PDA

View Full Version : குண்டாகலாம் வாங்க..அறிஞர்
28-09-2007, 03:01 PM
சில பேருக்கு ரொம்ப குண்டாயிருக்கிறோம்.. எப்படி இளைப்பது என்ற கவலை...

சிலருக்கு (நம்ம ஸ்லிம் ஸ்ரேயா, குச்சி ஓவியன்) எப்படி குண்டாவது என்று கவலை...

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு உபயோகமாக இருகட்டுமே.. என இந்த பகுதியை ஆரம்பிக்கிறேன். நல்ல விசயம் தெரிந்தவர்கள்.. இங்கு ஆலோசனைகளை கொடுங்கள்.. (ரொம்ப கலாய்க்க வேண்டாம்.)

அறிஞர்
28-09-2007, 03:02 PM
குண்டாக உணவு டிப்ஸ்...

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோhp குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தொpந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.
சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வ தற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.
நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்.

குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

−நன்றி புதுமை

ஓவியன்
28-09-2007, 03:07 PM
ஆகா அண்ணா!

குச்சி ஓவியனா...? :D
சரி சரி இது மருத்துவப் பகுதி என்பதால் அரட்டைப் பகுதியில் உங்களை நான் சந்திக்கின்றேன்.....!!! :D

அறிஞர்
28-09-2007, 03:08 PM
ஆகா அண்ணா!

குச்சி ஓவியனா...? :D
சரி சரி இது மருத்துவப் பகுதி என்பதால் அரட்டைப் பகுதியில் உங்களை நான் சந்திக்கின்றேன்.....!!! :D

நீங்க தானே குண்டாக உதவி கேட்டீர்கள்...

ஓவியன்
28-09-2007, 03:11 PM
நீங்க தானே குண்டாக உதவி கேட்டீர்கள்...

ஆமா உண்மைதான்.........
உதவிக்கு நன்றி....!!! :D

ஜெயாஸ்தா
28-09-2007, 04:34 PM
ஜாலியாக குண்டாகலாம் வாங்கன்னு கூப்பிடுகிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் மன்றத்தில் இந்த திரி எனக்கு மட்டும்தான் பயன்படும் என்று நினைக்கிறேன்.

பூமகள்
28-09-2007, 04:40 PM
அன்பு மன்றத்து பாசமிகு உறவுகளே...

இந்த திரியில் குண்டாக வைக்கும் உங்களின் உபயோகமான ஆலோசனைகளை மட்டும் பதிக்கவும்.
கருத்துக்களை அரட்டைப் பகுதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7640)யில் பதிக்கவும்.

நன்றிகளோடும் பணிவோடும்,

சூரியன்
28-09-2007, 04:47 PM
நன்றி அறிஞர் அண்ணா..
இது மிகவும் உயயோகமாக இருக்கும்..

அறிஞர்
28-09-2007, 04:49 PM
ஆஹா ஒல்லியாக இருப்பவர்கள் பலர் இருக்கிறீர்கள் போல....

இன்னும் சிலரும் ஆலோசனைகள் தருவார்கள் என எண்ணுகிறேன்.

praveen
28-09-2007, 05:08 PM
ஆஹா ஒல்லியாக இருப்பவர்கள் பலர் இருக்கிறீர்கள் போல....

இன்னும் சிலரும் ஆலோசனைகள் தருவார்கள் என எண்ணுகிறேன்.

அப்படியில்லை அறிஞரே, வயதை சிலர் குறைத்து கூறுவதை போல சிலர் எடையையும் குறைத்து சொல்கிறார்கள்.(நான் பொதுவாக சொன்னேன், நண்பர்கள் கோவித்து கொள்ள வேண்டாம்)

சராசரியாக இருப்பதை விட சிறிது எடை கூட இருந்தால் நிறைய அசெளகரியங்கள் உண்டு. எனவே உயரத்திற்கு தகுந்த எடையே சிறந்தது.

