PDA

View Full Version : அம்மா



இலக்கியன்
29-09-2007, 07:39 PM
http://img229.imageshack.us/img229/6884/ravivarmaphoto1wa7.th.jpg (http://img229.imageshack.us/my.php?image=ravivarmaphoto1wa7.jpg)

உன் முகம் காணாது
என் மனம் வாடுதம்மா

கண்களின் ஈரம் அது
என்னை நனைக்குதம்மா

உன் இமைகள் துயில்கையில்
என் கண்கள் ஏங்குதம்மா

பாசக் கயிற்றினாலே
என் இதயம் நோகுதம்மா

உன் குரல் கேட்கையிலே
என் உள்ளம் ஆறுதம்மா

வாழ்க்கையின் வழியில்
முட்கள் குற்றுதம்மா

வலியின் நோவுகள்-உன்
நினைவு ஆற்றுதம்மா

அன்புரசிகன்
29-09-2007, 07:58 PM
உன் முகம் காணாது
என் மனம் வாடுதம்மா

கண்களின் ஈரம் அது
என்னை நனைக்குதம்மா


உன் குரல் கேட்கையிலே
என் உள்ளம் ஆறுதம்மா

வலியின் நோவுகள்-உன்
நினைவு ஆற்றுதம்மா

ஆழமாக என்மனதில் பாய்ந்த வரிகள்.

அதுவும் அன்னையைப்பிரிந்திருக்கும் இந்த நேரத்தில்..............

விரைவில் வீடு செல்லவேண்டும் என்ற மன ஓட்டம் என் நெஞ்சில்.

பூமகள்
30-09-2007, 08:47 AM
எவ்வளவு வயதாயினும் அம்மாவின் மடியைத் தேடும் என்றும் நம் உள்ளம் ஒரு குழந்தையாக...!!
உங்களின் பிறந்த நாளில் பெற்றெடுத்த தாய் முகத்தை நினைத்து உளம் உருகி வடித்த கவி மெய் சிலிர்க்க வைக்கிறது இலக்கியரே..!!
உங்கள் தாய் மிகவும் தவம் செய்திருக்க வேண்டும் இப்படி ஒரு மகனைப் பெற..!!
அந்த அன்னைக்கு என் தலை வணங்குகிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அன்பு இலக்கியரே..!!

இளசு
30-09-2007, 08:52 AM
வலி வரும்போதெல்லாம்
உள்ளிருக்கும் குழந்தைமனம்
வெளிவருகிறதல்லவா..

வலி, பசி தீர்க்கும் எதுவுமே தாய்..
செவிலி கூட அதனால்தான் தாய்..

பாராட்டுகள் இலக்கியன்..

சூரியன்
30-09-2007, 08:55 AM
அன்பு மற்றும் பாசம் நிறைந்த அன்னையை நினைத்து எழுதிய கவிதை,பிறந்தநாளில் தாயின் முகத்தை பார்க்க முடியாத ஏக்கமா?

கவிதை அருமை நண்பரே..

க.கமலக்கண்ணன்
30-09-2007, 09:14 AM
அன்னை மட்டுமே
அன்பை மட்டும் அல்ல
அன்னத்தை தரமுடியும்
அள்ள அள்ள குறையாத
அமுதசுபியாய்
அவள் அம்மா மட்டும்
அல்ல நிஜகடவுளும் தான் இதை உங்களின்
அழகிய வரிகள்
அற்புதமாய்
அறிவுத்துகின்றன... நண்பா...

ஜெயாஸ்தா
30-09-2007, 09:28 AM
குழந்தைக்கு பசியென்பதை
அதுவே அறியுமுன்னே
பாலமிர்தம் ஊட்டுபவள்
தாய்...!
பிரதி பலன் எதிர்பாரா
அன்பை கொட்டுபவள்
தாய்...! தாய் மட்டும்தான்...!

எத்தனையோ வலிகளை தாயின் நினைவு ஆற்றுகிறது என்பது அருமையான வரிகள் இலக்கியன்.

இலக்கியன்
30-09-2007, 08:58 PM
கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நனறி

மீனாகுமார்
01-10-2007, 04:25 PM
அனுபவித்த வரிகள்.. அன்னையின் துணை மட்டும் எப்போதும் இருந்து விட்டால்.. வேறு என்ன வேண்டும் ?

இலக்கியன்
14-10-2007, 05:22 PM
அனுபவித்த வரிகள்.. அன்னையின் துணை மட்டும் எப்போதும் இருந்து விட்டால்.. வேறு என்ன வேண்டும் ?

நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு மீனாகுமார்

ஓவியன்
19-10-2007, 05:11 PM
ஒருவன் எத்தனை மொழி தெரிந்திருந்தாலும் ஆபத்தில் கத்தும் வார்த்தை "அம்மா" தானே...!

எத்தனை பிறப்பெடுத்தாலும் தாயயுள்ளத்திடம் நம் கடனை அடைக்கவே இயலாது...
எத்தனை கவி வடித்தாலும் அன்னை பெருமை அத்துணையும் சொல்லி மாளாது....

பாராட்டுக்கள் இலக்கியன்!.

யவனிகா
19-10-2007, 05:25 PM
என்ன சொல்வது? இன்னும், இந்த நூற்றாண்டிலும் கலப்படம் கண்டறியாத, மாற்றுக் கருத்துக்கே இடமின்றி மறுக்க இயலா சக்தியொன்று இருக்குதெனில் அது தாயன்பு தான்...மீண்டுமொருமுறை தாய்மைக்கு காணிக்கையாய் நீங்கள் அளித்த கவிதைக்குத் தலை வணங்குகின்றேன்.

நேசம்
19-10-2007, 05:26 PM
எந்த பிரதிபலனும் இல்லாமல் அன்பை செலுத்துவது தாய் மட்டுமே. மனதை என்னமோ செய்து விட்டது. அன்பு சொல்வது போல் அன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டிவிட்டது. வாழ்த்துக்கள் இலக்கியன்

சுகந்தப்ரீதன்
21-10-2007, 10:07 AM
இலக்கியரே மீண்டுமோர் இலக்கியமாய் உங்களின் தாய் கவிதை...! யவனி அக்கா சொன்னதுபோல் இந்த நூற்றாண்டிலும் கலப்படமில்லாத ஒரு உறவு... அது தாய் என்னும் தனி உறவு.. அதுதான் ஒவ்வொரு உயிர்க்கும் வரவு... வாழ்த்துக்கள் இலக்கியரே...!