PDA

View Full Version : பிறவா பிறையே....!!



பூமகள்
30-09-2007, 12:41 PM
http://img32.picoodle.com/img/img32/9/10/1/poomagal/f_baby6monthsm_661d82c.jpg

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு எட்டாச்சு...!!

எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!

இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்கக்கூட
காசுபணம் எனக்கிலையே...!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!

ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!

பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!

காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???

aren
30-09-2007, 12:43 PM
வாவ்!! குழந்தைவேண்டும் என்று வேண்டுதலை இத்தனை அழகாக எழுதியிருக்கிறீர்கள் கவிதை வடிவில். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சூரியன்
30-09-2007, 12:48 PM
அழகான வரிகள்,
ஆழமான கருத்து,
வாழ்த்துக்கள் பூமகள்...

சிவா.ஜி
30-09-2007, 12:56 PM
அருமை பூமகள்...அருமை.
தாரமானபின்னும் தாயாகாதவளை,தணலிலிட்டு தாளிக்கும் இந்த தரித்திர சமுதாயத்தின் தீ நாக்குகளின் தீண்டலைத் தவிர்க்கவாவது ஒரு மழலை வேண்டும்.
ம்மா...எனும் சொல் கேட்க இந்த அம்மாவாகத் துடிப்பவளின் தவிப்பு வெகு அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
வறண்ட வயிற்றுக்குள் நிரண்டுமா உன் நகங்கள் என் செல்லமே என வேண்டி நிற்கும் தாயின் வேதனை தெரிகிறது.
இவள் வேண்டும் அந்த நித்திலம் கிடைக்க நிதியில்லாததால் இரவலாகவும் இவள் கருவேந்த எவரும் வருவாரில்லையே....
இவளைத் தன் குழந்தையாய்..தன்னை இவளின் குழந்தையாய் கருதிக் களிக்கும் உறுதியுள்ளவன் கணவனெனில்....கன்னித்தாயாய் இவள் காலம் நகரும்.இல்லாத பட்சத்தில் கல்லடியினும் கொடுமையான சொல்லடியில் இவள் உள்ளம் கன்னி வாழவேண்டியதாயிருக்கும்.
மிக அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
30-09-2007, 01:04 PM
பல ஆண்டுகளாய் குழந்தையின்றி குழந்தைக்காய் ஏங்கும் ஓர் தாயின் தவிப்பு தான் கவிக்கரு. மிகுந்த நன்றிகள் அரென் அண்ணா.

மிகுந்த நன்றிகள் சகோதரர் சூரியன்..!!
உடன் வந்து ஊக்கமளித்தற்கு மிகுந்த நன்றிகள்.

பூமகள்
30-09-2007, 01:15 PM
அருமை பூமகள்...அருமை.
தாரமானபின்னும் தாயாகாதவளை,தணலிலிட்டு தாளிக்கும் இந்த தரித்திர சமுதாயத்தின் தீ நாக்குகளின் தீண்டலைத் தவிர்க்கவாவது ஒரு மழலை வேண்டும்.
ம்மா...எனும் சொல் கேட்க இந்த அம்மாவாகத் துடிப்பவளின் தவிப்பு வெகு அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

உண்மைதான் அண்ணா. சமூகத்தில் இவ்வகை பெண் படும் துயர்கள் ஏராளம். எந்த விசேசங்களிலும் முதன்மையாய் விடாமல் ஒதுக்கும் போக்கு பல இடங்களில் நான் கண்டு வேதனையுற்ற ஒன்று. என் வேதனையை அந்த பெண்ணின் இடத்திலிருந்து வடித்த கவியே இது.

இவளைத் தன் குழந்தையாய்..தன்னை இவளின் குழந்தையாய் கருதிக் களிக்கும் உறுதியுள்ளவன் கணவனெனில்....கன்னித்தாயாய் இவள் காலம் நகரும்.இல்லாத பட்சத்தில் கல்லடியினும் கொடுமையான சொல்லடியில் இவள் உள்ளம் கன்னி வாழவேண்டியதாயிருக்கும்.

அத்தகைய மனிதநேயமிக்க கணவர்கள் என் கண்முன் நிஜத்திலும் இருக்கவே செய்கின்றனர். அதனைக் கண்டு மனம் ஆறுதல் அடைகிறது அண்ணா.

