PDA

View Full Version : முடிவற்ற முடிவு



இனியவள்
30-09-2007, 04:39 PM
மேகத்தைக் கற்களாய் கொண்டு
காற்றை உளியாக்கி
அழகிய சிற்பம் உருவாக்க
முயல்கின்றது இயற்கை
மேகத்தைக் கலைத்திட
முயல்கின்றது தென்றல்
என்பதனை அறியாமல்...

பாறையாய் உறைந்து கிடந்த
உன் இதயத்தை
காதல் என்னும் உருவம் தீட்டி
அன்பெனும் உளி கொண்டு
செதுக்கினேன் நானே
பாறையாய் மாறிடுவேன் - என
அறியாமல்...

இயற்கையாய் உருப்பெற்ற
என் காதல்
முடிவற்ற முடிவாய்
முடிந்து போனது...

அமரன்
30-09-2007, 04:52 PM
ஏற்றிவிடும் படிகளே இறங்கும்போதும்..
புரியாது சுமைகளை சுமக்கின்றோம்.
புரிந்து விட்டால் முடிவு கிட்டும்
முடிந்து போவதற்கு முடிவு கட்டும்...

தொடருங்கள் இனியவள்..

ஜெயாஸ்தா
30-09-2007, 04:52 PM
அருமையான உருவகக்கவிதை பாராட்டுக்கள் இனியவள். காற்று உருவாக்கியதை காப்பாற்றாமல் காற்றே கலைத்து விடுவது போல், காதல் கனவுகள் இவனால் அவளுள் ஏற்படுத்தப்படுகிறது.. ஆனால் கலைந்துவிடுகிறது. காதலும் காற்றும் ஒன்றுதான் இலக்கியன். அது எப்போது தென்றலாய் வரும், எப்போது புயலாய் மாறும், எப்போது எந்த வடிவம் பெறும்? எதுவுமே சொல்லமுடியாது. அது போல்தான் காதலும்.

பூமகள்
30-09-2007, 06:03 PM
உருவகக் கவி அருமை இனி...!
"காதல் விதை விருட்சமாகி
திடீரென்று வேர் அறுத்து
வீழ்ந்தததுவோ??
காரணம் எதுவாயினும்
"துயர் பட்டு பயன் என்ன??
காயம் ஆற்றும் காலமே மெல்ல..!!"

"காதலில் ஜெயித்தால் சந்தோசம்..
தோற்றால் அனுபவம்..!!"
நல்ல கவிதை.. வாழ்த்துகள் இனியவள்.

இனியவள்
02-10-2007, 03:49 PM
ஏற்றிவிடும் படிகளே இறங்கும்போதும்..
புரியாது சுமைகளை சுமக்கின்றோம்.
புரிந்து விட்டால் முடிவு கிட்டும்
முடிந்து போவதற்கு முடிவு கட்டும்...

தொடருங்கள் இனியவள்..

நன்றி அமர் :)

தொடர்வேன் என்ற
நம்பிக்கை இருக்கிறது :icon_b:

இனியவள்
02-10-2007, 03:52 PM
அருமையான உருவகக்கவிதை பாராட்டுக்கள் இனியவள். காற்று உருவாக்கியதை காப்பாற்றாமல் காற்றே கலைத்து விடுவது போல், காதல் கனவுகள் இவனால் அவளுள் ஏற்படுத்தப்படுகிறது.. ஆனால் கலைந்துவிடுகிறது. காதலும் காற்றும் ஒன்றுதான் இலக்கியன். அது எப்போது தென்றலாய் வரும், எப்போது புயலாய் மாறும், எப்போது எந்த வடிவம் பெறும்? எதுவுமே சொல்லமுடியாது. அது போல்தான் காதலும்.

நன்றி ஜே.எம்..

காற்று தென்றலாய் வீசும்
போது அதன் குளிர்மையை
ரசிக்கின்றோம் புயலாய்
மாறும் போது அதன்
உக்கிரத்தை வெறுக்கின்றோம்

காதலும் அதே போல் தான்
நீங்கள் கூறுவது மிகச் சரி நண்பரே

காதலை யாரும் வெறுப்பதுமில்லை
தூற்றுவதுமில்லை
காதல் புனிதமானது காதலிப்பவர்களைப்
பொறுத்து காதலின் புனிதத் தன்மை மாறுபடுகிறது

நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கு

இனியவள்
02-10-2007, 03:55 PM
உருவகக் கவி அருமை இனி...!
"காதலில் ஜெயித்தால் சந்தோசம்..
தோற்றால் அனுபவம்..!!"
நல்ல கவிதை.. வாழ்த்துகள் இனியவள்.

நன்றி பூ உங்கள் வாழ்த்துக்கு
வெற்றியை விட தோல்வியில்
நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம் :icon_rollout:

உங்கள் கவியும் கவியின் கருத்தும்
அழகு தோழி வாழ்த்துக்கள் :)