PDA

View Full Version : சென்செக்ஸ் மற்றும் நிப்டி



நேசம்
30-09-2007, 01:13 PM
பங்கு சந்தை என்று வரும்போது சென்செக்ஸ் மற்றும் நிப்டி எனறு வருகிறது.அவைகளின் பணி என்றால் என்ன.மேலும் பங்கு சந்தை இத்தனை புள்ளிகளை தொட்டது என்று செய்தி வருகிறது. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.நன்றி

aren
30-09-2007, 01:26 PM
நம் மன்றத்தில் பல பொருளாதார வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து உங்களுக்கு பதில் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.

karikaalan
30-09-2007, 04:21 PM
நண்பரே

மிக மிக அடிப்படைக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். விடை சொல்வது எளிமையாக இருக்காது −− புரியும்படிச் சொல்லவேண்டுமென்றால்!!

சென்செக்ஸ் −− சென்ஸிடிவ் இன்டெக்ஸ் −− 30 கம்பெனிகளின் பங்குகளின் விலையை ஒட்டி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த 30 கம்பெனிகள் தேர்ந்தெடுக்கபடும் விதம் ஒரே மாதிரி இருந்தாலும், அவ்வப்போது கம்பெனிகளின் செயல்பாடுகள் காரணமாக மழித்தலும் நீட்டலும் நடக்கின்றன.

நிஃப்டி −− நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்−ல் வர்த்தகம் செய்யப்படும் பல பங்குகளில் 50 கம்பெனிகளின் பங்குகளின் விலை நிலவரங்களை ஒட்டி தீர்மானம் செய்யப்படுகிறது.

சென்ஸெக்ஸில் இருப்பவை நிஃப்டியில் இருக்கவேண்டிக அவசியமில்லை. இரண்டு பங்குகள் நிச்சயம் இருக்கும் −− ரிலையன்ஸ் + இன்ஃபி!

இந்த இரு பரோமீட்டர்கள் இந்தியப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கின்றன.

===கரிகாலன்

நேசம்
05-10-2007, 09:00 PM
இவை இரண்டும் அரசு சார்பு நிறுவனங்களா கரிகாலன் அவர்களே

karikaalan
06-10-2007, 12:58 PM
பிஎஸ்இ தொன்மை வாய்ந்தது. தரகர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஊழல்கள் ஊடுறுவியதால் அரசு தலையிட்டது. தனது அதிகாரிகளை நிர்வாகத்தில் உட்கார வைத்தது. அப்படியும் அவ்வளவாக மோசடிகளை ஒழிக்க முடியவில்லை. மிகப்பெரும் பலம் பொருந்திய சந்தையாக உருவெடுத்துவிட்ட பிறகு, அரசு தலையைச் சொறிந்து கொண்டு நின்ற போது 1992−ல் உருவானதுதான் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட். என் எஸ் இ−யை உருவாக்கியவை இந்திய ஃபைனான்ஷியல் இன்ஸ்டிட்யூஷன்கள். அவைதாம் இதன் பங்குதாரர்கள். அரசின் மேற்பார்வையில் உருவானது.

என் எஸ் இ உருவான பிறகு மற்ற சந்தைகள் −− கொல்கத்தா, தில்லி, சென்னை, இன்னும் இன்ன பிற, படுத்துவிட்டன அல்லது மூடப் பட்டன.

பிறகு வேறு இடத்தில் விரிவாகப் பார்ப்போம்.

===கரிகாலன்

நேசம்
06-10-2007, 01:35 PM
நன்றி நண்பரே . உங்கள் விளக்கத்துக்கு காத்து இருக்கிறேன்