட்டீங்க..!!

நன்றி தோழியே :)

ஹீம் ஒரே ஒரு தலைப்பு வந்து இருக்கு
சிவாவிடம் இருந்து மற்றவர்களும்
மண்டையை போட்டு பிச்சுகிட்டு இருக்கினம் போல
எப்படியோ தலைப்புத் தேட போய் தலைமுடியை
பிய்க்க போறினம் எல்லாரும் :icon_rollout:

இனியவள்
02-10-2007, 07:58 AM
இழப்புகளை வெளிக்காட்டி ஆற்றாமல் விட்டால்
புரையோடிய புண்ணாய், ரணமாய், வடுவாய்.....
ஆறாத காயம் கொண்ட மனதை
ஆதரவாய் காலம் ஆற்றட்டும்.
கதைக்குப் பாராட்டுகள் இனியவள்.

நன்றி இளசு அண்ணா

பூமகள்
02-10-2007, 08:01 AM
ஆமாம்..இனி...!!
அ,அ,ஓ :rolleyes: எல்லாரும் பாலை வனத்தில் கூட்டம் போட்டு தலைப்பு பற்றி மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்தது. :D
நம்மிடம் சிக்கினால் அது தான் கதி இனி...:icon_b: இனி எல்லாருக்கும்:icon_rollout:

க.கமலக்கண்ணன்
02-10-2007, 08:01 AM
இனிய கதையில் காவியம் படைத்துவிட்டாய்

இழப்பு எவ்வளவு கொடியது என்று

இவ்வளவு அருமையாக சின்ன கதையில் கவிதை பாடிய

இனியவளே அருமையடா அருமை...

இனியவள்
02-10-2007, 08:05 AM
உண்மையிலேயே மிகச் சங்கடமான நிலைதான் நாயகிக்கு.ஒருபக்க்கம் உயிர்த்தோழி மறுபக்கம் தன் காதலன்.அவனை இனி ஒருபோதும் மனதில் சஞ்சலமில்லாமல் பார்க்கவே முடியாது.பரிதாபத்துக்குரியவள்தான் மேகலா என்றாலும்,இல்லையென்றாகிவிட்டதை நினைத்துக்கொண்டிராமல்...இனி தன் வாழ்க்கைப்யணத்தை இனிதே தொடரவேண்டும்.நல்லதொரு சிறுகதை இனியவள்.பாராட்டுக்கள்.
( கதைக்குத் தலைப்பு 'நிறம் மாறிய உறவு' என்றிருக்கலாமோ..)

நன்றி சிவா

தலைப்பு யதார்த்தமாக இருக்கிறது
கதையோடு பொருந்தி :) நன்றி சிவா

இனியவள்
02-10-2007, 08:06 AM
ஆமாம்..இனி...!!
அ,அ,ஓ :rolleyes: எல்லாரும் பாலை வனத்தில் கூட்டம் போட்டு தலைப்பு பற்றி மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்தது. :D
நம்மிடம் சிக்கினால் அது தான் கதி இனி...:icon_b: இனி எல்லாருக்கும்:icon_rollout:

ஹீ ஹீ ஆமாம் பூ

அய்யகோ பாவம் அவையள் :icon_rollout:

இனியவள்
02-10-2007, 08:07 AM
இனிய கதையில் காவியம் படைத்துவிட்டாய்

இழப்பு எவ்வளவு கொடியது என்று

இவ்வளவு அருமையாக சின்ன கதையில் கவிதை பாடிய

இனியவளே அருமையடா அருமை...

நன்றி கமல்க் அண்ணா

உங்கள் அனைவரினதும்ம் வாழ்த்துக்கள் என்னை மென்மேலும்
வளர்க்கட்டும் :icon_b:

அமரன்
02-10-2007, 08:13 AM
ஆமாம்..இனி...!!
அ,அ,ஓ :rolleyes: எல்லாரும் பாலை வனத்தில் கூட்டம் போட்டு தலைப்பு பற்றி மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்தது. :D
நம்மிடம் சிக்கினால் அது தான் கதி இனி...:icon_b: இனி எல்லாருக்கும்:icon_rollout:


ஹீ ஹீ ஆமாம் பூ

அய்யகோ பாவம் அவையள் :icon_rollout:
யாருங்க அந்த அ.அ.ஓ...
கூட்டணி அமைக்கிறீங்க...அமைங்க அமைங்க..

இனியவள்
02-10-2007, 08:28 AM
யாருங்க அந்த அ.அ.ஓ...
கூட்டணி அமைக்கிறீங்க...அமைங்க அமைங்க..

