PDA

View Full Version : BOSS பற்றித் தெரியுமா..?

vskumaran
28-09-2007, 06:02 PM
BOSS - Bharath Operating System Solutions என்ற அமைப்பு லினக்ஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்திய சூழலுக்கேற்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பை (BOSS 2.0) கடந்த 17ஆம் தேதி வெளியிட்டிருப்பதாக அறிந்தேன்.. யாராவது உபயோகிக்கிறீர்களா..? கொஞ்சம் விளக்கமாக விவரிக்க முடியுமா..?

அறிஞர்
28-09-2007, 06:05 PM
இது புதுத்தகவலாக இருக்கிறது.. நம் நண்பர்கள் அவசியம் உதவுவார்கள்..

தங்களை பற்றி அறிமுகம் செய்துக் கொள்ளலாமே

vskumaran
28-09-2007, 06:14 PM
இது புதுத்தகவலாக இருக்கிறது.. நம் நண்பர்கள் அவசியம் உதவுவார்கள்..

http://bosslinux.in தளத்தில் படித்தது..

BOSS Version 2.0 Successfully Released
Finally our Indian Version of GNU/Linux is released
on 17th September 2007 in the Connect 2007 program.

2.0 Features:Gnome - 2.18
Orca Screen Reader
Espeak
Gdesktlets
Beryl 2.0 - an excellent 3D Desktop
2.6.21 kernel
Onscreen keyboard support
Openoffice 2.2 with 2 Indian language support
at present in Hindi and Tamil
with plans to move to other languages as well.
A pleasing Desktop background and icons.
Enhanced BOSS-Presentation tool
Complete Tamil and Hindi desktop
Update manager for updatng your BOSS to the latest packages and applications
For other details about the BOSS Aanat Version, please see the Release Notes

தங்களை பற்றி அறிமுகம் செய்துக் கொள்ளலாமே

என்னைப் பற்றி இராசகுமாரனுக்கு முன்னரே தெரியுமென்பதால் அறிமுகம் தேவையில்லையென்று இருந்து விட்டேன்.. சீக்கிரமே அறிம்ய்கம் பகுதியில் குறிப்புத் தருகிறேன்..

பாரதி
29-09-2007, 01:39 AM
நான் அறியாத தகவல் நண்பரே..! அறியத்தந்தமைக்கு நன்றி. நீங்கள் தந்திருக்கும் சுட்டியிலேயே இந்த மென்பொருளைப் பற்றிய தகவல்களும், பதிவிறக்கம் மற்றும் நிறுவதலுக்கான வழிகாட்டியும் இருக்கின்றனவே. லினக்ஸ் குறித்து நம்மிடையே இன்னும் போதுமான ஆர்வமும் முயற்சியும் இல்லாமை எனக்கு வருத்தத்தையே தருகிறது.

ஜெயாஸ்தா
29-09-2007, 01:40 AM
உங்களைப் பற்றி நாங்களும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அறிமுகம் தாருங்கள் நணபரே..!

aren
29-09-2007, 02:45 AM
வாருங்கள் VSK. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

தங்கவேல்
30-09-2007, 03:32 AM
புது தகவல். லினக்ஸ் மற்றும் வின்டோஸ் இரண்டையும் ஒரு கணிணியில் பயன் படுத்த முடியுமா ?

நேசம்
30-09-2007, 07:57 AM
சிறப்பான முறையில் செயல் படுகிறாதா. தெரிந்தவர்கள் சொல்லவும்

praveen
30-09-2007, 08:28 AM
புது தகவல். லினக்ஸ் மற்றும் வின்டோஸ் இரண்டையும் ஒரு கணிணியில் பயன் படுத்த முடியுமா ?

என்ன தங்கவேல் இப்படி கேட்டு விட்டீர்கள், உலகில் 80% பேர் அப்படித்தானே DUAL BOOT மூலம் பயன்படுத்துகிறார்கள். முதலில் விண்டோஸ் பதிந்து பின் லினக்ஸ் நிறுவ வேண்டும்.

