PDA

View Full Version : தாமரை...!



சூரியன்
27-09-2007, 03:51 PM
தாமரை இலையில்
தண்ணீர் சேராது..!

தண்ணீர் இல்லாமல்
தாமரை இல்லை..!

உன் அருகில்
நான் இல்லை
என்றாலும்,


உன் நினைவில்லாம*ல்
நானில்லை..!

இலக்கியன்
27-09-2007, 04:07 PM
காதல் கவிதையோடு கன்னி முயற்சி போலும் வாழ்த்துக்கள்
வளரும் கவிஞர்களுக்கு மன்றம் ஒரு படிக்கல்

சூரியன்
27-09-2007, 04:10 PM
நன்றி நண்பர் இலக்கியன் அவர்களே..

அமரன்
27-09-2007, 07:25 PM
கிட்ட இருந்தும்
கிட்டாத காதல்..
கெட்ட காலம்தான்..

நினைவில் களிக்கலாம்
கழித்து அழியக்கூடாது..
தொடருங்கள்..வளம்பெறுங்கள்.

அறிஞர்
27-09-2007, 07:34 PM
நினைவில் நிற்பவள்..
வாழ்க்கை முழுவதும்
உடனிருந்தால் நன்றாக இருக்கும்..

வாழ்த்துக்கள்.. அமரனின் வரிகளும் அருமை.

aren
28-09-2007, 12:20 AM
நல்ல தொடக்கம் சூரியன். அள்ளிவிடுங்கள். வாழ்த்துக்கள்.

ஓவியன்
29-09-2007, 05:44 AM
காதல் நினைவுகளே, காதலின் பலமும் பலவீனமும்...
அந்த நினைவுகளின் விழுதுகள் தான் பல காதல் விருட்சங்களைத் தாங்கிப் பிடிக்கின்றன....

தாமரையை வாழவைக்கும் தண்ணீர், தாமரை இலையோடு சேர்வதில்லை...
என்ன அழகான உவமை சூரியன்...
அதனை அழகாகக் கையாண்டமைக்குப் பாராட்டுக்கள் நண்பரே...

சூரியன்
29-09-2007, 04:03 PM
காதல் நினைவுகளே, காதலின் பலமும் பலவீனமும்...
அந்த நினைவுகளின் விழுதுகள் தான் பல காதல் விருட்சங்களைத் தாங்கிப் பிடிக்கின்றன....

தாமரையை வாழவைக்கும் தண்ணீர், தாமரை இலையோடு சேர்வதில்லை...
என்ன அழகான உவமை சூரியன்...
அதனை அழகாகக் கையாண்டமைக்குப் பாராட்டுக்கள் நண்பரே...

நன்றி ஓவியன் அண்ணா..

இளசு
30-09-2007, 09:21 AM
ஒட்டி ஒட்டாமல் தத்தளித்து தளும்பும்
மனநிலையை படம்பிடிக்கும் கவிதை.

பாராட்டுகள் சூரியன்!

சூரியன் தாமரை பற்றிப் பாடியது பொருத்தமே!

சூரியன்
30-09-2007, 09:24 AM
ஒட்டி ஒட்டாமல் தத்தளித்து தளும்பும்
மனநிலையை படம்பிடிக்கும் கவிதை.

பாராட்டுகள் சூரியன்!

சூரியன் தாமரை பற்றிப் பாடியது பொருத்தமே!

நன்றி இளசு அண்ணா..!

க.கமலக்கண்ணன்
30-09-2007, 09:29 AM
தாமரை பற்றி சூரியன் பாடுகிறது

தாழம்பூ போல மணக்கிறது உங்கள் கவிதை

சூரியன்
30-09-2007, 09:40 AM
நன்றி கமல் அவர்களே..