மிக அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் பூமகள்.
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் சிவா அண்ணா.

lolluvathiyar
30-09-2007, 01:17 PM
குழந்தைகாக ஏங்கும் ஒரு தாயின் பரிதாபம்
பாசத்திலா அல்லது மிதிக்கும் சமுதாயத்திடமிருந்து தப்பிக்கவா
பணம் இல்லை என்று ஏக்கத்திலா. என்ன செய்ய ?
இரைவன் தலையில் பாரத்தை போட்டு விட்டு ஆகிற காரியதை பார்க்க வேண்டியதுதான்

யவனிகா
30-09-2007, 01:21 PM
மனதை கனக்கச் செய்யும் கவிதை,வாழ்த்துக்கள் பூமகள்.

ஓவியன்
30-09-2007, 01:21 PM
ஒரு மழலையின் பாதம் தன் பொன் வயிற்றில் உதைக்க வேண்டுமென ஒரு பெண்மை ஏங்குகிறது கவி மகள் பூமகளின் கவிதை வரிகளில்....

மழலை மீது கொண்ட ஆசை ஒரு புறம்....
குழந்தை இல்லையென குத்திக் காட்டும் சமூகம் ஒருபுறமாய்...

அந்த பெண்ணின் நிலை மிக, மிக மோசமானது. குழந்தை இல்லாமல் இருப்பதற்கு ஆணும் சரி பாதி காரணமாக இருக்கையில், பழி மட்டும் ஏனோ விழுவது பெண்களின் தலையிலேயே...!.
குழந்தைகள் இல்லையென்று மனைவியை திட்டுவதை விடுத்து அந்த மனைவிக்கு தான் குழந்தையாக இருக்க வேண்டியது கணவன்மாரது பொறுப்பு....
கணவனுக்கு தான் குழந்தையாக வேண்டியது மனைவிமாரது பொறுப்பு....
குழந்தை இல்லாத வீட்டிலே இவ்வாறு இருந்து விட்டால் அந்த வீட்டிலே பிரச்சினைகளே வராதல்லவா....!

நல்ல ஓர் கவிதைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!.

பூமகள்
30-09-2007, 02:00 PM
விமர்சித்த வாத்தியார் அண்ணாவிற்கு நன்றிகள் அண்ணா.

அன்புச் சகோதரி.. யவனி அக்காவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பூமகள்
30-09-2007, 02:10 PM
ஒரு மழலையின் பாதம் தன் பொன் வயிற்றில் உதைக்க வேண்டுமென ஒரு பெண்மை ஏங்குகிறது கவி மகள் பூமகளின் கவிதை வரிகளில்....

நல்ல ஓர் கவிதைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!.
நன்றிகள் ஓவியன் அண்ணா. வெகுநாட்களாய் என் மனத்தை தைத்துவிட்டிருந்த இந்த கனத்த சோகத்தை இன்று கவியாக்கும் வாய்ப்பு கிடைத்தது.
உங்களின் ஊக்கம் கண்டு மட்டற்ற உவகை கொண்டு துள்ளுகிறது என்னுள்ளம் அண்ணா.:D

இனியவள்
30-09-2007, 02:21 PM
வாழ்த்துக்கள் தோழியே
ஒரு கணம் கவியின் கரு
மனதை எங்கோ கொண்டு சென்று
விட்டது...

குழந்தையின்றி தவிக்கும்
பெண்களும்
அன்னையின்றி தவிக்கும்
குழந்தைகளும் இந்த உலகத்தில்
படும் வேதனைகளுக்கு அளவேயில்லை

உங்கள் இந்த அற்புதமான கவிதைக்கு
எனது சிறு அன்பளிப்பாய் 1000- இ பணம் தோழியே

அக்னி
30-09-2007, 02:35 PM
கருவில்லாததால் கருவானது...
உருவானது கவிதை...

தாய்மை...
கவிதைக்கு கருவானதற்கு
பூரிக்குமா...
கருவாகாத கவிதைக்காக
தவிக்குமா...

சேய்மை,
சுமக்காத கருப்பை...
தாய்மையை,
சுமக்க வைத்தது (உலக) வெறுப்பை...

ஏங்கும் மனம்,
நிதமும்..,
கருக்கட்டுகின்றது கண்களில்...
பிரசவிக்கின்றது கண்ணீரை...

பாராட்டுக்கள் பூமகள்...

சிவா.ஜி அவர்களின், இதே கரு தரித்த, கருத்தரிக்கா கவிதை...
நினைவுக்கு வருகின்றது...
காய்க்காத மரமொன்று (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11846)

பூமகள்
30-09-2007, 02:53 PM
மிக்க நன்றி அன்புத் தோழி இனி...!
உனது இ பண அன்பளிப்பிற்கும் விமர்சன வாழ்த்திற்கும் நன்றிகள்.

