PDA

View Full Version : முடிச்சுகள்!!!



aren
30-09-2007, 12:52 PM
அளைப்பற்றி முழுமையாக
அறிந்திருக்கவில்லை
அவள் ஏமாற்றுபவள்
என்றும் நான் நினைக்கவில்லை
என்னிடம் காதலை
அவள் சொன்னபொழுது!!!

இன்று கல்யாணம் பற்றி
பேசும்பொழுது
அந்தஸ்தும் அப்பாவின்
அனுமதியும் ஞாபகத்திற்கு வருகிறது!!!

அமெரிக்க மாப்பிள்ளையின்
வரம் வீட்டிற்கு வந்திருக்கிறது!!!

தலையை நீட்ட தயாராகும்பொழுது
இடையில் இருக்கும்
என்னை அவிழ்த்துவிட
அவளுக்கு அவளே போட்டுக்கொள்ளும்
முடிச்சுகள்
அவளை வெளிக்காட்டியது!!!

ஓவியன்
30-09-2007, 01:25 PM
ஆரென் அண்ணாவின்
கவிதை நாயகி
காதலுக்கே
ஒரு கரும்புள்ளி.....!


தலையை நீட்ட தயாராகும்பொழுது
இடையில் இருக்கும்
என்னை அவிழ்த்துவிட
அவளுக்கு அவளே போட்டுக்கொள்ளும்
முடிச்சுகள்
அவளை வெளிக்காட்டியது!!!

அழகான வார்த்தைப் பிரயோகம் அண்ணா!!

வாழ்த்துக்கள்......!!! :)

சிவா.ஜி
30-09-2007, 01:35 PM
கவிதையின் நாயகி ஒருபோதும் ஒரு காதலியாக இருக்கவே முடியாது.இதயங்களின் பரிமாறல்தான் காதல்..இவள் பணப்பரிமாற்றத்தில் மனம் மாற்றப்பட்டவள்...இவளிட்ட முடிச்சிலிருந்து நாயகன் அவிழ்ந்ததே நல்லது....இல்லையெனில் நாயகன் போடும் மூன்று முடிச்சு..மூச்சை முடிக்கும் முடிச்சாகியிருக்கும். நல்ல வார்த்தைப் பிரயோகம் ஆரென் வாழ்த்துக்கள்.

aren
30-09-2007, 01:39 PM
ஆரென் அண்ணாவின்
கவிதை நாயகி
காதலுக்கே
ஒரு கரும்புள்ளி.....!



அழகான வார்த்தைப் பிரயோகம் அண்ணா!!

வாழ்த்துக்கள்......!!! :)


நன்றி ஓவியன். இப்பொழுது இருக்கும் யதார்த்த உலகத்தில் இது ஒரு சகஜமான விஷயமாகி ஆகிவிட்டது. நீங்களே இதை பார்த்திருப்பீர்கள். காதலித்தது ஒருவனை கல்யாணம் செய்வது இன்னொருத்தனை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், இதுவும் ஒன்றாக இருக்கிறது என்பதைச் சொல்லவே இதை எழுதினேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-09-2007, 01:41 PM
கவிதையின் நாயகி ஒருபோதும் ஒரு காதலியாக இருக்கவே முடியாது.இதயங்களின் பரிமாறல்தான் காதல்..இவள் பணப்பரிமாற்றத்தில் மனம் மாற்றப்பட்டவள்...இவளிட்ட முடிச்சிலிருந்து நாயகன் அவிழ்ந்ததே நல்லது....இல்லையெனில் நாயகன் போடும் மூன்று முடிச்சு..மூச்சை முடிக்கும் முடிச்சாகியிருக்கும். நல்ல வார்த்தைப் பிரயோகம் ஆரென் வாழ்த்துக்கள்.


நன்றி சிவா. பல சமயங்களில் இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது காதல் முறிவிற்கு.

வார்த்தைப் பிரயோகம் நல்லா வந்திருந்தால் சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

மன்மதன்
30-09-2007, 02:17 PM
கடைசி பாரா வார்த்தை பிரயோகம் அருமை ஆரென்ஜி.. அமெரிக்க மாப்பு வச்சிட்டான் ஆப்பு... வாங்க நாமும் அமெரிக்க செல்வோம்..!!!

அமரன்
30-09-2007, 03:09 PM
எந்த ஒரு செயலையும் செய்ய முன்னர் அக,புற தாக்கங்களுக்கு ஈடுகொடுத்து எதிர்தாக்குதல் செய்ய துணையாக வலுவை சேர்த்துக்கொள்ளலும் கட்டிக்காத்தலும் அவசியம். இதை புறந்தள்ளுதலே எதிர்விளைவுகளை தந்து புரட்டி எடுக்கின்றன..காதலும் அப்படித்தான். மீறியவர்களை நினைத்து கவலைப்படாமல் பரிதாபப்படுதலே நன்று. பாராட்டுகள் அண்ணா.