தங்கவேல்
30-09-2007, 08:31 AM
அப்படியா... ஆஷோ எனக்கு படக்கென்று புரியாது. கொஞ்சம் விளக்கமா சொன்னா பரவாயில்லை எப்படி பதிவது என்று...

praveen
30-09-2007, 08:33 AM
சிறப்பான முறையில் செயல் படுகிறாதா. தெரிந்தவர்கள் சொல்லவும்

தற்போது தான் வெளியிட்டுள்ளார்கள், இதுவரை ஒரே ஒரு பக் தான்ன் அதிகாரப்பூர்வமாக, ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. நிறைய பேர் பலதரப்பட்ட கம்ப்யூட்டரில் பயன்படுத்தினால் தான் நிறை/குறை தெரியும்.

700 எம்பி அளவில் உள்ள அந்த CD பதிவிறக்கம் செய்வது, இந்தியாவில் யோசிப்பார்கள். விரைவில் ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் புத்தகத்தில் இதனை இலவசமாக தருவார்கள். அதன் பின்னரே தெரிய வரும்.

மேலே சொன்ன லினக்ஸ் சென்னையில் உருவாக்கப்பட்டதாகையால் தமிழ் மற்றும் இந்தி இரண்டு இந்திய மொழி மட்டுமே, தற்போதைக்கு உண்டு விரைவில் மற்ற மொழிகளுக்கு இடைமுகம் கிடைக்கும்.

praveen
30-09-2007, 08:40 AM
அப்படியா... ஆஷோ எனக்கு படக்கென்று புரியாது. கொஞ்சம் விளக்கமா சொன்னா பரவாயில்லை எப்படி பதிவது என்று...

முதலில் நீங்கள் விண்டோஸ் எக்ஸ்..பி/2000 உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருத்தல் வேண்டும்.

உங்களின் முக்கியமான தகவல்/பைல் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து dvd/cd மூலம் பேக்கப் எடுத்து விட வேண்டும். - இது ஒரு முன்னெச்சரிக்கைக்காக

பின் ஒரு பார்ட்டிசன் (10 ஜி.பி) அளவுக்கு பிரியாக விட்டு அதனை லினக்ஸ் பயன்பாட்டிற்காக விட்டு விட வேண்டும்.

லினக்ஸ் dvd/cd யை அதற்குரிய டிரைவில் இட்டு அதன் முலம் கம்பூயூட்டரை பூட் செய்ய வேண்டும்.

பின் ஸ்கீரினில் வருவதை பின்பற்றவும்.

மேலும், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் /பேச எனக்கு PM செய்யுங்கள்.

vskumaran
30-09-2007, 07:30 PM

அந்த தளத்தில் உள்ள 3 பைல்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா..? பதிவிறக்கியபின் எப்படி பதிவது என்று விளக்கமாக கூறவும்.. (நான் இப்போது எக்ஸ்பி உபயோக்கிறேன்..)

praveen
01-10-2007, 05:32 AM
அதில் இன்ஸ்டால் செய்வதற்கான ஒரு பூட்டபிள் CD இமேஜ் ஒன்று உள்ளது, இது தான் பதிய தேவையானது.

மற்றவைகள்
ரிக்கவரி யுட்டிலிட்டி - பதிந்த பின் லினக்ஸ் கெட்டுப்போனால் தேவைப்படுவது.

லைவ் சிடி - இது லினக்ஸ் நமது வண்தட்டில் (ஹார்டு டிஸ்க்)ல் பதியாமால் அப்படியே சிடியில் இருந்தவாரே இயங்க வைக்க.

suraj
11-10-2007, 04:25 PM
2 நாள்களில் என் ரிஸல்டை சொலகிறேன்.
புதிய அரிய தகவல் தந்தvskumaran,asho நன்றிகள்.