ஓவியன்
30-09-2007, 02:59 PM
தாய்மை...
கவிதைக்கு கருவானதற்கு
பூரிக்குமா...
கருவாகாத கவிதைக்காக
தவிக்குமா...

சேய்மை,
சுமக்காத கருப்பை...
தாய்மையை,
சுமக்க வைத்தது (உலக) வெறுப்பை...

அன்பு அக்னி!

அழகான வரிகள், உங்கள் வரிகளின் தரத்தில் லயத்தில் இலயித்தேன் - பாராட்டுக்கள் நண்பரே!.

அக்னி
30-09-2007, 03:14 PM
அன்பு அக்னி!

அழகான வரிகள், உங்கள் வரிகளின் தரத்தில் லயத்தில் இலயித்தேன் - பாராட்டுக்கள் நண்பரே!.
நன்றி ஓவியன்...
சில விடயங்கள் மனதைக் கனதியாக்கும்...
இங்கு பாதிக்கப்படும் தாய்மையே, உலக வசைகளாலும் தண்டனைக்குள்ளாவதே வேதனை...

பூமகள்
30-09-2007, 03:17 PM
தாய்மை...
கவிதைக்கு கருவானதற்கு
பூரிக்குமா...
கருவாகாத கவிதைக்காக
தவிக்குமா...
மிகவும் ரசித்த வரிகள்... !! பின்னூட்ட மன்னர் என்று பட்டமே கொடுக்கலாம். அசத்தலாய் அமைந்திருக்கிறது உங்களின் பின்னூட்டக் கவி.
வாழ்த்துக்கள் அக்னி அண்ணா.

அக்னி
30-09-2007, 03:22 PM
மிகவும் ரசித்த வரிகள்... !! பின்னூட்ட மன்னர் என்று பட்டமே கொடுக்கலாம். அசத்தலாய் அமைந்திருக்கிறது உங்களின் பின்னூட்டக் கவி.
வாழ்த்துக்கள் அக்னி அண்ணா.
நன்றி...
பிறவா பிறையே என்ற தலைப்பிற்குக் காரணம் அல்லது அர்த்தம் என்ன?

பூமகள்
30-09-2007, 03:31 PM
பிறவா பிறையே...!!
வானமெனும் கருப்பையில் பிறக்காத சிறு மழலையை நிலவின் பிறையாக இங்கு முழு நிலவை வளர்ந்தவராகவும்.. வளரும் பிறை நிலவை சிறு குழந்தையாகவும் நினைத்து வைத்த கவிப்பெயர் தான் "பிறவா பிறையே..!!"

அக்னி
30-09-2007, 03:35 PM
அப்போ பிறந்தால் பிறையல்ல... முழுமதி...
பிறையாய் பிறந்தால் குறையன்றோ..?
வளரா பிறையே எனலாம் என்று எண்ணுகின்றேன்...
ஏக்கக் குறியாகவும், கருவைச் தன்னுள் அடக்கியும் வரும் என்று கருதுகின்றேன்...
கருதினால், அது சரியென்றால், விரும்பினால் மாற்றவும்...

பூமகள்
30-09-2007, 03:46 PM
அப்போ பிறந்தால் பிறையல்ல... முழுமதி...
பிறையாய் பிறந்தால் குறையன்றோ..?

அன்பின் அக்னி அண்ணா...
நான் தெளிவாக விளக்கத் தவறிவிட்டேனோ??:confused:
பிறை நிலவு பிறந்தாலும் சிறு குழந்தைதானே அண்ணா.
வளர்ந்து ஆளானால் தானே முழுமதி.
பிறையாக பிறப்பது குறையல்ல அண்ணா. அது அளவில் தான் சிறியது மழலை போல.. ஆனால்.. பிறையில் குறையில்லையிங்கே..!!

வளரா பிறையே எனலாம் என்று எண்ணுகின்றேன்...
ஏக்கக் குறியாகவும், கருவைச் தன்னுள் அடக்கியும் வரும் என்று கருதுகின்றேன்...
கருதினால், அது சரியென்றால், விரும்பினால் மாற்றவும்...
உங்களின் தேர்வுப்பெயரும் அருமை. என் விளக்கம் சரியென்று உங்களுக்கு தெரியவில்லையென்றால் நீங்கள் சொன்ன "வளரா பிறையே..!!" என்பதையே தாராளமாக மாற்றுகிறேன் அக்னி அண்ணா.

