PDA

View Full Version : உலக செஸ் சாம்பியன் ஆனந்த்



அறிஞர்
01-10-2007, 02:36 AM
உலக செஸ் போட்டி சாம்பியன் ஆனார் ஆனந்த்

மெக்சிகோ, செப். 30-
மெக்சிகோவில் நடந்த உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்(36) சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தது. மொத்தம் 14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டி தொடரில் உலகின் டாப் 8 வீரர்கள் பட்டம் வெல்ல களம் இறங்கினர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா 2 முறை மோத வேண்டும்.

போட்டியில் 8 பேர் பங்கேற்ற போதிலும் நடப்பு சாம்பியன் கிராம்னிக் (ரஷ்யா), உலக சாம்பியன் ஆனந்த் இருவரிடையே தான் பட்டம் வெல்ல கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடர் தொடக்கத்திலிருந்தே ஆனந்தின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதோடு, முதல் சுற்றிலிருந்தே ஆனந்த், முதல் இடத்தில் இருந்துவந்தார். இந்தநிலையில், இத்தொடரின் 14வது மற்றும் இறுதிச் சுற்று போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஆனந்த், ஹங்கேரியின் பீட்டர் லீகோவுடன் மோதினார். இந்த போட்டியை டிரா செய்தாலே ஆனந்த பட்டம் வென்றுவிடுவார் என்று இருந்தது. மாறாக, தோல்வியுற்றால் பட்ட வாய்ப்பு பறிபோகும் என்ற நிலை இருந்தது.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் வெள்ளை காயுடன் களம் இறங்கிய ஆனந்த், தற்காப்பாக ஆடினார். 20வது நகர்த்தலின் முடிவில் 2 வீரர்களும் டிரா செய்ய ஒத்துக்கொண்டனர். இதையடுத்து, 9 புள்ளிகள் பெற்ற ஆனந்த் உலக சாம்பியன் ஆனார். இந்த தொடரில் ஆனந்த், 4 வெற்றியும், 10 போட்டிகளை டிரா செய்தார். ரஷ்ய வீரர் கிராம்னிக் 2வது இடத்தையும், இஸ்ரேல் வீரர் ஜெல்பாண்ட் 3வது இடத்தையும், பிடித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை தேடித் தரும் ஆனந்த், 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தெஹ்ரானில் 2000ம் ண்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீரர் ஆனந்துக்கு வாழ்த்து செய்தி குவிந்த வண்ணம் உள்ளது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல். பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆனந்திற்க்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். இன்னும் 2 வாரத்தில் ஆனந்த் சென்னை திரும்ம உள்ளதாக ஆனந்தின் மணைவி அருணா கூறியுள்ளார்.

கடந்த 10 நாட்களில் இந்தியா, 20 ஓவர் உலகக் கோப்பை (டோனி அண்ட் கோ), உலக பில்லியர்ட்ஸ் போட்டி (பங்கஜ் அத்வானி), உலக செஸ் சாம்பியன்ஷிப் (விஸ்வநாதன் ஆனந்த்) 3 உலக சாம்பியன்பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ந*ன்றி − தின*க*ர*ன்

ஜெயாஸ்தா
01-10-2007, 02:52 AM
எப்படியோ விளையாட்டு துறையில் தொடர்ந்து சாதனைகள் செய்து 100 கோடி மக்களின் மானத்தை காப்பாற்றினால் சரி...! ஆனந்திற்கு சிறப்பு வாழ்த்துக்கள்...!

ஓவியன்
01-10-2007, 05:57 AM
தன் தோல்விகளால் தன்னைத் தானே புடம் போட்டுக் கொண்டேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் ஆனந்...!
தொடர்ந்து தான் வெற்றி பெற்றிருக்கையிலும் கூட அந்த மமதை இன்றி ஒவ்வொரு நாளும் புதிய ஒரு சதுரங்க நகர்வை கண்டு பிடிக்கவென யோசிக்கின்றேன் என்றும் கூறினார்....

இந்த இரு பண்புகளுமே போதுமே, அவரை மேன் மேலும் உயர்த்த....
அந்த வெற்றி வீரனுக்கு நம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....! :)

இளசு
01-10-2007, 06:15 AM
இரண்டாவது முறையாக வென்ற ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்..

சதுரங்கம் கண்டுபிடித்த நாடு என்ற வகையில் இந்தியா
கூடுதல் பெருமை அடையும் நிகழ்வு இது..

பில்லியர்ட்ஸ் வெற்றி நான் அறியாத ஒன்று.

(சிவாஜி படம் வந்தவுடன் மற்ற படங்கள் மங்கினாற்போல்
கிரிக்கெட் முன்னால் மற்ற விளையாட்டுகள்..)

பங்கஜ் அத்வானி அவர்களுக்கு வாழ்த்துகள்.

அமரன்
01-10-2007, 07:26 AM
மூன்று வெற்றிகள்..கிரிக்கட்டின் விஸ்வரூபத்தில் மற்ற இரண்டும் மறக்கப்படாமல் தொடர் வெற்றிகளுக்கு வித்திடும் நல்ல நிகழ்வு நிகழுமென நம்புவோம்...விடாமுயற்சி, பட்டைதீட்டல்; பணிவு ஆனந்த் அவர்களின் வெற்றியின் இரகசியங்கள்..வாழ்த்துகள்.