PDA

View Full Version : ஸ்டார்ட் டூல் பார் தலைகீழாக வருகிறது..எப்

பூமகள்
30-09-2007, 04:18 PM
அன்பு மன்ற உறவுகளே..
என் நண்பர் ஒருவரின் கணினியில் விண்டோஸ் XP Operation System வைத்திருக்கிறார். ஸ்டார்ட் Menu உள்ள Tool bar Horizontal ஆக கீழே இல்லாமல் மானிட்டரின் மேலே Horizontal ஆக உள்ளது. ஆகையால் அனைத்தும் தலைகீழாக மாறியிருக்கிறது. எப்படி சரியான நிலைக்கு அவற்றை மாற்றுவது என்று விளக்குங்களேன் அன்பர்களே...!!

ஓவியன்
30-09-2007, 04:57 PM
கணினியின் டெஸ்க் ரொப்பில் ரைட் க்ளிக் செய்து

Graphics option --- Rotation ---- Normal

என்பதைச் செய்து பாருங்கள் சரி வருமென நம்புகிறேன்....!! :)

பூமகள்
30-09-2007, 05:07 PM
அன்பு ஓவியன் அண்ணா,
Graphics Options --> Rotations???
எனக்கு அது கிடைக்கலையே அண்ணா? எங்குள்ளது Rotations Option??

பிரச்சனை இது தான்.
கணினியை ஆன் செய்து Windows XP OS தேர்வு செய்து(இது நேராக உள்ளது) பின் கணினி பயனீட்டாளர் பதிவு பக்கம் வந்ததும் அது தலைகீழாக தெரிய ஆரம்பித்துவிடுகிறது. இதை எப்படி சரிசெய்வது?

சாம்பவி
30-09-2007, 05:08 PM
டூல்பாரில் சொடுக்கியபடியே இழுத்து வந்து கீழே நிலை பெறச் செய்யுங்கள் ( drag and drop at the bottom ) !

அன்புரசிகன்
30-09-2007, 05:11 PM
உங்கள் கணிணீயின் task bar திரையின் மேல் உள்ளதா அல்லது கணிணித்திரையே தலைகீழாக உள்ளதா?ஒரு screen shot எடுத்து காட்டினால் உதவ முடியும்.

ஓவியரே.. நீங்கள் கூறுவது சில VGA card க்கு உரித்தான options. அவை standard ஆனவை அல்ல.

பூமகள்
30-09-2007, 05:16 PM
டூல்பாரில் சொடுக்கியபடியே இழுத்து வந்து கீழே நிலை பெறச் செய்யுங்கள் ( drag and drop at the bottom ) !
அப்படிச் செய்தாலும் ஸ்டார்ட் டூல்பார் தலைகீழாகவே தெரிகிறது.
என்ன செய்வது?:confused:
உதவுங்களேன்.

ஓவியன்
30-09-2007, 05:24 PM
ஓவியரே.. நீங்கள் கூறுவது சில VGA card க்கு உரித்தான options. அவை standard ஆனவை அல்ல.

அப்படியா அன்பு எனக்கு இந்த படத்திலுள்ள மாதிரி வருவதுண்டு அதனைக் கொண்டு நான் ரூல் பாரை தலை கீழாக மாற்றி விளையாடுவதுண்டு..... !!! :icon_rollout:

http://img37.picoodle.com/img/img37/9/9/30/f_Desktopm_5a0c1e4.jpg

பூமகள்
30-09-2007, 05:28 PM
உங்கள் கணிணீயின் task bar திரையின் மேல் உள்ளதா அல்லது கணிணித்திரையே தலைகீழாக உள்ளதா?ஒரு screen shot எடுத்து காட்டினால் உதவ முடியும்.

ஓவியரே.. நீங்கள் கூறுவது சில VGA card க்கு உரித்தான options. அவை standard ஆனவை அல்ல.
நன்றி அன்பு அண்ணா.
இந்த Screen shot பார்த்து முயலுங்கள் அண்ணா.
http://img27.picoodle.com/img/img27/9/9/30/poomagal/f_TurnedDesktm_e075ecb.jpg

அன்புரசிகன்
30-09-2007, 05:32 PM
முதலில் உங்கள் task bar ல் right click செய்து lock ஆகியிருக்கும் உங்கள் task bar ஐ Untick செய்யுங்கள். பின்பு சாம்பவி சொன்னது போல் நீங்கள் Drag செய்யமுடியும். யாரோ உங்கள் கணியின் task bar ஐ மேலே இழுத்துவிட்டார்கள்.