அமைக்கிறோம் அமர் ஒரு கூட்டணி :icon_b:
ஆனால் இன்னும் ஓரு ஆளைக் காணவில்லை
வந்தவுடன் எங்கள் கூட்டணி ஒரு கலக்கு கலக்கும் :icon_rollout:

பூமகள்
02-10-2007, 08:28 AM
(அ, அ, ஓ)அமரன், அக்னி, ஓவியன்...!! கூட்டம் தான்.. ஹீ ஹீ..!!
பாலைவனத்தில் கூட்டணி...!! நடத்தி நன்றாக மண்டையைப் பிச்சுகோங்க...!!
ஹீ ஹீ...!!

இனியவள்
02-10-2007, 08:29 AM
(அ, அ, ஓ)அமரன், அக்னி, ஓவியன்...!! கூட்டம் தான்.. ஹீ ஹீ..!!
பாலைவனத்தில் கூட்டணி...!! நடத்தி நன்றாக மண்டையைப் பிச்சுகோங்க...!!
ஹீ ஹீ...!!

பூ இன்னும் ஒரு அ வை விட்டு
விட்டீர்கள் வருத்தப் படப்போறார் அந்த
அ :lachen001:

பூமகள்
02-10-2007, 08:51 AM
யார் அண்ணா 'அ' தெரியலையே... இனி.. சொல்லுங்க நீங்களே...!!

சிவா.ஜி
02-10-2007, 08:56 AM
பூமகள்..இந்த லிஸ்டில் இருக்கவேண்டிய இன்னொரு 'அ' அன்புரசிகன்(அடிக்கவரப்போறார்) ஆனால் இருக்க முடியாதவர் அமரன்...ஏனென்றால் அவர் பாலைவனத்தில் இல்லை...

பூமகள்
02-10-2007, 09:02 AM
அன்புரசிகன் ஏற்கனவே என் மீது கடுப்பாகியிருப்பதாய் கேள்வி....!!:confused::sprachlos020::eek: அமர் தான் அவரை அமைப்படுத்தியிருக்கார்...! அன்புரசிகனுக்கு பதில் அமர் அண்ணா கூட்டத்தில் கலந்துக்க வந்திருக்கார் தெரியாதா சிவா அண்ணா உங்களுக்கு???!!!!:icon_b:
ஹீ ஹீ...!:lachen001: நான் இந்த விளையாட்டுக்கு வரலை....இனி.....!!:icon_rollout: (அப்பாடா... அடிவிழாம பூமகள் எஸ்கேப்.....!!:sport009:)

க.கமலக்கண்ணன்
03-10-2007, 05:32 AM
என்னை மட்டும் விட்டுங்களே

எங்க பாச மலர்களே...

lolluvathiyar
03-10-2007, 05:47 AM
கதையை படிக்க ஆரம்பித்த போது இந்த கதை இனியவள் எழுதியதா என்று சந்தேகம் வந்தது. காரனம் இனியவள் வழக்கமாக பயன்படுத்தும் சில வார்த்தைகள் மிஸ்ஸிங்காக இருந்ததால். பிறகு அவைகளை கண்டு பிடித்தவுடன்


சொல்லிட்டினம்.
கதைக்க வேண்டாம்
உன்னோடை கதைச்சுட்டு

இதை எழுதியது இனியவள் தான் என்று உறுதியாயிற்று

கதை 90 சதவீத காதலர்கள் வாழ்கையில் நடக்கும் ஒரு சாதர்ன கதையானாலும், அதை கொண்டு சென்றவிதம் பாராட்டதக்கது.


இருவரும் கண்ணியத்தோடு காதலித்து வந்தார்கள்.


குறிப்பாகாக வார்த்திகளில் விளையாடியது

வாழ்த்துகள்

அன்புரசிகன்
03-10-2007, 06:08 AM
அன்புரசிகன் ஏற்கனவே என் மீது கடுப்பாகியிருப்பதாய் கேள்வி....!!:confused::sprachlos020::eek: அமர் தான் அவரை அமைப்படுத்தியிருக்கார்...! அன்புரசிகனுக்கு பதில் அமர் அண்ணா கூட்டத்தில் கலந்துக்க வந்திருக்கார் தெரியாதா சிவா அண்ணா உங்களுக்கு???!!!!:icon_b:
ஹீ ஹீ...!:lachen001: நான் இந்த விளையாட்டுக்கு வரலை....இனி.....!!:icon_rollout: (அப்பாடா... அடிவிழாம பூமகள் எஸ்கேப்.....!!:sport009:)
இந்தப்பாலைவனம் இல்லாவிட்டால் உங்கு (காஸ்) அடுப்பும் பத்தாது. ஸ்கூட்டியும் ஓடாது. பல்லவனும் சுத்தாது.... தெரிஞ்சுக்கோங்கோ... :D


என்னை மட்டும் விட்டுங்களே

எங்க பாச மலர்களே...