ஆதவா
12-10-2007, 01:01 PM
அட! நான் கூட* சிவாஜி பாஸ் னு நினைச்சேன். தகவல் நல்லா இருக்கே

vskumaran
12-10-2007, 05:47 PM
அதில் இன்ஸ்டால் செய்வதற்கான ஒரு பூட்டபிள் CD இமேஜ் ஒன்று உள்ளது, இது தான் பதிய தேவையானது.

மற்றவைகள்
ரிக்கவரி யுட்டிலிட்டி - பதிந்த பின் லினக்ஸ் கெட்டுப்போனால் தேவைப்படுவது.

லைவ் சிடி - இது லினக்ஸ் நமது வண்தட்டில் (ஹார்டு டிஸ்க்)ல் பதியாமால் அப்படியே சிடியில் இருந்தவாரே இயங்க வைக்க.

தகவலுக்கு மிக்க நன்றி.. பிரவீன்.. முதலில் வன்தட்டில் பதியாமல் சிடியில் இருந்து உபயோகித்துப் பார்க்க முடிவு செய்துள்ளேன்.. பதிவிறக்கம் செய்து விட்டேன்.. எப்படி உபயோகிப்பது என்று கூறவும்..

praveen
13-10-2007, 04:46 AM

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் CD மூலம் பூட் செய்யுமாறு உங்கள் கம்ப்யூட்டர் சீமாஸ் செட்டப்பில் செய்ய வேண்டும். இதற்கு உங்கள் கம்ப்யூட்டருடன் வந்த மேனுவலையோ/மதர்போர்டு கூட வந்த புக்கையோ பாருங்கள் தெரியவரும்.

இல்லாவிட்டால் உங்கள் மதர்போர்டு பெயர்/மாடல் பற்றி கூறுங்கள், சரியாக விளக்குகிறேன்.

பின் அந்த CD யை (ஒரு CD இமேஜ் பதிவிறக்கியதன் மூலம் ஏற்படுத்திய அந்த லைவ் CDயை) CD ட்ரைவில் இட்டு கம்ப்யூட்டரை அனைத்து திரும்ப ஆன் செய்தால், CD மூலம் பூட் ஆகும். பின் ஸ்கிரினில் தெரிவதை பாலோ செய்ய வேண்டியது தான்.

vskumaran
19-10-2007, 07:12 PM
லைவ் சிடி - இது லினக்ஸ் நமது வண்தட்டில் (ஹார்டு டிஸ்க்)ல் பதியாமால் அப்படியே சிடியில் இருந்தவாரே இயங்க வைக்க.

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் CD மூலம் பூட் செய்யுமாறு உங்கள் கம்ப்யூட்டர் சீமாஸ் செட்டப்பில் செய்ய வேண்டும்.

பின் அந்த CD யை (ஒரு CD இமேஜ் பதிவிறக்கியதன் மூலம் ஏற்படுத்திய அந்த லைவ் CDயை) CD ட்ரைவில் இட்டு கம்ப்யூட்டரை அனைத்து திரும்ப ஆன் செய்தால், CD மூலம் பூட் ஆகும். பின் ஸ்கிரினில் தெரிவதை பாலோ செய்ய வேண்டியது தான்.

தாங்கள் கூறியபடியே `கம்ப்யூட்டர் சீமாஸ் செட்டப்பில் கம்ப்யூட்டர் CD மூலம் பூட் செய்யுமாறு மாற்றி விட்டு CD இமேஜ் பதிவிறக்கியதன் மூலம் ஏற்படுத்திய லைவ் CDயை CD ட்ரைவில் இட்டு கம்ப்யூட்டரை அனைத்து திரும்ப ஆன் செய்தேன்'. ஆனாலும் பூட் ஆகவில்லை...