பூமகள்
30-09-2007, 05:44 PM
அப்படியா அன்பு எனக்கு இந்த படத்திலுள்ள மாதிரி வருவதுண்டு அதனைக் கொண்டு நான் ரூல் பாரை தலை கீழாக மாற்றி விளையாடுவதுண்டு..... !!! :icon_rollout:
அன்பு ஓவியன் அண்ணா,
உங்களின் ஆலோசனை மிகச்சரி.. இதன் படி செய்ததில் எல்லாம் நேராகிவிட்டது. மிகுந்த நன்றிகள் அண்ணா.:icon_b:
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.:nature-smiley-002:

மன்மதன்
30-09-2007, 07:45 PM
சபாஷ் சிங்கக்குட்டிகளா.. எதாவது ஒரு பிரச்சனைனா மன்றத்திலே உடனுக்குடன் பதில் கிடைத்துவிடுகிறது.. பலே.பலே..

ஓவியன்
30-09-2007, 07:49 PM
சபாஷ் சிங்கக்குட்டிகளா.. எதாவது ஒரு பிரச்சனைனா மன்றத்திலே உடனுக்குடன் பதில் கிடைத்துவிடுகிறது.. பலே.பலே..

அப்போ சிங்கங்கள்.....யார், யார்...???? :)

அன்புரசிகன்
30-09-2007, 07:54 PM
அப்போ சிங்கங்கள்.....யார், யார்...???? :)

நிச்சயமாக நீங்கள் தான் ஓவியரே. அதுவும் சும்மா இல்ல. ஆண்சிங்கம். :D

ஓவியன்
30-09-2007, 07:58 PM
நிச்சயமாக நீங்கள் தான் ஓவியரே. அதுவும் சும்மா இல்ல. ஆண்சிங்கம். :D

இல்லை என்னை சிங்கக் குட்டி என்று தான் மன்மி.ஜி சொன்னவர்...!!! :D

அன்புரசிகன்
30-09-2007, 08:08 PM
இல்லை என்னை சிங்கக் குட்டி என்று தான் மன்மி.ஜி சொன்னவர்...!!! :D

ஏய்யா.... சிங்கக்குட்டியில் ஆண்சிங்கம் இருக்காதோ....:smilie_abcfra:

praveen
01-10-2007, 05:31 AM
என் தங்கை தனிமடலில் என்னிடம் கேட்டு (நான் ஆப்-லைனில் இருந்ததால் உடனே பதிலளிக்க முடியவில்லை) பதில் இல்லாததால் ஒரு திரி துவங்கி விட்டார் போல.

நான் மாங்கு மாங்கு என்று டைப் செய்து தனிமடலிட்டு இங்கு வந்து பார்த்தால் பிரச்சினை தீர்ந்தது என்று தெரிகிறது.

நான் தனிமடலில் பதில் தந்ததை இங்கே தருகிறேன்.

ரொம்ப சிம்பிள் அந்த டாஸ்க் பார்-ஐ ஐகான் எதுவும் இல்லாத வெற்றிடத்தில் மவுசால் பிடித்து அதை வேண்டும் இடத்திற்கு இழுத்து போட்டால் இந்த பிரச்சினை தீரும்.

மேலே சொன்னது சாதரண பிரச்சினை, ஆனால் நீங்கள் கூறியது அசாதரணமான ஒன்று.

இண்டெல் கிராபிக்ஸ் கார்டு மதர்போர்டு கொண்டிருந்தால் ஹாட்கீ மூலமும் ஸ்கீரினை இவ்வாறு ரொட்டேட் செய்யலாம். அவர் கேம்ஸ் விளையாடுகையில் இம்மாதிரி சுற்றுவதற்கான ஹாட் கீ தெரியாமல் அழுத்தியிருக்கலாம்.

அதை திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர கீழே கண்ட கீ களை ஒரு சேர அழுத்த வேண்டும்.
Ctrl-Alt-Up - right side up

Ctrl-Alt-Right - 90 degrees

Ctrl-Alt-Down - 180 degrees

Ctrl-Alt-Left - 270 degrees
(மேலே உள்ளது சரியாக்கவில்லை என்றால் Ctrl-Shift-R)

செய்து பார்த்து பதில் போடவும்.http://engtech.files.wordpress.com/2006/08/intel_xtreme_graphics_2.jpg[/QUOTE]

ஓவியன்
01-10-2007, 05:45 AM
எதோ ஒரு ஷோர்ட் கட் கீயினால் இது மாறியிருந்தது என்று புரிந்தேன், ஆனால் என்ன கீ என்று தெரியாதிருந்தேன்....

அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி அஷோ!!!