PDA

View Full Version : என்னருகில்....!



வசீகரன்
01-10-2007, 06:09 AM
http://img01.picoodle.com/img/img01/8/5/24/f_doveFlyingm_f0c489c.jpg

மெல்ல சிரித்திட்ட என் மென்மலரே....
மெத்தென உணர்ந்தேன்... மனந்தனிலே....!

அருகில் வந்தாள் அகண்டு சென்ற அழகு பிடித்தது....
குறும்பு செய்தால் குடை சாய்ந்து கொண்ட
குணம் பிடித்தது...

அதிராமல் பேசும் அழகை காண
ஆசையாது நிற்பேன்...
ஆர்வமாய் பேசும்போது அலைபாயும் விழிகளை
கண்டு வியந்து நிற்பேன்.....

மருட்சியுற்று என் மார்பு
சாய இல்லாத ஊர்வன
அருகில் இருப்பதாக சொல்வேன்...
பொய்க்கோபம் காட்டி என் மார்பில் குத்தும்
அந்த அழகை காண...!

மலர்கள் என்றுமே அழகுதான்...
மலர்ச்சியும்... மணக்கமழ்ச்சியும்.....
நிரம்ப பெற்றிருப்பதால்.....

தென்றல் என்றுமே அழகுதான்...
சோலைதனில் தவழ்ந்து புரண்டு குளிர்ந்து
உலவுவதால்....

புன்னகை என்றும் அழகுதான்.....
புகலிடமாய் உன்னில் என்றும் குடிகொண்டிருப்பதால்....

என் வாழ்க்கை என்றும் அழகுதான்....!
ஆரவாரங்களற்ற....அமைதியை
என்றும் என் அருகில் வைத்திருப்பதினால்....!


பொன்னகை விஞ்சி நின்றது
உன்புன்னகை!

வசீகரன்

இளசு
01-10-2007, 06:21 AM
ஆஹா...

ஊர்வன சொல்லி சாயவைத்து
பறப்பன ஆகப்பார்க்கும்
காதல் கலைஞனா நீவிர்?

இளமை + காதல் = எல்லாமே அழகு!

இப்படியான பொழுதுகள் காதலர்க்கு வாய்க்கட்டும்..நீளட்டும்!


வாழ்த்துகள் வசீகரன்..

ஓவியன்
01-10-2007, 06:22 AM
சின்ன சின்ன மோதல்கள், சின்ன சின்ன ஊடல்கள், சின்ன சின்ன ஆசைகள் இவை எல்லாமே கொள்ளை அழகு தான் காதலில். பெண்மையின் மென்மையும் அது தரும் தண்மையையும் காதலின் விழுதுகள் அதனால் தானோ என்னவோ எத்தனை கதைகள், கவிதைகள், திரைப்படங்கள் வந்தாலும் காதல் இன்னமும் திகட்டாமலேயே இருக்கின்றது.


மருட்சியுற்று என் மார்பு
சாய இல்லாத ஊர்வன
அருகில் இருப்பதாக சொல்வேன்...
பொய்க்கோபம் காட்டி என் மார்பில் குத்தும்
அந்த அழகை காண...!

மலர்கள் என்றுமே அழகுதான்...
மலர்ச்சியும்... மணக்கமழ்ச்சியும்.....
நிரம்ப பெற்றிருப்பதால்.....

அழகான வார்த்தையாடல்கள் வசீ - பாரட்டுக்கள்!!

அத்துடன் உங்களது மற்றைய கவி வரிகளை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் கவிதை இன்னமும் அழகாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து....
என்னையும் உங்கள் கவிக் காதல் மழையில் நனைய வைத்த உங்கள் வரிகளுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....

வசீகரன்
01-10-2007, 06:51 AM
இளமை + காதல் = எல்லாமே அழகு!

இப்படியான பொழுதுகள் காதலர்க்கு வாய்க்கட்டும்..நீளட்டும

வாழ்த்துகள் வசீகரன்...


நன்றி இளசு அண்ணா...!
உங்கள் கூற்றுப்படியே நடக்கட்டும்,,,

வசீகரன்

Narathar
01-10-2007, 06:56 AM
அதிராமல் பேசும் அழகை காண
ஆசையாது நிற்பேன்...
ஆர்வமாய் பேசும்போது அலைபாயும் விழிகளை
கண்டு வியந்து நிற்பேன்.....

மருட்சியுற்று என் மார்பு
சாய இல்லாத ஊர்வன
அருகில் இருப்பதாக சொல்வேன்...
பொய்க்கோபம் காட்டி என் மார்பில் குத்தும்
அந்த அழகை காண...!



அஹா காதலில் தான் எத்தனை தந்திரங்கள்???
அழகிய கவிதை வாழ்த்துக்கள்

வசீகரன்
01-10-2007, 07:27 AM
அழகான வார்த்தையாடல்கள் வசீ - பாரட்டுக்கள்!!

அத்துடன் உங்களது மற்றைய கவி வரிகளை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் கவிதை இன்னமும் அழகாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து....
என்னையும் உங்கள் கவிக் காதல் மழையில் நனைய வைத்த உங்கள் வரிகளுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....!

மிக்க நன்றிகள் ஒவியரே... எனக்கு இலக்கண நடை கொஞ்சம் தூரம்.. என்பது தங்களுக்கு தெரியும்,.... மன்னிக்கவும்....! முயர்ச்சிக்கிரேன்... தங்கள் பின்ஊட்டம் நிரம்ப அழகாக இருந்தது....!

வசீகரன்....

வசீகரன்
01-10-2007, 07:56 AM
அஹா காதலில் தான் எத்தனை தந்திரங்கள்???
அழகிய கவிதை வாழ்த்துக்கள்...!


நன்றி நாரதரே....!

வசீகரன்