யவனிகா
28-09-2007, 07:33 PM
கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.
நல்ல கருத்துக்கள் தான் நீங்கள் கூறியது. அதே நேரம் சாப்பிடும் பொருட்கள் இரத்தத்தில் கொழுப்புச் சத்தை அதிகரிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.
பொதுவாகவே, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் குறைவான கலோரிகள் தான் இருக்கின்றன. அதற்காக அவற்றை தவிர்க்க வேண்டாம். ஏனென்றால், உடலுக்கு மிகவும் அவசியமான உயிர்ச்சத்துக்களான விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போன்றவற்றை இழக்க நேரிடும்.
ஒரு உதாரணத்திற்கு, சர்க்கரை மற்றும் எண்ணைகளில் அதிக அளவு கலோரி உண்டு என்பதற்காக, அவற்றை பயன்படுத்தி குண்டாகலாம் என்று நினைத்தால், உடலுடன் சேர்த்து இரத்தத்திலும் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.

கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றி குண்டாகலாம்.

1. பாலுடன், இரண்டு ஸ்பூன் தேனும், மூன்று பேரிச்சை பழமும் சேர்த்து காலை மற்றும் உறங்கச் செல்வதற்கு சற்றுமுன்பும் சாப்பிடவும்.
2. சாதத்துடன் அதிகளவு தயிறையும் சேர்த்துக் கொள்ளவும்.
3. தினசரி இரண்டு நேந்திரம் பழங்களை சாப்பிடவும்.
4. தினசரி உணவில் முட்டை சேர்க்கவும்
5. பொன்னாங்கன்னிக் கீரையை நெய்யுடன் சேர்த்து சாதத்தில் பிசைந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடவும்.

குறிப்பு: உணவு உண்டவுடன் உறங்கினால், உடம்பு போடாது, தொந்தி தான் போடும். மேலும், அஜீரணக் கோளாறு, மந்தம் போன்ற குறைபாடுகள் வர வாய்ப்புண்டு.


சராசரியாக இருப்பதை விட சிறிது எடை கூட இருந்தால் நிறைய அசெளகரியங்கள் உண்டு. எனவே உயரத்திற்கு தகுந்த எடையே சிறந்தது.
மிகச்சரியான கருத்து. உயரத்திற்கு தேவையான எடையைக் காட்டிலும் கூடுதலான எடை இருந்தால், மூட்டுவலி, முதுகுவலி போன்றவையும் வரும். எனவே, உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்கவும்.

அறிஞர்
28-09-2007, 07:36 PM
யவனிகா.. இன்னும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கொடுங்கள்..

இலக்கியன்
28-09-2007, 07:39 PM
எனக்கும் கொஞ்சம் குண்டாக ஆசைதான்:D

அறிஞர்
28-09-2007, 07:42 PM
எனக்கும் கொஞ்சம் குண்டாக ஆசைதான்:D

இக்கரைக்கு அக்கரை பச்சை தான்....

குண்டாக இருப்பவருக்கு இளைக்க ஆசை
ஒல்லியாக இருப்பவருக்கு குண்டாக ஆசை..

எல்லாரின் ஆசையும் நிறைவேறி.. இன்பமாய் இருப்போம்.

நுரையீரல்
29-09-2007, 04:54 AM
காலையில் அதிகமாகவும், மதியம் அதில் பாதியாகவும், இரவு கால்வாசி (அ) பசித்திரு, இது தான் அறிவியல் பூர்வமான உணவு உண்ணும் முறை. இத்திரிக்கு சம்பந்தமில்லாத விஷயம் தான். கீழே அதற்கான விளக்கம் தருகிறேன்.

ஒருவர் காலையிலும், மதியமும் சாப்பிடுவது அவருடைய உடல் சக்திக்கு பயன்படும். இரவு சாப்பிடுவது கொழுப்பாகவே உடலில் சேமிக்கப்படுகிறது. ராத்திரி அதிகமான உணவு சாப்பிடுங்கள், அது உங்கள் உடம்பை அதிகரிக்கச் செய்யும்.

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுப்பொருட்களைச் சாப்பிடுங்கள். அரிசிச்சாப்பாட்டில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. ராத்திரி மூக்குமுட்ட அரிசிச் சாப்பாடு சாப்பிடுங்கள். என்ன அஜீரணக்கோளாறுக்கும் வாய்ப்புண்டு.

சுடுதண்ணீருக்கு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் சக்தியுள்ளது, அதை அறவே தவிருங்கள்.

