PDA

View Full Version : சறுக்கல்கள்!!!



aren
01-10-2007, 10:12 AM
வாழ்க்கையில்
எதை எடுத்தாலும்
ஒரே சறுக்கல்!!!

வாழ்க்கையையே
வெறுத்துபோய்
என்ன செய்யலாம்
என்று தெரியாமல்
வெளியே வந்தேன்!!!

ஒரு பெரிய கல் தடுக்கி
என் எதிரில்
ஒரு பெண் விழத்தெரிந்தாள்
அவளை அப்படியே பிடித்து
கீழே விழாமல் தடுத்தேன்!!!

என்னைப் பார்த்து
ஒரு அழகான சிரிப்பு
அதில்
ஆயிரம் அர்த்தங்கள்!!!

சில சறுக்கல்கள்
நல்லதுதான்
மனதினிலே நினைத்துக்கொண்டேன்!!!

என் பிரச்சனைகள்
பறந்தது
போன இடம் தெரியாமல்!!!

Narathar
01-10-2007, 10:17 AM
சின்ன சறுக்களில் தப்பிவிட்டு
பெரிய சறுக்களில் மாட்டிவிட்டீர்களே

நாராயணா!!!!!

mania
01-10-2007, 10:25 AM
சின்ன சறுக்களில் தப்பிவிட்டு
பெரிய சறுக்களில் மாட்டிவிட்டீர்களே

நாராயணா!!!!!

:D:D:D
அன்புடன்
மணியா...
(உங்களுக்கு தெரியுமா....எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த கல்லை ஆரென் அங்கே வைத்தார் என்று....!!!! நாராயணா....):D

aren
01-10-2007, 10:29 AM
:D:D:D
அன்புடன்
மணியா...
(உங்களுக்கு தெரியுமா....எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த கல்லை ஆரென் அங்கே வைத்தார் என்று....!!!! நாராயணா....):D


தலை − இப்படி உண்மையைச் சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டீங்களே.

அக்னி
01-10-2007, 11:04 AM
சறுக்கல் பிரமாதம்...

சறுக்கியபோது தாங்கியே,
சறுக்கும் இதயங்கள்
ஏராளம்...
உடல் நொருங்கியபோதும்,
வீராப்பு பேசும்
ஆண்களும் கூட
தாராளம்...
பெண்களின் பருமனும் தரும்
பெரும்பாரம்...

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

aren
01-10-2007, 11:07 AM
சறுக்கல் பிரமாதம்...


பெண்களின் பருமனும் தரும்
பெரும்பாரம்...
...

நான் அப்படிச் சொல்லவில்லையப்பா!!! நீங்கள் என்னை மாட்டிவிடாதீர்கள்.

ஜெயாஸ்தா
01-10-2007, 11:18 AM
ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில், மோட்டார் பைக்கிற்கான விளம்பரம். ஒரு பெண்ணின் இடுப்பு வளைவை காண்பித்து அப்படியே பக்கத்தில் ஒரு வளைவான சாலையையும் காண்பித்து பின் 'அபாய வளைவுகள்' என்று காண்பிப்பார்கள். உங்கள் கவிதையை படித்தபோது அதுதான் ஞாபகத்திற்கு வந்தது ஆரெண். ஹஹ்ஹஹ்ஹ்ஹா.......நாரதர் சொன்னது போல பெரிதாய் சறுக்கிவிட்டீர்களே....!

அமரன்
01-10-2007, 03:49 PM
பெரிய கல்தடுக்கி விழுந்தவள்
தலையில் கல்போடாது இருக்க
சறுக்கல்களை குறையுங்கள்..

எப்படி இப்படி எல்லாம் தோன்றுகிறது அண்ணா..பாராட்டுகள் தொடருங்கள்.

மீனாகுமார்
01-10-2007, 04:18 PM
இன்ப அதிர்ச்சி தந்த விபத்து தான்... அப்புறமென்ன.. மேளம் கொட்டிட வேண்டியதுதான்...