PDA

View Full Version : ஊமை ராகங்கள்



இனியவள்
30-09-2007, 04:41 PM
வலி கொண்டு துடித்திடும்
என் இதயத்தை
தென்றல்போல் அரவணைக்க
ஓடோடிவா அன்பே....!


மேகங்கள் ஒன்றுக்குள்
ஒன்று மறையும் போது
உன்னுள் என்னைப் புதைத்த
நினைவுகள் நிழலோடியது
மனக் கண்களில்...!


மழைத்துளிகள் மண்ணை
அரவணைக்க படையெடுக்கின்றன
வானவில்லை குடையாக்கி
மேள தாளங்களோடு

நொடியில் மின்னலடித்தது-நீயும்
நானும் கைகோர்த்து மழையில்
நீராடியது....!


விடியும் விடியல்கள் - உன்
நினைவுகளைப் பறைசாற்றிச்செல்ல
என் இதயம் வடிக்கிறது
ஊமை ராகங்கள்....!

ஜெயாஸ்தா
30-09-2007, 04:58 PM
சோகத்தை பிழிந்து நம்மையும் கண்ணீர் மழையில் நனைய வைத்துவிட்டீர்களே... .இனியவள். அதென்னமோ தெரியவில்லை காதலின் வழி பற்றி எழுதும் போது பெரும்பாலும் பெரும்மழை, மின்னல், இடி ஆகியவை தானகவே கவிதையினுள் நுழைந்து விடுகிறது. என்னுடைய மன்றத்து முதல் கவிதை கூட இப்படித்தான். ஊமைராகங்கள் செவியுனுள் விழாமலேயே மனதை தாக்குகிறது.
அவள் வருவாளா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8378)

அமரன்
30-09-2007, 05:04 PM
மௌனமொழி உருக்கொடுத்த
காதலை அடையாளப்படுத்தும்
இயற்கையின் மீட்டலில்
உயிரூட்டப்பட இசையில்
சுரங்களைத் தொலைத்தகுயில்
ஒத்திசைக்கும் ஊமைராகம்
இனிமை கலந்த வலி....

பூமகள்
30-09-2007, 05:55 PM
நெஞ்சத்து வலியை எழுத்துக்களில் இறக்கி கவியாக்கியிருக்கிறீர்கள்.
தேர்ந்த வார்த்தைகள்.. வானவில் குடை.. .அழகான உவமை...!!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
02-10-2007, 04:02 PM
சோகத்தை பிழிந்து நம்மையும் கண்ணீர் மழையில் நனைய வைத்துவிட்டீர்களே... .இனியவள். அதென்னமோ தெரியவில்லை காதலின் வழி பற்றி எழுதும் போது பெரும்பாலும் பெரும்மழை, மின்னல், இடி ஆகியவை தானகவே கவிதையினுள் நுழைந்து விடுகிறது. என்னுடைய மன்றத்து முதல் கவிதை கூட இப்படித்தான். ஊமைராகங்கள் செவியுனுள் விழாமலேயே மனதை தாக்குகிறது.
அவள் வருவாளா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8378)

நன்றி ஜே.எம்.

வானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது
ஒரு உருவம் வந்தது பிறகு அடித்த காற்றுக்கு
கலைந்து விட்டது அந்த உருவம்

அதைப் பார்த்து உருவான கவிதை இது

இனியவள்
02-10-2007, 04:04 PM
மௌனமொழி உருக்கொடுத்த
காதலை அடையாளப்படுத்தும்
இயற்கையின் மீட்டலில்
உயிரூட்டப்பட இசையில்
சுரங்களைத் தொலைத்தகுயில்
ஒத்திசைக்கும் ஊமைராகம்
இனிமை கலந்த வலி....

நன்றி அமர்

மெளன வலிகளில்
தேன் சிந்தும்
இனிமைகள் அதிகம்

இனியவள்
02-10-2007, 04:07 PM
நெஞ்சத்து வலியை எழுத்துக்களில் இறக்கி கவியாக்கியிருக்கிறீர்கள்.
தேர்ந்த வார்த்தைகள்.. வானவில் குடை.. .அழகான உவமை...!!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் இனியவள்.

நன்றி பூமகள்

aren
02-10-2007, 04:11 PM
அருமை இனியவள். அழகாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

ஊமை ராகங்கள் உண்மை ராகங்களாகும் நாள் தொலைவில் இல்லை.

Narathar
03-10-2007, 06:54 AM
ஒரு காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிபோல் உள்ளது உங்கள் கவி வரிகள்...........

வாழ்துக்கள் வரிகளுக்கு
வருத்தங்கள் அனுபவமிருப்பின்......... நாராயணா!!!!