நம்ம நண்பர்கள் பலருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமிருக்கும். சிகரெட் பிடிக்காமல் ........ வராது என்று சப்பைக்கட்டு வேற கட்டுவார்கள். காலங்காத்தால, சிகரெட் குடிப்பது, காலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக டீ (அ) காப்பி குடிப்பது போன்றவை பசியைக் குறைக்கும். உண்ணும் உணவின் ருசியைக் குறைக்கும். அதனால், உடல் பருமனாகத் தேவையான உணவை உண்ணமாட்டீர்கள்.

தமிழ் மன்றத்தில், இது எனது முதல் பதிப்பு என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மேலும் பல தகவல்களுடன் இதே திரியில் மீண்டும் எழுதுவேன்.

இன்பா
29-09-2007, 05:53 AM
எனக்கு தெறிந்த வரை ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையை இரவும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எடை கூடுமாம். (எடை மட்டுமல்ல நல்ல ஸ்டேமினாவும் கூடுமாம்)அப்படியில்லை அறிஞரே, வயதை சிலர் குறைத்து கூறுவதை போல சிலர் எடையையும் குறைத்து சொல்கிறார்கள்.(நான் பொதுவாக சொன்னேன், நண்பர்கள் கோவித்து கொள்ள வேண்டாம்)

அசோ உங்களுக்கு என்ன வயசு எவ்வளவும் எடை...(சும்மா கேட்டேன் கோவித்துக் கொள்ள வேண்டாம்...)

ஷீ-நிசி
29-09-2007, 05:58 AM
குண்டாவது உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல.. ஆனால் நம்ம அறிஞர் ஆதவாவை மனதில் வைத்து தொடங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.. அதனால் அவ்வளவு ஒல்லியாக இருக்கும் ஆட்கள் கொஞ்சம் குண்டாகுங்கப்பா... ஹி ஹி

lolluvathiyar
29-09-2007, 08:58 AM
குண்டாவதற்க்கு நல்ல டிப்ஸ் தந்திருகிறார்கள் பலர்.
ஒரு கால் கட்டு போட்டா எல்லாடும் குண்டாயிராங்க.

முக்கியமான டிப்ஸ் ஒன்னு நான் சொல்லரேன். பீர் குடிச்சா உடம்பு வரும் என்று நன்பர்கள் சொல்வார்கள். அது முழுக்க முழுக்க தவறான தகவல். பீர் குடிக்கனும்னு குடிங்க அதுக்காக உடம்ப சாக்கீட்டு பீர் குடிக்காதீங்க. மத்தவங்களுக்கும் இந்த டிப்ஸ சொல்லாதீங்க*

யவனிகா
29-09-2007, 04:49 PM
குண்டாவதற்க்கு நல்ல டிப்ஸ் தந்திருகிறார்கள் . பீர் குடிச்சா உடம்பு வரும் என்று நன்பர்கள் சொல்வார்கள். அது முழுக்க முழுக்க தவறான தகவல். பீர் குடிக்கனும்னு குடிங்க அதுக்காக உடம்ப சாக்கீட்டு பீர் குடிக்காதீங்க. மத்தவங்களுக்கும் இந்த டிப்ஸ சொல்லாதீங்க*

உண்மைதான் நீங்க சொன்னது,ஆனா ஆல்கஹால் இல்லாத மால்ட் பெவெரேஜ் கிடைக்கிரது,அதை பயன் படுத்தலாம்.சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும்.அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் உடம்பு போடாது.அனால் மால்ட் பெவெரேஜ் தினமும் குடிக்கும் போது உடல் சூடு தணிந்து உடம்பு போடும்

.தினமும் 25 கிராம் சாக்லேட்,ஒரு கப் அயிஸ்கிரீம் சாப்பிடலாம்.பொட்டுக்கடலையுடன் கரும்புச் சர்க்கரை சேர்த்து ஒரு கைப்பிடி சாப்பிடலாம்.உணவில் உருளைக் கிழங்கு சேர்க்கலாம்.தினம் ஒரு கிழ்ங்கு வறுவல் மதிய உணவில் சேர்க்கலாம்(குடுத்து வெச்சவங்கப்பா நீங்க,சீக்கிரம் பொத பொதன்னு உடம்பு போட்டு அப்புறம் எங்க கூட சேர்ந்து இளைக்க வாங்க,அப்ப தெரியும் எங்க கஸ்டம்).

