PDA

View Full Version : புரிந்து கொள்ளுங்கள்



இலக்கியன்
28-09-2007, 06:27 PM
http://img408.imageshack.us/img408/9585/rotatingearthanimationdt6.th.gif (http://img408.imageshack.us/my.php?image=rotatingearthanimationdt6.gif)
சுற்றுகின்ற பூமியிலே நாம்
நிரந்தரம் இல்லை
இதை சிந்திக்க மனிதனுக்கு
நேரமும் இல்லை

சத்தம் போட்டுயாரும் இங்கு
சண்டைபோடத்தேவை இல்லை
நாளை இந்த பூமியில்
நாம் யாரும் இல்லை

உயர்வு தாழ்வு இங்கு
தேவை இல்லை
நாளை நீ போகும் போது
உன் கூடவருவது இல்லை

சாதி மத பேதம் இங்கு
பெரும் தொல்லை
அதனால் தமிழனின் வாழ்வில்
முன்னேற்றம் இல்லை

கறுப்பு வெள்ளை என்று
இங்கு யாரும் இல்லை
இது மாயையின் தோற்றம்தான்
நீ புரிந்து கொள்வது இல்லை

இங்கு வாழ்வதுதான்
வாழ்க்கை இல்லை
இதைப் புரியாத மனிதன்
பூரணமனிதனும் இல்லை

பழய கிறுக்கல் இது

arun
28-09-2007, 06:28 PM
உண்மை நிலையை கவிதையாய் வடித்து உள்ளீர்கள் பாராட்டுக்கள்

அறிஞர்
28-09-2007, 06:30 PM
பழைய கிறுக்கல் அருமையாக இருக்கிறது.. இலக்கியா..

நிரந்தரமில்லா.. உலகில்..
மனிதன் போடும் ஆட்டம்..
ஒரு நாள் அடங்கும் என்பதை
அறியாமல் பலர் ஆட்டம் போடுகிறார்கள்...

இலக்கியன்
28-09-2007, 06:33 PM
உண்மை நிலையை கவிதையாய் வடித்து உள்ளீர்கள் பாராட்டுக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
அன்புடன் இலக்கியன்

இலக்கியன்
28-09-2007, 06:35 PM
பழைய கிறுக்கல் அருமையாக இருக்கிறது.. இலக்கியா..

நிரந்தரமில்லா.. உலகில்..
மனிதன் போடும் ஆட்டம்..
ஒரு நாள் அடங்கும் என்பதை
அறியாமல் பலர் ஆட்டம் போடுகிறார்கள்...

ஆம் அறிஞரே
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

அமரன்
28-09-2007, 08:01 PM
நிலையாமை உலகில்
நிலைத்து நிற்கும்
எமது அடையாளங்களை
நல்லதாக பொறிப்போமே...!
பாராட்டுகள் இலக்கியன்.

பூமகள்
29-09-2007, 10:01 AM
"ஆடாத ஆட்டங்கள்
அடங்கிப் போகும்
ஆவி அடங்கும்
வேளையில்..!
உணர்ந்து கொண்டால்
புது விடியல்
பிறக்கும்
காலையில்..!!"
அற்புதக் கருத்துக்களுடன் கூடிய அழகான கவி.. :icon_b:இதைக் கிறுக்கல் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்..இலக்கியரே...!!:icon_rollout:
நல்ல கவிதையை வடித்து விட்டு கிறுக்கல் என்று சொல்லலாமா?? :confused:

சுற்றுகின்ற பூமியிலே நாம்
நிரந்தரம் இல்லை
இதை சிந்திக்க மனிதனுக்கு
நேரமும் இல்லை
துவக்கமே அற்புதமான வரிகளோடு ஆரம்பம். கலக்குங்க நண்பரே...!!:cool:
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.