தோடா.... திட்டுவாங்குறத்துக்கென்றே பாசம் பொழியுறாரு... அதுவும் றைமிங்கில பாசம் பொழியிறாரு... :lachen001::lachen001::lachen001:

இனியவள்
03-10-2007, 05:38 PM
நன்றி வாத்தியாரே

ஹீ ஹீ அந்த அடையாளங்கள்
என்னிடம் இருந்து மறைய மறுக்கின்றன
வாத்தியாரே :icon_rollout:

நன்றி வாத்தியாரே ஆழமான
விமர்சனத்திற்கு :)

இனியவள்
03-10-2007, 05:40 PM
இந்தப்பாலைவனம் இல்லாவிட்டால் உங்கு (காஸ்) அடுப்பும் பத்தாது. ஸ்கூட்டியும் ஓடாது. பல்லவனும் சுத்தாது.... தெரிஞ்சுக்கோங்கோ... :D

அன்பு நாங்கள் எல்லாம் நடைராசா நடை தான்

பஸ்ல போறதுக்கு நடந்து போயிடுவம் இல்லோ
சீக்கிரமா :lachen001:

ஊரிலை எல்லாம் காஸ் அடுப்பு இல்லையுங்கோ
விறகு தான் அது இல்லாட்டியும் சனம் இருக்கும் :icon_rollout:

மலர்
07-10-2007, 01:46 PM
இனியாவின் 2வது படைப்பு 3000வது பதிவாக...
வாழ்த்துக்கள் தோழியே
கதையின் கருவும் தலைப்பும் ஒன்றாக போருந்தியுள்ளது


உன் கண்களின் ஓரத்தில் அன்று வடிந்த கண்ணீர்த்துளிகள் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல வந்து செல்லாமல் சென்ற உன் கண்கள் இன்றும் என் மனதில் படிந்து விட்டது.

ஆழமான வரிகள் இனியா... நாம் மறைப்பதை கூட நம்முடைய கண் காட்டி கொடுத்து விடும்...
வார்த்தைகள் மவுனமாகும் போதும் கண்கள் பேசி விடும்...

மேகலாவின் நிலை உண்மையில் பரிதாபமானது.. தோழியா.. காதலனா என்று அவளின் நிலை சற்று சங்கடமானது தான்..

இனியா முதலில் என்னை மன்னிக்க.... உங்களின் 3000 வது பதிவை நான் கவனியாது தவற விட்டு விட்டேன்..

மலர்
07-10-2007, 01:50 PM
அமைக்கிறோம் அமர் ஒரு கூட்டணி :icon_b:
ஆனால் இன்னும் ஓரு ஆளைக் காணவில்லை
வந்தவுடன் எங்கள் கூட்டணி ஒரு கலக்கு கலக்கும் :icon_rollout:

நான் வந்துட்டேன்....
இனியா கூட்டணி ஆரம்பிச்சிறலாம்....

இணைய நண்பன்
07-10-2007, 07:55 PM
நல்ல கதை.வாழ்த்துக்கள்

மனோஜ்
24-10-2007, 05:20 PM
சிறப்பான கதை வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்

யவனிகா
25-10-2007, 03:15 AM
இலங்கைத் தமிழும், அவர்கள் பேசும் பாங்கும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அதே நடையில் கதையும், வர்ணணைகளும் படிக்க நன்றாக இருந்தது. அனாவசிய அலங்காரங்கள், வார்த்தை ஜாலங்கள் இன்றி தேவையானதை திகட்டாமல் கொடுத்திருக்கிறீகள்.அனைவரும் சொன்னதைப் போல தலைப்புதான் இடிக்கிறது,ஏற்கனவே நிறம் மாறிய பூக்கள், திசை மாறிய பறவைகள், நிறம் மாறிய மனிதர்கள்,நிறம் மாறிய உறவுகள்,தடம் மாறிய மனிதர்கள் என்று ஏகப்பட்ட "மாறிய" தலைப்புகள் கதைகளில் இருப்பதால் தானோ என்னவோ. இருந்தாலும் வலியைச் சொல்லும் கதையை வளமையுடன் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள், தோழி.