பூமகள்
30-09-2007, 07:28 AM
ம்... அப்போ குண்டாக ஆல்கஹால் கலக்காத பீர் குடிக்கலாம்னு சொல்றீங்களா யவனி அக்கா??? ஏன்னா.. என்னிடமும் இதைத்தான் சொன்னாங்க சிலர்... குண்டாக டிப்ஸ் கேட்டப்ப...!
இன்று வரை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியலை.
அப்புறம் ரெட் வைன் குடிச்சாலும் குண்டாகலாம்னு சொல்றாங்களே.. உண்மையா??(இப்படி கேட்பதால் பூவை தப்பா நினைக்காதீங்க பா....!!)
ஆஹா.. எனக்கு பிடிச்ச உருளைக் கிழங்கு ஃபிரை, ஐஸ் கிரீம்.. சாக்லேட், கரும்பு சர்க்கரை... எல்லாம் சூப்பரா சாப்பிட சொல்றீங்க... சந்தோசம்... ஆனா நிச்சயம் ஓவரா குண்டாக மாட்டோமே... ஹீ ஹீ..!!

அமரன்
30-09-2007, 09:19 AM
பீரா? அய்யோ சாமி ஆளை விடுங்கப்பா....
ரெட் வைன் ஒகே..ஒகே...

பூமகள்
30-09-2007, 09:25 AM
பீரா? அய்யோ சாமி ஆளை விடுங்கப்பா....
ரெட் வைன் ஒகே..ஒகே...
அப்போ அமர் அண்ணாவை (மி)விரட்ட பீர் வாங்கி வைத்தால் போதும் போல இருக்கே...:sprachlos020::D:rolleyes: மனிசர் இப்படி பயப்படுறார்...??!!!:lachen001:

மன்மதன்
30-09-2007, 03:39 PM
ஸ்லிம்மாக இருப்பதுதான் நல்லது.. வசதியும் கூட,,:D

யவனிகா
30-09-2007, 03:57 PM
ம்... அப்போ குண்டாக ஆல்கஹால் கலக்காத பீர் குடிக்கலாம்னு சொல்றீங்களா யவனி அக்கா??? ஏன்னா.. என்னிடமும் இதைத்தான் சொன்னாங்க சிலர்... குண்டாக டிப்ஸ் கேட்டப்ப...!

ரெட் வைன் ம*ட்டும் இல்லை,எந்த* வைன் குடிச்சாலும் உட*ம்பு போடும்.அத*ற்கு ப*தில் வெள்ளை உல*ர் திராஷ்ஷையை ஊற* வைத்தும் குடிக்க*லாம்.

அக்னி
30-09-2007, 04:02 PM
யாரப்பா இங்க டாஸ்மார்க் திறந்து வச்சிருக்கிறது..?
பீர் குடிச்சா....
உடம்பு வைக்காது... தொந்திதான் வைக்கும்...

ஓவியன்
30-09-2007, 04:03 PM
பீரா? அய்யோ சாமி ஆளை விடுங்கப்பா......

இங்கே பாருங்க பீர் எண்டதும் என்னை விடுங்க என்று சொல்லி விட்டு பீர் குடிக்க ஓடுறதை.....??? :D

பூமகள்
30-09-2007, 04:06 PM
ஓ.. நன்றி யவனி அக்கா...!! இனி திராட்சையை ஊற வைத்துக் கொடுக்கிறேன். எந்த திராட்சை.. பச்சை அல்லது கருப்பு?? எது சிறந்தது என்று சொல்லுங்களேன் அக்கா?

அக்னி
30-09-2007, 04:11 PM
ஓ.. நன்றி யவனி அக்கா...!! இனி திராட்சையை ஊற வைத்துக் கொடுக்கிறேன். எந்த திராட்சை.. பச்சை அல்லது கருப்பு?? எது சிறந்தது என்று சொல்லுங்களேன் அக்கா?
எந்த திராட்சையானாலும் நல்லது...
எவ்வளவு காலத்துக்கு ஊற வைக்கின்றீர்களோ, அவ்வளவு தரமானது...
அதுதானுங்கோ திராட்சை வைன்...

ஓவியன்
30-09-2007, 04:13 PM
பீர் குடிச்சா....
உடம்பு வைக்காது... தொந்திதான் வைக்கும்...