அமரன்
30-09-2007, 03:46 PM
அப்போ பிறந்தால் பிறையல்ல... முழுமதி...
பிறையாய் பிறந்தால் குறையன்றோ..?
வளரா பிறையே எனலாம் என்று எண்ணுகின்றேன்...
ஏக்கக் குறியாகவும், கருவைச் தன்னுள் அடக்கியும் வரும் என்று கருதுகின்றேன்...
கருதினால், அது சரியென்றால், விரும்பினால் மாற்றவும்...
மன்னிக்கவும் அக்னி...
அமவாசை வானில் பிறக்கும் மூன்றாம் பிறைதான் நிறைநிலவாகிறது..
கருப்பையில் தரிக்கும் மனித பிறை குறையாகவே பிறக்கிறது..
உடல் வளர, நிறைமதியாக, அனுபவம் பெருக, மொத்தாமாய் முதிர வெளியேயும் சில விசைகள் உண்டல்லவா?

அக்னி
30-09-2007, 03:53 PM
அன்பின் அக்னி அண்ணா...
நான் தெளிவாக விளக்கத் தவறிவிட்டேனோ??:confused:
பிறை நிலவு பிறந்தாலும் சிறு குழந்தைதானே அண்ணா.
வளர்ந்து ஆளானால் தானே முழுமதி.
பிறையாக பிறப்பது குறையல்ல அண்ணா. அது அளவில் தான் சிறியது மழலை போல.. ஆனால்.. பிறையில் குறையில்லையிங்கே..!!

உங்களின் தேர்வுப்பெயரும் அருமை. என் விளக்கம் சரியென்று உங்களுக்கு தெரியவில்லையென்றால் நீங்கள் சொன்ன "வளரா பிறையே..!!" என்பதையே தாராளமாக மாற்றுகிறேன் அக்னி அண்ணா.


மன்னிக்கவும் அக்னி...
அமவாசை வானில் பிறக்கும் மூன்றாம் பிறைதான் நிறைநிலவாகிறது..
கருப்பையில் தரிக்கும் மனித பிறை குறையாகவே பிறக்கிறது..
உடல் வளர, நிறைமதியாக, அனுபவம் பெருக, மொத்தாமாய் முதிர வெளியேயும் சில விசைகள் உண்டல்லவா?
அப்போ கொண்ட தலைப்பு சரியே... அதுக்குள்ள இவ்ளோ இருக்கா..?
விளக்கிய பூமகளுக்கும் அமரனுக்கும் நன்றி...
இதில் மன்னிக்க ஏது இருக்கிறது...
விளங்கா குழப்பத்தில் தான் கேட்டேன், விளங்கியது மகிழ்வே...
நன்றியுடன்...

பூமகள்
30-09-2007, 03:57 PM
மிக்க நன்றிகள் அண்ணா.
நான் யோசித்த தலைப்பினைப் பற்றி கேட்டு என்னையும் தெளிவுபடுத்தி அறியவைத்தீர்கள்.
நன்றிகள் அக்னியாரே....!!

அமரன்
30-09-2007, 07:03 PM
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு எட்டாச்சு...!!
எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!
இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???


இணைவு துணைவந்து
அகவை எட்டாகியும்
எட்டா கனியாக
பிறவி பூரணம்..!

பேச்சிலும் மூச்சிலும்
தவழும் மழலை
தரித்ததும் மரித்ததை
உருவகிக்கிறதா பீனிக்ஸ்?

'இங்கு'த்து'வென்னை
சுருக்கிலிட்டாலும்
சுருக் குறையாது..!



விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்கக்கூட
காசுபணம் எனக்கிலையே...!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!
ஆலமர மாட்சியும்
ஆளை உருக்கும் வரட்சியும்
ஆதரவை விலக்கி
கரன்சியுடன் கைகோர்க்க
பாதாளத்தில் மீட்சி...

தைத்து வதைக்கும்
நச்சில் தோய்த வேல்கள்
நககீறல் வலியை
வலிந்து நீனைவூட்டுகிறன..

இங்கும் தொடர்ந்தும்
அவசிமாகிறது
சுருக்'கு கயிறு..!


காத்திருந்து கருகினாலும் - உன்

நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???

விசித்திர சித்திரமும்
சிற்பி பார்வை படாகல்லும்
பீனிக்ஸை வெளியேற்ற

உதயமாகி அஸ்தமிக்கும்
ஈசன் தலை வெள்ளிகயிறு
கட்டி இழுக்கிறது..

முரணுடன்
முரண்பட வைக்கிறது..!

ஏரோடி விதைதூவி
ஊக்கிகள் விசிறியதும்
முளைவிட்ட நிலம்
விளைச்சல் கொடுக்காது
தரிசாக இருந்தால்
உழவர்குலாம் படும் வேதனை
சொல்லி மாளாது
சொல்லில் அடங்காது...

