PDA

View Full Version : மீனாகுமாரின் கவிதை முயற்சி -மீனாகுமார்
28-09-2007, 04:12 PM
வாலிப வயதில் கவிதை எழுத ஆரம்பித்த பொழுது என்னுடைய சில கவிதைகளை என் அன்னையார் படித்துவிட்டு -படிக்கும் பையனுக்கு இதெல்லாம் தேவையில்லை- என்றார்கள். அதென்னமோ உண்மைதான். கடுமையான உழைப்பிற்கு பின்னர் வாழ்வில் இப்போது எனக்கென்று சிறிது நேரம் கிடைத்துள்ளது. ஆனால் இப்போது வாலிப வயதைத் தாண்டி நடுமத்திய வயதிற்கு வந்தாச்சு. இப்போதெல்லாம் மனதில் காதல் நிறைந்திருக்கவில்லை. ஆனால் இந்திய சமூகமும் அதன் பிரச்சனைகளுமே மனதில் நிறைந்திருக்கிறது. இதை எழுத முயலும் போது சிறு கவிதை உருவில் படைக்க முயல்கிறேன். ஆகவே.. இந்த வரிகளில் கவிதை நயத்தை விட சமூக அக்கறையும் செய்திகளுமே முன்னிற்கும்.

கவிதைகள்

1. தமிழுக்கு வீரவணக்கம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7461

2. அழகான இந்தியா
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7968

3. கருவேலம் பூக்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8859

4. உயிரே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8604

5. அன்னையே தெய்வம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10377

6. முத்திரை பேண்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7781

7. மனிதன் வந்தான்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11907

8. ஒற்றுமையே உயர்வு - கவிதைப்போட்டி கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12140

9. வெற்றிக்குடியரசு - கவிதைப்போட்டி கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7732

அக்னி
28-09-2007, 04:22 PM
காதல் கவிதைகள் அதிகம் உண்டு...
சமூகக் விழிப்புணர்வுக் கவிதைகளோ, எழுவது குறைவு...

ஆழ்ந்த அனுபவம்,
அந்த அனுபவச் செறிவை குவிமையப்படுத்தல்,
அத்தோடு சேர்ந்த வார்த்தை நளினம்
என்பன இருந்தாலே சமூகக் விழிப்புணர்வுக் கவிதைகளை படைக்க முடியும்.

அந்த வகையில், நிறைவுகொண்டு விளங்கும் உங்கள் கவிதைகள் சிறப்பு...

என்றும் தொடர்ந்து, புகழ்பெற வாழ்த்துகின்றேன்...

பி.கு:
சாரம் கொண்ட கவிதைகள், சரமாகத் தொடுக்கப்பட்டு, முகர இலகுவாக்கியமைக்கு நன்றி...

பூமகள்
28-09-2007, 04:35 PM
அன்பு மீனாகுமார் அண்ணா,
உங்களின் படைப்புக்களைச் சுவைத்தபின் நேரம் ஒதுக்கி பின்னூட்டம் இடுகிறேன்.
அதற்கு முன் என் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமரன்
28-09-2007, 04:51 PM
கவிதைகளைப் பிரசவிப்பது காதல்
உங்கள் காதல் சமூகத்தின் 'மேல்'.

காட்டாறை அடைத்து வைப்பது கடினம்.
பாயும் போது காணலாம் அதன் நளினம்.

உங்களிடம் கட்டுடைத்த கவிதை தேக்கம்
பொங்கிப் பிரவாகமாக பாயவேண்டும்

இலக்கியன்
28-09-2007, 07:29 PM
நல்லதோர் தொடக்கம் உங்கள் அறிமுகம் சிறப்பு
தமிழ் மீது கொண்ட பற்று புலப்படுகின்றது தொடர்ந்து படையுங்கள்

அறிஞர்
28-09-2007, 07:33 PM
தனக்கென ஒரு பாதை வகுத்து...
அதில் தனக்கு ஏற்படும் கருத்துக்களை
தைரியமாக உரைக்கும்
மீனாக்குமார்... போன்ற* ப*ல*ர் ம*ன்ற*த்துக்கு/தமிழுக்கு தேவை..

இளசு
28-09-2007, 09:15 PM
உங்கள் மீது மிக்க மதிப்பு வைத்திருக்கும் மன்றத்தவரில் நானும் ஒருவன்.

பாதிப்பவற்றைப் பதிவு செய்வதே படைப்பாளியின் செயல்.

இருபதில் காதல் , அதன் தோல்வி
நாற்பதில் சமூகம், வாழ்வியல்..
அறுபதில் நிலையாமை, ஆன்மத்தேடல்..

சுயம், சமூகம் இரண்டையும்
பருவத்துக்கேற்பப் படம்பிடிப்பவன் படைப்பாளி..

உங்கள் ஆக்கங்களில் தெரியும் அக்கறை, நேர்மைக்கு
இரசிகன் நான்..

வாழ்த்துகளும் பாராட்டுகளும் மீனாகுமார் அவர்களே!

மனோஜ்
28-09-2007, 10:26 PM
தமிழ் மீது நீங்கள் கொண்டுல்ல காதல் இன்னும் பல்மடங்காகவும் நாங்கள் அந்த சுவையை சுவைத்து மகிழதொடர்ந்து வழங்குங்கள் மிக்க நன்றி
உங்கள் தமிழ் கவிதை துடிப்புடன் நானும் பயணிக்கிறோன்

lolluvathiyar
29-09-2007, 08:53 AM
வயதாக வயதாக சமூக அக்கரையின் பால் கவிதை எழுத ஈர்க்கும். உன்மைதான் மீனா குமார். உங்கள் கவிதைகள் அப்படிதான் இருகிறது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்

சிவா.ஜி
29-09-2007, 02:20 PM
உங்கள் கவிதைகளில் ஒரு தனித்தன்மை தெரிகிறது மீனாகுமார்.தமிழில் நல்ல ஆளுமை இருக்கிறது.இவை உங்களின் பரந்த அனுபவத்தில் உங்களுக்கு வாய்க்கப்பெற்றது.சமூகத்தின் மீது அக்கறை இருப்பவர்கள்தான் அதனைக்குறித்து சிந்திப்பார்கள்.நீங்கள் சிந்திப்பதால் அந்த சிந்தனை வரிகளாய் இங்கு வடிகிறது. வாழ்த்துக்கள் மீனாகுமார்.

ஜெயாஸ்தா
04-10-2007, 05:26 AM
மீனாகுமார் உங்கள் கவிதைகள் மட்டுமல்லாமல் கணிணி சார்ந்த உபயோகமான தகவல்களையும் தாங்கள் தருவதால் நாங்கள்பயனடைகிறோம். நன்றி நண்பா.

சுகந்தப்ரீதன்
21-10-2007, 11:16 AM
மீனாகுமார் அண்ணா.. முதலில் உங்களின் சமுதாய சிந்தனைக்கு எனது வந்தனங்கள்...! அல்ல அல்ல குறையாதது காதல் மட்டுமல்ல.. நம் சமூக பிரச்சனைகளும்தான்.. ஆனால் அதை எழுதுபவர்கள் குறைவு.. அதை ஊக்குவிப்பவர்கள் அதைவிட குறைவு என்றே சொல்லலாம்.. ஆனால் நாம் மன்றத்தில் ஊக்குவிப்பாளர்கள் அதிகமாக உள்ளனர்.. தொடர்ந்து கொடுங்கள் உங்கள் கவிதைகளை.. வாழ்த்துக்கள்..!