பதிவிறக்கிய கோப்பு WinRAR பைலாக உள்ளது.. அதை அப்படியே ஒரு லைவ் சிடி-யாகவும்.. எக்ஸ்ட்ராக்ட் பண்ணி ஒரு லைவ் சிடி-யாகவும் முயன்று விட்டேன்.. இரு வழிகளிலும் பூட் ஆகவில்லை.. தாங்களும் முயற்சித்துப் பார்த்து கருத்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்..

praveen
20-10-2007, 04:59 AM
உங்களுக்காக அதை நான் பதிவிறக்கி முயற்சிக்கிறேன். 2 நாள் அவகாசம் கொடுங்கள்.

suraj
20-10-2007, 06:14 AM
எனக்கும் இதே பிரச்சனை(பூட் ஆகவில்லை) முதல் தரவிறக்கத்தில் வந்தது மீண்டும் தரவிறக்கினேன் பிரச்சனை ஓய்ந்தது.
காரணம் என்னவென்று தெரியாது

நான் தற்போது உபயோகபபாடுததுகிறேன்..நன்றாக உள்ளது... இந்தியர்களும் கல்க்குகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

லைவ் சிடி எழுதும் போது
* 4x வேகத்தில் எழுதுவது சிறந்தது. (இத கொஞ்சம் கவனிங்க)

நான் லைவ் சிடியையே தரவிறக்கினேன். நன்றாக வேலை செய்கிறது.
அதன் இமேஸ்
http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/BOSS.jpg

லைவ் சிடி இமேஜை mount செய்து பார்த்தால் ஒன்றுமே தெரியாது. பைல்ஸ் பார்க்கண்ணும்னே PowerISO மென்பொருள் உபயோகிக்கவும்

PowerISO வில்
http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/BOSS1.jpg

நன்றி.

---------------------------------------------------------------

praveen
20-10-2007, 08:01 AM
எனக்கும் இதே பிரச்சனை(பூட் ஆகவில்லை) முதல் தரவிறக்கத்தில் வந்தது மீண்டும் தரவிறக்கினேன் பிரச்சனை ஓய்ந்தது.
காரணம் என்னவென்று தெரியாது

முதலில் பதிவிறக்கியது checksum எர்ரர் இருந்திருக்கும். அந்த முதலில் பதிவிறக்கியதை அவர்கள் தந்த checksum உடன் சோதித்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கலாம்.

இந்தியர்களும் கல்க்குகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

நீங்கள் எந்த நாட்டவர், உங்கள் பேச்சு/வார்த்தை தொனியை மாற்றுவது நல்லது.

லைவ் சிடி எழுதும் போது
* 4x வேகத்தில் எழுதுவது சிறந்தது. (இத கொஞ்சம் கவனிங்க)

தற்போதைய டி.வி.டி ரைட்டர்களில் CDகளில் ரைட் செய்ய குறைந்த பட்ச வேகமே 16 x தான். எனவே இமேஜ் செலக்ட் செய்து ரைட் செய்யும் போது உங்கள் ரைட்டரில் காட்டுவதில் மிக குறைந்த அளவு வேகத்திலே தான் ரைட் செய்வது சிறந்தது.

suraj
20-10-2007, 09:03 AM
நீங்கள் எந்த நாட்டவர், உங்கள் பேச்சு/வார்த்தை தொனியை மாற்றுவது நல்லது.

அண்ணே என் தாய் மொழி மலையாளம். தமிழ்நாட்டில் வளர்ந்தாலும் மலையாள வாசனை குறையவில்லை.
தமிழ் படம் பார்த்து தான் இப்படியாவது பேச பழகிகிட்டேன்.

முயற்சிக்கிறேன்...முடியலனு சொல்லமாடேன். காலேஜில தினம் இதுக்கு டிரைனினங் எடுத்துக்கிட்டு தான் இருக்கேன்..