க.கமலக்கண்ணன்
03-10-2007, 08:40 AM
உள்ளத்தின் வலியை

உண்மையான வார்த்தைகளால்

உளமார எண்ணங்களை

உயரிய வண்ணங்களாக்கி படைத்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்...

இனியவள்
03-10-2007, 01:14 PM
அருமை இனியவள். அழகாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

ஊமை ராகங்கள் உண்மை ராகங்களாகும் நாள் தொலைவில் இல்லை.

நன்றி ஆரென் அண்ணா... :)

இனியவள்
03-10-2007, 01:15 PM
ஒரு காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிபோல் உள்ளது உங்கள் கவி வரிகள்...........
வாழ்துக்கள் வரிகளுக்கு
வருத்தங்கள் அனுபவமிருப்பின்......... நாராயணா!!!!

நன்றி நாரதரே

போகும் போதே ஆரம்பிச்சுட்டு
போறியளே நரதர் கலகத்தை :icon_rollout:

இனியவள்
03-10-2007, 01:16 PM
நன்றி கமல்க் அண்ணா

வசீகரன்
03-10-2007, 01:42 PM
மேகங்கள் ஒன்றுக்குள்
ஒன்று மறையும் போது
உன்னுள் என்னைப் புதைத்த
நினைவுகள் நிழலோடியது
மனக் கண்களில்...!
நொடியில் மின்னலடித்தது-நீயும்
நானும் கைகோர்த்து மழையில்
நீராடியது....!
ஆழமான வரிகள்....!நினைவுகளின் ஊடே பயனிப்பது
என்றுமே ஒரு....!நிர்மலமான அனுபவம்....
உங்கள் வரிகளில் சில நிமிடங்கள் வாழ்ந்தேன்
நன்றி அருமையான கவிக்கு இனியவளே...

வசீகரன்

இனியவள்
03-10-2007, 01:47 PM
நன்றி வசி

மனதின் ஓட்டங்கள் கவிதையாகும் பொழுது
உயிர்போடு இருக்கும்

ஆதவா
05-10-2007, 03:29 AM
ஊமை ராகங்கள் செவிடனுக்கும் கேட்குபடி..

நினைவுகளுக்குச் சிறந்த இடம் கவியேடுகள். அதைத் திறம்படவே பயன்படுத்தி வருகிறீர்கள். இம்முறை இயற்கைக் கோலின் வண்ணத்தில்.

மேகங்கள் ஒன்றுக்குள்
ஒன்று மறையும் போது
உன்னுள் என்னைப் புதைத்த
நினைவுகள் நிழலோடியது
மனக் கண்களில்...!

சிறந்த வரிகள். ஒரு மேகம் இன்னொரு மேகத்திற்குள் செல்லும் காட்சியை நெஞ்சில் புதைத்த காதலனோடு ஒப்பிட்டு உங்கள் வரிகள் மிக அழகானவை. நினைவுகளாகவே கலைந்தோடுவது சோகம்.

நினைவுகள் என்ற உணர்வுகள் இல்லாமல் நிச்சயம் எவரும் மனிதராகக் கூட இருக்கமுடியாது. நினைவுகள் ஒவ்வொரு மனித உணர்வுக்கு ஊற்று. ஞானக்கண்களின் சாவி.


பெரும்பாலும் பெரும்மழை, மின்னல், இடி ஆகியவை தானகவே கவிதையினுள் நுழைந்து விடுகிறது.

சோகம் எப்படி உருவாகிறது? இரு மனங்களின் மோதல் (இடி), உணர்வுகள் வெடித்து மூளை சிதற்றும் சோக வெளிச்சம் (மின்னல்) அச்ச நாணங்கள் உருக்குலைந்து மனக்குவியலுக்குள் ஏற்படும் கலக்கம் (புயல்) இறுதியில் கண்ணீர் (மழை.) பெரும்பாலும் கவிஞர்கள் எந்த ஒரு பொருளையும் எப்படியும் பயன்படுத்தும் திறமைகொண்டவர்கள். இதே கருப்பொருள்களை இன்பத்திற்கும் பயன்படுத்துபவர்கள் அதிகம். நம்மை அந்த சூழலுக்குக் கொண்டு சேர்த்தால் அது கவிதையின் திறம். உங்களுக்கு இந்த கவிதை அப்படியொரு சூழலை தோற்றுவித்தால் அது இனியவள் என்ற நல்ல கவிஞையின் வெற்றி.....

வெற்றி பொறித்த இனியவளுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
06-10-2007, 01:41 AM
மிக அழகான உள்ளத்தின் ஏக்கங்கள் கவிதையில்...

மிக சிறப்பான விமர்சனம் ஆதவாவிம் வண்ணத்தில்

என்ன சொல்ல.. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!