PDA

View Full Version : அளவீடு



இனியவள்
30-09-2007, 03:28 PM
இருமனம் இணையும் போது
இதயத்தில் அன்பைக் கணித்திட்ட
உன் இதயம்
திருமணம் என்று வரும் பொழுது
மட்டும் ஏனோ பணம் என்னும்
காகிதத்தை அளவிட்டு அழித்து
விடுகின்றது காதலை....

அமரன்
30-09-2007, 03:38 PM
இருமனம் இணையும் போது
அன்பைக் கணித்திட்ட இதயம்
திருமணம் என்று வரும்பொழுது
பணம காகிதத்தை அளவிட்டு
மறைத்து விடுகின்றது காதலை....

இக்கரை பகலவன்
அக்கரை நிலவு
இடையான பரிமாற்றம்
காதல்....!

காதல் அழிவதில்லை....
தொடருங்கள்...

சிவா.ஜி
30-09-2007, 03:44 PM
அதுதான் இனியவள் பணம் படுத்தும் பாடு என்பது.காதல் மட்டுமே இருக்கும் இதயம் பணம் பார்ப்பதில்லை....காதல் மட்டமாய் இருக்கும் இதயம் மனம் பார்ப்பதில்லை.
வாழ்த்துக்கள் இனியவள்.

அக்னி
30-09-2007, 03:55 PM
மனதில் பிறப்பெடுத்த,
காதலை...
பணத்தில் கணக்கெடுக்கின்றாயே...
விவாகம் செய்யப்போகின்றாயா?
அல்லது,
விபச்சாரம் செய்யப்போகின்றாயா..?

இந்த மாறவேண்டிய நிலையால்...
உணமைக்காதல் கூட, வெட்கித்தலை குனியும் நிலையில்...
பாராட்டுக்கள் இனியவள்...

சுகந்தப்ரீதன்
01-10-2007, 04:16 AM
வாழ்த்துக்கள் இனியா... இங்கே அழிந்துவிடுவது காதல் மட்டுமல்ல.. அதன் புனிதமும்தான்..!

ஜெயாஸ்தா
01-10-2007, 04:22 AM
காதலை பணம் அழித்துவிடுகிறது. சிறந்த அழிப்பான் பணம் என்கறீர்கள். ஆக்கும் சக்தி அழிவுசக்தி இரண்டும் கொண்டது பணம்

சூரியன்
01-10-2007, 05:08 AM
உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
பணம் இருந்தால் மட்டுமே கதால் வெற்றி பெறாது.
நல்ல மணம் இருந்தாலும் வெற்றி பெறும்.