என்னப்பா இவ்வளவு உறுதியாகச் சொல்லுறீங்க....
அனுபவமோ....??? :lachen001:

யவனிகா
30-09-2007, 04:15 PM
எந்த வகை உலர் திராட்ஷைனாலும் சரி,சவன் பிராஸ் என்று ஒரு லேகியம் கிடைக்கிறது,அதை தினமும் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.அனால் அதை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் சாப்பிட வேண்டும்.
தினமும் இரண்டு ஸ்பூன் பசு வெண்ணெய் சாப்பிட்டால் நீ புசு புசு ந்னு ஆயிடுவே.

அக்னி
30-09-2007, 04:15 PM
என்னப்பா இவ்வளவு உறுதியாகச் சொல்லுறீங்க....
அனுபவமோ....??? :lachen001:
அன்புரசிகரப் பார்த்தவங்க சொன்னாங்க...

யவனிகா
30-09-2007, 04:17 PM
அது சரி அக்னி அண்ணா தொழில் ரகசியமெல்லாம் சொல்லாதீங்க வெளியே

ஓவியன்
30-09-2007, 04:17 PM
ஓ.. நன்றி யவனி அக்கா...!! இனி திராட்சையை ஊற வைத்துக் கொடுக்கிறேன். எந்த திராட்சை.. பச்சை அல்லது கருப்பு?? எது சிறந்தது என்று சொல்லுங்களேன் அக்கா?

திராட்சை தின்பவன் புத்திசாலி...
பழ ரசம் குடிப்பவன் குற்றவாளி!....! :)

அமரன்
30-09-2007, 04:18 PM
திராட்சை தின்பவன் புத்திசாலி...
பழ ரசம் குடிப்பவன் குற்றவாளி!....! :)
ராசா..நல்லாத்தான் இருக்கு..
"பதுக்கலின்" விளைவு இது..

அறிஞர் பிரம்போடு வரமுன்னர் அமரன் எஸ்சாகிறான்..

ஓவியன்
30-09-2007, 04:19 PM
அன்புரசிகரப் பார்த்தவங்க சொன்னாங்க...

அட்ரா சக்கை, அட்ரா சக்கை !!
உங்களுக்கும் அது தெரிஞ்சு போச்சா...??? :lachen001:

அறிஞர்
01-10-2007, 03:06 AM
நீங்கள் குண்டாக விருப்பமா.....?ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு
உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை
யாருமே விரும்ப மாட்டார்கள்.

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை
அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம்
சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில்
நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை
உணர்வீர்கள்.

கொழுப்பு நீக்கப்படாத பால். எண்ணெய் போன்றவற்றை அதிகமலவில்
பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள்.
அது உங்களை முழு வயிற்றுக்கு சாப்பிட விடாமல் செய்து
விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக்
கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள்
உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு அதிக
கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.

சாப்பிடும் போது கூடவே குளிர் பானங்கள் குடிப்பது அடிக்கடி டீ
காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட் டால் இரண்டு மணி நேரம்
கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும்.
படுக்கச் செல்வ தற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம்
எடையைக் கூட்டும்.

நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால்
சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி
ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில்
முழுச் சாப்பாடு சாப்பிடு வதற்குப் பதிலாக அடிக்கடி குறைவாக
சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று
நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்கா தீர்கள்.
குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லி
யானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான
ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக்கதிகமாக
உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில்
சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

காலையிலும், மாலையிலும், ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப்
பருப்பு, பேரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு ,போன்றவற்றை
சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிற போது
தூங்குவது இன்னும் நல்லது.

− நன்றி நிலாமுற்றம்

ஜெயாஸ்தா
01-10-2007, 03:40 AM
பழையசோறு சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகும் என்று சொல்கிறார்களே.... அது உண்மையா?

ஓவியன்
01-10-2007, 05:26 AM
ஆகா நன்றி அறிஞரே!!!

குச்சி ஓவியனை குண்டு ஓவியனாக்காமல் ஓய மாட்டீங்க போலிருக்கே.....:)

பூமகள்
01-10-2007, 09:31 AM
பயனுள்ள தகவல்.. நன்றிகள் யவனி அக்கா.

தேடித் தேடி எங்களுக்காய் டிப்ஸ் சேகரிக்கும் அன்பு அறிஞர் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.