PDA

View Full Version : மரம்!!!

aren
01-10-2007, 10:20 AM
மரம் மாதிரி
நிற்கிறாயே
என்றார்கள்!!!

சந்தோஷமாக
இருந்தது
என்னை
பாராட்டுகிறார்களே என்று!!!

காற்று பலமாக அடித்து
அதை சீண்டும்பொழுது
அது தன்னையே அழித்துக்கொள்ளும்
கவரிமான் ஜாதி
என்று மக்களுக்குத்
தெரிந்திருக்கிறதே என்று!!!

ஜெயாஸ்தா
01-10-2007, 11:26 AM
காற்றுக் கயவன்
கட்டித் தழுவி
கற்புக்கு பங்கம் விளைவித்தால்
சாய்ந்து... தன்னுயிர் நீத்த மரம்..!

நல்ல கருப்பொருள் ஆரெண். இனிமேல் யாராவது "என்ன மரம்மாதிரி நிற்கிறாயே?" என்றாலும் கவலைப்படவேண்டுடாம் என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே ஆரென்..?

ஓவியன்
06-10-2007, 07:36 AM
இங்கே எனக்கு ஒரு சந்தேகம் காற்று வீசுகையில், அதனை கண்மூடித்தனமாக எதிர்த்து வேரோடு சாய்க்கப்படும் மரமா, இல்லை காற்றின் திசை வழி சாய்ந்து பின் நிமிர்ந்து நிற்கும் நாணல் சிறந்ததா...?

என்னை பொறுத்தவரை நம்முடைய எதிர்ப்பு, மற்றும் எதிர்க்கும் பண்பு நம் எதிரியினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பலம் பொருந்தியவனிடம் மோதி வீழ்வதிலும் விலகி வாழ்வது நலமானது இல்லையா...???

ஆதவா
06-10-2007, 07:40 AM
ஆரென் அண்ணா மற்றூம் ஓவியன் இருவரின் கருத்துமே ஒத்துக்கொள்ளவேண்டிய கருத்துதான்....

சிவா.ஜி
06-10-2007, 07:48 AM
கல்லால் அடித்தாலும் கனியைக்கொடுக்கும் மரமாக இருப்பதானால் அது மனிதனுக்குப் பெருமைதான்.காற்றுடன் போராடமுடியாமல் மண்ணில் சாயும் மரமாக வேண்டாம்,ஆணிவேர் அழுந்த மோதடா மோது என நிமிர்ந்து நிற்கும் மரமாக வேண்டும்.

rajaji
06-10-2007, 07:57 AM
நண்பர்கள் ஆரென் ஓவியன் இருவருடைய கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை....

அதே நேரம் நண்பர் சிவாஜியினுடைய கருத்துக்களும் ஒரு விதத்தில் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது....

aren
07-10-2007, 01:38 PM
காற்றுக் கயவன்
கட்டித் தழுவி
கற்புக்கு பங்கம் விளைவித்தால்
சாய்ந்து... தன்னுயிர் நீத்த மரம்..!

நல்ல கருப்பொருள் ஆரெண். இனிமேல் யாராவது "என்ன மரம்மாதிரி நிற்கிறாயே?" என்றாலும் கவலைப்படவேண்டுடாம் என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே ஆரென்..?

நன்றி ஜே.எம். நிச்சயம் உங்களை யாரும் திட்டமாட்டார்கள் கவலை வேண்டாம். அப்படி திட்டுவதாக இருந்தால் மரம் மாதிரி என்றே திட்டட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
07-10-2007, 01:40 PM
இங்கே எனக்கு ஒரு சந்தேகம் காற்று வீசுகையில், அதனை கண்மூடித்தனமாக எதிர்த்து வேரோடு சாய்க்கப்படும் மரமா, இல்லை காற்றின் திசை வழி சாய்ந்து பின் நிமிர்ந்து நிற்கும் நாணல் சிறந்ததா...?

என்னை பொறுத்தவரை நம்முடைய எதிர்ப்பு, மற்றும் எதிர்க்கும் பண்பு நம் எதிரியினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பலம் பொருந்தியவனிடம் மோதி வீழ்வதிலும் விலகி வாழ்வது நலமானது இல்லையா...???

நன்றி ஓவியன். ஆனால் யாரும் நாணல் மாதிரி இருக்கிறாயே என்று திட்டுவதில்லையே. நாணலை ஒப்பிடும்பொழுது அதை ஒரு நல்ல விஷயத்திற்கே ஒப்பிடுகிறார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
07-10-2007, 01:40 PM
ஆரென் அண்ணா மற்றூம் ஓவியன் இருவரின் கருத்துமே ஒத்துக்கொள்ளவேண்டிய கருத்துதான்....

நன்றி ஆதவன். ஓவியன் கருத்து இங்கே வராது என்றே நான் நினைக்கிறேன்.

aren
07-10-2007, 01:42 PM
கல்லால் அடித்தாலும் கனியைக்கொடுக்கும் மரமாக இருப்பதானால் அது மனிதனுக்குப் பெருமைதான்.காற்றுடன் போராடமுடியாமல் மண்ணில் சாயும் மரமாக வேண்டாம்,ஆணிவேர் அழுந்த மோதடா மோது என நிமிர்ந்து நிற்கும் மரமாக வேண்டும்.

நன்றி சிவா. மரம் என்றுமே நிமிர்ந்து நிற்கும், நிற்கட்டும் எந்த தடுப்பும் அதற்கு மனிதனால் போடவேண்டாம்.

aren
07-10-2007, 01:43 PM

நன்றி ராஜாஜி.