நன்றி

ஜெயாஸ்தா
20-10-2007, 02:53 PM
அண்ணே என் தாய் மொழி மலையாளம். தமிழ்நாட்டில் வளர்ந்தாலும் மலையாள வாசனை குறையவில்லை.
தமிழ் படம் பார்த்து தான் இப்படியாவது பேச பழகிகிட்டேன்.

முயற்சிக்கிறேன்...முடியலனு சொல்லமாடேன். காலேஜில தினம் இதுக்கு டிரைனினங் எடுத்துக்கிட்டு தான் இருக்கேன்..

நன்றி

அன்பு சுராஜ்....நண்பர் ப்ரவீண் சொன்னது உங்களின் பேச்சுநடையை அல்ல..... இந்தியர்களும் கலக்குகிறார்கள் என்று நீங்கள் சொன்னதில் அந்த ளும்.... என்பதைத்தான்.....! ஏதோ திறமையில்லாதவர்கள், இப்படி அருமையாக செய்துவிட்டார்களே...... என்பது போன்ற பொருள் வரும் அந்த தொனியைத்தான் நண்பர் மாற்றச்சொன்னார். மற்றபடி ஒன்றுமில்லை. மாறாக இப்படிச் சொல்லிப்பாருங்களேன்....
'இந்தியர்கள் நம்மவர்கள் எப்போதுமே கலக்குவாங்கப்பா....!'

(நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.)

suraj
21-10-2007, 02:09 AM
அய்யோ! தவறு செய்து விட்டேனே.(சீக்ரட்ட சொல்லிட்டேனே)
"தொனி" என்ற வார்த்தை இருந்த உடன் என் எழுத்து நடை செரியில்லை என நினைத்துவிட்டேன். (தொனி என்றால் என்னவென்றே தெரியாது. வாசிக்க அப்படி இருந்தது...உம்)

நண்பர்களே மன்னித்து அருள வேண்டும்.

praveen
21-10-2007, 07:23 AM
உங்களுக்காக அதை நான் பதிவிறக்கி முயற்சிக்கிறேன். 2 நாள் அவகாசம் கொடுங்கள்.

அந்த ஓ.ஸ் ல் பூட் செய்து தான் இந்த பதிவை நான் செய்தேன் நண்பர்களே, நன்றாக வடிவமைத்து உள்ளார்கள். தமிழ் இடைமுகம் மாற தான் இயல(தெரிய)வில்லை, ஆனால் நமது தள தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரிகிறது.

இந்த பதிப்பை நான் நம்து தள Unicode Converter மூலம் டைப் செய்தேன்.

திரி பதிந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.

vskumaran
22-10-2007, 06:02 PM
எனக்கும் இதே பிரச்சனை(பூட் ஆகவில்லை) முதல் தரவிறக்கத்தில் வந்தது மீண்டும் தரவிறக்கினேன் பிரச்சனை ஓய்ந்தது. காரணம் என்னவென்று தெரியாது

நான் தற்போது உபயோகபபாடுததுகிறேன்..நன்றாக உள்ளது...

லைவ் சிடி எழுதும் போது * 4x வேகத்தில் எழுதுவது சிறந்தது. (இத கொஞ்சம் கவனிங்க)

நான் லைவ் சிடியையே தரவிறக்கினேன். நன்றாக வேலை செய்கிறது.

தரவிறக்கம் செய்த கோப்பை அப்படியே (சுருக்கப்பட்ட வடிவிலேயே) சிடி-யில் பதிந்தீர்களா அல்லது Extract செய்து சிடி-யில் பதிந்தீர்களா என்று சொன்னால் மிகவும் வசதியாக இருக்கும்..

suraj
23-10-2007, 01:50 PM
நான் ISO பைலை அப்படியே தரவிறக்கி 4x வேகத்தில் பதித்தேன்.

சுட்டி: http://downloads.bosslinux.in/anant/live_cd/v2.0/boss20livecd.iso
அல்லது இது
http://downloads.bosslinux.in/tarang/live_cd/v2.0beta/boss20betalivecd.iso

நன்றி