அடங்கப் சாபமிடுவோம்
இவ்வகை கவிதைகள்..

கவிக்கருவுக்கு கருவிட்ட
கருமையில் உழலும் உறவு
கருவுற்று இன்புற
பிரார்த்தனைகளை துணையாக்குகின்றேன்...

இலக்கியன்
30-09-2007, 08:55 PM
தாயின் உணர்வுகளை சுமந்த வரிகள் உணர்வு பூர்வமாக உள்ளது அனுவவித்து எழுதியுள்ளிர்கள். அயலவரின் வசை பாடல்களும் வறுமையும் வெறுமையும் வாழ்வியலில் பெரும் கொடுமை என நிருபிக்கும் வரிகள்

பூமகள்
01-10-2007, 08:01 AM
இணைவு துணைவந்து
அகவை எட்டாகியும்
எட்டா கனியாக
பிறவி பூரணம்..!

பேச்சிலும் மூச்சிலும்
தவழும் மழலை
தரித்ததும் மரித்ததை
உருவகிக்கிறதா பீனிக்ஸ்?

மிகச் சரியான விளக்கம். மழலை தரித்து கருவிலேயே மரித்ததைக் குறிக்கவே பீனிக்ஸ் இங்கே உருவகமாக்கினேன்.

அடங்கப் சாபமிடுவோம்
இவ்வகை கவிதைகள்..
கவிக்கருவுக்கு கருவிட்ட
கருமையில் உழலும் உறவு
கருவுற்று இன்புற
பிரார்த்தனைகளை துணையாக்குகின்றேன்...

ஆழமான கவி வார்த்தைகளிலேயே அழகாக விமர்சித்திருந்தீர்கள் அமர் அண்ணா. மோதிரக் கை குட்டு கிடைத்துவிட்டது.:icon_rollout: கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
மிகுந்த நன்றிகள் அண்ணா.

பூமகள்
01-10-2007, 08:09 AM
தாயின் உணர்வுகளை சுமந்த வரிகள் உணர்வு பூர்வமாக உள்ளது அனுவவித்து எழுதியுள்ளிர்கள்.
மிகுந்த நன்றிகள் இலக்கியரே...!!
உங்களின் ஊக்கம் கண்டு மகிழ்ச்சி.:icon_rollout:

ஆதவா
05-10-2007, 10:24 AM
சிசுக்களை உயிர்ப்பிக்கா மனம் படும் வேதனையை கிட்ட நின்று கவனித்திருக்கிறேன். அதன் கவலை சுற்றத்தாருக்கும் சேர்த்துதான் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதிலும் கவிதைப்படி ஒரு ஏழைக்கு இக்கதியென்றால் பாவம் என்ன செய்யமுடியும்? தத்தெடுக்கவோ, வாடகைத் தாய்க்கோ, சோதனைக் குழாய்க்கோ வழியில்லை. காசில்லை... (சமீபத்தில் பிள்ளைகளை விற்பது பற்றி கவிதை எழுதினேன்...அங்கும் காசில்லை.)

பொருளாதாரப் பிரச்சனைகள் ஏராளம். இவ்வகையில் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதற்கென்று பட்டமும் கொடுப்பார்கள். நமது சமூகம் சீர்கெட்டு கிடக்கிறது.

விமர்சனங்கள் கவிதைக்கு நிகரான அழகு......

குறைக்க குத்திக் காட்டிய அமரனின் விமர்சனக் கவி மிக அருமை..

வாழ்த்துக்கள்

பூமகள்
07-10-2007, 05:57 PM
சிசுக்களை உயிர்ப்பிக்கா மனம் படும் வேதனையை கிட்ட நின்று கவனித்திருக்கிறேன். அதன் கவலை சுற்றத்தாருக்கும் சேர்த்துதான் என்பதை நாம் மறக்கக் கூடாது.
வாழ்த்துக்கள்
உண்மை தான் ஆதவா.. நானும் கிட்ட இருந்து கவனித்துக் கொண்டுள்ளதன் விளைவு தான் இக்கவி. விரைவில் இத்தகைய மனம் கனக்கும் கவி வடிக்கா வண்ணம் இந்த கவிக்கரு உருவாகாமல் அவர்களின் வயிற்றில் கவிதையாய் கரு உருவாகட்டும்.
பிராத்திப்போம் மன்றத்தில் அனைவரும் சேர்ந்து, உலகத்தின் மழலை இல்லாத தம்பதிகளுக்காய்..!!